Monday, 29 May 2017

ராமர் மாமிசம் சாப்பிட்டாரா ?


பல பெரியார்வாதிகளும், நாத்திகவாதிகளும் கூறும் ராமாயண பொய்களில் இதும் ஒன்று. அதாவது ராமரும், சீதையும் அந்தப்புரத்தில் போதையில் மது, மாமிசம் சாப்பிட்டதாக கூறுகிறார்கள். அது முழுக்க முழுக்க பொய். அதன் உண்மை இங்கே கொடுத்துளோம் .....

வால்மீகி ராமாயணம் ... உத்தர காண்டம்- சர்கம்-42 வசனம்,  18, 19 இல் உள்ள உண்மை மொழிபெயர்ப்பு ..

'தேவேந்திரன், தன் கையால் இந்திராணிக்கு அமுதத்தை கொடுப்பதை போல் , ராமன் தன கையால் சீதைக்கு இனிய பானங்களை எடுத்து கொடுத்தார்' -18

'அப்போது, ராமன் உண்பதற்காக அரச போகத்திர்குரிய உயர்வகை உணவுகளையும், பல்வகை பழங்களும் (தோல் உரிக்கப்பட்டதும்) வெகு விரைவில் கொண்டு வந்தனர்' -19

வசனம், 19 இல் உள்ள 'மாம்ச' என்கிற வார்த்தை மாமிசத்தை குறிக்கவில்லை. சமசுகிருதத்தில் ஒரே வார்த்தைக்கு பல அர்த்தங்களை உடையது. இதில் கூறுவது 'தோலுரித்த பழங்களை' என்பதை கூறுகிறது. மேலும், ஸ்ரீரங்கம் கோவிலில் பகவானுக்கு மாம்பழங்களை நைவேத்தியம் செய்யும் போது, பின்வரும் இதே 'மாம்ச' வார்த்தையுடைய ஸ்லோகத்தையே நைவேத்தியம் செய்யும் பொது சொல்கிறார்கள். அது

' iti mamsa khanda samarpayami iti mamsa khanda samarpayami'

'பகவானே இந்த தோலுரித்த பழங்களை ஏற்று கொள்ளுங்கள் ' என்பதே இதன் அர்த்தம்

இதன் அர்த்தம் 'தோலுரித்த பழங்கள்' என்பதே. ஆனால் இதற்க்கு விளக்கம் தெரியாத மொழிபெயர்ப்பாளர்கள் இப்படி சில ராமாயண மொழிபெயர்ப்பில் மாமிசம் சாப்பிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது தவறு .

மேலும், ராமர் காட்டில் இருந்த கஷ்டமான சூழ்நிலையிலும், காட்டில் வாழ்த்த 14 வருடங்களிலும் கூட தான் மாமிசம் உண்ணாமல் இருந்த விரதத்தை கடைபிடித்ததாக அயோத்யா கண்டம் சரகம்-20 இல் 29 இல் கூறுகிறார்.

மேலும், இந்த அத்தியாயம் முழுவதுமே, ராமர் அரசன் ஆகையால் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் பல இசை, மற்றும் நடன வல்லுநர்களால் தினமும் நடந்ததாகவும், ராமர் அவர்களை கவுரவித்து பல பரிசுகளை வழங்கியதாகவும் வசனம் 20,21 கூறுகிறது .

இதில் என்ன தவறு உள்ளது. அந்த கால அரசர்கள் இவ்வாறு கலை நிகழ்ச்சிகள் நடத்துவது வழக்கம் தானே. இதில் எங்கே ஆபாசம் உள்ளது ?

மேலும், 'அறம் அறிந்தவராக ராமன் பகலின் முற்பகுதியில் அறக்கடமைகளை செய்துவிட்டு, பின்பாதியில் அந்தப்புரத்தில் கழித்தார்'- வசனம் 25

'சீதையும் பகல்வேளையின் முற்பகுதியில் தெய்வ வழிபாடுகளை செய்துவிட்டு, மாமியார்கள் எல்லோருக்கும் சமமான முறையில் பணிவிடை செய்து போற்றினால்' - வசனம் 26

பின்னர் அவள் கண்கவர் அணிகலன்களை அணிந்து கொண்டு, தேவலோகத்தில் வீற்றிருக்கும் இந்திரன் அருகே உள்ள இந்திராணிதேவி செல்வதை போல, இவள் ராமன் அருகே போய் உட்கார்ந்தாள்' - வசனம் 27

இப்படி இந்த சரகம் 42 முழுவதும் இவர்களது அரசர், அரசியின் மகிச்சிகரமான வாழ்க்கையை தான் கூறுகிறது. இதில் எந்தவித ஆபாசமான நிகழ்ச்சிகளோ, மாமிசம் சாப்பிட்டதாகவோ, மதுபானம் அருந்தியதாகவோ எங்குமே இல்லை .


சில அம்பேத்கார் புத்தகங்களிலும், சில நாத்தீகவாதி புத்தகங்களிலும் கீழ்கண்ட ராமாயண வசணத்தை தவறாக கூறுகிறார்கள். எனவே அதன் உண்மை மொழிபெயர்ப்பை தந்துள்ளேன்.

அயோத்திக்கு திரும்பி வந்தவுடன் மிகவும் ஆர்வத்துடன் தேவர்களுக்கும் கிடைத்தற்கரிய பொருள்க்களையும், பல்வகை உணவுகளையும் சமர்ப்பித்து உன்னை பூஜிப்பேன்.
(அயோத்யாகாண்டம் சர்க்கம் 52 சுலோகம் 89)

அங்கே, அவ்விருவரும் ஆசிரமத்திலுள்ள முனிவர்களுக்கு தொல்லை கொடுக்கும் காட்டு பன்றி,ரிச்சயம், ப்ருஷதம், மகாருரு என்கிற நன்கு வகையான பெருவிலங்குகளை கொண்ணு பயத்தை விலகினார்கள். காட்டில் கிடைக்கும் சில பண்டங்களை எடுத்து கொண்டு பசியோடிருந்த அவ்விருவரும் பொழுது சாயும் வேளையில் தங்குவதற்கு ஒரு பெரிய மரத்தின் அடியில் வந்து சேர்ந்தனர்.

(அயோத்யாகாண்டம் சர்க்கம் 52 சுலோகம் 102)

மிதிலை மன்னரின் புதல்வியான சீதைக்கு மலையை சுற்றி ஓடும் மந்தாகினியின் அழகை கட்டிய பின்னர், மலைச்சாரலில் உங்காந்து உண்பதற்கான பொருள்க்களை கொடுத்து உற்சாகப்படுத்தி கொண்டு அமர்ந்திருந்தனர்.

(அயோத்யாகாண்டம் சர்க்கம் 96 சுலோகம் 101)

சகோதர்களாகிய ராமா-லட்சுமணர்கள் ஒரு கொச தூரம் நடந்து எதிரில் வந்த, முனிவர்களுக்கு இன்னல் விளைவிக்கும் பல விலங்குகளை கொன்னு (தங்குவதற்கு உகந்த இடம் தேடி) யமுனை கரையிலுள்ள காட்டில் சுற்றி அலைந்தார்கள். 

 (அயோத்யாகாண்டம் சர்க்கம் 55 சுலோகம் 32)

இப்படி ராமாயணத்தில் ராமர் மாமிசம் சாப்பிட்டதாகவோ, மது அருந்தியதாகவோ எங்குமே கூறவில்லை. ஆனால், சிலர் தனது சொந்த கற்பனைகளை வைத்து இவ்வாறு ராமர் சாப்பிட்டதாக புழுகுகின்றனர்.

எனவே, மக்கள் உண்மையை இதன் மூலம் அறிந்துகொள்ளலாம். 

5 comments:

  1. அ.வி.நரசிம்ம ஆச்சரியார் எழுதிய இராமயணம் அயோத்தியாகாண்டம் சரு52 இல் இராமரும்,இலக்குவனனும் பன்றி,எருமை போன்ற மானையும்,கலைமானையும், கருப்பு சாரலையுடைய உயர்ந்த கலைமானையும் இந்த நான்கு மிருகங்களை வேட்டையாடி கொன்று பரிசுத்தமாக்கி சீதையிடம் வந்து கொடுத்தனர். சரு 55இல் சாப்பிட தகுந்த மிருங்களை கொன்று புசித்தனர் என்றும். சரு-56இல் இலக்குவனா நீ சிக்கிரமாக கறுத்தமானை அடித்து கொண்டு வருவாயாக பூசிப்பதற்காக பசு வதஞ் செய்வது தோசமன்று என்று எழுதியுள்ளார். இப்புத்தகம் வெளி வந்த ஆண்டு 1912 இவர் பெரியார் வாதியா? மாங்கா கதைக்கு பதிலாக பன்றி,மான் இவைகள் சைவம் என்று சொல்லி இருக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. நீங்க கூறிய வசனங்களின் மொழிபெயர்ப்பு தான் நான் மேலே போட்டுள்ளேன். அதில் பன்றி. காட்டு மிருகங்கள்... ஆகியவற்றை கொன்று பயத்தை நோக்கியதாக தான் உள்ளது.

      இதெல்லாம் புகழ்பெற்ற கீதா பிறஸ்கோராக்பூர் பதிப்பகத்தில் உள்ளது.

      Delete
  2. சரு.96இல் மந்தாகினீ நதி அருகில் உட்கார்ந்து இராமன் சீதைக்கு மாம்சத்தை ஊட்டி அவளை மனக்களிப்புறஸ் செய்யமுயன்று இது பரிசுத்தமானது , இரசமுடையது,இது அக்னியில் நங்கு பக்வமாயிருக்கின்றது என்று இனிய உரை கூறி வீற்றிருந்தனன் ................... இது எல்லாம் பொய்யா கோபால்?

    ReplyDelete
  3. சி.ஆர்.சீனிவாச அய்யங்கார் சிறிமத் இராமயணம் என்னும் நூலில் சரு-96இல் இப்படி மந்தாகினீயின் விசித்ரங்களை சீதைக்கு காட்டி பிறகு ராமன் அந்த மலைச்சாரலில் ஒரிடத்தில் உட்கார்ந்து சீதே இதோ சுத்தமான மாம்சம் இருக்கிறது பார் இது ருசியுள்ளது இது நன்றாக வெந்தது என்று தான் முதலில் ருசி பார்த்து அந்த துண்டுகளை சீதைக்கும் கொடுத்து அவளை சந்தோசப்ப்டுத்தினார் என்று தன் நூலில் எழுதியுள்ளார் வெளி வந்த ஆண்டு 1925

    ReplyDelete
    Replies
    1. ராமர் காட்டில் தான் வாழ்ந்த 12 வருட காலத்தில் மாமிசம் சாப்பிடவில்லை என நேரடியாக வசனங்கள் உள்ளதே?

      அப்புறம் எப்படி அவர் சாப்பிட்ட இருப்பார்?

      அவர் சாப்பிட்டால் நேரடியான எந்த வசனமும் இல்லை.

      நீங்க கூறிய வசனங்களை மேலே போட்டுள்ளேன்

      Delete