Saturday, 27 May 2017

விக்ரகம் எப்படி இறைவன் ஆகும் ?


இறைவன் ஸ்ரீ கிருஷ்ணர் எப்போதுமே அவர் உலகில் இருக்கிறார், அவரை நம்மால் கண்களால் பார்க்க முடியாது, எனவே தான் நம் கண்களால் பார்க்ககூடிய கல்லில் இறைவனை பிராத்தனை மூலம்(யாகங்கள்) மூலம் அவரை இதில் வர பணிகிறோம். 

அதாவது, நீங்கள் ஒருவருக்கு ஒரு கடிதம் போடவேண்டுமானால் அதை ஒரு போஸ்ட் பெட்டியில் நாம் போடுவோம், அது அந்த குறிப்பிட நபரிடம் போகிறது. அது போலவே நாம் இறைவனை தொடர்பு கொள்ள ஒரு பகுதியே இந்த விக்ரகங்கள். அதாவது, நீங்கள் உங்கள் புகைபடத்தை பார்த்து, அது நான் என்று எப்படி சொல்கிறீர்கள், அது போலவே தான் இந்த கல் சிலையும். அது நமக்கும், இறைவனுக்கும் உள்ள ஒரு தொடர்பு பகுதி மட்டுமே தான்
அதுபோல் தான் எல்லா விக்ரகங்களும் அதன் தெய்வங்களும். ஒவ்வொரு தெய்வங்களும் அவரவர் உலகில் உள்ளனர். இந்த தெய்வங்கள் விக்ரகங்களின் மூலம் தன் பக்தனின் சேவையை ஏற்றுக் கொள்கிறார்.

பரம புருஷ பகவானை அவரது ரூபத்தின் மூலம் கோவிலில் வழிபடுவது சிலையை வழிபடுவதாகாது. ஸகுண வழிபாடு (பரமனை குணங்களுடன் வழிபடுதல்), நிர்குண வழிபாடு (குணங்களற்ற பரமனை வழிபடுதல்) ஆகிய இரண்டிற்குமான ஆதாரங்கள் வேத இலக்கியங்களில் உள்ளன. ஆலயத்திற்குள் விக்ரஹத்தை வழிபடுதல் ஸகுண வழிபாடாகும், ஏனெனில், பகவான் பௌதிக குணங்களின் மூலம் அங்கே தோற்றமளிக்கின்றார். கல், மரம் அல்லது ஓவியம் போன்ற பௌதிக குணங்களின் மூலம் தோற்றமளிக்கும் போதிலும், பகவானது ரூபம் உண்மையில் பொளதிகமல்ல. இது பரம புருஷரின் பூரண தன்மையாகும்.

பண்படாத உதாரணம் ஒன்று இங்கு கொடுக்கப்படலாம். தெருவிலே நாம் சில தபால் பெட்டிகளை பார்க்கிறோம். நமது கடிதங்களை அந்தப் பெட்டிகளில் இட்டால், அவை செல்ல வேண்டிய இடத்திற்கு எவ்விதமான சிரமமும் இன்றி இயற்கையாகவே செல்கின்றன. ஆனால் ஏதாவதோரு பழைய பெட்டியிலோ, அஞ்சலகத்தால் வைக்கப்படாத ஒரு போலிப் பெட்டியிலோ நமது கடிதத்தை இட்டால், அது போய் சேராது. 


அது போலவே அர்சா-விக்ரஹம் இறைவனது அதிகாரப்பூர்வமான தோற்றமாகும். இந்த அர்சா-விக்ரஹம் பரம புருஷருடைய ஓர் அவதாரம். இவ்வுருவத்தின் மூலமாக இறைவன் சேவையை ஏற்றுக்கொள்கிறார். அவர் சர்வ சக்திமான், அனைத்து சக்திகளும் உடையவர்; 

எனவே, கட்டுண்ட வாழ்விலிருக்கும் மனிதனின் வசதிக்காக, அவர் தனது அர்சா-விக்ரஹ அவதாரத்தின் மூலம் பக்தனுடைய சேவைகளை ஏற்றுக்கொள்கிறார்.

எனவே, பக்தனைப் பொறுத்தவரையில், பகவானை நேரடியாகவும் உடனடியாகவும் அணுகுவதில் சிரமம் ஏதும் இல்லை, ஆனால் ஆன்மீகத் தன்னுணர்விற்காக அருவத் தன்மையை பின்பற்றுபவர்களது வழி மிகவும் சிரமமானதாகும். அத்தகையோர் உபநிஷத்துகள் போன்ற வேத இலக்கியங்களின் மூலமாக பரமனின் தோன்றாத தன்மையினைப் புரிந்துகொள்ள வேண்டும், வேத மொழியினைக் கற்று எல்லையற்ற உணர்வுகளைப் புரிந்துகொள்ள வேண்டும்.


மேலும், இவையனைத்தையும் உணரவும் வேண்டும். இது சாதாரண மனிதனுக்கு அவ்வளவு சுலபமானது அல்ல. மாறாக, கிருஷ்ண உணர்வில் இருப்பவன், அங்கீகரிக்கப்பட்ட ஆன்மீக குருவின் வழிகாட்டுதலைப் பின்பற்றுதல், விக்ரஹத்தினை நெறிப்படி வழிபடுதல், இறைவனது பெருமைகளைக் கேட்டல், இறைவனுக்குப் படைக்கப்பட்ட உணவுப் பொருள்களை பிரசாதமாக உண்ணுதல் போன்ற எளிமையான வழிமுறைகளின் மூலம் பக்தித் தொண்டில் ஈடுபட்டு பரம புருஷ பகவானை மிகவும் சுலபமாக உணர்ந்து கொள்கிறான்.


அருவவாதிகள், இறுதியில் பூரண உண்மையை உணராமல் போகலாம் என்ற அபாயம் இருக்கும்போதிலும், மிகவும் கடினமான பாதையை அவசியமின்றி பின்பற்றுகின்றனர் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. ஆனால் பக்தனோ, எவ்வித அபயமோ, சிக்கலோ, கடினமோ இன்றி முழுமுதற் கடவுளை நேரடியாக அணுகுகின்றான்.


No comments:

Post a Comment