Wednesday 31 May 2017

மகாபாரதத்தில் துரோணர் ஏகலைவனின் கட்டைவிரலை கேட்டது தவறா.?

"ஏகலைவன் மிக சிறந்த சீடன் தான், அதில் எந்த சந்தேகமும் இல்லை, ஆயினும், ஏகலைவனுக்கு ஏற்பட்ட நிலைக்காக பலர் அர்ஜுனன் மற்றும் துரோணரை தூற்றுகின்றனர், இன்னும் சிலர் தவறான தகவல்களை பரப்புகின்றனர், சரி உண்மை என்ன?

யார் இந்த ஏகலைவன்?  மகத மன்னன் ஜராசந்தனின் கட்டுப்பாட்டில் இருந்த வன பகுதியான "நிடத நாட்டின்" வன ராஜன் நிஷாடனின் புத்திரனே ஏகலைவன். அன்றைய அரசியல் சூழ்நிலையில், அஸ்தினாபுர சாம்ராஜ்ஜியத்தோடு பரம்பரை பகை பாராட்டி வந்த மகத ராஜ்ஜியத்தின் விசுவாசி ஏகலைவன் என்பதே உண்மை.

இத்தகைய ஒரு கடுமையான சூழலில் தான் துரோணரிடம் கல்வி கற்க வந்தான் ஏகலைவன், துரோணர் பரசுராமரை போல தனியாக குருகுலம் அமைத்து கல்வி போதிக்கவில்லை, அவர் வறுமை வாட்டிட, பாஞ்சாலத்தின் துருபதனால் அவமதிக்கப்பட்டு, நிற்கதியாய் நின்ற போது அவருக்கு அஸ்தினாரபுரம் அடைக்கலம் தந்து, தன் குல செல்வங்களுக்கும், தங்கள் நட்பு நாடுகளின் இளவரசர்களுக்கும் மட்டும் குருவாய் இருந்து கல்வி போதித்திட பணித்தது, துரோணரும் அதன் ஆணையை ஏற்று அரச குமாரர்களுக்கு கல்வி போதித்து வந்தார்...

இப்படி ஒரு சூழ்நிலையில், அடைக்கலம் தந்த அஸ்தினாபுரத்தின் நிழலில் நிற்கும் துரோணாச்சாரியார், அதன் பரம வைரியான மகதத்தின் ஆதரவாளனாம் ஏகலைவனுக்கு எவ்வாறு கல்வி கற்பிக்க இயலும்?

குரு தட்சணையாக கட்டை விரல் பறிக்கப்பட்ட பழியை துரோணாச்சாரியார் மேல் மட்டுமே சுமத்துவது தவறு.  ஏகலைவனும் தவறிழைத்துள்ளான்.

அஸ்வத்தாமன் கேட்கிறான்  "தாம் ஏன் ஏகலைவனின் கட்டை விரலை பறித்தீர்? அவன் சத்திரியன் இல்லையென்பதாலா? தாழ்ந்த குலத்தவன் என்பதாலா? இல்லை அவன் அர்ஜினனை விட சிறந்தவனாகி விடக் கூடாதென்பதற்காகவா? "

"அர்ஜீனன் தன் சொந்த முயற்ச்சியில் சிறந்த வில் வீரனானவன், அவனுக்கு இது போன்ற இழிந்த சகாயத்தை யாரும் செய்திட அவசியமில்லை... உங்களுக்கு கற்றுக்கொடுத்ததை போலவே நான் அர்ஜீனனுக்கும் கற்றுக் கொடுத்தேன், ஆனால் அவன் நான் கற்றுக்குடுத்த கல்வியால் திருப்தியடைந்து நின்றுவிடாமல், சுயமாக பல பயிர்ச்சிகள் செய்து சிறந்த வில் வீரனான், நீ குலம் குறித்து பேசினாய், நீயும் சத்ரியன் அல்ல மகனே, ஆனால் நான் உனக்கு கல்வி போதித்தேன், கல்வி குல ஏற்றத் தாழ்வுகளுக்கு அப்பாற்ப்பட்டது மகனே, அதன் கதவுகளை குல பாகுபாட்டால் அடைக்க கூடாது, ஏனெனில் கல்வி மேல் எல்லா குலத்தினருக்கும் உரிமையுண்டு..."

அஸ்வத்தாமன், "பின் ஏன் தாம் ஏகலைவனின் கட்டை விரலை பறித்து அவனை தண்டித்தீர்? "
துரோணர் கூறுகிறார்:, "ஏனெனில்! அவன் என்னிடம் வித்யயை நேரடியாக கற்கவில்லை, அவன் அதை நான் அறியாத வகையில் திருடிக் கொண்டான், ஒழுக்கத்தை போதிக்கும் கல்வி விசயத்தில் பொய், திருட்டு, கூடாது,

மேலும், நான் அஸ்தினாபுரதவர்களை தவிர வேறு எவருக்கும் போர் பயிற்சிகளை கற்று கொடுக்கமாட்டேன் என வாக்கு கொடுத்திருந்தேன். ஆகவே அவன் சத்திரியனாகவோ, வேதியனாகவோ இருந்திருந்தாலும் கூட அவன் கட்டை விரலை நான் வாங்கித்தான் இருப்பேன்.

துரோணர், ஏகலைவனிடம் கட்டை விரலை கேட்டதற்கான காரணமாக கூறுவது

1. ஏகலைவன் எந்த வர்ணமாக (பிராமணனாக,சத்திரியனாக) இருந்தாலும் தான் அவனிடம் கட்டை விரலை கேட்டுருப்பேன் என்கிறார். இதன் மூலம் இங்கே வர்ணம் முக்கியமில்லை என் தெரிகிறது.

2. அவர் அஸ்தினாபுரத்து மக்களுக்கு மட்டுமே கற்று தருவதாக வாக்கு கொடுத்தது. எப்படியிருக்கு இவன் வருங்காலத்தில் துரோணர் தான் என் குரு என கூறினால், இவரது வாக்கு பொய்த்துவிடும். இது ஒரு காரணம்.

3. இவன்  வித்யயை நேரடியாக கற்கவில்லை, அவன் அதை நான் அறியாத வகையில் திருடிக் கொண்டான், ஒழுக்கத்தை போதிக்கும் கல்வி விசயத்தில் பொய், திருட்டு, கூடாது.

4. அஸ்தினாபுர சாம்ராஜ்ஜியத்தோடு பரம்பரை பகை பாராட்டி வந்த மகத ராஜ்ஜியத்தின் விசுவாசி ஏகலைவன் என்பதே உண்மை.

இப்படி காரணங்கள் உள்ளதாக, துரோணரே மஹாபாரதத்தில் இதை கூறுகிறார் . எனவே, துரோணர் செய்தது சரியே.

1 comment:

  1. அப்படியானால், துரோணரை தன் மானசீக குருவாக எற்றதல், அவன் கல்வியை திருடவிலை, ஆகையால், இது திருட்டு எனில் அவர் அவனுக்கு குரு இல்லை, குரு இல்லை என்றால் குறுதர்சனை கேட்பது தவரகிறது. இதற்கு விளக்கம் தாருங்கள்

    ReplyDelete