பசுவைக் கொல்வது தீவிரவாதமே!
தீவிரவாதம் என்று நாம் எதனைக் கூறுகிறோம்?
வாழ்ந்து கொண்டிருக்கும் அப்பாவி உயிரினத்தை அறிவியல், அரசியல் அல்லது பொருளாதார காரணத்திற்காக முழு சொந்த விருப்பத்துடன் கொலை செய்வது அல்லது தீங்கிழைப்பதே தீவிரவாதம்," என்று தீவிரவாதத்திற்கான அடிப்படை விளக்கத்தை ஸ்டீவ் பெஸ்ட் அவர்கள் வழங்கியுள்ளார். இப்போது கூறுங்கள், பசுக்களைக் கொல்வது தீவிரவாதமா? உணவு உற்பத்தியா?
நிச்சயம் தீவிரவாதமே. இந்த தீவிரவாதத்தினை ஏறக்குறைய எல்லா நாடுகளும் மாநிலங்களும் ஊக்குவித்து வருகின்றன. பாகிஸ்தான் போன்ற நாடுகளில் தீவிரவாதம் ஊக்குவிக்கப்படுகின்றது என்று கூக்குரலிடும் மக்கள், தத்தமது நாட்டிலும் தீவிரவாதம் அதைக் காட்டிலும் பன்மடங்கு அதிக அளவில் ஊக்குவிக்கப்பட்டு வருகின்றது என்பதை காண மறுக்கின்றனர்.
சில தீவிரவாதிகள் சமீப காலங்களில் பல்வேறு நபர்களின் தலைகளை வெட்டி வருகின்றனர். பசுவின் தலையினை வெட்டக்கூடிய தீவிரவாத செயல்களில் ஈடுபட்டிருக்கும் இதர மக்களுக்கும், இத்தகைய தீவிரவாதிகளுக்கும் எந்த வேற்றுமையும் இல்லை என்பதே உண்மை, உண்மையிலும் உண்மை. அவர்களும் அப்பாவி மக்களின் தலையை வெட்டுகின்றனர், இவர்களும் அப்பாவி பசுக்களின் தலையை வெட்டுகின்றனர். இருவரும் தீவிரவாதிகளே. தீவிரவாத குழுவினரின் சமுதாயம் அறியாமையிலும் அகங்காரத்திலும் மயங்கியிருப்பதால், தலையை வெட்டுவது தீய செயல் என்று கருதுவதில்லை, நல்ல செயலாக நினைக்கின்றனர்; அதுபோலவே, பசுவை வெட்டும் தீவிரவாத குழுவினரும் அறியாமையினாலும் அகங்காரத்தினாலும் மதி மயங்கி இருப்பதால், பசுவைக் கொல்வதை தீய செயலாக கருதுவதில்லை, உணவை உற்பத்தி செய்யும் நல்ல செயலாக கருதுகின்றனர்.
எனவே, தாயைக் கொல்வதை ஆதரிக்கும் ஒவ்வொரு மடையனுக்கும், தீவிரவாதத்தை ஆதரிக்கும் இதர மடையர்களுக்கும் இடையில் எந்த வேற்றுமையும் இல்லை. ஒரு விதத்தில் கூறினால், ஒரு சிலரை எதிரிகளாக பாவித்து தலையைத் துண்டிக்கும் தீவிரவாதிகளைக் காட்டிலும், சொந்த தாயின் (பசுவின்) தலையைத் துண்டிக்கும் மனசாட்சியற்ற நபர்கள் மோசமான தீவிரவாதிகளாவர்.
இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, சட்டபூர்வமாக அரசாங்கத்திடம் அனுமதி வாங்கிவிட்டு, மாபெரும் கசாப்புக்கூடங்களை நிறுவி அங்கே நிகழ்த்தப்படும் பசுக் கொலையானது, சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்டுள்ள தீவிரவாதம் என்றே தோன்றுகின்றது.
No comments:
Post a Comment