Tuesday, 30 May 2017

வேதசாஸ்திரம் கூறும் உமையான வர்ணாஸ்ரம தர்மம் என்ன.?




வர்ண மற்றும் ஆஸ்ரம விதிகளை நிறைவேற்றுவதன் மூலம் ஒருவன் பகவான் விஷ்ணுவை வழிபட வேண்டும் என்றும், வர்ணாஸ்ரம தர்மத்தினை நிறைவேற்றுவது பகவானை திருப்ப்திப்படுத்துவதற்கு மிகச்சிறந்த வழிமுறை என்றும் விஷ்ணு  புராணம்  (3.8.9) கூறுகிறது.

விஷ்ணுவை வழிபடுவது மனித வாழ்வின் இலட்சியம் ஆகும். இதற்கான முதல் படியாக இருப்பதே வர்ணாஸ்ரம தர்மமாகும். இது மக்களுக்கு தவறான கருத்து ஏற்பட காரணம் ஆங்கிலேயர் மெக்காலே கல்வியாளர்களால் அத்தகைய கருத்துக்கள் திணிக்கப்பட்டதாகும். வர்ணாஸ்ரம தர்மம் மக்களை பிறப்பின் அடிப்படையில் பாகுபடுத்துகிறது என்னும் தவறான கருத்தினை பல தலைமுறைகளாக பிரச்சாரம் செய்த காரணத்தினால், மக்கள் இதை கண்மூடித்தனமாக எதிர்க்கின்றனர்.

உண்மையான வர்ணாஸ்ரம தர்மம் பகவத் கீதையில் (4.13) கூறப்படுவது .

'ஒருவனது குணத்தினையும், செயல்களையும் அடிப்படையாக வைத்து வெவ்வேறு மனிதர்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளனர்.'  பகவத் கீதையில் (4.13)

அவர்கள் பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என நான்கு வகை வர்ணம்( சமுதாய பிரிவு ) அறியப்படுகின்றனர்இந்த பிரிவு கடவுள் உணர்வில் முன்னேறுவதற்கு பயிற்ச்சி அளிப்பதே வேத கலாச்சாரத்தின் நோக்கமாகும்.

இந்த வர்ணாஸ்ரம பிரிவு முறை தற்போது இந்தியாவில் தலைகீழாக மாறியுள்ளது  பிராமண குடும்பத்தில் பிறந்த காரணத்தினால் தான் பிராமணனாக ஒப்புக்கொள்ளவேண்டும் என்று ஒருவன் உரிமை கொண்டாடுகிறான். சூத்திரன் தன்னை சமுதாயத்தில் தாழ்த்தவனாக கருதி தனக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்று உரிமை கொண்டாடுகிறான். ஆனால் இதை சாஸ்திரம் ஒப்புக்கொள்ளவில்லை. ஒருவனின் தந்தை பிராமணராக இருக்கலாம், ஆனால் அதுவே அவன் பிள்ளைக்கு பிராமணனாக மாத்திவிடுவதில்லை.

உண்மையான வர்ணாஸ்ரம தர்மத்தில், ஒருவனின் வர்ணம் என்பது அவன் பெற்றுள்ள உண்மையான தன்மையை அடிப்படையாக கொண்டதே தவிர, பிறப்பு அல்லது கோத்திரத்தை வைத்து அல்ல. எடுத்துக்காட்டாகஒரு டாக்டரின் பையன் எப்படி படிக்காமல் டாக்ட்டர் அக்கா முடியாதோ அது போல, பிராமணரின் மகன் தகுதியை வளர்த்துக்கொள்ளாமல் இருந்தால் அவனை வேத கலாச்சாரம் பிராமனாக ஏற்பதில்லை

இதற்க்கு வேத சாஸ்திரங்களில் இருந்து உதாரணம் :

1. ரிஷப தேவர் தனது 100 புதல்வர்களில் - முதல் 10 பேரை சத்திரியர்களாகவும், அடுத்த 9 பேரை பாகவத பேச்சாளர்களாகவும், மீதமுள்ள 81 புதல்வர்களை வேத வேள்விகள் செய்யும் அந்தணர்களாகவும் (பிராமணர்களாக) மாற்றினார் என்று ஸ்ரீமத் பாகவதம் ஐந்தாம் காண்டம் சொல்கிறது.

2. அதே போல், பிராமணராக இருந்த அஜாமிளன் தனது கெட்ட நடத்தையினால் சூத்திரனாக மாறினான். - பாகவதம் 5 காண்டம்.

3. சத்திரிய குடும்பத்திலிருந்து வந்த விசுவாமித்திரர் காலப்போக்கில் தகுதிகளை வளர்த்து கொண்டு பின்னர் பிராமணராக மாறினார்.

4. இராவணன் பிராமண குடும்பத்தில் பிறந்திருந்த போதிலும், அவனது அசுரர் சுபாவதினால் அவனை எவரும் ஒருபோதும் பிராமணராக ஏற்கவில்லை.

5. ஜபல உபநிஷத்தில், ஒரு சிறுவன் வேசிக்கு பிறந்தவனாக இருந்த போதிலும், அவனிடம் பிராமண தகுதிகள் இருந்த காரணத்தினால், அவனை கௌதம முனிவர் பிராமணராக ஏற்று கொண்டார்.

இவ்வாறு, வேத சாஸ்திரத்தில் பல இடங்களில் குணம், மற்றும் தொழிலை அடிப்படையாக வைத்து வர்ணங்கள்  பிரிக்க பட்டது .

வேத காலத்தில் பிறப்பு என்பது ஒரு அடையாளமாக எடுத்து கொள்ளபட்டதே தவிர, அதுவே நியதியாக ஏற்கப்படவில்லை. பொதுவாக வேத காலத்தில் ஒரு குறிப்பிட்ட குடும்பத்தில் பிறப்பவர் அக்குடும்பத்துக்குரிய குணத்துடன் இருப்பார் என்று எதிர்பாக்கப்பட்டது. ஆனால் கலியுகத்தில் அனைவரும் சூத்திரர்கள் என்றும், முறையான தகுதியினால் ஒருவன் பிராமணராக ஆக  முடியும் என்று ஸ்ரீமத் பாகவதம் சொல்கிறது.

மஹாபாரதத்திலிருந்து சில கூற்றுகள்..

மஹாபாரதம் வனபர்வம் பகுதி 311-ல், யுதிஷ்டிரர் யக்ஷனிடம் மேற்கொண்ட உரையாடலைக் காண்போம்.

யக்ஷன் யுதிஷ்டிரரிடம் வினவினார், "மன்னா, எத்தகைய பிறவி, நடத்தை, (வேத) படிப்பு அல்லது (சாஸ்திர) கல்வியினால் ஒரு மனிதன் பிராமணனாகிறான்?

யுதிஷ்டிரர் பதிலளித்தார், "யக்ஷனே, கேள்! பிறவியோ, படிப்போ, பிராமணத் தன்மைக்குக் காரணமில்லை. நடத்தையே பிராமணத் தன்மையாகும், இஃது எப்போதும் நன்கு பாதுகாக்கப்பட வேண்டும். நடத்தையைக் கெடாமல் பராமரித்தால். அவன் ஒருபோதும் கெடு நிலையை அடைவதில்லை. நான்கு வேதங்களைப் படித்தும், ஒருவன் இழிந்தவனாக இருந்தால், அவன் சூத்திரனிலிருந்து வேறுபட்டவன் அல்ல. புலன்களைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பவனே பிராமணன் என்று அழைக்கப்படுகிறான்."


அதேபோல ஒருமுறை பீமன் நகுஷன் என்ற பாம்பிடம் அகப்பட்டு, அதன் உணவாக இருந்த நிலையில், பீமனை விடுவிக்கவேண்டி நகுஷனிடம் யுதிஷ்டிரர் வேண்டினார். தான் கேட்கும் கேள்விகளுக்கு ஆதாரபூர்வமான பதிலளித்தால் பீமனை விடுவிப்பதாக நகுஷன் கூறினான். அவ்வுரையாடலில்,

 ஒரு சூத்திரன் பிறப்பால் மட்டுமே சூத்திரன் அல்ல என்றும், அதேபோல ஒரு பிராமணனும் பிறப்பால் மட்டுமே பிராமணன் அல்ல என்றும், யாரிடம் பிராமணருக்குரிய குணங்கள் இருக்கின்றனவோ அவரே பிராமணர் என்று ஞானமுள்ளோர் கூறியிருப்பதாகவும், யுதிஷ்டிரர் தனது முன்னவர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி நகுஷனிடம் பதிலளித்தார்.(வனபர்வம் பகுதி 83)


மேலும், மஹாபாரதத்தின் வனபர்வம் பகுதி 211-ல் தர்மவியாதன் என்ற வேடனை கௌசிகர் அணுகி நுட்பமான விஷயங்கள் குறித்து கேட்டறிந்தபோது, வேடன் பின்வருமாறு கூறலானான்:

 "ஒரு மனிதன் சூத்திர ஜாதியில் பிறந்திருக்கலாம், ஆனால் அவன் நற்குணங்களைக் கொண்டிருந்தால், வைசிய நிலையையும் சத்திரியருக்கு ஒப்பான நிலையையும் அடையலாம். மேலும், அவன் நேர்மையில் உறுதியாக இருந்தால், பிராமணராக ஆகலாம்."

மேலும், மனு சட்டத்திலும் ஒரு வசனம் ...

சூத்ரோ ப்ராமணதாமேதி ப்ராமணஸ்சைதி சூத்ரதாம்
க்ஷத்ரியாஜ்ஜாதவேதம் து வித்யாத்வைச்யாத்ததைவ

அதாவது –  ‘சூத்திரன்  பிராமணனாகி  விடலாம்பிராமணனும்  சூத்திரனாகலாம்அதே  போல்க்ஷத்ரிய  மற்றும்  வைசிய  வர்ணங்களைச்  சார்ந்தவர்களின்  மகன்களும்மகள்களும் வேறு  வர்ணத்தை  அடையலாம்’.    அவர்கள்  வேதம்  ஓதும்  பிராமணர்கள் கூட ஆகலாம்  என்று சொல்கிறது.


வர்ணம் என்பது பிறப்பை அடிப்படையாகக் கொண்டது அல்ல...

எவர் வேண்டுமானாலும் பிராமணராக இயலும்...
அதற்குரிய பல உதாரணங்கள் புராணங்களிலும் நிகழ்காலத்திலும் உள்ளன..
அவற்றை காண்போம்...

*புராணங்களில்*

வேதங்களை எழுதியவர் மீனவருக்கு பிறந்த வியாசர், இவர் தான் மகாபாரதம்,கீதை எழுதியது,
ராமாயணத்தை எழுதியது ஒரு வேடனான வால்மீகி,
பிராமணர்களால் தினமும் கூறும் காயத்திரி மந்திரம் சொன்னது விசுவாமித்திரர் என்கிற சத்திரிய அரசன்,

மேலும்,கௌசிகர்,ஜாம்பூகர், கௌதமர், வசிஷ்டர்,அகஸ்த்தியர் போன்ற ரிஷிகள், மஹா அதர்வண சத்யகாம ஜாபாலா என்ற வேத கால அறிஞர்போன்றோர் பிராமணனுக்கு பிறக்கவில்லை.

*நிகழ்காலத்தில்*

🕉குருக்கள் இனம் சைவ வேளாளரில் இருந்து உருவாக்கப் பட்டது. இன்றைக்கு குருக்கள் பிராமணர்களாகவே அறியப்படுகின்றனர்

🕉பட்டு நூல் நெசவு தொழிலாளிகளை கொண்டு உருவாக்கப் பட்ட சமூகம் "சௌராஷ்டிர பிராமணர்"

🕉தாழ்த்தப் பட்டவர்களுக்கு சமாஸ்ரயணம் கொடுத்து உருவாக்கப் பட்டவர்கள் தென்கலை ஐயங்கார்கள்

🕉தாழ்த்தப்பட்டவர்களில் இருந்து உருவாக்கப் பட்டவர்கள்  "சாத்தாணி" என்று அழைக்கப்படும் பிராமண பிரிவு

🕉கலப்பு இனமாக உருவாக்கப் பட்டது வட தேசத்து "மிஸ்ரா" பிராமணர்கள்

🕉வட தேசத்து பண்டாரங்களில் இருந்து உருவாக்கப் பட்டது "பண்டா" என்னும் பிராமண பிரிவு

🕉சோழிய வேளாளரில் இருந்து உருாக்கப் பட்டது "சோழியர்" என்னும் பிராமண பிரிவு

விஜய நகர சாம்ராஜ்யம் உதயமான பிறகு வடுக பிராமணரின் தூண்டுதலால் பிராமணராக்குதல் தடை செய்யப் பட்டது. ஐநூறு வருடங்களாக ஏதும் முன்னேற்றம் இல்லை

ஆனால் *கடந்த ஐம்பது வருடங்களாக புது முன்னேற்றம்* 🙂

🕉ஆரிய சமாஜத்தில் *ஜாதி வித்யாஸமில்லாமல் எல்லோருக்கும் பூணூல் போட்டு வேதம்* சொல்லி கொடுக்கின்றனர். இந்த சமூகம் "ஆர்யா" என்று அழைக்கப் படுகிறது

🕉ISKCON ஹரே கிருஷ்ணா இயக்கத்தில் *ஜாதி பேதமின்றி தீட்சை* வழங்கப் படும். முதல் தீட்சை வைஷ்ணவ தீட்சை. அடுத்த தீட்சை பிராமண தீட்சை.

🕉கௌடிய மடத்தில் *ஜாதி பேதமில்லாமல் பிராமண தீட்சை* வழங்கப் படுகிறது


🕉பிள்ளையார் பட்டி கிராமத்தில் பிச்சை குருக்கள் நடத்தும் வேத பாட சாலையில் *ஜாதி வித்யாஸம் பார்க்காமல் குழந்தைகள் சேர்க்கப் பட்டு பூணூல் அணிவிக்கப் பட்டு வேதம்* பயில்கின்றனர். சில வருஷ வேத ஆகம பயிற்சிக்கு பிறகு "சிவாச்சாரியார்" பட்டம் வழங்கப் படுகிறது.

No comments:

Post a Comment