இந்து வேத மந்திரங்கள் இயேசுவை துதிக்கிறதா ?
சில கிறிஸ்தவர்கள் கூறும் பொய்களில் இதுவும் ஒன்று. அதாவது, இந்து வேதங்களில் இயேசு என்பவரை பற்றி பல மந்திரங்கள் சொல்வதாக கூறுவதை கேள்விப்பட்டுள்ளோம் ..
ஆனால், இது தவறான மந்திரங்களே என்பதே ! இதை எப்படி என பார்க்கலாம்..
இயேசு சஹாஸ்ரநாமா 1985 ஆம் ஆண்டில் கேரளாவில் கிறிஸ்தவ சமஸ்கிருத அறிஞர் K.U.Chacko எழுதியுள்ளார்.
இந்த மந்திரங்கள் எல்லாமே தமிழ் / மலையாளத்தில் உள்ளன. இந்த மந்திரங்களின் சில எழுத்துக்களை மட்டும் மாற்றி தமிழில் / மலையாளத்தில் கொடுகிறார்கள். இதனால் இதன் சொல்லும் ஒலி தமிழ் /மலையாளம் வித்தியாசங்கள் கிடையாது. எடுத்துக்காட்டாக ( Pha & bha ),
ஒரே எழுத்திற்கு இரண்டு ஒலி வித்தியாசங்கள் சம்ஸ்க்ராத்திற்கு உள்ளது.
ஆனால் சமஸ்கிருதத்தில், இந்த ஒலிகளை வித்தியாசம் மிக முக்கியம். ஒலிகளில் இந்த வேறுபாடுகள், வார்த்தையின் முழு அர்த்தத்தையும் மாற்றியமைக்கலாம். ஆங்கிலத்தைப் போலவே, சமஸ்கிருதமும் நிலைமையைப் பொறுத்து ஒரே வார்த்தையில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அர்த்தங்களைக் கொண்டிருக்கும்.
எனவே இது உண்மையான மந்திரம் அல்ல
என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.
கிறிஸ்தவர்கள்் கொடுத்த மந்திரத்தின்
உண்மைகளை ஆராயலாம்.....
1. "ஓம் ஸ்ரீ பிரம்மா புத்ரயா
நமஹா:"
“ om shri Brahma putraya
namaha:”
இதன் கிறிஸ்தவர்களது விளக்கம்...
"கடவுளே, கடவுளின் மகனே,
நாங்கள் உம்மை புகழ்ந்து பேசுகிறோம்" (அவர்கள் இயேசுவைக் குறிப்பிடுகிறார்கள்)
“ Oh lord, son of god, we
praise you” (they say it was referring to jesus)
இதன் உண்மை அர்த்தத்தை பார்க்கலாம்..
பிரம்மா புத்ராயா = பிரம்மாவின்
மகன், அது உண்மையில் சிவன் என்பதை குறிக்கிறது.
இதில் பிரம்மா என்பவரின் மகனாக
சிவனை சொல்கிறது. இவரே பிரம்மாவினால் உண்டாக்கப்பட்டவர். இந்த பிரம்மாவை உருவாகியவர்
பகவான் நாராயணர். இதில் எப்படி இயேசு வர முடியும்.
அப்போ ஏசு பிரம்மாவின் மகனா ?
எனவே, இந்த மந்திரத்தின் உண்மை
மொழிபெயர்ப்பு ...
"பிரம்மாவின் மகன் யாரோ, அவரை வணங்குகிறோம்"
“ one who is the son of
Brahma,We bow to thee”
2. ஓம் ஸ்ரீ உமத்யாய நமஹ
”om
shri umathyaya namaha:”
இதன் கிறிஸ்தவர்களது விளக்கம்...
“oh lord who is born of the
spirit, we praise you”
"ஆவியால் பிறக்கிற கடவுளே,
நாங்கள் உம்மை புகழ்ந்து பேசுகிறோம்"
இதன் உண்மை அர்த்தத்தை பார்க்கலாம்..
இதில் umathya அல்ல, அது
umadhya = உமா + Adhya; (ஒரு சிறிய தவறு , அவர்கள் 'd' பதிலாக 't' எழுதியது முழு பொருள்
மாறிவிட்டது)
உமா = ஒளிரும் அல்லது ஒளி
ஆத்யா = மூல
Umadhyaya = ஒளி ஒளி
எனவே, இதன் உண்மை அர்த்தம் இதோ..
”om
shri umadhyaya namaha:”
"ஒளியிலிருந்து
(பரம் ப்ரம்மனிலிருந்து) பிறந்தவரே, நாங்கள் உம்மை வணங்குகிறோம்"
“one
who is the source of light,We bow to thee”
இப்படியே எல்லா மந்திரங்களின்
எழுத்தை மாற்றி, புது அர்த்தத்தை கூறுகிறார்கள்..
3. “om shri kanni sudhaya
namaha:”
இதன் கிறிஸ்தவர்களது விளக்கம்...
“ஒரு கன்னியினிடத்தில் பிறந்த தேவனே, உம்மைத் துதிக்கிறோம்”
இந்த மந்திரத்தின் உண்மை அர்த்தம்
எப்படி எடு்த்து கொள்வது....
இதில் 'Kanni' என்பது தமிழ்/
மலையாளத்தில் இதன் அர்த்தம் ஆண்சம்பந்தமில்லாதவள் கன்னி தன்மையோடு உள்ளவர்கள் என்பதே.
ஆனால், இந்த ஆண்சம்பந்தமில்லாதவளை சமஸ்கிரதத்தில் குறிக்கும் வார்த்தை 'கன்யா
(Kanya) என்பதே. எனவே இரண்டும் வேறு வேறு.
எனவே, 'கன்னி' என்கிற வார்த்தைக்கு
உண்மை சமஸ்கிரத அர்த்தம் இந்த கன்னியான பெண் என்பது அல்ல. இப்படி ஒரு வார்த்தையே சமசுகிருதத்தில் இல்லை.
எனவே, கிறிஸ்தவர்கள் 'kani' என்கிற வார்த்தையை 'கன்னி' (kanni) என திருத்தியுள்ளார்கள்.
எனவே, இதன் உண்மை மந்திரம் ...
“om shri kani sudhaya namaha:”
உண்மை அர்த்தம் இதோ..
‘Kani’ என்பது 'எப்போதும்' என்கிற அர்த்தத்தையும்,
(sudha) 'சுத்தா' என்பது 'தூயது' என்பதையும் குறிக்கிறது.
அதாவது 'கன்னி சுத்தா' (kani
Sudha) என்பது எப்போதும் தூயது.
“one who is Ever Pure,We bow to thee”
"எவர் தூயவர், நாங்கள் உம்மை வணங்குகிறோம்"
இப்படியே எல்லா மந்திரங்களின்
எழுத்தை மாற்றி, புது அர்த்தத்தை கூறுகிறார்கள்..
4. "ஓம் தரித்ரா நாராயண
நமஹா:"
“om
tharithra narayanaya namaha:”
இதன் கிறிஸ்தவர்களது விளக்கம்...
"எங்கள்
நிமித்தம் ஏழைகளாக மாறி, நாங்கள் உம்மை புகழ்ந்து பேசுகிறோம்"
“
oh lord who become poor for our sake , we praise you”
இதன் உண்மை அர்த்தத்தை பார்க்கலாம்..
இது
"தரித்ரா"(“tharithra) அல்ல. ஆனால் இது "த்ரித்ரி" (Dhrithri)
ஆகும், அதாவது "பூமி" என்பது சமஸ்கிருதத்தில் அர்த்தம்.
'ஏழைகளுக்கான' சமஸ்கிருத சொல்
தாரீர்ரா 'தாரிடரா' என்பதே. இந்த வார்த்தையே இதில் இல்லையே !
எனவே, இதில் இவர்கள் 'Dhaaridrah'
என்கிற வார்த்தையை மாற்றி “tharithra” என கூறியுள்ளார்கள்.இது தவறான மந்திரம்.
உண்மையான மந்திரம் இதோ..
'om
Dhaaridrah narayanaya namaha'
"ஓ,
முதலில் நாங்கள் பூமியைச் சார்ந்தவர்கள், நாங்கள் உம்மை வணங்குகிறோம்"
“oh
First Being of the earth,We bow to thee”
இப்படியே எல்லா மந்திரங்களின்
எழுத்தை மாற்றி, புது அர்த்தத்தை கூறுகிறார்கள்..
5. "ஓம் வைதிஷ்டா நமஹா:"
“om vidhiristaya namaha:”
இதன் கிறிஸ்தவர்களது விளக்கம்...
"விருத்தசேதனம்
செய்யப்படுகிற ஆண்டவரே, நாங்கள் உம்மைத் துதிக்கிறோம்"
“oh lord who is circumcised, we praise you”
இதன் உண்மை அர்த்தத்தை பார்க்கலாம்..
Vidhir
= வணக்கம் அல்லது வழிபாடு.
Istaya
= பிடித்தது.
சமஸ்கிருதத்தில்
'விருத்தசேதனம் 'என்கிற வார்த்தை எதுவும் இல்லை.
"காட்"
(kaat) என்ற வார்த்தை "வெட்டு" என்று பொருள். இது சமஸ்கிருதத்தில் லிங்கம்
அல்லது யோனி என்கிறதின் பாகங்களாக சொல்லப்படுகிறது.
இந்த மந்திரத்தின் உண்மை மொழிபெயர்ப்பு
இதோ..
'அவரது
வணக்கத்தை விரும்பும் ஒருவர், நாங்கள் உம்மை வணங்குகிறோம்'
“one
who favors his worshipper,We bow to thee”
இப்படியே எல்லா மந்திரங்களின்
எழுத்தை மாற்றி, புது அர்த்தத்தை கூறுகிறார்கள்..
6: "ஒம் ஸ்ரீ ஸ்ரீ பஞ்சகாயா
நமஹா:"
”ohm sri panchagayaya namaha:”
இதன் கிறிஸ்தவர்களது விளக்கம்...
'உங்கள்
உடலில் ஐந்து காயங்களை தாங்கித் தந்த கடவுளே'
'oh
lord who bore five wounds on your body,we praise you'
இதன் உண்மை அர்த்தத்தை பார்க்கலாம்..
இதில்
'பஞ்சகாயயை' என்பதில் உள்ள வார்த்தை 'கயா" (gaya) அல்ல. "காவிய"
(Gavya) ஆகும். அதாவது இதிலுள்ள 'pancha' + gavya என்பதற்கு பதில் இந்த எழுத்தை மாற்றி
'gaya' என போட்டுள்ளார்கள்.
பஞ்சா
= ஐந்து;
Gavya
= கலவை .
(அது
ஐந்து கலவைகளான - காற்று, தண்ணீர், பூமி, விண்வெளி மற்றும் தீ )
எனவே, உண்மை மந்திரம் ...
'ohm
sri panchagavya namaha:”
'ஐந்து
கலவைகள் கலந்த ஒருவன், நாங்கள் உன்னை வணங்குகிறோம்'
“one
who is blend of five(elements),We bow to thee”
இப்படியே எல்லா மந்திரங்களின்
எழுத்தை மாற்றி, புது அர்த்தத்தை கூறுகிறார்கள்..
7. "ஓம் ஸ்ரீ ம்ருத்யும் ஜெயாய நமஹா:"
“ohm shri mruthyum jayaya namaha:”
இதன் கிறிஸ்தவர்களது விளக்கம்...
"ஓ
மரணத்தை வென்ற கர்த்தரே, நாங்கள் உம்மை புகழ்ந்து பேசுகிறோம்"
இதன் உண்மை அர்த்தத்தை பார்க்கலாம்..
'ஓ மரணத்தை வென்ற இறைவனே உங்களை போற்றுகிறோம்"
இந்த
மந்திரத்திலுள்ள 'மிருத்தியம் ஜெயா' என்பது சிவனை குறிக்கிறது. எனவே, இது சிவனை சொல்கிறது.
8. "ஓம் ஸ்ரீ சிபிலிஸ்டாயா
நமஹா:"
”ohm shri sibilistaya namaha:”
இதன் கிறிஸ்தவர்களது விளக்கம்...
'உம்முடைய
பரிசுத்தவான்களால் புசிக்கப்படும்படி உங்கள் மாம்சத்தை மனப்பூர்வமாய்க் கொடுத்தவரே'
'
oh lord who willingly offered your flesh to be eaten by your saints, we praise
you”
இதன் உண்மை அர்த்தத்தை பார்க்கலாம்..
சிபி
சக்கரவர்த்தி மஹாபாரதத்தில் ஒரு பிரபலமான ராஜா, இவரை பற்றி கதை ராமாயணதிலும் உள்ளது. அவர் விஷ்ணுவின் பரம்பரையில் வந்தவராக கருதப்படுகிறார்.
ஒரு கழுகில் இருந்து ஒரு புறாவை
காப்பாற்ற தனது மாமிசத்தை அவர் பலியிட்டார், புறாவும் கழுகும் அக்னி மற்றும் இந்திரா
ஆகியவை மாறுவேடத்தில் இருந்தன. இந்த கதைகள் இந்துமத புராணங்களில் உள்ளன.
சிபி
= ராஜா சிபியின் பெயர்.
Istaya
= விரும்பம்
எனவே,
இதில் சிபி என்கிற மன்னனை பற்றி மிக தெளிவாக சொல்கிறது. இது இயேசுவை சொல்லவில்லை என
அறியலாம்.
10: 'ஓம் ஸ்ரீ தச்ஷினா மூர்த்தியாய நமஹா:"
“ ohm shri thatchina moothyaya namaha:”
இதன் கிறிஸ்தவர்களது விளக்கம்...
'ஓ தேவனே,
உங்கள் தந்தையின் பக்கத்தில் உட்கார்ந்து, நாங்கள் உன்னை புகழ்கிறோம்'
"Oh
lord seated by the side of your father, we praise you"
இதன் உண்மை அர்த்தத்தை பார்க்கலாம்..
இந்த மந்திரத்தில் உள்ள வார்த்தை
'thatchina மூர்த்தி' என்பது தவறு. இதன் உண்மை வார்த்தை “Dhakshana moorthy” என்பதே.
Dhakshna
= தெற்கு
Moorthy
= தெய்வம்
தெற்கின்
தெய்வம் .. அது "குரு" என்று குறிப்பிடப்படுகிறது.
உண்மை மந்திரம் இதோ...
'ohm
shri Dhakshana moothyaya namaha'
"தெற்கின்
கடவுளே, நாங்கள் உன்னை வணங்குகிறோம்"
“oh
god of the south,We bow to thee”
இது உண்மையில் தெற்கு (குரு)
என்பது சிவனை கூறுகிறது.
இப்படி மந்திரங்களின் சில எழுத்துக்களை மட்டும் திருத்தியே கிறிஸ்தவர்கள் வெளியிட்டுள்ளார்கள். ஆனாலும், மேலே குறிப்பிடப்பட்டுள்ள பல மந்திரங்கள் சஹஸ்ர நாம
என்பதில் கூறப்பட்ட மந்திரங்கள் இல்லை. இப்படிப்பட்ட மந்திரங்களை இவர்களே தனது சொந்த கற்பனைகளில் கூறியுள்ளார்கள்.
எனவே, இப்படி இந்துமத மந்திரங்களின் சில எழுத்துக்களை திருத்தி வெளியிடுவதன் நோக்கம் என்ன என கிறிஸ்தவர்கள் தான் கூறவேண்டும்.
இப்படி இதை பற்றி தெரியாமலேயே பல இந்துக்களும், கிறிஸ்தவர்களும் இதை நம்புகிறார்கள். இதனை இவர்கள் இதன் மூலமாவது அறிந்துகொள்வார்கள் என வெளியிட்டுளேன்.
பொதுவாக, மந்திரங்கள் எல்லாம் வேதத்தில் கர்ம காண்ட பகுதியில் வருபவை, அவை 33 கோடி தேவர்களை துதிக்கும் மந்திரங்கள் ஆகும். இவர்கள் பகவான் கிருஷ்ணரின் கட்டளை படி இந்த உலகை பராமரிக்க உதவும் சிறு தெய்வங்கள் ஆவார்கள்.
eg. பிரதமர் - அவரின் அமைச்சர்கள் போல.
'அறிவில் குறைந்த மக்கள் சிறு தேவர்களை வணங்குகுகிரர்கள், இவர்கள் கொடுக்கும் பலன்கள் தற்காலிகமானது, அழியக்கூடியது ஆகும்',
'தேவர்களை வழிபடுபவர் அவர்கள் உலகை அடைவர், என்னை வழிபடும் பக்தர்கள் எனது நித்ய உலகை அடைவர் ' - பகவத் கீதா - 7.20,21,23
பரம புருஷருடைய பகவான் கிருஷ்ணரின் அனுமதியின்றி தேவர்கள் தங்களது பக்தர்களுக்கு வரங்களை வழங்க முடியாது. தேவர்களை வழிபடுவதும் விரும்பும் பலனை அடைவதும், தேவர்களால் அல்ல, பரம புருஷ பகவான் கிருஷ்ணரின் ஏற்பாட்டில் நடப்பவையே. இதனை அறியாத சிற்றறிவுடைய உயிர்வாழி, சில நன்மைகளை வேண்டி முட்டாள் தனமாக தேவர்களை நாடுகிறான். ஆனால் தூய பக்தன், ஏதாவது தேவைப்படும்போது பரமபுருஷ பகவான் கிருஷ்ணரை மட்டுமே வேண்டுகிறான். எனவே தேவர்களை வழிபடுவோர் சிற்றறிவுடையோர் என்று ஏற்கனவே கூறப்பட்டது.
அருமை
ReplyDeleteI need to know God is only one God or Multiple Gods?
ReplyDelete