Saturday, 27 May 2017

இந்தியாவில் பிறப்பதற்கு மனிதர்கள் என்ன தவம் செய்தார்களோ ?



தேவர்கள் கூறுகிறார்கள் ...ஸ்ரீமத் பகவத்,  5 ஸ்கந்தம், 19-21 இல்,

'இந்தியாவில் பிறப்பதற்கு மனிதர்கள் என்ன தவம் செய்தார்களோ ? அல்லது பகவான் கிருஷ்ணர் தன காரணமில்லா கருணையினால் இவர்கள் மீது அன்பை பொழிந்தானோ ? இந்த பாக்யம் நமக்கு கூட கிடைக்கவில்லையே !" - என்று கூறுகிறார்கள் .

உலக நாடுகளின் வரலாறுகளை ஒண்டோடு ஒன்று ஒப்பு நோக்கும்போது பிற நாடுகளைவிட இந்திய கீழ்கண்ட காரணங்களால் வேறுபடுகிறது ...

கடந்த 10 ஆயிரம் ஆண்டு காலத்தில் இந்தியா வேறு எந்த நாட்டின் மீதும் படையெடுத்து அந்த நாட்டை ஆக்ரமித்ததாக தெரியவில்லை.

உலகமகா யுத்தங்கள் பிற நாடுகளை மையமாகா வைத்தே நடந்திருக்கிறது.
மேலை நாடுகளில் சர்ச்சுகளும்,பிற சமயங்களின் கோவில்கள் காலை அங்கமாகவும்,பொது கூடமாகவும் மத்தப்பட்டிருக்கும் பொது, இந்தியாவில் கோவில்கள் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டிருக்கிண்டதே தவிர குறையவில்லை.

எரிமலைகள் இந்தியாவில் இல்லை.

பாலைவன பிரேதேசங்கள் மிக குறைவு.

நாடெங்கிலும் நதிகளும்,ஆறுகளும் ஏராளம்.

குளிருக்காக உடல் முழுவதும் பலவகை ஆடைகளும்,  வீட்டுக்குள்ளேயே கூட உஷ்ணத்துக்காக நெருப்பை எரிய வைக்கும் கொடுமைகள் இல்லை.

உணவுக்கும் குணத்திற்கும் சம்பந்தம் உண்டு என்கிற கருத்து வந்ததும், அதன் விளைவாக இந்தியன் சாத்வீக குணமுள்ளவனாகவும்,அறிவாற்றல் உள்ளவனாகவும் இருக்கிறான்.
உர்வன,பரப்பன,நடப்பன, இப்படி அனைத்தையும் சாப்பிடும் மூர்க்க குணமுள்ள, கொடூர கொலைகள் செய்கிற தீவிரவாதிகள் என்கிறவர்கள் இல்லை

ஐயப்பனுக்கு மாலை போடும்,கார்த்திகை,மார்கழி ஆகிய மாதங்களில் குற்றங்கள் மிக குறைந்து உள்ளன என்று காவல்துறையும் ஒப்பு கொள்கிறது. இப்படி ஆன்மிகமும்,சைவ உணவும் மனிதனை பண்படுத்தும் என்பதற்கு இது ஒரு அத்தாட்சி. இது இந்தியாவை தவிர வேறு எங்குமில்லை .
இப்படி உணவு சாத்வீகமாக இருப்பதால் உணர்வுகள் சாத்வீகமாக இருக்கிறது.உணர்வுகள் சாந்தமாக இருப்பதால் உருவுகள் நீடிக்கிறது. உடைந்த குடும்பங்களும்,விவாகரத்தும் பிற நாடுகளில் இருக்கிற அளவு இங்கே இல்லை.

கூட்டு குடும்பங்கள் இந்தியாவால் உள்ளன. இப்பொது இவைகள் குறைந்து வந்தாலும் கூட இந்தியர்களுக்கு குடும்ப பாசம் அதிகம் என்பதை பிற நாடுகளும் ஒத்து கொள்கிறது.

இங்கே சித்தர்களின் மூலிகை வைத்தியமும், புயல்,பூகம்பம்,கோள்களின் நிலை ஆகியவைகளை முன்கூட்டியே கணித்து சொல்லும் பஞ்சாங்கம் உருவாக்கிய முனிவர்கள் உள்ளதும் இங்கே தான்.
இவ்வாறு வாக்கு சித்தி உள்ளவர்களும், முனிவர்களும் உள்ளவர்களும் இந்தியாவில் தான். இதை பாஹியான், யுவான்சுவாங் வியந்திருக்கிறான், அலஸ்சாண்டர் அதிசயித்து எழுதி இருகிறார்.

கஜினி முகம்மது 17 முறை கொள்ளையடித்தாலும் குறையாத செல்வம் இந்தியாவில் ஒரே ஒரு ஊரில் மட்டும் கூட இருந்திருக்கிறது !

கல்லுக்கும் இருக்கும் தேரையை கண்டுபிடித்து சொல்லும் மய சாஸ்திரமும்,நாடிபிடித்து எஸ்ரயைவிட நுட்பமாக வியாதியை சொல்லும் வைத்திய சாஸ்திரமும்,தொலைநோக்கி இல்லாமல் கிரகங்களின் நிலைகளை சொல்லும் வன சாஸ்திரமும், எதிர்காலத்தை சரியாக சொல்லும் எதிர்கால புராணங்களும் இங்கே தான் உள்ளன.

இந்திய இசையும், நாட்டியமும் மனதையும்,உள்ளத்தையும் அனந்தப்படுத்துபவை.ஆனால் மேல்நாட்டு பைத்தியக்காரன் போல் கூச்சல் போட்டு படுவதால் நரம்பு தளர்ச்சி உண்டாகுகிறது. மேல்நாட்டு சங்கீதங்கள் நம் நாட்டு கலைகளுக்கு முன் தலை கவிழ்த்து மண்டியிடுகிறது.

இந்தியாவில் அமைதி,ஆத்ம சாந்தி அதிகம். இதுவே ஒரு மனிதனுக்கு உண்மையில் வேண்டியதுவதும்.இது வேறு எந்த நாட்டிலும் இங்கு போல் கிடைப்பதில்லை .

உறவுகளின் மேன்மைகளை புரிய வைக்கும் நியம ஆச்சாரங்களும்,ஒழுக்கங்களை சொல்லும் புறநா,இதிகாசங்கள் இங்கே மக்களின் கல்வியாக உள்ளன.

 பெரியவர்களை பெயர் சொல்லி அழைக்கும் அடங்காபிடாரித்தன பழக்கம் இங்கு இல்லை .

இப்படி எத்தனையோ ஜென்மங்கள் செய்த புண்ணியத்தினால் இங்கே இந்தியாவில் வந்து பிறந்திருக்கிறோம். அதை உதறிவிட்டு மீண்டும் கிழ் நிலைக்கு செல்ல முயல்வது எத்தனை மடத்தனம்!

இந்த வெளிநாட்டு மோஹக்காரர்களுக்கு எப்போது புரியுமோ தெரியவில்லை !


No comments:

Post a Comment