Friday 27 July 2018


அல்லாஹ் (இறைவன்- கிருஷ்ணர் ) ஏழாவது வானத்தில் (லோகத்தில்-கோலாக வைகுண்டத்தில்) இருக்கிறார் ?



முஸ்லிம்கள் சொல்கிறார்கள் அல்லாஹ் ஏழாவது வானத்தில் உள்ளதாக !

வேத இலக்கியங்களிலும் இதை தான் சொல்கிறது. அதாவது நாம் இருக்கும் இந்த பூமிக்கு மேலே ஏழு உலகங்கள் உள்ளதா கூறுகிறது. பூமிக்கு மேலு புவர் லோகம், அடுத்து சொர்க்க லோகம்,மஹர் லோகம், ஜனோ லோகம், தபோலோகம், கடைசியாக 6 வது ப்ரம்மாவின் லோகமான சத்ய லோகம் உள்ளது.
பூமிக்கு மேலே உள்ள 6 உலகங்கள்:

சத்தியலோகம் (பிரம்மா)
தபோலோகம் (தேவதைகள்)
ஜனோலோகம் (பித்ருக்கள்)
மகர்லோகம் (முனிவர்கள்)
சுவர்லோகம் (இந்திரன், தேவர்கள்):
புவர்லோகம் (கிரகங்கள், நட்சத்திர தேவதைகள்):

 இவைகள் எல்லாமே பௌதீகமான உலகங்கள். இவைகள் எங்கே நீங்கள் போனாலும் பிறப்பு,இறப்பு,நோய்,வயோதிகம் என்கிற 4 வித கஷ்டங்கள் இங்கும் உள்ளன.

ஆனால், 7 வைத்து இந்த பௌதீக லோகங்களுக்கு மேலே உள்ள ஆன்மீக லோகம். இதுவே முஸ்லிம்களால் கூறப்படும் 7வது வானம். இது தான் கோலாக விருந்தவன் என்கிற லோகம் உள்ளது. இதில் தான் இறைவன் (அல்லாஹ்) இருக்கிறார் என்கிறது.

இந்த லோகத்தில் தான் பகவான் கிருஷ்ணர் உள்ளார் என வேத இலக்கியங்கள் கூறுகிறது.

"எனது அந்த பரம வாசஸ்தலம் சூரியனாலோ, சந்திரனாலோ, நெருப்பினாலோ, மின்சாரத்தினாலோ ஒளியூட்டப்படுவது இல்லை. அதனை அடைபவர்கள் ஒருபோதும் இந்த ஜட உலகிற்குத் திரும்புவதில்லை"- கிருஷ்ணர் - பகவத் கீதை 15-6

"ஜடவுலகின் மிகவுயர்ந்த லோகத்திலிருந்து மிகவும் தாழ்ந்த லோகம் வரை, அனைத்தும் பிறப்பும் இறப்பும் மாறி மாறி நடைபெறும் துன்பம் நிறைந்த இடங்களே. ஆனால் குந்தியின் மகனே, என்னுடைய இடத்தை அடைபவன் என்றும் மறுபிறவி எடுப்பதில்லை" - கிருஷ்ணர் - பகவத் கீதை 8-16

" எதனை தோற்றமற்றதாகவும் அழிவற்றதாகவும் வேதாந்திகள் கூறுகின்றனரோ, எது பரம கதியாக அறியப்படுகின்றதோ, எந்த இடத்தை அடைந்தவன் மீண்டும் திரும்பி வருவதில்லையோ, அதுவே எனது உன்னத இருப்பிடம்" - கிருஷ்ணர் - பகவத் கீதை 8-21

எனவே, பகவான் க்ரிஷ்ணரது லோகமான கோலாக வைகுண்டமே எல்லோரது இறுகி குறிக்கோள்.

இது பற்றி, குரானில் என்ன சொல்கிறது.....

முஹம்மது நபி (ஸல்) சொன்னார்கள் வானம் "ஏழு" அடுக்குகளை கொண்டது ..... (5 வது மாதம்) அவனுடைய காதுகள் முழுவளாச்சியடைகிறது, அதன் பின்னரே (7 வது ... அல்லாஹ்வின் அருள்மறை வசனம் கூறியிருப்பது அருள்மறை

ஏழு வானங்களையும் அல்லாஹ் அடுக்கடுக்காய் எப்படிப் படைத்திருக்கின்றான் என்பதை நீங்கள் பார்க்கவில்லையா ? 71: 15

(வ்விறை)வன் எத்தகையவன் என்றால் அவனே உலகத்திலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான்; பின் அவன் வானத்தின் பக்கம் முற்பட்டான்; அவற்றை ஏழு வானங்களாக ஒழுங்காக்கினான். அன்றியும் அவனே ஒவ்வொரு பொருளையும் நன்கறிபவனாக இருக்கிறான். 2:29

ஏழு வானங்களும், பூமியும், அவற்றில் உள்ளவர்களும் அவனைத் துதி செய்து கொண்டிருக்கின்றனர்; இன்னும் அவன் புகழைக் கொண்டு துதி செய்யாத பொருள் (எதுவும்) இல்லை. எனினும் அவற்றின் துதி செய்வதை நீங்கள் உணர்ந்து கொள்ளமாட்டீர்கள், நிச்சயமாக அவன் பொறுமையுடையவனாகவும், மிக மன்னிப்பவனாகவும் இருக்கின்றான். 17 :44

அன்றியும், உங்களுக்கு மேலே ஏழு அடுக்குகளை கொண்ட வானத்தை திடனாக நாம் படைத்திருக்கிறோம் - (நமது) படைப்பைக் குறித்து நாம் எப்பொழுதுமே பராமுகமாக இருக்கவில்லை 23:17

ஏழு வானங்களுக்கு இறைவனும் மகத்தான அர்ஷுக்கு இறைவனும் யார்?” என்றும் கேட்பீராக. 23:86

ஆகவே, இரண்டு நாட்களில் அவற்றை ஏழு வானங்களாக அவன் ஏற்படுத்தினான்; ஒவ்வொரு வானத்திற்கும் அதற்குரிய கடமை இன்னதென அறிவித்தான்; இன்னும், உலகத்திற்கு சமீபமான வானத்தை நாம் விளக்குகளைக் கொண்டு அலங்கரித்தோம்; இன்னும் அதனைப் பாதுகாப்பாகவும் ஆக்கினோம்; இது யாவரையும் மிகைத்தவனும், ஞானம் மிக்கோனுமாகிய (இறை)வனுடைய ஏற்பாடேயாகும். 41 :12

அல்லாஹ் தான் ஏழு வானங்களையும் இன்னும் பூமியிலிருந்து அவற்றைப் போலவும் படைத்தான்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்கள் மீதும் சக்தியுடையவன் என்பதையும், மேலும் நிச்சயமாக அல்லாஹ் தன் ஞானத்தால் எல்லாப் பொருளையும் சூழ்ந்தறிகிறான் என்பதையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக, அவற்றின் (வானங்கள், பூமியின்) இடையே அவன் கட்டளையிறங்கிக் கொண்டேயிருக்கிறது. 65:12

உங்களுக்குமேல் பலமான ஏழுவானங்களை உண்டாக்கினோம் 78:12

மேற்கண்ட வசனங்களில்

ஆனால், இன்று வானங்கள் 7 அடுக்குகளை கொண்டதாக இருக்கிறது என்பத்தை அறிவியல் நிரூபித்துவிட்டது,


எனவே, பகவான் கிருஷ்ணர் அவரது கோகமான பூமியிலிருந்து ஏழாவது லோகமான கோலாக வைகுண்டத்தில் இருப்பதாக கூறுகிறது.