Saturday 27 May 2017

பெண்களுக்கு சுததிரம் கொடுக்கலாமா ?



பெண்ணடிமை ஒழிய வேண்டும் என்றும், ஆணும் பெண்ணும் சமம் என்றும் இன்று எல்லோரும் முழங்குகிறார்கள். இந்த நிலையில் கணவனுக்கு மனைவி அடிபணிவது என்பது, பழங்கால மூடநம்பிக்கையாக தான் தோன்றும். நமது முன்னோர்கள் பெண்களை பக்தி சேவை என்கிற பெயரின் பெண்களை முடக்க கரணம் என்ன ? சுதந்திரத்தினை அவர்கள் ஏன் மறுத்தார்கள் ? கொஞ்சம் சிந்திக்க வேண்டும்.

பலர் கொண்ட ஒரு சமுதாயத்தில் சட்டம் தீட்டும் போது, அது ஏற்படுத்தும் பாதிப்புக்களை சிந்திக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, ஒரு நாட்டில் அரிசி பஞ்சம் ஏற்படும்போது மன்னன் 'அனைவரும் மீன் சாப்பிடுங்கள்' என்று கூறினால், அது பார்வைக்கு சரியான தீர்வாக தோணலாம். ஆனால் மீன் சாப்பிடும் பழக்கம் இல்லாதவர்களுக்கு இந்த சட்டம் மகிழ்ச்சியை தரும ? , அதுபோல், பாலுக்கு பஞ்சம் ஏற்பட்டால் எல்லோரும் 'விஸ்கி' சாப்பிடுங்கள் என்று கூறினால், அது எல்லோருக்கும் பொருந்துமா ?

சமுதாயத்தில் மக்களின் இயல்புகள் நபருக்கு நபரே வேறுபடுகிறது. ஆணுக்கும், பெண்ணுக்கும் குணத்திலும் உடல் அளவிலும் நிறைய வேறுபாடுகள் உண்டு. அதாவது ஆணாக இருந்து சந்திக்க வேண்டிய சிக்கல்கள், பெண்ணை இருந்து சந்திக்க வேண்டிய சிக்கல்கள் இப்படி இரண்டு வைகல் உள்ளன. இந்த வேறுபாட்டை நம் முன்னோர்கள் உணர்த்ததாலேயே தான் இப்படி இரண்டு வித மக்களுக்காக வாழ்க்கை முறைகளை வகுத்தனர்.

அதாவது, பெண்ணின் மென்மை, கருணை, பொறுமை, அன்பு, பொறுத்து போகும் தன்மை ஆகியவை குடும்பத்துக்கும், எதிர்கால சந்ததியை உருவாக்குவதற்கும், குடும்பத்தை குதூகல நந்தவனமாக்குவதற்கும் பெண்கள் தேவை. இந்த குணங்களையெல்லாம் ஆண்களிடம் நீங்கள் எதிர்பார்த்தால் முடியாது. ஆண்களின் கோபம்,எதையும் எதிர்த்து பார்க்கும் மனப்பான்மை,திடசித்தம்,சவால்கள் ஆகியவதில் ஆர்வமுடையவனாகவும், இது உலக எதிர் நீச்சலுக்கு தேவை. இதனால் பண நஷ்டம்,எதிரிகள்,அவமானம்,..இப்படி ஒரு ஆண் தங்கி கொண்டு குடும்பத்தின் பொருளாதார தேவைகளைவும், சமூகத்தின் தேவைகளையும் நிறைவேற்றுகிறான்.

மேலும், ஒரு ஆண் வீட்டை விட்டு வெளியே போகும் பொது அவனை இந்த சமுதாயம் ஒரு மனிதனாகத்தான் பார்க்கிறது. ஆனால் ஒரு பெண் வீதியில் போனால் அவளை ஒரு கவர்ச்சி பொருளாக தான் காண்கிறது. அந்த பெண் எவ்வளவு படித்திருந்தாலும்,பதவியில் இருந்தாலும்,சாதனை புரிந்தாலும் அவளும் இது போல தான். எனவே தான் எல்லா இடங்களிலும் பெண்களை வரவேற்பாளராக நியமிக்கிறார்கள். இயற்கையிலேயே பெண் உடலின் சுவாபமே, ஆண்களின் மனதில் சலனங்களை உண்டு பண்ணுகிறது. இதனாலே வேத காலத்தில் பற்பல முனிவர்களை கூட மயங்கிவிட்டிருக்கிறார்கள்.

வைர நகைகளை பூட்டி பாதுகாப்பது போல நமது முன்னோர்கள் பெண்களை வீட்டுக்குள்ளே இருக்க சொல்லி பாதுகாத்தனர். பிற ஆண்களுடன் உரையாடுவது கூடாது என்று கூறினார். அதனாலேயே தான் வெளி வேலை எல்லாவத்தையும் ஆண்களின் தலையில் கட்டினார்கள், இவ்வாறு அவன் வெளி பாரத்தை சுமப்பதால்,அவனுக்கு பணிந்து,ஒத்தாசை புரியும் இல்லத்து அரசியாக பெண்ணை இருக்குமாறு அமைத்தார்.

ஆனால், தற்காலத்தில் ஆண்கள் தங்கள் கடமையை மறந்து,பெண் கொடுமை தொடங்கியதால், அவர்களை வேலைக்கு அனுப்பினார்கள். அது ஒரு தீர்வு போல் தெரிந்தாலும், பல தீய விளைவுகள் ஏற்பட்டன. இதனால் பெண்களுக்கு எல்லா இடங்களிலும் வேலை செய்வதால், வேறு சில புதிய பிரச்சனைகள் உண்டாகின. அவைகள் ...

1. ஒரே வீட்டில் இருவருக்கு வேலை.இதனால் நாட்டில் வேலை இல்லா திண்டாட்டம்.

2. இதனால், குழந்தைகளை வளர்க்க வேலைக்காரி வைக்கப்பட்டது.

3. குடும்பத்தினர் ஒன்று சேர்ந்து அனுபவிக்கும் குடும்ப பாசம் என்பது இல்லாமல் போனது.

4. இதனால், இந்த குழந்தைகள் வளர்ந்து பெற்றோரிடம் காட்டவேண்டிய பாசம்,பாதுகாப்பது இல்லாமல் போனது .

5. இருவரும் வேலைக்கு போவதால் குழந்தைகளையும், வீட்டையும் பார்த்து  கொள்ளும்  பெற்றோர்களே வேலைக்கரர்களாக  ஆனார்கள்

6. இதனால் முதியோர் பிரச்சனை உருவாகிறது.

7. ஒரு ஆண் அல்லது பெண் வேறு நபர்களோடு அதிக நீரம் சேர்ந்து இருப்பதால், அவர்களது தாம்பத்திய அன்பில் முழுமை குறைகிறது.

8. இதனால், தகாக கள்ள உறவுகள் ஏற்படுகிறது.

9. ஒழுக்கமும், உண்மையான அன்பும் இல்லாதபோது மனித பண்பாடு அழிகிறது ! பணம் சம்பாதித்தாலே பிரதானமாக இருக்கும்.

10. இதனால், விவாகரத்துகள், முறை தவறிய உறவுகள் ஆகியவைகள் பெருகுகிறது.

 . எனவே, பெண்கல்வி, பெண் சம்பாத்தியம் ஆகியவை பெண் கொடுமைக்கு பரிகாரமாக பரிகாரமாக ஏற்றுக்கொள்வதால், எந்தவிதமான காரணமும் இல்லாமல் நமது பண்டைய பண்பாடு இதனால் புறக்கணிக்க கூடாது.

ஆனால், 'முன்னோர்கள் பெண்களுக்கு ஏற்படுத்தி தந்த வாழ்வை விட சிறந்த ஒரு வாழ்வை நங்கள் கண்டு பிடித்து விட்டோம்' என்று மட்டும் சொல்லாதீர்கள். அப்படி சொன்னால் அது நூற்றுக்கு இருநூறு சதவீதம் தவறு .

பெண்களுக்கு சுதந்திரம் கொடுக்கப்படக் கூடாது என்று மனு சம்ஹிதையில் தெளிவாகக் கூறப் பட்டுள்ளது. இதன் பொருள், பெண்களை அடிமைகளாக வைத்திருக்க வேண்டும் என்பதல்ல, மாறாக அவர்கள் குழந்தைகளைப் போன்றவர்கள். குழந்தைகளுக்கு சுதந்திரம் கொடுக்கப்படுவதில்லை, ஆனால் அவர்கள் அடிமைகளாக இருக்க வேண்டும் என்று அர்த்தமில்லை. இத்தகு விதிகளை அசுரர்கள் தற்போது புறக்கணித்துவிட்டனர், ஆண்களுக்கு சமமாக பெண் களுக்கும் சுதந்திரம் கொடுக்கப்பட வேண்டும் என்று அவர்கள் எண்ணு கின்றனர். இருப்பினும், உலகத்தின் சமூக நிலையை இஃது ஒன்றும் விருத்தி செதுவிடவில்லை.

உண்மையில், வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் பெண் பாதுகாக்கப்பட வேண்டியவள். அவள் தனது சிறு வயதில் தந்தையாலும், இளம் வயதில் கணவனாலும், முதுமையில் வளர்ந்த பிள்ளை களாலும் பாதுகாக்கப்படவேண்டும். மனு சம்ஹிதையின்படி இதுவே முறையான சமூக நடத்தை. ஆனால் நவீன கல்விமுறையோ, பெண்களின் வாழ்வைப் பற்றிய ஒரு கர்வமான கருத்தை செயற்கையாக வடிவமைத் துள்ளது, இதனால் திருமணம் என்பது தற்போது ஒரு கற்பனையாக ஆகி விட்டது.

மேலும், பெண்களின் நன்நடத்தையும் தற்காலத்தில் நன்றாக இல்லை. இவ்வாறாக சமூகத்திற்கு நன்மை பயக்கும் நெறிகளை அசுரர்கள் ஏற்பதில்லை, மேலும், சிறந்த சாதுக்களின் அனுபவத்தையும் அவர்களால் வகுக்கப்பட்ட சட்டதிட்டங்களையும் அசுரர்கள் பின்பற்றாத காரணத்தால், அவர்களது சமூக நிலை மிகவும் துன்பமயமாக உள்ளது.







No comments:

Post a Comment