இராமரால் சீதை தீக்குளித்தது சரியா?
மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்னும் பண்பாட்டை அறிந்தவர்கள் இதனை ஏற்றுக்கொள்வர். ஒரு பெண் தனது கணவனிடமிருந்து பிரிக்கப்பட்டு வேறொரு ஆணுடன் ஒருநாள் இருந்தால்கூட அது மாபெரும் குற்றமாகும். சமுதாயம் முறையான கற்புள்ள பெண்களை அடிப்படையாகக் கொண்டிருப்பதால், அவர்களின் கற்பு மிகவும் வலியுறுத்தப்படுகிறது.
அத்தகு சமுதாயத்தின் மத்தியில் இராமரால் எவ்வாறு சீதையை ஏற்றுக்கொள்ள முடியும்?
ஏனெனில் அவரது மக்களாலேயே சீதையை பற்றி தப்பாக கூற வாய்புள்ளது. எனவே தான் அப்படி கேட்கும் முன்னமே அவர் தனது மனைவியின் கற்ப்பை எல்லோருக்கும் தெரியப்படுத்தவும் இப்படி முடிவெடுக்கிறார்.
சீதையின் மீது இராமருக்குத் துளியளவும் சந்தேகம் கிடையாது, ஆனால் அவதூறு பேசும் மக்களின் வாயை அடைப்பதற்காகவும் சீதையின் உயர்ந்த கற்பை அனைவருக்கும் உணர்த்துவதற்காகவும் மட்டுமே இராமர் சீதையைத் தீயில் இறங்கச் சம்மதிக்கிறார். சீதையைத் தீயில் இறங்க வேண்டாம் என்று இராமர் ஒருவேளை தடுத்திருந்தால், அவர் சீதையை காமத்தினால் ஏற்றுக் கொண்டார் என்று மக்கள் குற்றம் சாட்டியிருப்பர்.
யுத்த காண்டம்,சர்க்கம்-121...
'சீதை மாசு இல்லாதவள் எண்டு எனக்கு தெரியும். ஆனால், ராவணனுடைய அந்தபுரத்தி பல நாள்கள் தங்கியிருந்தவளின் தூய்மையை, பலரும் அறிய பரிசோதித்து பார்க்காமல் நான் ஏற்று கொண்டால், நான் காம மிகுதியால் அறிவிழந்து அவளை ஏற்று கொண்டேன்' என்று மேன்மக்கள் பேசுவார்கள். மூன்றுலக மக்களும் இகழ்த்துரைப்பார்கள்' - வசனம் 13, 14 சொல்கிறார்.
'சீதை, என்னை தவிர வேறிடம் செல்லாத மனதை உடையவள், ஆழமான அன்பு கொண்டவள், என் விருப்பத்திற்கேற்ப நடப்பவள் என்பதை நானும் மனதார அறிவேன். சத்தியத்தையே முற்றிலுமாக நம்பி கொண்டிருக்கும் நான், மூன்று உலகிலுள்ள மக்களுக்கு சீதையின் தூய்மையில் நம்பிக்கை ஏற்படவேண்டும் என்பதற்காகவே, நெருப்பில் விழ போன வைதேகியை தடுக்கவில்லை.(அவளுடைய கற்பு அவளை காப்பாற்றும் என்கிற முழு நம்பிக்கை எனக்கு இருந்தது)" - வசனம் 15,16 கூறுகிறார் .
'மைதிலி, கொழுந்து விட்டெரியும் அக்னியை போல் ஆனவள். யாராலும் நெருங்க முடியாதவள். எவராலும் அடைய முடியாதவள். கொடுமதி கொண்ட அவனால், மனத்தால்கூட இவளை கெடுக்க முடியாது' - வசனம் 18 சொல்கிறார் ..
'கற்புக்கரசியான இவள், ராவணனுடைய அந்தப்புரத்தில் இருந்துகொண்டு செழிப்பான வாழ்க்கையை விரும்பமாட்டாள், ஏனெனில் சூரியனிடமிருந்து பிரிக்கமுடியாத ஒளியை போல, இவள் என்னிடத்திலிருந்து பிரிக்க முடியாதவள்' - வசனம் 19 சொல்கிறார்.
இப்படி சீதை பெருமைகளை மக்கள் அறியவேண்டும் என்பதற்காகவே இவர் சீதையிடம் கடிந்து கடுமையான சொற்களை கூறுவதாக இதன் மூலம் அறிந்து கொள்ளலாம். இந்நிகழ்ச்சியின் மூலம் சீதையின் புகழ் மூவுலகிலும் நிரந்தரமாக இடம் பெற்றுவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால் உண்மை சீதை ராவணன் சீதை கடத்தும் போதே, பூமி தேவியால் அனுப்பபட்ட போலி சீதையையே ராவணன் கடத்தினான். இது ராமருக்கு மட்டுமே தெரியும். பின் இந்த போலி சீதை நெருப்பில் இறங்கிய பின், மறுபடியும் உண்மை சீதை வெளி வருகிறாள்.
கூர்ம புராணத்திலிருந்து நாம் அறிவது என்னவெனில், இராவணனால் கடத்திச் செல்லப்பட்ட சீதை உண்மையான சீதை அல்ல, மாயா சீதை. உண்மையான சீதையை இராவணனைப் போன்ற அசுரர்களால் தொட முடியுமா என்ன!
கூர்ம புராணத்தில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது:
ஸீதயாராதிதோ வஹ்னிஷ் சாயா-ஸீதாம் அஜீஜனாத்
தாம் ஜஹார தஷ-க்ரீவ: ஸீதா வஹ்னி-புரம் கதா
பரீக்ஷா-ஸமயே வஹ்னிம் சாயா-ஸீதா விவேஷ ஸா
வஹ்னி: ஸீதாம் ஸமானீய தத்-புரஸ்தாத் அனீனயத்
“சீதாதேவியால் வேண்டுகோள் விடுக்கப்பட்ட அக்னிதேவர், சீதையைப் போன்ற ஒரு மாய ரூபத்தை இராவணனின் முன்பு நிறுத்த, பத்து தலை கொண்ட இராவணன் அந்த மாயா சீதையை கடத்திச் சென்றான். உண்மையான சீதை அக்னி தேவரின் இருப்பிடத்திற்குச் சென்றாள். பகவான் இராமச்சந்திரர் சீதையை அக்னிப் பரிட்சைக்கு உட்படுத்தியபோது, அக்னியினுள் நுழைந்தது போலியான மாயா சீதையே. அச்சமயத்தில் உண்மையான சீதையை தனது இருப்பிடத்திலிருந்து அழைத்து வந்த அக்னிதேவர், அவளை ஸ்ரீ இராமரிடம் ஒப்படைத்தார்.”
உண்மையான சீதை அக்னி தேவரின் பாதுகாப்பில் இருக்க, இராவணன் மாயா சீதையை மட்டுமே இலங்கைக்கு எடுத்துச் சென்றான். அந்த மாயா சீதையை ஏற்றுக்கொள்ள விரும்பாத இராமர், அவளை நெருப்பில் இறங்கச் செய்தார்; அக்னி தேவர் உண்மையான சீதையினை இராமரிடம் திருப்பியளித்தார்.
எனவே, இது மக்களுக்காக நடத்தப்பட்ட ஒரு சம்பவமே.
சீதையால் அக்னிபகவான் தனது தூய்மையை மீண்டும் பெறவே இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்தது. ராவணனின் யாகசாலையில் வேலைசெய்த அக்னிபகவான் பல பாவங்களை செய்ய வேண்டியதாக இருந்தது. பல முனிவர்களையும் சாதுக்களையும் ராவணனின் உத்தரவுப்படி அவன் அழித்தான். இந்த பாவத்தில் இருந்து நீங்கி பரிசுத்தம் ஆகவேண்டுமானால் சீதாதேவி என்னுள் மூழ்கி எழவேண்டும் என கோரிக்கை விடுத்தான். ராமனும் அதை ஏற்றுக்கொண்டு சீதாவை தீயில் மூழ்கிவரும்படி உத்தரவிட்டான். பகவானின் உத்தரவை ஏற்ற சீதா தீக்குள் இறங்கினாள். அவளது கற்புத்தீ முன் அக்னியின் பாவங்கள் எல்லாம் அழிந்துபோயின. இதுதான் சீதாதேவி அக்னிக்குள் இறங்கிய வரலாறு. நெருப்பையும் பரிசுத்தமாக்கும் வல்லமை பெற்றவள் சீதா.
இது போல், இரண்டாவது முறையாக ராமருக்கும், சீதைக்கும் நடந்த பிரிவு:
இதன் பின்பு ராமரும், சீதையும் அயோத்தி சென்று சில மாதங்களுக்கு பின்பு, மக்களின் மனநிலையை பரதனிடம் கேட்கிறார். அவர் கூறுவது 'மாட்டான் வீட்டில் பல நாட்கள் தங்கிய தம் மனைவியை ராமர் ஏற்று கொண்டதாக' .
ராமர் கூறுகிறார்.. 'ஒருவனுடைய ஆச்சாரம் வதந்திக்கு உட்படுத்த படுகிறது என்பதால் அவன் மிகுந்த தாழ்வு மனப்பான்மையும், அவதூறுகளையும், மிகுந்த துயரத்தையும் அனுபவிக்கிறான். தகுந்த ஆச்சாரம் என்பது அழிக்கப்படுகிறது. சிறந்தவர்கள் நல்ல ஆசாரங்களை நோக்கி இருப்பார்கள். பொது ஜனங்களின் அவதூறுகளை தவிர்க்க தேவைப்பட்டால் என் உயிரையும் இழக்க நான் முன் வருவேன். உண்மையில் கூறப்போனால் சீதை எனக்கு ஒரு பொருட்டல்ல' என்கிறார்.
இதன் பின்பு, சீதையை லட்சுமணனால் காட்டிலுள்ள வால்மீகி ஆசிரமத்தில் விட்டுவர செய்தார். பின் பல ஆண்டுகள் மக்களின் விருப்பப்படி ராமர் ஆட்சி செய்கிறார். பின் அவரது குழந்தைகள் லவ,குசன் மூலம் திரும்பவும், வால்மீகி மூலம் சீதையை சந்திக்கிறார் .
பின் வால்மீகி கூறுகிறார்... 'பொதுமக்களுக்காக நீ யாரை துறந்தாயோ, அந்த சீதை தன் பதிவிரதம் பிரகணபடுத்த இங்கு கூட்டி வந்திருக்கிறேன்' என்கிறார்.
பின், ராமர், உத்திரகாண்டம்-சர்க்கம் -97 இல் பதில் கூறுகிறார் ...
'மக்களின் குற்றச்சாட்டு என்பது மிகவும் வலிமையுடையது. அதனால் தான், நான் சீதையை துறந்தேன். ப்ரம்மஜானியே ! இவள் குற்றமற்றவள் என்பது எனக்கு தெரியும் , ஆனாலும் மக்கள் சமுதாயத்தின் வலிமையை காப்பதர்காகவே இவளை கைவிட நேர்ந்தது' - வசனம் 4
மேலும், இந்த சமயத்தில் ராமராது அவதார நோக்கம் முடியப்போகும் நேரம் வந்ததால் அவர் சீதையை திரும்பவும் ஏர்க்காமல் அவளை திரும்பவும் பதிவிரதையை நிரூபிக்க செய்யுமாறு கூறினார். (ராமருக்கு தெரியும் அவளது பதிவிரதா தன்மை, இருந்தும் இப்பொது அவரது அவதார நோக்கம் முடியும் நேரம் வந்ததால் அவர் சீதையை ஏற்க மறுத்தார். அதாவது, சீதையை, அவளது இருப்பிடமான வைகுண்ட இடத்திற்கு போகவே அவர் இவ்வாறு கூறினார்.)
பின் சீதை கூறினாள்... 'பூமா தேவியே என் விண்ணப்பத்தை கேளுங்கள், நான் ராமரை தவிர மற்றவரை ஏறெடுத்து நினைக்காமல் இருந்திருந்தால், என்னுடைய வாக்கு,மனம், செயலில் நான் குற்றம் இல்லாதவள் என்று நினைத்தால் எனக்கு இடம் கொடுங்கள் பூமா தேவியே! இனி நான் இந்த தகுதி இல்லாத மக்கள் முன்னிலையில் நாணத்துடன் தலை குனிந்து நிற்கக்கூடிய நிர்பந்தம் ஏற்படாது'...
என்று கூறி பூமி இரண்டாக பிளந்து சீதையை ஒரு விமானத்தில் மக்கள் முன்னிலையில், தான் மீண்டும் பதிவிரதை என்பதை நிரூபித்து, அவளை ஏற்று கொண்டது .
என்று கூறி பூமி இரண்டாக பிளந்து சீதையை ஒரு விமானத்தில் மக்கள் முன்னிலையில், தான் மீண்டும் பதிவிரதை என்பதை நிரூபித்து, அவளை ஏற்று கொண்டது .
பின், உத்திரகாண்டம்-சர்க்கம் -98 இல் பிரம்ம பதில் கூறுகிறார் ...
'நீங்கள் மீண்டும் சீதையை வைகுண்டலோகத்தில் சந்திப்பீர்கள்' - வசனம் 15
எனவே, இவை எல்லாமே பகவானின் எண்ணங்கள் படியே எல்லாம் நடக்கிறது என்பதை அறியலாம்.
No comments:
Post a Comment