Saturday 27 October 2018


இராமாயணத்தில், புத்தரா ?



பல பெரியார்வாதிகளும், நாத்திகவாதிகளும் கூறும் ராமாயண பொய்களில் இதும் ஒன்று. அது முழுக்க முழுக்க பொய். இராமாயணத்தில் எங்குமே புத்தர் பற்றி குறிப்பிடவில்லை !

அதன் உண்மை இங்கே கொடுத்துளோம் .....

புத்தர் என்கிற வார்த்தை வருவதாக சொல்லக்கூடிய வால்மீகி ராமாயணம், அயோத்யா காண்டம்,சர்க்கம்-109 அத்தியாயத்தில் ஜாபாலி என்கிற முனிவர் ராமனை காட்டிலிருந்து நாட்டிற்கு அழைத்து செல்ல சத்தியம் கடைபிடிக்கவேண்டாம், சொர்க்கம், நரகம் ஆகியவை கிடையாது என ராமனை இழுப்பதற்காக  நாத்திகம் பேசுகிறார்.

அப்போது தான் ராமர், இதை சகிக்காமல் அவரை பார்த்து இந்த வார்த்தைகளை கூறுகிறார். ...
(இதில் புத்தர் என்கிற பெயர் கூறவேண்டிய அவசியமே இல்லையே).

  
இதோ வால்மீகி ராமாயணம், அயோத்யா காண்டம்,சர்க்கம்-109, வசனம்-34 மொழிபெயர்ப்பு...

“யதா ஹி சோரா: ததா ஹி புத்தஷ்                   
ததாகதம் நாஸ்திகமத்ர வித் தி
தஸ்மாத்தி யா ஷங்க்யதாமஹ ப்ரஜாநாம்
நாஸ்திக்கேநாபி முகோ புத: ஸ்யாத்" - வசனம் 34

"அறிவாளியானவன், நாத்தீகவாதத்திற்கு இடம் கொடுப்பானாகில், அதாவது வேதத்திற்கு புறம்பான வழியில் செல்வானாகில், அவன் திருடனை போலவனாவான். அவ்வாறு சந்தேகிக்க தக்கவர்களை நல்லறிஜர்கள் முகம் கொடுத்தும் பேசுவதில்லை"

வார்த்தை அர்த்தம் :

யதா ஹி ததா ஹி = வழக்கு சரியான நிலையில் உள்ளது; = என்று; புத்தா = வெறும் அறிவாற்றல்; சோரா = (தண்டிக்கப்பட தகுதியுடையவர்) ஒரு திருடன்; வித்தி = தெரியும்; நாஸ்திகம் = ஒரு நாத்திகர்; அஸ்திர = இங்கே; தத்தாகம் = வெறுமனே அறிவுஜீவித்தனமாக இருக்க வேண்டும்; தஸாத் = எனவே; யா = அவர் யார்; ஷங்க்யதாமஹ = மிக சந்தேகத்திற்குரியது; ப்ரஜாநாம் = மக்கள் நலனுக்காக தண்டிக்கப்பட வேண்டும்; நா ஸயாத் = எந்த விஷயத்திலும்; புத்தர் = புத்திசாலி மனிதன்; அபிமுகஹ் = துணை; நாஸ்டிக்கா = ஒரு நாத்திகவாதி.


இதில் புத்தா' என்கிற வார்த்தை புத்தரை குறிப்பிடவில்லை

buddhaH = a mere intellection (வெறும் அறிவாற்றல்)

buddhaH = should a wise man (புத்திசாலி மனிதன்)

இது தான் இந்த வசனத்தின் அர்த்தம் !
  

வேதகாலத்திலேயே, லோகாயதவாதம் என்று ஒன்று உண்டு.  கடவுள் மறுப்புவாதம் அது.  அதை "நாத்திகம்" என்று பகருவார்கள்.  இராமன் அப்படிப்பட்ட நாத்திக அறிவாளியையே "புத்த:" என்று குறிப்பிட்டு, அப்படிப்பட்ட ஒருவர் திருடனுக்கு ஒப்பாக வைத்து தண்டிக்கப்பவேண்டும் என்று இயம்புகிறார்.


இராமன் யசுர்வேதமும், தனுர்வேதமும், அவ்வேதங்களின் உட்பகுதிகளையும் என்று அனுமன் சுந்தரகாண்டத்தில் சீதைக்கு இராமனைப்பற்றி அடையாளம் கூறுகிறார். எனவே வேதத்தைக் கற்று ஒழுகும் இராமன்  நாத்திக வாதம் செய்யும் காபாலியிடம் அப்படிச் சொல்வது வியப்பல்ல.


மற்ற சுலோகங்களி வருவது "ப்ர'புத்த' என்ற  சொல்லே.  "ப்ர புத்த" என்றால் எழுப்பப்ட்ட, மலர்ந்த, பெருகிய, திறந்த, தோன்றிய, அடையாளம் கண்டுகொள்ளப்பட்ட, அறிந்துகொண்ட, உணர்ந்துகொண்ட, புரிந்துகொண்ட .வெடித்துச் சிதறிய  என்று பல பொருள்கள் கொள்ளலாம்.


அந்த 'ப்ர புதத" வரும் சுலோகங்களில் எல்லாம் மலர்ந்த என்ற பொருளே கொள்ளும்படி வருகிறது, ஏனெனில் மலர்களைப்பற்றிய விவரிப்பே அவை. ஒரு இடத்தில் மட்டும் உணர்ந்தறிந்துகொண்ட என்ற பொருள் வருகிறது.


எனவே, "புத்த" என்ற சொல் இராமயணத்தில் "சித்தார்த்த புத்தரை" குறிக்கவில்லை