Friday 1 June 2018


மற்ற தெய்வங்களை வணங்குவதும் கிருஷ்ணரை வணங்குவதற்க்கு ஒப்பாகுமா ?


அனைத்தும் கிருஷ்ணரின் வியாபகம் தானே ?




நிச்சயம் ஒப்பாகாது. இதை விவரித்தால், பெரும் பதிவாய் விரியும். அது பலருக்கு எரிச்சலை உண்டாக்கும்.. ஆபிராமிய மதங்கள் போலஒன்றை பிடித்து கொண்டு வெறிபிடித்து அலையக்கூடாது என்று சொல்வார்கள்.. அவர்கள் 'ஷிர்க்' என்று கூறுவதற்கும், நீங்கள் கூறுவதற்கும் என்ன வித்தியாசம் இரண்டும் ஒன்றுதான் என்பார்கள்.

ஆனால், இதில் விந்தை என்னவென்றால், அப்படி குற்றம்சாட்டும் பலர் கீதையை படிப்பார்கள்.. மற்றவர்களை படிக்க சொல்வார்கள்! அனாலும், ஏக இறை கொள்கையை ஏற்று கொள்ள மாட்டார்கள்.! இது விந்தைதானே!. ஆனாலும் சிறிது விளக்க கடமைபட்டுள்ளேன்.


பிரம்ம சூத்திரம், உபநிடங்கள், கீதை, இவை மூன்றையும் அடிப்படையாக வைத்துதான், இதுவே வேத மதம் என்ற தத்துவத்தை நிலை நிறுத்த இயலும்.. ஆச்சாரியர்கள் அவ்வாறே செய்தனர்.
அதில் கீதையை எடுத்து கொண்டால்... ஆரம்பம் முதல் இறுதிவரை, ஒரே இறை கொள்கையை மட்டுமே அழுத்தமாக நிலை நிறுத்துகிறது. ஒவ்வொரு சுலோக்கங்களிலும் கிருஷ்ணர் மீண்டும் மீண்டும் விளக்கமாக தெளிவாக அறிவிக்கிறார்!


ஆனால், மாயை வசபட்ட மனமோ அவைகளை ஏற்று கொள்வதில்லை. இஸ்ட தெய்வம், அருவபிரம்மம், இரண்டு மூர்த்தியும் (விஷ்ணு சிவன்) ஒன்றே, அல்லது அனைத்து தெய்வ ரூபங்களும் பிரம்மத்தின் உருவமே, உருவம் குணம் இல்லை, உலகமும் இல்லை, ஜீவனும்இல்லை, பிரம்மம் மட்டுமே சத்தியம் என்று ஏதோதோ, எண்ணி கொண்டு சஞ்சலபட்டு நிற்கிறது...


தேவர்களை வழிபடுபவர் உண்மையில் என்னையே வழிப்படுகிறார்கள், ஆனால், அது தவறான வழிப்பாடு என்கிறார் பகவான்.. ஆனாலும், ஆபிராமிய மதங்கள் போல, அவருக்கு இணை வைத்து வேறு ஒரு தெய்வத்தை வணங்கினால், நரக தீயில் வேக வைத்து விடுவான் என்றெல்லாம் பகவான் கூறவில்லை..

தெய்வங்களை வணங்குபவர்களுக்கு அவர்கள், குறிபிட்ட தெய்வத்தை வணங்க தானே ஈடுபட வைக்கிறேன் என்கிறார்.. தெய்வங்களால் அளிக்கப்படும் அணைத்து ஜட இன்பங்கள், பொருட்கள் எல்லாம் உண்மையில் என்னாலேயே வழங்கபடுகின்றன என்று தெளிவாகவே கூறுகிறார். தெய்வங்களை வணங்குபவர் தேவர் வாழும் உலகங்களுக்கு செல்வர் , என்னை வணங்குபவர் என்னிடம் வாழ்வர் என்கிறார்..அந்த தேவலோகங்கள் நிரந்தரமில்லாதது.. தன் பரம பதமோ பிறப்பு இறப்பு மூப்பு நோய்களுக்கு அப்பாற்ப்பட்டது. அதுவே நித்தியம் என்கிறார்.


இன்னும் பல பல சுலோகங்களில் வேத ரகசியங்களை மிக எளிமையாக அவிழ்க்கிறார்... யார் இறைவன் என்ற கேள்வியில் நான்மறைகளையும் வாழ்நாள் முழுவதும் ஆராய்ந்து தோல்வி அடைகிறான் ஜீவன்.. அவனிடம் கருணை கொண்டு... வேதங்களால் அறியப்படகூடியவனும், வேதங்களை இயற்றியவனும் நானே என்கிறார்.

அருவ பிரம்மம், இஸ்டதெய்வ வழிப்பாடு போன்றவற்றில் மாயை வசபட்டவர்களுக்கு இந்த வார்த்தைகள் சாதாரணமாக தெரிகிறது... ஆனால், பக்தனுக்கோ, மிக பெரிய வேத ரகசியத்தை அறிந்து கொண்டோம் என்று மகிழ்ச்சி அடைகிறான்.. புரிந்து கொள்ளுங்கள்... பக்தனுக்கு மட்டுமே இது சாத்தியம்.. எவ்வளவு பெரிய அறிஞராக, விஞ்ஞானியாக ,தத்துவ ஞானியாக, அல்லது நான்கு வேதங்களையும் பிரம்மசூத்திரத்தையும் கரைத்து குடித்து விட்டதாக சொல்லும் எவருக்கும் இது சாத்தியம் இல்லை. இதையும் ஒரு சுலோகாமாக கூறியே உள்ளார்... வேதங்களால் அறிய பட முடியாதவன் நானென்று!


தேவர்களோ, பெரும் முனிவர்களோ, என் வைபவத்தை அறிய இயலாது என்றும் கூறுகிறார்.. அவரின் வைபவங்களை அறிய இயலாத தேவர்களை வழிப்படுவது எப்படி அவரை வழிப்படுவதற்கு ஒப்பாகும்? ஒருக்காலும் இயலாது!.


பக்தியுடன் கீதை கற்று, அவர் பக்தனாக ஆனால், மட்டுமே இந்த ரகசியங்கள் புரியஇயலும்.. தவிர சஞ்சலபட்ட மனதுடன், அல்லது தன் சுய விஷய ஞானங்களில் கர்வம்கொண்டு, தான் பெரும் பேச்சாளன், பெரும்எழுத்தாளன், பெரும் அறிவியலாளன், தத்துவஞானி , முக்கியமாக அருவபிரம்ம தத்துவத்தில் மனதை பறிகொடுத்தவருக்கு ஒருக்காலும் இந்த ரகசியங்கள் புரிய போவதில்லை.


இப்படிபட்டவர்கல்தான், கீதை மெத்த கற்றாலும், அதன் உபதேசங்களை நம்ப இயலாமல், அல்லது ஏற்று கொள்ள மனம் இல்லாமல், கீதையை ஒதுக்கவும் இயலாமல், மிகவும் சஞ்சலத்துடன் வாழ்கின்றனர்.

ஈஸ்வர பாவத்தில் கீதை உபதேசிக்க பட்டது என்று கூறுவரும் இத்தகையரே!
என் இறுதியான தெளிவான கொள்கை!
இறைவன்.. ஒரு புருஷனே!
அவருக்கு உருவம் குணங்கள் உண்டு..
அவரே பிரம்மம். அவரே பரமாத்மா! அவரே பகவான்!


அவராலேயே இந்த ஜட ஆன்மீக உலகங்கள் படைக்கபட்டன.!அவரே அதற்கு மூலம்..படைத்தல் காத்தல்அழித்தலான முத்தொழில்களுக்கு அவரே கர்த்தா! அவராலேயே ஜட உலக அதிகாரிகளான தேவர்கள் படைக்கபட்டனர். தேவர்கள் அவரின் அங்க விஸ்தாரங்கள். அவருக்கு மேலானவர்களோ, சரிசமமானவர்களோ அல்ல..தேவர்களை வணங்குவது நிச்சயம் அவரை வணங்குவதற்கு ஒப்பாகாது... தேவர்களை வணங்குவது முக்திக்கு வழி வகுக்காது..


அவரின் பரமபதமே முக்திக்கு வழி! முக்தியை அருளும் அந்த பரமபத நாயகன்.. ஈஸ்வரர்களுக்கெல்லாம் ஈஸ்வரன்,சத் சித் ஆனந்த ரூபமுடையவன், பிறப்பு இறப்பற்றவன், காரணங்களுகெல்லாம் காரணமானவன் கோவிந்தன் என்று தன் கோலோகத்தில் அழைக்கப்படும் வாசுதேவனான ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா மட்டுமே! அவரே தன் படை பரிவாரங்களுடன், பூரண அவதாரத்துடன் கோலோகத்தில் இருந்து இறங்கி வந்தார்! (பூரணஅவதாரம் !

இதுவே ஒரு மாபெரும்ரகசியம்தான் )

ஏற்று கொள்பவர்களுக்கு அவர் கருணை உண்டு.. ஏற்றுகொள்ளாதவர்களுக்கு பயம் வேண்டாம்.. அல்லாஹ்வை போல நரகத்தில் தள்ளி விட மாட்டார்!

பஹுனாம் ஜன்மனாம் அந்தே
ஞானவான் மாம் பிரபாத்யதே
வாசுதேவம் சர்வம்இதி
மகாத்மா சு துர்லபா. கீதை 7.19


பற்பல பிறவிகளுக்கு பிறகு, ஞானம் பெற்ற ஒருவன், வாசுதேவனே அனைத்தும் காரணங்களுக்கும் காரணமானவன்(சர்வம்இதி) என அறிந்து என்னிடம் சரணடைகிறான்.. அத்தகைய மகாத்மா மிக அரிதானவன்!


ஏதாவது ஒரு பிறவியில், வாசுதேவனிடம் சரணடைந்து மகாத்மாவாக பிறவி வந்தே தீரும். அவர் அருள்வார்