Saturday, 27 May 2017

தாவரங்களுக்கு - உயிர் உள்ளதா ? இதை சாப்பிட்டாலும் பாவமா ?


ஒரு சிலர் கேள்வியானது, தாவரங்களுக்கும் உயிர் இருக்கிறது, அப்படியிருக்க அதை சாப்பிடுவதால் நமக்கு பாவம் தானே வரும் என்கிறார்கள். ஆனால், இதன் உண்மையை அறியலாம்....

கடவுளின் கருனையால் இயற்மகயாகவே மனிதன் மற்றும் சைவ உணவு உண்ணும் விலங்குகளுக்கும் உள்ள உடல் அமைப்பு ஒன்று. நமது உடல் சைவ உணவான காய்,தாவர உணவு ஏற்று கொள்ளகூடிய போல் நமது உடல் வடிவமைக்கபட்டுள்ளன.

ஆனால்.மனிதன், மற்றும் சைவ உணவு உண்ணும் விலங்குகள் ஆகிய இரண்டுபேருடைய உடலமைப்பும் ஒன்று. ஆனால் மனிதன் இயற்கைக்கு மாறாக உணவுகளை உண்ணுகிறான். ஒரு புலி ஒரு மானை அடித்து சாப்பிட்டால் பாவம் இல்லை. ஆனால் நமக்கு அப்படியில்லை. நாம் அதை கொன்று சாப்பிட்டால் பாவம் உண்டு. நமக்குறிய உணவு தாவரங்களே. தாவரத்திலும் சிறிது உள்ளன, ஆனால் தாவர உணவை பகவானுக்கு படைப்பதன் மூலம் அந்த உணவு சுத்தமான பிரசாதமாக மாறுகிறது. எனவே தான் கிருஷ்ண பக்தர்கள் எல்லாவற்றையும் பகவானுக்கு படைத்து சாப்பிடுகிறார்கள்.

மக்களின் பலதரப்பட்ட குணங்களுக்கேற்ப பல்வேறு வகையான யாகங்கள் வேதங்களில் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. தேவர்களை வழிபடுவதும் கூட மனிதர்களின் வெவ்வேறு குணங்களுக்கு ஏற்பவே. உதாரணமாக, மாமிசம் உண்பவர்களுக்கு, இயற்கையின் கோரசக்தி உருவமான காளியை வழிபடுவதும் வழிபாட்டுத் தளத்தில் மிருகபலி கொடுப்பதும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. ஆனால் ஸத்வ குணத்தில் இருப்பவர்களுக்கு, விஷ்ணுவை வழிபடும் திவ்யமான முறை பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் மொத்ததில் எல்லா யாகங்களுமே படிப்படியாக திவ்ய நிலைக்கு ஏற்றம் பெறும் நோக்கத்துடன் ஏற்பட்டவையாகும்.


பகவான் கிருஷ்ணர், இதை பகவத் கீதையில் சொல்கிறார்...


'அன்புடனும் பக்தியுடனும் ஒருவன் எனக்கு ஓர் இலையோ, ஓரு பூவோ, ஒரு பழமோ, நீரோ அளித்தால் அதனை நான் ஏற்கின்றேன்.' - பகவத் கீதை 9:26

' யாகத்தில் அர்ப்பணிக்கப்பட்ட உணவை உண்பதால், பகவானின் பக்தர்கள் எல்லாவிதமான பாவங்களிலிருந்தும் விடுபடுகிறார்கள். தங்களது சுய புலனின்பத்திற்காக உணவு தயாரிப்பவர்கள் பாவத்தை உண்கிறார்கள்.- பகவத் கீதை 3-13

அவர் தன்னில் முழுமையானவர் என்பதால், யாரிடமிருந்தும் அவருக்கு எந்த தேவையும் இல்லை, இருப்பினும் அன்பையும் பாசத்தையும் பகிர்ந்து கொள்வதற்காக தனது பக்தன் படைப்பவற்றை ஏற்றுக் கொள்கிறார்.

ஒருவன் பரமனின் பக்தித் தொண்டில் ஈடுபட்டு தன்னைத் தூய்மைப்படுத்த விரும்பினால், (பகவானுக்கான திவ்யமான அன்புத் தொண்டு என்னும்) வாழ்வின் குறிக்கோளை அடைய விரும்பினால், அவன் பகவான் தன்னிடமிருந்து என்ன விரும்புகிறார் என்பதைக் கண்டறிய வேண்டும். கிருஷ்ணரிடம் அன்பு செலுத்துபவன், அவர் எதை விரும்பினாலும் அதனை அளிப்பான். ஆனால் அவர் விரும்பாத, கேட்காத பொருள்களைத் தவிர்ப்பான். 

எனவே, மாமிசம், மீன், முட்டை போன்றவற்றை கிருஷ்ணருக்குப் படைக்கக் கூடாது. அவர் அத்தகு பொருள்களை விரும்பியிருந்தால், அவ்வாறு கூறியிருப்பார். மாறாக, அவர், இலை, பழம், பூ, நீர் ஆகியவை கொடுக்கப்பட வேண்டும் என்று இங்கே தௌpவான வேண்டுகோள் விடுக்கிறார். “அவ்வாறு படைக்கப்படும் பொருள்களை நான் ஏற்றுக்கொள்கிறேன்” என்றும் கிருஷ்ணர் கூறுகிறார்.

எனவே, மாமிசம், மீன் முட்டை போன்றவற்றை கிருஷ்ணர் ஏற்கமாட்டார் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். காய்கறிகள், தானியங்கள், பழங்கள், பால், நீர் ஆகியவை மனிதனுக்குத் தகுந்த உணவுகள்; மேலும், கிருஷ்ணராலேயே பரிந்துரைக்கப்படுபவை.

மூன்றாம் அத்தியாயம், பதிமூன்றாவது பதத்தில். யாகத்தின் பிரசாதம் மட்டுமே தூய்மையானது என்றும், வாழ்வில் முன்னேற்றமடைய விரும்புபவர்களுக்கும் பௌதிக பந்தத்திலிருந்து முக்தி பெற விரும்புபவர்களுக்கும் அதுவே ஏற்றது என்றும் ஸ்ரீ கிருஷ்ணர் விளக்குகின்றார். அதே பதத்தில், தங்களது உணவுப் பொருள்களைப் படைக்காமல் உண்பவர்கள் பாவத்தையே உண்கிறார்கள் என்றும் கூறுகிறார். வேறு விதமாகக் கூறினால், அவர்கள் உண்ணும் ஒவ்வொரு கவளமும், ஜட இயற்கையின் சிக்கல்களில் அவர்களது ஈடுபாட்டினை மேலும் ஆழப்படுத்துகின்றது. 

ஆனால் எளிமையான, சுவையான தாவர உணவுப் பொருள்களை தயார் செய்து, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரது விக்ரஹம் அல்லது படத்தின் முன்பு வைத்து, வணங்கி, அந்த எளிய படைப்பினை ஏற்றுக்கொள்ளும்படி அவரிடம் பிரார்த்தனை செய்வது, வாழ்வின் நிலையான முன்னேற்றத்திற்கும், உடலைத் தூய்மை செய்வதற்கும், நல்ல சிந்தனைக்கு வழிவகுக்கும் நுண்மையான மூளை திசுக்களை உண்டாக்குவதற்கும் நிச்சயமாக உதவுகின்றது.



No comments:

Post a Comment