Friday 29 December 2017

தமிழ் 60 வருட பெயர்கள் சமசுகிருதத்திலேயே உள்ளது ஏன் ? 

தமிழரின் வானவியல் அறிவு பிரமிக்கத் தக்கதுபிரபவ தொடங்கி அக்ஷய முடிய அறுபது ஆண்டுகளைத் தமிழ் வருடங்கள் என்றே கூறுகிறோம்ஆண்டுகள் ஐம்பதாகவோ, நாற்பதாகவோ ஏன் வகுக்கப்படவில்லைமேலை நாடுகளில் ஆண்டுகளுக்குப் பெயர் சூட்டும் வழக்கமும் இல்லை; அறுபது வருடச் சுழற்சியால் வருடங்களைப் பிரிப்பதும் இல்லை

நமது முன்னோர் மட்டும் ஏன் இப்படி வகுத்தனர் என்ற வினா எழுவது இயல்பேஅறிவியல் ரீதியில் வானிவியல் அடிப்படையில் அற்புதமாக அமைக்கப்பட்ட ஏற்பாடே அறுபது வருடச் சுழற்சி ஆகும்குரு கிரகம் ஒரு முறை வான வட்டத்தைச் சுற்றி வர (12 ராசிகளைக் கடக்க) 12 வருடங்கள் ஆகும்சனி கிரகம் வான வட்டத்தைச் சுற்றி  வர 30 வருடங்கள் ஆகும்குருவும், சனியும் அசுவதி நட்சத்திரத்தில் காணப்படும் போது தோன்றும் வருடமே பிரபவ ஆகும். ஐந்து முறை ஒரு வானவட்டத்தைச் சுற்றி வர 60 ஆண்டுகள்இந்த பிரஹஸ்பதி சக்கரத்தின் அறுபது மாதங்களே பிரபவ, விபவ, சுக்ல முதலான அறுபது வருடங்கள் ஆகும்

பழைய சோதிட நூல்களும் , நாரத சம்ஹிதையிலும் , ப்ருஹத் சம்ஹிதையிலும், சூரிய சித்தாந்தத்திலும் சொல்லப்படுகிறது. இந்த 60 வருடங்கள், வியாழன் கிரகத்தின் 60 வருட சுழற்சியின் பெயர்கள்.

இன்று வழக்கில் சூரிய வருடங்களுக்குச் சொல்லப்படுகின்றது. இந்த மாற்றத்தைச் செய்தவர்கள் தமிழர்கள்தான் . இடைக் காட்டுச் சித்தர் அளித்துள்ள 60 வருடப் பலன்களும், பிரபவ முதலான 60 வருடங்களைத் தாங்கியுள்ள சூரிய வருடங்களுக்கே. இது எவ்வாறு நடைமுறைக்கு வந்திருக்க முடியும்?

இதற்கு பதிலை தொல்காப்பியர் சிந்தனையிலிருந்து எளிதாகப் புரிந்து கொள்ளலாம்.

முதல் எனப்படுவது நிலம் பொழுது இரண்டின்
இயல்பு என மொழிப இயல்பு உணர்ந்தோரே

என்கிறார். இதில் பொழுது என்பது, அந்நிலத்தின் தட்ப வெப்பம் சார்ந்தது. இவ்விரண்டின் இயல்பு தெரிந்தோரால்தான் இவற்றைப் பற்றிப் பேச முடியும், இவை குறித்த விதிகளை வகுக்க முடியும்.

இந்த வருடங்கள் அலங்காரப் பெயர்கள் அல்ல. அந்தந்த வருடத்தில் நடக்கும், சம்பவங்கள், வானிலை, மழை, உழவு குறித்த விஷயங்களைக் கூறுவன. தமிழ் நாட்டில் நாம் இன்று பின்பற்றி வரும் வருடக் கணக்கு, வட மாநிலங்களிலிருந்து வேறுபட்டது

அதாவது, இங்கே நமக்கு விரோதி வருடம் என்றால், வட இந்தியாவில், சார்வரி வருடம். இந்த மாறுபாட்டை, இடைக் காட்டுச் சித்தர் போன்றவர்களோ, அல்லது சோதிட வல்லுநர்களோதான்தொல்காப்பியர் கூறினது போல, நிலம், தட்பவெப்பம் ஆகியவற்றின் இயல்பு உணர்ந்தவர்கள்தான் கொண்டு வந்திருக்க வேண்டும்.

60 வருடங்களும், நிலம், தட்பவெப்பம் குறித்து, சுழற்சி முறையில் மீண்டும் மீண்டும் வந்துள்ளன. இவற்றைக் குறித்தும் வைத்துள்ளனர். அதன் அடிப்படையில், வருடப் பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் இன்று நாம் பின்பற்றும் வருடக் கணக்கு, நம் பகுதியில் உள்ள வெப்பம், பருவ மழை இவற்றைப் பொருத்ததே.

வருடப் பலன்களை அறிந்து கொள்ள, அவற்றின் சமசுகிருத பெயர்களே போதும். அப்படி என்றால், இப்பெயர்களைத் தமிழ்ப் படுத்தி இருக்கலாமே என்று கேட்கத் தோன்றும். அது எளிதல்ல. பல பெயர்களுக்கும் சரியான மொழிபெயர்ப்பு தமிழில் மட்டுல்ல, பிற மொழிகளிலும் கிடையாது.

தானம், தவம் இரண்டும் தங்கா வியனுலகம் பற்றிப் பேசின வள்ளுவரே அந்த இரு வட சொற்களை அப்படியே கையாண்டுள்ளார். ஏன்? அவை சொல்லும் கருத்தை அவற்றைப் போல ஒரு வார்த்தையில் சொல்ல முடியாது. அப்படிப்பட்ட சொற்களைத் தமிழில் அப்படியே ஏற்றுள்ளனர்.

இது மட்டுமின்றி ஆண்டுக்குப் சமசுகிருத பெயர்  சூட்டியதோடு அதன் மூலம் அந்த ஆண்டின் இயல்பையும்  நம் முன்னோர் குறித்து வைத்துள்ளனர்அது மட்டுமின்றி வருஷத்திய பலனுக்கான வெண்பா வேறு தனியே தரப்படுகிறது

மேலும், இதை பற்றி தைத்திரீய சம்ஹிதா 60 வருடங்களை விரிவாக விளக்குகிறதுஎடுத்துக்காட்டாக பிரபவ எனில் பொருள் உற்பத்தி ஆகுதல் என்று பொருள்விபவ என்றால் ஐஸ்வர்யம்; சுக்ல என்றால் நன்மைஇப்படி அறுபது வருடத்திற்கும் தனித்தனி பொருள் உண்டு.

சித்ரபானு வருஷத்திய பலன் பற்றியவெண்பா பின்வருமாறு:-

சித்ர பானிற் சிறக்கமழை மிகுந்து
வித்துள்ளவெல்லாம் விளையுமேஎத்திசையும்
பார்பாருக் காகாது பாவேந்தர்க்கே நலமாம்
தீர்ப்பாக பூமிபயஞ்செப்பு.
இவ்வாறு சரியான வார்த்தைகள், பல வருடப் பெயர்களுக்கு இல்லாமையாலும், புரிந்த வார்த்தைகள், மக்களை பயமுறுத்தும் வண்ணம் இருப்பதாலும் சித்தர் போன்றவர்கள், அந்த 60 வருடப் சமசுகிருத  பெயர்களையே சூரிய வருடங்களுக்குச் சூட்டி இருக்கிறார்கள்

பாதி புரிந்தும் புரியாததுமாக வட மொழியிலேயே அப்பெயர்கள் இருப்பது, அல்லலுறும் மக்கள், பலன் தெரிந்துகொண்டு மேலும் புதுக் கவலைகள் கொள்ளாமல் இருப்பதற்கு உதவும்.

புராணத்தில் வரும் கதை

இந்த தமிழ் 60 வருடங்கள்  புராணங்களில் கூறிய கதைகளை வைத்தே வருகிறது. இந்தக் கதையின் மூலம் இந்துமத நூலான தேவி பாகவதம் , நாரத புராணம்பிரம்ம வைவர்த்த  புராணத்தில் வருகிறது.

அதில், இந்த உலகில் மாயையைக் கடந்தவர் யாருமில்லை என்று படைப்புக் கடவுள் பிரம்மா கூறுகிறார். இதை நாரதர் ஒத்துக் கொள்ளவில்லை. ‘தான் விஷ்ணுவின் பக்தனானதால், தன்னை விஷ்ணு மாயா தீண்டாதுஎன்று நாரதர் சாதிக்கிறார். அப்படி எண்ணி அவர் பூவுலகில் சஞ்சரிக்கையில், சர்பபுரி என்னும் இடத்தில் உள்ள குளத்தில் குளித்தவுடன், அவர் மாயையில் ஆட்படுகிறார். பெண்ணாக மாறி விடுகிறார். அவரைக் கண்டு மோகித்த அரசகுமாரனை மணம்புரிந்து கொள்கிறார். அவர்களுக்கு பிரபவ முதலான அறுபது குழந்தைகள் பிறக்கின்றன. அவ்வமயம், ஒரு போர் வந்து அப்போரில், அரசகுமாரனும், அந்த அறுபது குழந்தைகளும் இறந்து விடுகின்றனர்.


அதனால் சோகம் உற்ற நாரதர், விஷ்ணுவை வேண்டுகிறார். விஷ்ணுவும் காட்சி தந்து, மீண்டும் ஒரு குளத்தில் முழுகி எழச் சொல்கிறார். நாரதர் அப்படி எழுந்தவுடன், பழையபடியே நாரதராக மாறி, தான் அத்தனை வருடங்களும் மாயையில் இருந்ததை உணர்கிறார். இந்த பாவனையை உண்மை என்று எண்ணி நாம் அதில் ஒன்றி விடுகிறோம். இப்படியே வாழ்நாளைக் கழிக்கிறோம்.

அறுபது வருடங்கள் என்பது ஒரு சுற்று வாழ்நாள் என்ற வகையில் காலம் முழுவதும் இந்த மாயையில் இருக்கிறோம். இந்தக் கதையில் கவனிக்க வேண்டியது  – பிரபவ, விபவ என்று பெயர் சூட்டப்பட்ட அறுபது வருஷக் குழந்தைகளும் இறந்து விடுகின்றன

இதில்தான் இந்தக் கதையின் தத்துவமே புதைந்து உள்ளது. அறுபது விதமாக, நல்லதும் தீயதும் நடக்கும் வாழ்க்கை ஒருநாள் முடிந்து விடும். இந்த அறுபது வருடங்களும் எதைச் சாதித்தோம், யாது செய்தோம், எதற்காகத்தான் வாழ்ந்தோம் என்பது தெரியாமல் இருக்கிறோம். அதுதான் மாயை. மாயையிலிருந்து விடுபட இறைவனைத் தொழுது வெளிவர வேண்டும்- நாரதரைப் போல என்பதே இதன் கருத்து.

தமிழ் 60 வருடங்கள் :

01. பிரபவ
02. விபவ
03. சுக்ல
04. பிரமோதூத
05. பிரசோற்பத்தி
06. ஆங்கீரச
07. ஸ்ரீமுக
08. பவ
09. யுவ
10. தாது
11. ஈஸ்வர
12. வெகுதானிய
13. பிரமாதி
14. விக்கிரம
15. விஷு
16. சித்திரபானு
17. சுபானு
18. தாரண
19. பார்த்திப
20. விய
21. சர்வசித்து
22. சர்வதாரி
23. விரோதி
24. விக்ருதி
25. கர -
26. நந்தன
27. விஜய
28. ஜய
29. மன்மத
30. துன்முகி -
*31. ஹேவிளம்பி - "
*Hevilambi 2017–2018*
*(இவ்வருடம் "" தமிழ் புத்தாண்டு)*

32. விளம்பி
33. விகாரி
34. சார்வரி
35. பிலவ
36. சுபகிருது
37. சோபகிருது
38. குரோதி
39. விசுவாசுவ
40. பரபாவ
41. பிலவங்க
42. கீலக
43. சௌமிய
44. சாதாரண
45. விரோதகிருது
46. பரிதாபி
47. பிரமாதீச
48. ஆனந்த -
49. ராட்சச
50. நள
51. பிங்கள
52. காளயுக்தி -
53. சித்தார்த்தி
54. ரௌத்திரி
55. துன்மதி
56. துந்துபி
57. ருத்ரோத்காரி
58. ரக்தாட்சி
59. குரோதன
60. அட்சய -

Akshaya 2046–2047