Monday 29 May 2017

இந்து வேதங்களில் மாமிசம் சாப்பிட அனுமதிக்கிறதா.?



சில மக்கள் இந்துமத கருத்துக்களை சரியாக தெரியாமல் கூறும் வார்த்தை இந்து வேதங்களில் மாமிசம் சாப்பிட்டதாக கூறுகிறார்கள். அதன் உண்மை தன்மையை இங்கே வழங்கியுள்ளேன்.

அந்த காலங்களில் வேதங்களில் வேள்வியின் போது விலங்குகள் பலியிடப்பட்டன என்பது உண்மை தான். ஆனால், இப்படி பலியிடப்பட்ட விலங்குகள் உடனேயே உயர்ந்த பிறவியினை அடைகிறது என்று சாஸ்திரம் கூறுகிறது. அதாவது அந்தகால பிராமணர்கள் அந்தளவுக்கு உயர்ந்தவர்களாக இருந்தார்கள். இவர்களது மந்திரத்திற்க்கு அவ்வளவு சக்தி இருந்தது

மேலும் விலங்குகளை இப்படி வேள்வியில் போட அனுமக்கிறதேயெழிய, அந்த விலங்கினை கசாப்பு கடையில் போய் சாதாரணமாக வெட்டி சாப்பிட சொல்லவில்லை. ஆனால், இந்த கலியுகத்தில் இப்படிபட்ட சரியாக மந்திரங்கள் சொல்கிற உயர்ந்த சக்தியுடைய பிராமணர்கள் கிடையாது. எனவே தான் இதை கலியுகத்தில் விலங்குகளை பலியிட அனுமதிக்கவில்லை.

வைணவக் கவி, ஜெயதேவ் தனது தசாவதார ஸ்தோத்ரத்தில் இவ்வாறு பாடுகிறார்.

nindasi yajna-vidher ahaha sruti-jatam
sadaya-hridaya darsita-pasu-ghatam
kesava dhrita-buddha-sarira jaya jagadisa hare

“யாகங்களில் பலியிடப்படும் உயிர்களின் மேல் பரிவு கொண்டு, அவற்றைக் காக்க புத்தரின் வடிவில் வந்து உயிர்பலியிடுவதை தடுத்து நிறுத்திய கேசவனே,  ஜகன்னாதனே தங்களுக்கு ஜெயம் உண்டாகட்டும்

யாகங்களின் போது உயிர் பலியிடப் படும்போது அவற்றுக்கு நேரடியாக மனித பிறவி கிடைக்கும்.  ஆனால் தகுதியற்றவர்களால் யாகம் நடத்தப்படும் போது இது நடவாது.   மேலும், யாகங்களில் உயிர்ப் பலியிடுவது கலி யுகத்தில் தடை செய்யப் பட்டதாகும். இவ்வாறு உயிர்கள் முறையின்று கொள்ளப் படுவதை தடுத்து நிறுத்த புத்தர் அவதரித்தார். 

எனவே, வேள்வியில் விலஙகுகளை பலியிட இந்தகலியுகத்தில் தடைசெய்யப்பட்டதாகும். வேதஙகளில் ஏதோ ஒரு இடத்தில் சொல்லப்பட்டதை வைத்து இது தான் அதன் மொத்த கருத்தே என முடிவு செய்வது முட்டாள்தனமானது.

            வேத இலக்கியங்களின் படி மனிதன் மூன்று வகையான மனிதர்களும், அவர்களது உணவுகளையும் சொல்கிறது. இது மனு ஸ்ம்ருதியிலும் சொல்ல்கிறது. இதில் ஒருவனுடைய குணமாகிய தமோ குணம், ரஜே, சத்வ குணங்களை உடையவனின் உணவைப் பற்றியும் கூறுகிறார்.

தமோ குணத்திலுள்ளவனுக்கு மாமிசம் சாப்பிட ஆசை உண்டானல் அவன் அதை சில குறிப்பிட்டால் நாட்களில் மட்டும் சிறு தேவர்களுக்கு (காளி, சுடலைமாடன்....) பலியிட்டு பின்பு அதை சாப்பிட சொல்கிறார். இது ஏனெனில் அப்போது தான் அவனது புலன் ஆசைகளை படிப்படியாகக் குறைக்கவே தான். இப்படி மனு சில இடங்களில் சில மனிதர்களுக்காக சொல்லப்பட்டது. ஆனால் சத்வ குணத்தலுள்ளவன் இதை விலக்கி இருப்பதையும் கூறுகிறார்.

இதோ மனு சட்டத்தில் மாமிசம் சாப்பிடம் மக்களுக்காக கூறிய சலுகைகள் பற்றி கூறுகிறது ..

"ஏனெனில் பிரமன் படைப்பு முழுமையும் சீவனுக்கு உணவாகவே படைத்தார். ஆகையால், நெல் முதலான தாவரமும், விலங்கு முதலான உயிரினமும் சீவனுக்கு உணவாகவே அமைவன" - மனு 5-28

எப்படி எனிலோ, அசையும் உயிர்களில் மான் போன்றவற்றிற்குப் புல் முதலியனவும், புலி முதலிய கோரைப் பற்களுடைய வற்றிற்கு மான்முதலியனவும், கைகளுள்ள மானிடர் முதலானோர்க்குக் கரங்களில்லாத மீன் முதலியனவும், சிங்கம் முதலிய கொடிய மிருகங்களுக்கு யானை முதலிய அஞ்சும் பண்புடையனவும் ஆகாரமாகும் “ - மனு 5-29

எனவே, உரியவற்றை அன்றாடம் கொன்று தின்றாலும் பாவமில்லை. உண்ணத்தக்கனவும், கொல்லத்தக்கனவும், பிரமனால் படைக்கப்பெற்றிருக்கின்றன அன்றோ - மனு 5-30

"எனினும், யாகத்திற்க்காக பலியிடப்பட்ட மாமிசம் தேவகாரியம், ஆனால் தனது சுய அசைகளுக்காக விலங்குகளை  கொன்று சாப்பிட்டால் அது  ராட்சச காரியமாகும்' - மனு 5-31 சொல்கிறது

            இறைச்சி உண்பதற்கு அடிமையாக இருப்பவர்கள், இறைச்சி சாப்பிடுவது சில கட்டுப்படுத்தப்பட்ட நிபந்தனைகளின் கீழ் அனுமதிக்கப்படுகிறது. எனவே வேதங்களில் உள்ள இந்த அறிக்கைகள் சலுகைகள் அல்ல, பரிந்துரைகள் அல்ல. ஒரு சலுகை மற்றும் பரிந்துரைக்கு இடையிலான வேறுபாடு என்ன?
  
நோயாளி ஒரு டாக்டரிடம் செல்கிறாரென்றால், டாக்டர் உங்களுக்கு நீரிழிவு நோய் இருப்பதாக சொல்கிறார். காலையிலும் மாலையிலும் இந்த மருந்தை எடுத்துக்கொள்வீர்கள், நீங்கள் சர்க்கரை முழுவதையும் தவிர்க்க வேண்டும் என்கிறார். எனவே இரண்டு விஷயங்களில் டாக்டர் மருந்து எடுத்துக் கொள்ளுமாறு பரிந்துரையைச் சொன்னார்.

ஆனால் நோயாளி சர்க்கரை தனக்கு வேண்டும் என டாக்டரிடம் கேட்பதால் டாக்டர், நீ சர்க்கரை ஒரு வாரத்திற்கு ஒருமுறை எடுத்துக் கொள்ளுங்கள் என்கிறார். இப்பொது அந்த நோயாளி,   டாக்டர் எனக்கு இனிப்பு எடுத்துக் கொள்ளும்படி அறிவுறுத்தினர் என கூறினால் என்னாகும் ?

             இப்போது அது அறிவுறுத்தல் அல்ல. இது ஒரு பரிந்துரை அல்ல, அது ஒரு சலுகையாகும். சலுகை என்பது என்னவென்றால், எனக்கு என்ன தேவையில்லாதது என்பதல்ல, ஆனால் நான் விரும்பியதால் அதை செய்ய  அனுமதிக்கப்படுகிறேன். ஆனால், பரிந்துரை தான் டாக்டர்  செய்ய சொன்னது. உண்மையில் நோயாளிக்கு  சர்க்கரை மிகவும் ஆபத்தானது. சர்க்கரை எடுத்துக்கொள்ளக்கூடாது. பின் அவர் கொடுக்கப்பட்ட சலுகைகளை தவறாக பயன்படுத்தினார் என்று  உணர்கிறார். பின்னர் அவர் சலுகைகள் முற்றிலும் விலகி விடுகிறார்.
  
இதை போல் தான் வேத இலக்கியத்திலும் சொல்கிறது. மாமிசம் சாப்பிடவேண்டாம் என தான் பரிந்துரைக்கிறது, ஆனாலும் மாமிசம் சாப்பிட கட்டுபடுத்த முடியாத மக்களுக்காக சில சலுகையை சொல்கிறது. அது தான் தேவர்களுக்கு பலியிட்டு சாப்பிடுவது. எனவே இது சில கட்டுப்பாடுகள் உருவாக்குகிறது. இது தேவியுடன் தொடர்புடைய புனித நாட்களில் தான். முறையான யாகம் அல்லது முறையான வழிபாடு மற்றும் தியாகம் அந்த நேரத்தில் நடக்கும் போது மட்டுமே விலங்கு தியாகம் செய்ய முடியும்.
  
எனவே வேத இலக்கியங்கள் பரிந்துரைக்கப்படுவது சைவ உணவுதான். மனு ஸ்ம்ருதி சட்டத்தில் ஒருவன் மாமிசம் தவிர்க்கவேண்டும் என மிக தெளிவாக இங்கே சொல்கிறது. இதோ ...
  
'பிராணிகளைக் கொல்பவன்,கொல்ல சொல்பவன், வெடடுபவன் வாங்குபவன்,விற்பவன்,பரிமாறுபவன்,சாப்பிடுபவன இவர்கள் அனைவரும் கொடியவர்கள் மற்றும் பாவத்தை சேர்ப்பவர்கள்'  - மனு -5-51

'இவ்வுலகில் எதனுடைய மாமிசத்தை ஒருவன் உண்கிறானே, அது வேறு பிறவியில் அவனுடைய மாமிசத்தை உண்ணும் என்பதே மாமிசம் என்பதன் பொருள்.' - மனு -5-55

'மாமிச ஆசையின் காரணமாக ஒருவன் பிராணிகளை பிடிக்கவும் கொல்லவும் தூண்டுகின்றன. இதை எண்ணிப் பார்த்து ஒருவன் மாமிசம் உண்பதை கைவிட வேண்டும்' - மனு -5-49

இப்படி மனு கூறியுள்ளார். இறைச்சி சாப்பிட தங்கள் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாத மக்களுக்கு வேதங்களில் மாமிசம் சாப்பிட வழிவகை வழங்கப் பட்டுள்ளது.  இது ஏனெனில் அப்போது தான் அவனுது புலன் ஆசைகளை படிப்படியாகக் குறைக்கவே தான் இப்படி சில இடங்களில் சில மனிதர்களுக்காக சொல்லப்பட்டது. ஆனால் சத்வ குணத்தலுள்ளவன், ஆன்மீக பாதையில் முன்னேற விரும்புவார்கள் இதை விலக்கி இருப்பதே நல்லது.

வேதங்களில் விலங்குகளை கொல்ல அனுமதிக்கவில்லை. இதோ வேத ஆதாரம்...

ப்ரீஹிமட்டம் யவமட்டமாதோ மாஷமாதோ திலம்
ஈஷா வாம் பாகோ நிஹிதோ ரத்னதேயாய தந்தெள மா ஹின்சிஷ்டம்
பிதரம் மாதரம்                              - அதர்வ வேதம் – 6.140.2

பற்களே! நீங்கள் அரிசியை, வாற்கோதுமையை, பருப்பு வகைகளை, எள்ளை உண்கிறீர்கள். இவைகளே உமக்காக ஏற்பட்டவை. தாய் தந்தையராக முடியும் எதையும் கொல்லாதீர்கள்

யா ஆமம் மான்ஸமதந்தி பௌருஷேயம் யே க்ரவீ:
கர்பான் காதந்தி கேஷவாச்டாநிதோ நாஷயாமசி      

நாம் சமைத்த இறைச்சி, பச்சை இறைச்சி, ஆண்-பெண் பாலர்களின் அழிவினால் ஏற்பட்ட இறைச்சி, கரு, முட்டை இவைகளை உண்பவர்களை அழிக்க வேண்டும்- அதர்வ வேதம் – 8.6.23

அனகோ ஹத்யா வை பீம க்ரித்யே
மா நோ காமஷ்வம் புருஷம் வதீ:    
                  
வெகுளியானவற்றைக் கொல்வது கண்டிப்பாக பெரும் பாவமே. நம் பசுக்களையும், குதிரைகளையும், மக்களையும் கொல்லாதீர்- அதர்வ வேதம் – 10.1.29

'அக்ஃன்யா யஜமானஸ்ய பஷூன்பஹி:'...யஜுர் வேதம் – 1.1
மனிதனேமிருகங்கள் அக்ஃன்யாஅழிக்கப்படக் கூடாதவை. அவைகளைக் காப்பாயாக

'பஷுன்ஸ்த்ராயேதாம்' ....யஜுர் வேதம் – 6.11
மிருகங்களைக் காப்பீர்

'த்விபாதவா சதுஷ்பாத்பாஹி' ....யஜுர் வேதம் – 14.8
இரண்டு கால், நான்கு கால் ஜீவன்களைக் காப்பீர்

இமம் ஹிம்சிரேகாஷஃபம் பஷும் கனிக்ரதம் வாஜிநாம் வாஜிநேஷு

மற்ற பெரும்பாலான அனைத்து மிருகங்களையும் விட அதி விரைவாக ஓடும் ஓர் குளம்பினால் ஆன கனைக்கும் இம்மிருகத்தை வதைக்காதீர்!” - யஜுர் வேதம்  13.48
  
க்ருதம் துஹானாமதிதிம் ஜனாயாக்நே மா ஹிம்சிஹி: - யஜுர் வேதம் – 13.49
பாதுக்காக்கப் படவேண்டிய பசுக்களையும் காளைகளையும் கொல்லாதீர்

ஆரே கோஹா ந்ருஹா வதோ வோ அஸ்து - ரிக் வேதம் – 7.56.17
ரிக்வேதத்தில் பசுவதை என்பது மாபாதகம் என்றும் மனிதரைக் கொல்வதற்குச் சமம் என்றும் கூறப்படுகிறது. இத்தகைய கொடுஞ்செயலைச் செய்தவர் தண்டிக்கப்பட வேண்டுமென்றும் கூறுகிறது

 சூயவஸாத் பகவதீ ஹி பூயா அதோ வயம் பக்வந்த: ஸ்யாமஅத்தி
த்ர்நாமாக்ன்யே விஷ்வதாநீம் பிப ஷுத்தமுதகமாசரந்தீ
-                       - ரிக் வேதம் 1.164.40 / அதர்வ வேதம் 7.73.11 / அதர்வ வேதம் 9.10.20

“அக்ன்ய பசுக்கள்இவைகளை எக்காரணம் கொண்டும் கொல்லக்கூடாதுஅவை தாங்களே தங்களை சுத்த ஜலம், பச்சைப் புற்களை உண்டு ஆரோக்கியமாக்கிக் கொள்ளும், இதன் மூலம் நாம் நற்பண்புகள், ஞானம் மற்றும் செல்வம் படைத்தவர்களாவோம்

யஹ் பெளருஷேயேன க்ரவிஷா சமன்க்தே யோ அஷ்வேன பஷுநா யாதுதானா:யோ அக்ன்யாயா பரதி க்ஷீரமாக்நே தேஷாம் ஷீர்ஷானி ஹரசாபி வ்ரிஷ்சா

மனித, குதிரை அல்லது மிருகங்களின் சதைகளைப் புசிப்பவர், அக்ன்யப் பசுக்களைக் கொல்பவர் இவர்களை கடுமையாகத் தண்டிக்க வேண்டும்.” - ரிக் வேதம் – 10.87.16
  
மா காமனாகாமாதிதிம் வதிஷ்டா  - ரிக் வேதம் 8.101.15

பசுக்களை கொல்லாதீர். பசு ஒரு வெகுளி மற்றும் அதிதிஅதாவது துண்டு துண்டாக வெட்டப் படக்கூடாதது

அந்தகாய கோஹாதம்  - யஜுர் வேதம் – 30.18

பசுவதை செய்பவர்களை அழி!”

யதி நோ காம் ஹன்சி யத்யஷ்வம் யதி பூருஷம்
தம் த்வா சீசேனா வித்யாமோ யதா நோ சோ அவீரஹ

யாரேனும் உங்களின் பசுக்கள், குதிரைகள் அல்லது மக்களை அழிப்பாராயின், அவர்களை ஈயக் குண்டினால் கொன்று விடுங்கள்-  அதர்வ வேதம் – 1.16.4

வத்ஸம் ஜாதமிவாக்ன்யா  - அதர்வ வேதம் – 3.30.1

“பிறரைக்  கொல்லப் படக்கூடாதஆக்ன்யப் பசு தன் கன்றுகளை எவ்வாறு நேசிக்குமோ அவ்வாறு நேசியுங்கள்”

" பிற ஜீவன்களின் உடல்களை (மாமிசத்தை) சாப்பிடுபவன், இந்த உயிரினத்தாலே தனது உடல் கொல்லப்படுவதற்க்காக மீண்டும் ஒரு உடலை  (பிறப்பு) எடுத்து துன்பப்படும்' - மஹாபாரதம், அனு-115.47

மகாபாரத, அனுசாசன  பர்வத்தில், யுதிஷ்டிரர் மஹாராஜாவுக்கு, பித்தாம பிஷ்மா அறிவுறுத்துகையில், குறிப்பாக சைவ உணவையே நிறைய வசனங்களில் வரிசையாக சொல்கிறார் !
  
"உண்மையான தர்மத்தை அறியாதவர்களாகவும், துன்மார்க்கமானவர்களாகவும், பெருமையற்றவர்களாகவும் இருப்பவர்கள் தாங்களே நல்லவர்கள் என்று கருதுகின்றனர். மேலும், அடுத்த உலகில், இத்தகைய பாவமுள்ள மனிதர்கள் இந்த உலகில் இவர்களால்  கொல்லப்பட்ட அதே உயிரினங்களால் சாப்பிடப்படுவார்கள்  " - பாகவத புராணம் 11.5.14
  
இப்படித் தெளிவாக வேதங்களில் மிருக வதை தடை செய்யப்பட்டிருக்கையில் எவ்வாறு இச்செயல்கள் வேதங்களில் ஊக்குவிக்கப்பட்டிருப்பதாய்ச் சொல்கிறார்கள்?

No comments:

Post a Comment