Monday 29 May 2017

ஜாதி அடையாளத்தை உண்டாகினவர்கள் ஆங்கிலேயர்களே !

அதைப் பிடித்துக் கொண்டு அரசியல் செய்தவர்கள் தமிழ் பேசும் திராவிடவாதிகள்.

ஜாதி என்பது, காஸ்டா [casta] என்ற போர்ச்சுகீசியரது இனசித்தாந்ததினால் உண்டானது. இந்தியாவில் அவர்கள் தங்களது உறவுகளை இந்தியர்களுடன் வைத்துக் கொள்ள விரும்பவில்லை. பிறகு, வீரர்களை இந்திய பெண்களுடன் புனைய வைத்து, பரிசோதனை [miscegenation] செய்தனர்.

பிறந்த குழந்தைகளை தங்களது தூய்மையான இனத்தில் சேர்த்துக் கொள்ளவில்லை. அவ்வாறு ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள் [casta] ஆகி [cast] தனிமைப் படுத்தினர்.  ஆங்கிலத்தில் அது [caste] ஆகியது.  கோட்டைக்கு வெளியே கருப்பர் / இந்தியர் வாழும் இடத்தை கருப்பர் நகரம் [Black town] என்றும், கோட்டைக்குள் வெள்ளையர் வாழுன் இடத்தை வெள்ளையர் நகரம் [White town] என்றே பெயரிட்டு, கடுமையாக பின்பற்றினர்.

வர்ணங்கள் என்பவை ஒரு மனிதனது குணத்தால் அமைவதாகச் சொல்லப்பட்டுள்ளது. குணத்தின் காரணமாக ஒருவனது செயல்பாடு அமையும். அந்தச் செயல்பாட்டையே தனது தொழிலாகக் கொண்டால் அதனால் அவனுக்கும் பயன் கிடைக்கும். அவனது அந்தப் பங்களிப்பால் சமூகத்துக்கும் பயன் கிடைக்கும். இந்த விதமான மனித வள மேம்பாட்டுக் கருத்தாக வர்ணாஸ்ரம தர்மத்தை மனு ஸ்ம்ருதி தருகிறது.

அதாவது ஒருவனது சுபாவத்திலிருந்து, ஸ்வகர்மம் (சுய கர்மம் அல்லது அவனுக்கு இயல்பாகச் செய்ய வரும் செயல்பாடுகள்) உண்டாகிறது. அதுவே ஸ்வதர்மம் (சுயதர்மம்) எனப்படுகிறது. ஸ்வதர்மம் என்றால் இயல்பாக ஒருவனுக்குச் செய்ய வரும் செயலைச் செய்வது. அதை விட்டு விட்டு அவன் இயல்புக்குப் புறம்பான வேறு தொழிலைச் செய்தால் அது திருப்தியாக அமையாது. பகவத் கீதையில் காணப்படும் இந்தக் கருத்தே மனு கொடுத்த வர்ணாஸ்ரம தர்மமாகும்.

சுபாவம் -> சுயகர்மம் -> சுயதர்மம்
மஹாபாரதத்தில் திருடனுக்குக் கூட தர்மம் உள்ளது என்று சொல்லப்பட்டுள்ளது. திருட்டு அவனது தொழில். அவன் ஸ்வபாவத்தால் அதைச் செய்கிறான். ஆனால் அந்தத் திருடனும், தன் குடும்பத்தைப் பேண வேண்டும். தாய், தந்தைக்குப் பித்ரு கடன் செலுத்த வேண்டும். திருடுமிடத்திலும், மிச்சம் வைக்காமல் திருடக் கூடாது. திருடனாக இருந்தாலும், தான தர்மங்கள் செய்ய வேண்டும் அவனிடம் பிராணிகள் அன்பு செலுத்தும் வண்ணம் அவன் நடந்து கொள்ள வேண்டும். என்றெல்லாம் வாழ்க்கை விதிகள் இருக்கின்றன. அந்தத் திருடனே நல்ல சிந்தனையும், யாருக்கும் தன்னைக் கண்டு பயப்படாமல் இருக்கும் படியும், தன்னால் யாருக்கும் கெடுதல் வராமலும், செய்தால் அவன் உயர்ந்தவன் ஆகிறான். திருடனாக வழிப்பறி செய்த வால்மீகி ஆதிகவி எனப்போற்றப்பட்டு காலத்தாலும் அழியாத ராமாயணம் எழுதினார்.

கசாப்புக் கடைக்காரனாக இருந்தாலும், வ்யாதன் என்பவன்,  விருப்பு வெறுப்பில்லாமல் தன் தொழிலைச் செய்தும், தன் பெற்றோரைப் பேணிக் காத்தும், சிறந்த ஞானம் பெற்று விளங்கினான். அவன் சொன்னது ‘வ்யாத கீதை’ என்று புகழப்படுகிறது.
வைசியனாக இருந்த துலாதாரன் என்பவன், ஜாஜலி என்னும் தவசிக்கு, தர்மம் எது என்று சொல்கிறான் (சா-பர் 260) அதற்குக் காரணம், சுபாவத்தால் வைசியனாக வாணிபம் செய்தாலும், சிந்தனையால் உயர்ந்த விஷயங்களைத் தெரிந்து வைத்திருந்தான். அவற்றைக் கடைப் பிடிக்கவும் செய்தான்.
எனவே ஸ்வபாவத்தால் ஏற்படுகின்ற தொழில் ஒன்றானாலும், சிந்தையால் ஒருவன் எப்படி வாழ்கிறான் என்பதன் மூலமே ஒருவன் உயர்ந்தவன் எனப்படுவதும், தாழ்ந்தவன் என்ப்படுவதும் ஆகும்.  ஸ்வபாவத்தால் ஏற்படுகிற தொழிலை மனு ஸ்ருதி  சொல்கிறது.

வர்ணம் என்பதும், ஜாதி என்பதும் ஒன்றல்ல.  சுபாவத்தைக் கொண்டு வர்ணமும், தொழிலைக் கொண்டு ஜாதியும் சொல்லப்பட்டது. ஒருவனே இவற்றில் மாறி மாறி வர முடியும்.
க்ஷத்திரியனான அரிச்சந்திரன், மயான வேலையை மேற்கொண்டபோது சண்டாளன் ஆனான்.  இது போல மாறி வருதல் ஒரு நூற்றாண்டு முன் வரை நடைமுறையில் இருந்திருக்கிறது.  உதாரணமாக பொன் வேலை செய்யும் பொற்கொல்லர்களை சோனார் என்று அழைப்பார்கள். பொன் என்று பொருள் படும் ஸ்வர்ணம் என்னும் சொல்லிலிருந்து இந்தப் பெயர் வந்தது.

தொழிலால் ஏற்பட்டது இந்தப் பெயர். இதை ஜாதி என்றாக்கினது ஆங்கில அரசு. அவர்கள் நாட்டில் தொழில் அடிப்படையில் CASTE என்று ஜாதியை உண்டாக்கினர். அதையே குடிப் பெயராகவும் அவர்கள் கொண்டிருந்தனர்.


உதாரணமாக கோல்ட்ஸ்மித், ஸ்மித், ப்ளாக்ஸ்மித், காப்ளர் என்றெல்லாம் அவர்கள் பெயர்கள் இருக்கும். இவை எல்லாம் அவர்கள் பரம்பரையாகச் செய்து வந்த தொழிலின் அடிப்படையில் வந்தவை.
ஆங்கிலேயர்கள் நம் நாட்டை ஆண்ட போது,  அந்த வழக்கத்தையே நமக்கும் கொண்டு வந்து,  அதுவே நமது ஜாதிகள் என்றனர்.  ஆனால் அதுவரை நம் மக்கள் வர்ணங்களின் பெயரால் மட்டுமே தங்களை இனம் காட்டிக் கொண்டிருந்தனர்.
இதைப் போன நூற்றாண்டில் எடுக்கப்பட்ட சென்சஸ் என்னும் மக்கள் தொகைக் கணப்பெடுப்பில் காணலாம். 1911 – to -1921 ஆம் ஆண்டு சென்சஸில் சோனார்கள் தங்கள் ஜாதி க்ஷத்திரியர்கள் என்றே பதிந்துள்ளனர், ஆனால் 1931 –ஆம் ஆண்டு சென்சஸில் பிராம்மணர்கள் என்றும், வைசியர்கள் என்றும் பதிந்துள்ளனர். அதாவது தொழிலால் பொற்கொல்லர்கள், வர்ணத்தால் ஒரு சாரார் பிரம்மணார்களாகவும், மற்றொரு சாரார் வைசியர்களாகவும் இருந்திருக்கின்றனர்.
அது போல ’சூத்ரதார்” என்னும் தச்சு வேலை செய்பவர்கள் தங்களை வைசியர்கள் என்று 1911, 1921 ஆண்டு சென்சஸில் பதிந்துள்ளானர். 1931 ஆம் ஆண்டு சென்சஸில் தங்களை பிராம்மணர்கள் என்று பதிந்துள்ளனர்.

அது போல கம்மாளர்கள் என்னும் இரும்பு வேலை செய்பவர்கள், 1921 ஆம் ஆண்டு சென்சஸில் க்ஷத்திரியர் என்றும், 1931 ஆம் ஆண்டு சென்சஸில் பிராம்மணர் என்றும் பதிந்துள்ளனர். ஆனால் அவர்களை கம்மாளர் என்னும் ஜாதியாகத்தான் ஆங்கில அரசு பார்த்தது. ஆங்கிலேயர்கள் சென்சஸ் எடுத்த காலத்தில் பாரத மக்களில் பெரும்பாலோர் இந்த ஜாதிக் கருத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. ஜாதி என்று பதிய வேண்டிய கட்டாயத்தைக் கொடுத்த போது,வர்ணத்தையே பதிந்தனர். ஆனால் எதிலிருந்து வருமானம் வருகிறது என்ற கேள்வி எழுந்த போது, தொழில் ரீதியான பெயரைத் தர வேண்டியதாயிற்று. அதுவே அவர்கள் ஜாதி என்று ஆங்கில அரசு முத்திரை குத்தி விட்டது.

நமக்கு ஜாதி அடையாளத்தை உண்டாகினவர்கள் ஆங்கிலேயர்களே. அதைப் பிடித்துக் கொண்டு அரசியல் செய்தவர்கள் தமிழ் பேசும் திராவிடவாதிகள்.

ஜாதி வேறுபாடுகளையும், அவற்றின் அடிப்படையில் உயர்வு, தாழ்வுகளையும் வேத சாஸ்திரங்களில் எங்குமே சொல்லவில்லை.

No comments:

Post a Comment