சித்திரையில் தொடங்கும் புது வருடம்
தற்கால போலி தமிழர் தம் பண்டைய தமிழர் மரபைத் திரித்த விநோதங்களுள் ஒன்று, வருடப் பிறப்பை சித்திரையிலிருந்து, தை மாதத்திற்கு மாற்றியது. ஒரு செயல் வழக்கத்தில் உள்ளதென்றால் – அதிலும் அது என்று துவக்கப்பட்டது என்று அறியாத பழமை கொண்டதென்றால், அதை நம் முன்னோர் ஆய்ந்து, தெளிந்துதான் கடைபிடித்திருப்பர் என்ற நம்பிக்கை நமக்கு வேண்டும்.
ஒரு ஆண்
வருடனும், ஒரு ஆண்
வருடியும் சேர்வதால் பிறக்கும் குழந்தையே புது வருடமாகும்
என்பது. அதனால் இது
தமிழ் வருடப் பிறப்பு
ஆகாது என்று சொல்லும்
இவர்கள், யார் இந்த
வருடன், யார் இந்த
வருடி என்று தெரிந்து
சொல்கிறார்களா?
வர்ஷா என்னும்
வடசொல்லிலிருந்து
மருவியது வருடம் என்று
கூறலாம். வர்ஷா என்றால்
‘பொழிதல்‘ என்பது பொருள்.
அதன்படி இந்த வருடன்,
வருடி என்பவர்களெல்லாம் யார் என்றால்,
பொழிதல் என்னும் வினைப்
பெயருக்கு உருவம் கொடுத்து
உருவகப் படுத்தி சொல்லப்படுகிற
கதை என்றாகிறது.
அது குழந்தைகளுக்கும்
புரியவேண்டும்
என்பதற்காகச்
சொல்லப்படுகின்ற
கதை. குழந்தைகள் நம்பினார்களோ இல்லையோ, இவர்கள்
நம்பி விட்டார்கள்.
அதாவது, வருடம் என்னும்
பெயருக்கு வேறு ஒரு
காரணம் இருக்க வேண்டும்
என்று தெரிகிறது. வருடை என்னும்
சொல், வருடம் என்று
மருவியிருக்கிறது.
வருடை என்பது
மேட ராசியின் பெயர்.
பாவை நோன்பை விளக்கும்
பாடலில் வானத்தில் கோள்கள் இருக்கும்
நிலையை விவரிக்கையில்….
‘வருடையைப்
படி மகன் வைப்ப’ - பரிபாடல் 11
என்று வருகிறது.
செவ்வாய் கிரகம், வருடை
என்னும் மேட ராசியை
அடைந்தது என்று பொருள்.
வருடை என்பது
ஒரு ஆடு. அது
மலையாடு. மலைப்பகுதிகளில் மட்டுமே வசிக்கக்
கூடியது. வருடையைக் குறிக்கும் ராசி மேட
ராசி. அது குறிக்கும்
மாதம் சித்திரை மாதம்.
அம்மாதம் தான் வருடத்தின்
முதல் மாதம் என்று
காட்டும் வகையில், நெடுநல்
வாடையில்,
திண்ணிலை மருப்பின் ஆடு
தலையாக
விண்ணூர்பு திரிதரும் வீங்குசெலல் மண்டிலத்து
என்று ஆட்டினைத்
தலையாகக் கொண்டு, சூரியன்
இந்த உலகத்தைச் சுற்றி விண்ணில்
ஊர்ந்து வருகிறான் என்று கூறப்பட்டுள்ளது.
எனவே, வருடை என்னும்
ஆட்டுக்கு நம் முன்னோர்
எந்த அளவு முக்கியத்துவம்
கொடுத்துள்ளனர்
என்பதற்கு ‘வான வரம்பன்’
என்று பெயர்பெற்ற, ஆடு கோட்பாட்டுச்
சேரலாதனே சாட்சி. கோட்படுதல்
என்றால், பிடித்தல் அல்லது கட்டுதல்
என்று பொருள். ஆட்டைப்
பிடித்து வந்தமையால் இந்த அரசனுக்கு
இப்படி ஒரு பட்டப்
பெயர்.
இந்தச் சேர
அரசன் சாதாரணன் அல்லன்.
பதிற்றுப் பத்தின் ஆறாம்
பத்து இவன் மீது
பாடப் பட்டவைதான். காக்கைப் பாடினியார்
நச்செள்ளையார்
பாடிய ஆறாம் பத்தின்
பதிகத்தில்,
இந்த அரசன், தண்டகாரண்யத்திற்குச்
சென்று அங்கிருந்த வருடையைப் பிடித்து, தொண்டி
நகருக்குக்
கொண்டு வந்தான், அதன்
மூலம் வான வரம்பன்
என்னும் பெயரும் பெற்றான்
என்று சொல்லப்படுகிறது.
“குடக்கோ நெடுஞ்சேர லாதற்கு வேஎள்
ஆவிக்
கோமான் தேவி ஈன்றமகன்
தண்டாரணியத்துக் கோள்பட்ட வருடையைத்
தொண்டியுள் தந்து கொடுப்பித்துப் பார்ப்பார்க்குக்
கபிலையொடு குடநாட்(டு)
ஓரூர் ஈத்து
வான
வரம்பன்எனப் பேர்இனிது விளக்கி
ஏனை
மழவரைச் செருவின் சுருக்கி
மன்னரை
ஓட்டிக்
குழவிகொள் வாரிற் குடிபுறந் தந்து
நாடல்
சான்ற நயன்உடை நெஞ்சின்
*ஆடுகோட் பாட்டுச் சேரலாதனை*
யாத்த
செய்யுள் அடங்கிய கொள்கைக்”
இந்தச் சேர
மன்னன் தண்டகாரண்யம் சென்று வருடையைக்
கொணர்ந்து, வான வரம்பன்
என்றும், ஆடு கோட்பாட்டுச்
சேரலாதன் என்றும் பெயர்
பெற்றான் என்றால், அவன்
வானத்தையே முட்டுவது போன்ற விந்திய
மலையை எட்டி, அதனால்
வான வரம்பன் என்னும்
பெயரையும் பெற்று, அங்கு
திரிந்துக்
கொண்டிருந்த
வரையாடு என்னும், மலையாடு
என்னும் வருடையைக் கொணர்ந்து, அதனால் ஆடு
கோட்பாட்டுச்
சேரலாதன் என்னும் பட்டத்தையும்
பெற்றுள்ளான்
என்பது தெளிவாகிறது.
எனவே, வருடை என்பது
மேடத்தைக் குறிப்பதாலும், சூரியப் பயணத்தின்
ஆரம்பம் மேடம் ஆதலாலும்,
ஆரம்பம் என்பது ஒரு
உயர்த்த இடமாக இருக்க
வேண்டும் என்னும் விழைவை
ஒட்டியும் இந்த மலையாட்டினைக்
கொணர்ந்துள்ளான்
என்று புலனாகிறது.
இந்த வருடையைப்
பற்றி சிலப்பதிகாரத்திலும் குறிப்பு வருகிறது.
மலைப்பகுதியில்
இயற்கையை ரசித்துக்கொண்டிருக்கிறான். அப்பொழுது அவன் “வரையாடு
வருடையும்” பார்க்கிறான்
என்று சிலம்பு கூறுகிறது.
(காட்சிக் காதை) இதன்
மூலம் ஆடு கோட்பாட்டுச்
சேரலாதன், சிலப்பதிகார காலத்திற்கு முன்னமே இருந்தவன்
என்று தெரிகிறது.
எனவே, சூரியச் சுற்றின்
ஆரம்பம் சித்திரை துவங்கும்,
மேட ராசியில் என்பதாலும்,
அவ்விராசி வருடை என்னும்
மலையாட்டை அடையாளமாகக் கொண்டது என்பதாலும்,
வருடையில் ஆண்டு துவங்கியிருக்கிறது;
வருடையில் துவங்குவதால், அது வருடம்
என்று ஆகியிருக்கிறது.
இங்கே ஒரு கேள்வி எழலாம். சூரியன் மேடத்திலிருந்து பயணம் தொடங்குவது, 12 ராசிகளைப் பற்றியதாக இருக்கலாம். மேடம் என்பது ராசிகளுள் முதன்மையானது. வருடக் கணக்கு என்பது, சித்திரையிலிருந்துதான் ஆரம்பிக்கிறது என்று இது எப்படி? வேறு ஒரு மாதத்திலிருந்து கூட வருடம் ஆரம்பமாகியிருக்கலாமே என்று கேட்கலாம்.
தமிழ் சான்றோர் இந்தச் சந்தேகத்திற்கு இடம் வைக்கவில்லை. சூரிய மாதத்தைக் குறிக்கும் இடங்களிலெல்லாம், மேடம் முதலான ராசிகளின் பெயரைத்தான் குறிப்பிட்டுள்ளனர்.
உதாரணமாக, சோதிடக் குறிப்புகள் எழுதப்பட்டுள்ள பழைய நாடிச் சுவடிகளைப் பார்த்தால், சூரிய மாதங்களான சித்திரை போன்றவற்றை, அவற்றின் ராசியின் பெயர் அல்லது பிற தமிழ்ப் பெயர்களால் மட்டுமே குறிப்பிட்டுள்ளனர்.
உதாரணமாக, சித்திரை மாதத்தை மேடம், மை, மறி, ஆடு, வருடை, கொறி என்றுதான் குறிப்பிட்டுள்ளனர். சூடாமணி நிகண்டிலும் இவற்றைக் காணலாம்.
மேலும், மணிமேகலையில், புத்தர் பிறந்த தினத்தைக் குறிக்கும் இரு இடங்களிலும் சூரியன் செல்லும் மாதத்தை இடபம் என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது.
“இருது இளவேனிலில் எரிகதிர் இடபத்து
ஒரு பதின் மேலும் ஒரு மூன்று சென்றபின்
மீனத்து இடைநிலை மீனத்து அகவையின்
போதித் தலைவனோடு பொருந்தி..” (11 & 15 )
பொருள்: “இளவேனில் பருவத்தில் இடபத்தில் சூரியன் 13 நாட்கள் சென்றபின் மீனத்து இடை நிலையில் திங்களோடு பொருந்தும் போது” என்கிறார்.
இளவேனில் என்பது சித்திரை; வைகாசி தான் 'இடபம்' என்று சாத்தனார் கூறுகிறார். அது சூரியன் இருக்கும் மாதத்தைக் குறிக்கிறது.
மேலும், ,வருடை என்பது ஒரு ஆடு. அது மலையாடு. மலைப்பகுதிகளில் மட்டுமே வசிக்கக் கூடியது. வருடையைக் குறிக்கும் ராசி மேட ராசி. அது குறிக்கும் மாதம் சித்திரை மாதம். அம்மாதம் தான் வருடத்தின் முதல் மாதம் என்று காட்டும் வகையில், நெடுநல் வாடையில்,
திண்ணிலை மருப்பின் ஆடு தலையாக
விண்ணூர்பு திரிதரும் வீங்குசெலல் மண்டிலத்து
என்று ஆட்டினைத் தலையாகக் கொண்டு, சூரியன் இந்த உலகத்தைச் சுற்றி விண்ணில் ஊர்ந்து வருகிறான் என்று கூறப்பட்டுள்ளது.
வருடை என்பது மேடத்தைக் குறிப்பதாலும், சூரியப் பயணத்தின் ஆரம்பம் மேடம் ஆதலாலும், ஆரம்பம் என்பது ஒரு உயர்த்த இடமாக இருக்க வேண்டும் என்னும் விழைவை ஒட்டியும் இந்த மலையாட்டினைக் கூறப்பட்டுள்ளது.
எனவே, சூரியச் சுற்றின் ஆரம்பம் சித்திரை துவங்கும், மேட ராசியில் என்பதாலும், அவ்விராசி வருடை என்னும் மலையாட்டை அடையாளமாகக் கொண்டது என்பதாலும், வருடையில் ஆண்டு துவங்கியிருக்கிறது; வருடையில் துவங்குவதால், அது வருடம் என்று ஆகியிருக்கிறது !
சித்திரை முதல் மாதம் என்பதால் இதுவே புதிய ஆண்டின் தொடக்கமும் ஆகும். இதனால் சித்திரை மாதம் முதல் நாளைத் உலகத் தமிழர்கள் அனைவரும் தமிழ் வருடப் பிறப்பாக சிறப்பாக கொண்டாடுகின்றனர்.
சூடாமணி நிகண்டு தரும் சூத்திரப்படி தமிழ் மாதங்களை வரிசையாக சொல்கிறது ...
சித்திரை – சித்திரை நட்சத்திரத்தில் பௌர்ணமி.
வைகாசி – விசாகத்தின் மற்றொரு பெயர் வைகாசி
ஆனி – மூல நட்சத்திரத்தின் மற்றொரு பெயர் ஆனி.
ஆடி – உத்திராட நட்சத்திரத்தின் மற்றொரு பெயர் ஆடி..
ஆவணி – அவிட்ட நட்சத்திரத்தின் மற்றொரு பெயர் ஆவணி.
புரட்டாசி – பூரட்டாதி நட்சத்திரத்தின் மற்றொரு பெயர் புரட்டை
ஐப்பசி – அசுவினி நட்சத்திரத்தின் மற்றொரு பெயர் ஐப்பசி.
கார்த்திகை – கார்த்திகை நட்சத்திரம்
மார்கழி – மிருக சீரிடத்தின் மற்றொரு பெயர் மார்கழி
தை – இது விதிவிலக்கு. தைப்பதால் அது தை.
மாசி – மகம் நட்சத்திரத்தின் மற்றொரு பெயர் மாசி.
பங்குனி – உத்திர நட்சத்திரத்தின் மற்றொரு பெயர் பங்குனி.
இதில் முதல் மாதம் என்ன ? 'சித்திரை' தானே !
எனவே, மேற்கண்ட அடிப்படையில் தான் பண்டைய தமிழர்கள் சித்திரை-1 தான் தமிழ் புத்தாண்டாக கொண்டாடி இருக்கிறார்கள் என அறியமுடிகிறது !
இளவேனில் காலம் எப்படி சுட்டெரிக்கும்
ReplyDeleteசித்திரை ஆகும் ஐயா?