Wednesday, 31 May 2017

ஐவரின் பத்தினி திரௌபதி ஏற்கமுடியுமா.?


ஆன்மீகம் குறைந்து அதர்மம் பெருகி வரும் தற்போதைய கலி காலத்தில், பலர் பகவானையும் அவரின் தூய பக்தர்களையும் கற்பனைக்கு ஏற்றவாறு சித்தரித்து நாவல்கள் எழுதுவதும் திரைப்படம் எடுப்பதுமாக இருக்கிறார்கள்.  இந்த அசுரர்கள் பகவானையும் பகவத் பக்தர்களையும் பல்வேறு விதங்களில் கேலி செய்கின்றனர். இவ்வரிசையில், பஞ்ச பாண்டவர்களின் பத்தினியாக வாழ்ந்த திரௌபதியையும் சிலர் அவமதிக்கின்றனர். ஐந்து கணவரை ஏற்றபோதிலும், திரௌபதி கற்புக்கரசியே என்பதை இக்கட்டுரையில் சாஸ்திரங்களின் மூலமாக உறுதிப்படுத்துவோம்.

அவ்வப்போது திரௌபதியைப் பற்றி சில தவறான கருத்துகளை கூறுவதை நாம் கேட்கிறோம். தெய்வப் பிறவியான திரௌபதியை காமுகியாகக் காட்டுகிறார்கள். திரௌபதியைப் பற்றிப் பேசவும் கருத்து கூறவும் இத்தகைய நபர்களுக்கு தகுதி உள்ளதா? பேச்சு சுதந்திரம் உள்ளது என்பதற்காக எதை வேண்டுமானாலும் பேசலாமா? சாஸ்திரங்கள் கூறும் விஷயங்களை உள்ளது உள்ளவாறு வழங்க வேண்டும், அவற்றைத் திரித்து தவறான கருத்துகளை யாரேனும் வழங்கினால், அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

 விவாகரத்தை அனுமதிப்பவர்களுக்கு திரௌபதியைப் பற்றி பேச என்ன உரிமை உள்ளது? விவாகரத்து என்னும் சொல் உண்மையில் நமது பண்பாட்டில் இல்லாத ஒரு சொல். ஆனால் தற்போதைய உலகில் விவாகரத்து சட்டம் கொண்டு வரப்பட்டு, ஒரு பெண் எத்தனை முறை வேண்டுமானாலும் மறுமணம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில் கற்பிற்கு திலகமாக திகழ்ந்த திரௌபதியை குற்றம் கூறுவதற்கு யாருக்குத் தகுதி உண்டு?



ஆணுக்குப் பெண் சமம் என்று வாழும் இக்காலத்தில் கற்பு என்ற சொல்லை பொருட்காட்சியில்தான் வைக்க வேண்டும். கற்பு என்றால் என்ன? அஃது எங்கே கிடைக்கும்? என்கிற நிலையில்தான் இன்றைய மக்கள் இருக்கிறார்கள். தற்போதைய சமுதாயமும் மேற்கத்திய கலாச்சாரமும் பெண்களுக்கு தவறான பாடத்தைக் கற்றுக் கொடுக்கின்றன. வேத கலாச்சாரத்தில் பெண்களின் உயர்ந்த நிலையைப் பற்றிக் கூறினால், அவற்றை கற்பனைக் கதைகள் என்று கூறி ஒதுக்கி விடுகின்றனர்.

 கற்பு என்றால் என்ன?
ஒரு பெண் தன் கணவனைத் தவிர மற்றொர் ஆணை மனம், சொல், மற்றும் செயலால் தீண்டாது இருத்தல் கற்பு எனப்படுகிறது. தனது கணவனை தெய்வத்திற்கு சமமாக நினைத்து, தன் வாழ்நாள் முழுவதும் அவருக்கு தூய்மையாக தொண்டு புரியும் பெண், கற்பில் சிறந்தவள் என்று போற்றப்படுகிறாள். மிகவும் கடினமான சூழ்நிலையிலும் தனது கணவனை விட்டுப் பிரியாமல், அவருக்கு ஒத்துழைப்பவள், கற்புக்கரசி எனப்படுகிறாள். இத்தகைய பெண்கள், “பெய்” என்றால் மழை பெய்யும் என்று திருக்குறள் கூறுகிறது. கற்பு நெறியுடன் வாழ்வதே பெண்கள் மேற்கொள்ள வேண்டிய தவமாகும்.

 ஜமதக்னி முனிவரின் மனைவியான ரேணுகா, ஒவ்வொரு நாளும் தன் கற்பின் வலிமையால் ஆற்று மணலில் புதிய பானையைச் செய்து அவரின் பூஜைக்காக நீர் கொண்டு வருவது வழக்கம். ஒரு நாள், வானத்தில் பறந்தபடி அப்சர பெண்களுடன் சுகித்துக் கொண்டிருந்த கந்தர்வ ராஜனைப் பார்த்த அவள் சற்றே மதி மயங்கினாள். அதன் காரணமாக அன்று அவளால் புதிய பானையைச் செய்ய முடியவில்லை. சிறு மன சஞ்சலமும் தவறு என்பதை இதிலிருந்து அறிகிறோம்.



தனது கணவனை தெய்வத்திற்கு சமமாக நினைத்து, தன் வாழ்நாள் முழுவதும் அவருக்கு தூய்மையாக தொண்டு புரியும் பெண், கற்பில் சிறந்தவள் என்று போற்றப்படுகிறாள். மிகவும் கடினமான சூழ்நிலையிலும் தனது கணவனை விட்டுப் பிரியாமல், அவருக்கு ஒத்துழைப்பவள், கற்புக்கரசி எனப்படுகிறாள்.

தூய்மையான திரௌபதி
ஒரே கணவனுடன் வாழ்வதே கற்பு என்னும் பட்சத்தில் ஐந்து கணவருடன் வாழ்ந்த திரௌபதி ஏன் கற்புக்கரசியாக போற்றப்படுகிறாள் என்னும் கேள்வி இயற்கையானதாகும். திரௌபதி ஒரு தெய்வீகப் பிறவி, லக்ஷ்மிதேவியின் அம்சம்; அவளை ஒரு சாதாரண பெண்ணாக நினைத்துவிடக் கூடாது. அவள் அக்னியிலிருந்து தோன்றியவள், தோன்றிய போதே எல்லா தெய்வீக குணங்களுடனும் பேரழகுடனும் தோன்றினாள். சாதாரண மனிதர்களைப் போன்று சிறு குழந்தையாகப் பிறந்து வளர்ந்தவள் அல்ல திரௌபதி.

 வேத கலாசாரத்தில் மிகவுயர்ந்த பெண்களாக கருதப்படுவோர் ஐவர்: ஸ்ரீராமரின் மனைவி சீதை, வாலியின் மனைவி தாரை, கௌதம முனிவரின் மனைவி அகலிகை, இராவணனின் மனைவி மண்டோதரி, மற்றும் பாண்டவர்களின் மனைவி திரௌபதி.

திரௌபதி ஐவரின் மனைவியாக இருந்தது தவறு என்றால், பெண்கள் கற்புடன் இருக்க வேண்டும் என்பதை மிகவும் வலியுறுத்திய பாரத பண்பாட்டில், அவள் நிச்சயம் போற்றப்பட்டிருக்க மாட்டாள். பெண்களால் தினமும் நினைக்கப்பட வேண்டிய பெண்களில் ஒருவளாக வைக்கப்பட்டிருக்க மாட்டாள். ஐவரை மணந்தபோதிலும், திரௌபதி ஒரு பத்தினியே. அஃது எவ்வாறு என்று தெரிந்து கொள்வது அறிவுடையோரின் பணி; அது தவறு என்று ஒதுக்கிவிடுவது அறிவிலிகளின் (முட்டாள்களின்) பணி.

மஹாபாரதம் வழங்கும் விளக்கம்
ஐவருக்கு ஒருத்தியை திருமணம் செய்தல் என்பது நிச்சயம் அசாதாரணமான ஒரு செயல். அத்தகு செயல், பொதுவாக தர்மத்திற்கு விரோதமானதாக கருதப்படுவது உறுதி. அவ்வாறு இருக்கையில், தர்மத்தை போதிக்கும் மஹாபாரதத்தில், ஐந்து முக்கிய கதாபாத்திரங்களின் மனைவியாக ஒருத்தி இருப்பது நிச்சயம் விவாதத்திற்கு உரிய விஷயமே.

திரௌபதியின் தந்தையான மன்னர் துருபதரால் தனது மகள் ஐந்து சகோதரர்களுக்கு மனைவியாவதை ஏற்க முடியவில்லை. அவர் மன்னர் யுதிஷ்டிரரிடம் தனது சந்தேகத்தை வெளிப்படுத்தினார்: “மூத்த சகோதரன் தனது இளைய சகோதரனின் மனைவியை மகளைப் போன்று மதிக்க வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இளைய சகோதரனின் மனைவியைத் தொடுதல் மகளைத் தொடுவதற்கு சமம். ஒரு மன்னன் பல இராணியரை மணந்து கொள்ள அனுமதி உள்ளது, ஆனால் பல மன்னர்கள் ஒரு இராணியை மணந்து கொள்வது எங்கும் அனுமதிக்கப்படவில்லை. நீங்கள் மிகவும் கௌரவமானவரும் தர்மத்தின் கொள்கைகளை உறுதியாகக் கடைப்பிடிப்பவரும் ஆயிற்றே. நீங்கள் எவ்வாறு இவற்றை மீறலாம்?”

துருபதருக்கு யுதிஷ்டிரர் வழங்கிய பதில்: “நல்லொழுக்கம் மிகவும் சூட்சுமமானது. நான் எனது வாழ்வில் ஒருபோதும் பொய் பேசியதில்லை, எனது மனம் ஒருபோதும் பாவத்தைத் தீண்டாது, நான் என்றுமே தர்மத்திற்கு எதிராகச் செயல்பட்டதும் இல்லை. இந்த திருமணத்தில் நான் எந்த பாவத்தையும் உணரவில்லை. கௌதம முனிவரின் குலவழியில் வந்த ஜதிலா என்ற பெண் சப்தரிஷிகளை மணந்தாள். மேலும், பிரசேதி என்னும் பெண் பத்து பிரசேதர்களை மணந்தாள். இந்த உதாரணங்கள் வேதங்களில் உள்ளன. இவை பாவமாக கருதப்படவில்லை. சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் உயர்ந்த தர்மத்தைக் காப்பதற்காக சில சட்டங்களை மீறலாம். திரௌபதியை நாங்கள் ஐவரும் மணக்க வேண்டும் என்பது உயர்ந்த தர்மமாகவும் அரிதான ஒன்றாகவும் ஏற்கப்படலாம்.”

யுதிஷ்டிரரின் கருத்தினை குந்தி தேவியும் வியாசரும் ஆமோதித்தனர். ஐவரின் பத்தினியாக திரௌபதி செயல்படுவதில் பாவம் ஏதுமில்லை என்றும் தர்மத்திற்கு உட்பட்டதே என்றும் வியாசர் உறுதியளித்தார். யுதிஷ்டிரரின் கருத்தினை குந்தி தேவியும் வியாசரும் ஆமோதித்தனர். ஐவரின் பத்தினியாக திரௌபதி செயல்படுவதில் பாவம் ஏதுமில்லை என்றும் தர்மத்திற்கு உட்பட்டதே என்றும் வியாசர் உறுதியளித்தார்.

பாண்டவர்கள் ஐவரும் தமது முற்பிறவியில் தேவர்கள் என்பதை எடுத்துரைத்த வியாஸதேவர், துருபத மன்னருக்கு தெய்வீகப் பார்வையை வழங்கி, பாண்டவர்கள் முந்தைய பிறவிகளில் எப்படி இருந்தனர் என்பதைக் காட்டினார். ஆச்சரியமடைந்த துருபத மன்னர் கூப்பிய கரங்களுடன், “மிகவுயர்ந்த முனிவரே, தங்களுடைய அறிவிற்கும் ஆற்றலுக்கும் அப்பாற்பட்டு எதுவும் இல்லை. என் மனம் இப்போது அமைதியடைந்து விட்டது. மேலுலகத்தில் என்ன முடிவு செய்தார்களோ அது நடந்தே தீரும். விதியின் கைகளில் நாங்கள் கருவிகளே. எனது மகள் ஐந்து சகோதரர்களையும் கணவர்களாக ஏற்றுக் கொள்ளட்டும்,” என்று கூறி அனுமதி வழங்கினார்.




ஸ்ரீல மத்வாசாரியர் அளிக்கும் விளக்கம்
திரௌபதியின் திருமணம் அசாதாரணமான ஒன்று; அத்தகு திருமணம் பொதுவாக ஏற்கத்தக்கதல்ல என்றாலும், அசாதாரணமான பெண்ணாகிய திரௌபதியைப் பொறுத்த வரையில், அஃது ஏற்கத்தக்கது என்பதை மஹாபாரதத்திலிருந்து அறிகிறோம். மேலும், திரௌபதி என்பவள் ஒருத்தி அல்ல என்றும், ஐந்து இந்திரர்களின் மனைவியர் திரௌபதியில் அம்ச அவதாரமாக உள்ளனர் என்றும் ஸ்ரீல மத்வாசாரியர் தனது மஹாபாரத தாத்பர்ய நிர்ணயத்தில் (அத்தியாயம் 19, ஸ்லோகம் 155) விளக்கமளித்துள்ளார்.

 யமராஜரின் மனைவியான சியாமளா தேவி, வாயுவின் மனைவியான பாரதி, இந்திரனின் மனைவியான சசி, இரு அஸ்வினி குமாரர்களின் மனைவியான உஷா ஆகிய நால்வரும் திரௌபதியில் அம்ச அவதாரமாக வந்துள்ளனர். அதனால், யமராஜரின் அம்சமான யுதிஷ்டிரர், வாயுவின் அம்சமான பீமன், இந்திரனின் அம்சமான அர்ஜுனன், அஸ்வினி குமாரர்களின் அம்சங்களான நகுலன், சகாதேவன் ஆகியோருக்கு திரௌபதியை திருமணம் செய்வித்ததில் அதர்மம் ஏதும் இல்லை.


இங்கு மற்றொரு சந்தேகமும் வரலாம்: அஸ்வினி குமாரர்கள் (நகுலனும் சகாதேவனும்) இருவர்கள் ஆயிற்றே, அவர்கள் எவ்வாறு ஒருவரை (உஷா அல்லது திரௌபதியை) மணக்கலாம்? ஸ்ரீல மத்வாசாரியர் இதற்கும் விளக்கமளித்துள்ளார், மஹாபாரத தாத்பர்ய நிர்ணயம் (அத்தியாயம் 12, ஸ்லோகம் 124): தேவர்களான அஸ்வினி குமாரர்கள் என்றுமே பிரிக்கப்பட முடியாதவர்கள். ஒரு மூக்கிற்கு இரண்டு துவாரங்கள் இருப்பதுபோல, அஸ்வினி குமாரர்கள் என்பது இரு உடல்களில் வசிக்கும் ஓர் ஆத்மாவைக் குறிக்கும். மூக்கிற்கான தேவர்களான இவர்கள் இருவருக்கும் ஒரே மனைவி என்பது மிகவும் சரியே.

திரௌபதியின் அசாதாரணமான குணங்கள்
ஐந்து கணவன்களைப் பெற்ற திரௌபதி, ஒரு கணவனிட மிருந்து அடுத்த கணவனிடம் செல்லும்போது மீண்டும் கன்னித் தன்மையைப் பெறும் வரத்தையும் பெற்றிருந்தாள். அவள் பாண்டவர்களுக்கு மத்தியில் சற்றும் பாரபட்சம் பார்க்காமல் தொண்டு செய்தாள். மிகவும் துன்பமான காலத்திலும் பாண்டவர்களுடன் காடுகளில் வாழ்ந்தாள். எந்தவித சுயநலமும் இல்லாமல் அவர்களுக்கு அன்பையும் ஆதரவையும் தந்தாள், தேவைப்பட்டபோது அவர்களைச் செயலாற்றவும் தூண்டினாள். துன்பங்களும் ஆபத்துக்களும் வந்த நேரத்தில்கூட அவள் தைரியமாகவும் தீர்மானமாகவும் வாழ்ந்தாள். எல்லாவற்றிற்கும் மேலாக, அவள் கிருஷ்ணரிடம் முழுமையாக சரணடைந்து தூய பக்தியுடன் வாழ்ந்து வந்தாள்.

கிருஷ்ணரிடம் மிக ஆழமான பக்தியையும் முழுமையான சரணாகதியையும் திரௌபதி கொண்டிருந்தாள். கிருஷ்ணரின் திருநாமத்தை நினைவு கூறுவோர் உடனடியாக அனைத்து பாவங்களிலிருந்தும் விடுதலை பெறுகிறார்கள். அவ்வாறு இருக்கையில் தனது முழு வாழ்க்கையையுமே கிருஷ்ணருக்காக அர்ப்பணித்த திரௌபதியை எந்தவொரு பாவமும் தீண்ட இயலாது என்பதை உணர வேண்டும்.

பக்திக்கும் கற்பு நெறிக்கும் உதாரணமாக விளங்கிய திரௌபதியை அவளது உயர்ந்த குணங்களுக்காக மதிக்க கற்போம். அவள் கற்புக்கரசி என்பதில் எந்த சந்தேகமும் தேவையில்லை. தனது கணவனுக்குத் தொண்டு செய்வதில் திரௌபதியின் உதாரணத்தினை அனைத்து பெண்களும் பின்பற்ற வேண்டும். அதே சமயத்தில் பலரை திருமணம் செய்து கொள்ளக் கூடாது. பெண்களுக்கு கணவன் என்பவன் ஒருவனே, பல கணவன்கள் ஏற்கத்தக்கதல்ல என்பதை உணர்ந்து கற்புடன் வாழ வேண்டும்.

திரௌபதியின் திருமணம் அசாதாரணமானது; மிகவுயர்ந்த நபர்களான வியாசர், நாரதர் மட்டுமின்றி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணராலும் அங்கீகரிக்கப்பட்ட அத்திருமணத்தையும் தெய்வப் பிறவியான திரௌபதியையும் குறை கூறுதல் சற்றும் ஏற்கத்தக்கது அல்ல. அவள் அனைவராலும் மதித்து போற்றத்தக்கவள் என்பதை உணர்ந்து நடத்தல் சிறந்தது.
மகாபாரதத்தில் துரோணர் ஏகலைவனின் கட்டைவிரலை கேட்டது தவறா.?

"ஏகலைவன் மிக சிறந்த சீடன் தான், அதில் எந்த சந்தேகமும் இல்லை, ஆயினும், ஏகலைவனுக்கு ஏற்பட்ட நிலைக்காக பலர் அர்ஜுனன் மற்றும் துரோணரை தூற்றுகின்றனர், இன்னும் சிலர் தவறான தகவல்களை பரப்புகின்றனர், சரி உண்மை என்ன?

யார் இந்த ஏகலைவன்?  மகத மன்னன் ஜராசந்தனின் கட்டுப்பாட்டில் இருந்த வன பகுதியான "நிடத நாட்டின்" வன ராஜன் நிஷாடனின் புத்திரனே ஏகலைவன். அன்றைய அரசியல் சூழ்நிலையில், அஸ்தினாபுர சாம்ராஜ்ஜியத்தோடு பரம்பரை பகை பாராட்டி வந்த மகத ராஜ்ஜியத்தின் விசுவாசி ஏகலைவன் என்பதே உண்மை.

இத்தகைய ஒரு கடுமையான சூழலில் தான் துரோணரிடம் கல்வி கற்க வந்தான் ஏகலைவன், துரோணர் பரசுராமரை போல தனியாக குருகுலம் அமைத்து கல்வி போதிக்கவில்லை, அவர் வறுமை வாட்டிட, பாஞ்சாலத்தின் துருபதனால் அவமதிக்கப்பட்டு, நிற்கதியாய் நின்ற போது அவருக்கு அஸ்தினாரபுரம் அடைக்கலம் தந்து, தன் குல செல்வங்களுக்கும், தங்கள் நட்பு நாடுகளின் இளவரசர்களுக்கும் மட்டும் குருவாய் இருந்து கல்வி போதித்திட பணித்தது, துரோணரும் அதன் ஆணையை ஏற்று அரச குமாரர்களுக்கு கல்வி போதித்து வந்தார்...

இப்படி ஒரு சூழ்நிலையில், அடைக்கலம் தந்த அஸ்தினாபுரத்தின் நிழலில் நிற்கும் துரோணாச்சாரியார், அதன் பரம வைரியான மகதத்தின் ஆதரவாளனாம் ஏகலைவனுக்கு எவ்வாறு கல்வி கற்பிக்க இயலும்?

குரு தட்சணையாக கட்டை விரல் பறிக்கப்பட்ட பழியை துரோணாச்சாரியார் மேல் மட்டுமே சுமத்துவது தவறு.  ஏகலைவனும் தவறிழைத்துள்ளான்.

அஸ்வத்தாமன் கேட்கிறான்  "தாம் ஏன் ஏகலைவனின் கட்டை விரலை பறித்தீர்? அவன் சத்திரியன் இல்லையென்பதாலா? தாழ்ந்த குலத்தவன் என்பதாலா? இல்லை அவன் அர்ஜினனை விட சிறந்தவனாகி விடக் கூடாதென்பதற்காகவா? "

"அர்ஜீனன் தன் சொந்த முயற்ச்சியில் சிறந்த வில் வீரனானவன், அவனுக்கு இது போன்ற இழிந்த சகாயத்தை யாரும் செய்திட அவசியமில்லை... உங்களுக்கு கற்றுக்கொடுத்ததை போலவே நான் அர்ஜீனனுக்கும் கற்றுக் கொடுத்தேன், ஆனால் அவன் நான் கற்றுக்குடுத்த கல்வியால் திருப்தியடைந்து நின்றுவிடாமல், சுயமாக பல பயிர்ச்சிகள் செய்து சிறந்த வில் வீரனான், நீ குலம் குறித்து பேசினாய், நீயும் சத்ரியன் அல்ல மகனே, ஆனால் நான் உனக்கு கல்வி போதித்தேன், கல்வி குல ஏற்றத் தாழ்வுகளுக்கு அப்பாற்ப்பட்டது மகனே, அதன் கதவுகளை குல பாகுபாட்டால் அடைக்க கூடாது, ஏனெனில் கல்வி மேல் எல்லா குலத்தினருக்கும் உரிமையுண்டு..."

அஸ்வத்தாமன், "பின் ஏன் தாம் ஏகலைவனின் கட்டை விரலை பறித்து அவனை தண்டித்தீர்? "
துரோணர் கூறுகிறார்:, "ஏனெனில்! அவன் என்னிடம் வித்யயை நேரடியாக கற்கவில்லை, அவன் அதை நான் அறியாத வகையில் திருடிக் கொண்டான், ஒழுக்கத்தை போதிக்கும் கல்வி விசயத்தில் பொய், திருட்டு, கூடாது,

மேலும், நான் அஸ்தினாபுரதவர்களை தவிர வேறு எவருக்கும் போர் பயிற்சிகளை கற்று கொடுக்கமாட்டேன் என வாக்கு கொடுத்திருந்தேன். ஆகவே அவன் சத்திரியனாகவோ, வேதியனாகவோ இருந்திருந்தாலும் கூட அவன் கட்டை விரலை நான் வாங்கித்தான் இருப்பேன்.

துரோணர், ஏகலைவனிடம் கட்டை விரலை கேட்டதற்கான காரணமாக கூறுவது

1. ஏகலைவன் எந்த வர்ணமாக (பிராமணனாக,சத்திரியனாக) இருந்தாலும் தான் அவனிடம் கட்டை விரலை கேட்டுருப்பேன் என்கிறார். இதன் மூலம் இங்கே வர்ணம் முக்கியமில்லை என் தெரிகிறது.

2. அவர் அஸ்தினாபுரத்து மக்களுக்கு மட்டுமே கற்று தருவதாக வாக்கு கொடுத்தது. எப்படியிருக்கு இவன் வருங்காலத்தில் துரோணர் தான் என் குரு என கூறினால், இவரது வாக்கு பொய்த்துவிடும். இது ஒரு காரணம்.

3. இவன்  வித்யயை நேரடியாக கற்கவில்லை, அவன் அதை நான் அறியாத வகையில் திருடிக் கொண்டான், ஒழுக்கத்தை போதிக்கும் கல்வி விசயத்தில் பொய், திருட்டு, கூடாது.

4. அஸ்தினாபுர சாம்ராஜ்ஜியத்தோடு பரம்பரை பகை பாராட்டி வந்த மகத ராஜ்ஜியத்தின் விசுவாசி ஏகலைவன் என்பதே உண்மை.

இப்படி காரணங்கள் உள்ளதாக, துரோணரே மஹாபாரதத்தில் இதை கூறுகிறார் . எனவே, துரோணர் செய்தது சரியே.

Tuesday, 30 May 2017

வேதசாஸ்திரம் கூறும் உமையான வர்ணாஸ்ரம தர்மம் என்ன.?




வர்ண மற்றும் ஆஸ்ரம விதிகளை நிறைவேற்றுவதன் மூலம் ஒருவன் பகவான் விஷ்ணுவை வழிபட வேண்டும் என்றும், வர்ணாஸ்ரம தர்மத்தினை நிறைவேற்றுவது பகவானை திருப்ப்திப்படுத்துவதற்கு மிகச்சிறந்த வழிமுறை என்றும் விஷ்ணு  புராணம்  (3.8.9) கூறுகிறது.

விஷ்ணுவை வழிபடுவது மனித வாழ்வின் இலட்சியம் ஆகும். இதற்கான முதல் படியாக இருப்பதே வர்ணாஸ்ரம தர்மமாகும். இது மக்களுக்கு தவறான கருத்து ஏற்பட காரணம் ஆங்கிலேயர் மெக்காலே கல்வியாளர்களால் அத்தகைய கருத்துக்கள் திணிக்கப்பட்டதாகும். வர்ணாஸ்ரம தர்மம் மக்களை பிறப்பின் அடிப்படையில் பாகுபடுத்துகிறது என்னும் தவறான கருத்தினை பல தலைமுறைகளாக பிரச்சாரம் செய்த காரணத்தினால், மக்கள் இதை கண்மூடித்தனமாக எதிர்க்கின்றனர்.

உண்மையான வர்ணாஸ்ரம தர்மம் பகவத் கீதையில் (4.13) கூறப்படுவது .

'ஒருவனது குணத்தினையும், செயல்களையும் அடிப்படையாக வைத்து வெவ்வேறு மனிதர்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளனர்.'  பகவத் கீதையில் (4.13)

அவர்கள் பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என நான்கு வகை வர்ணம்( சமுதாய பிரிவு ) அறியப்படுகின்றனர்இந்த பிரிவு கடவுள் உணர்வில் முன்னேறுவதற்கு பயிற்ச்சி அளிப்பதே வேத கலாச்சாரத்தின் நோக்கமாகும்.

இந்த வர்ணாஸ்ரம பிரிவு முறை தற்போது இந்தியாவில் தலைகீழாக மாறியுள்ளது  பிராமண குடும்பத்தில் பிறந்த காரணத்தினால் தான் பிராமணனாக ஒப்புக்கொள்ளவேண்டும் என்று ஒருவன் உரிமை கொண்டாடுகிறான். சூத்திரன் தன்னை சமுதாயத்தில் தாழ்த்தவனாக கருதி தனக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்று உரிமை கொண்டாடுகிறான். ஆனால் இதை சாஸ்திரம் ஒப்புக்கொள்ளவில்லை. ஒருவனின் தந்தை பிராமணராக இருக்கலாம், ஆனால் அதுவே அவன் பிள்ளைக்கு பிராமணனாக மாத்திவிடுவதில்லை.

உண்மையான வர்ணாஸ்ரம தர்மத்தில், ஒருவனின் வர்ணம் என்பது அவன் பெற்றுள்ள உண்மையான தன்மையை அடிப்படையாக கொண்டதே தவிர, பிறப்பு அல்லது கோத்திரத்தை வைத்து அல்ல. எடுத்துக்காட்டாகஒரு டாக்டரின் பையன் எப்படி படிக்காமல் டாக்ட்டர் அக்கா முடியாதோ அது போல, பிராமணரின் மகன் தகுதியை வளர்த்துக்கொள்ளாமல் இருந்தால் அவனை வேத கலாச்சாரம் பிராமனாக ஏற்பதில்லை

இதற்க்கு வேத சாஸ்திரங்களில் இருந்து உதாரணம் :

1. ரிஷப தேவர் தனது 100 புதல்வர்களில் - முதல் 10 பேரை சத்திரியர்களாகவும், அடுத்த 9 பேரை பாகவத பேச்சாளர்களாகவும், மீதமுள்ள 81 புதல்வர்களை வேத வேள்விகள் செய்யும் அந்தணர்களாகவும் (பிராமணர்களாக) மாற்றினார் என்று ஸ்ரீமத் பாகவதம் ஐந்தாம் காண்டம் சொல்கிறது.

2. அதே போல், பிராமணராக இருந்த அஜாமிளன் தனது கெட்ட நடத்தையினால் சூத்திரனாக மாறினான். - பாகவதம் 5 காண்டம்.

3. சத்திரிய குடும்பத்திலிருந்து வந்த விசுவாமித்திரர் காலப்போக்கில் தகுதிகளை வளர்த்து கொண்டு பின்னர் பிராமணராக மாறினார்.

4. இராவணன் பிராமண குடும்பத்தில் பிறந்திருந்த போதிலும், அவனது அசுரர் சுபாவதினால் அவனை எவரும் ஒருபோதும் பிராமணராக ஏற்கவில்லை.

5. ஜபல உபநிஷத்தில், ஒரு சிறுவன் வேசிக்கு பிறந்தவனாக இருந்த போதிலும், அவனிடம் பிராமண தகுதிகள் இருந்த காரணத்தினால், அவனை கௌதம முனிவர் பிராமணராக ஏற்று கொண்டார்.

இவ்வாறு, வேத சாஸ்திரத்தில் பல இடங்களில் குணம், மற்றும் தொழிலை அடிப்படையாக வைத்து வர்ணங்கள்  பிரிக்க பட்டது .

வேத காலத்தில் பிறப்பு என்பது ஒரு அடையாளமாக எடுத்து கொள்ளபட்டதே தவிர, அதுவே நியதியாக ஏற்கப்படவில்லை. பொதுவாக வேத காலத்தில் ஒரு குறிப்பிட்ட குடும்பத்தில் பிறப்பவர் அக்குடும்பத்துக்குரிய குணத்துடன் இருப்பார் என்று எதிர்பாக்கப்பட்டது. ஆனால் கலியுகத்தில் அனைவரும் சூத்திரர்கள் என்றும், முறையான தகுதியினால் ஒருவன் பிராமணராக ஆக  முடியும் என்று ஸ்ரீமத் பாகவதம் சொல்கிறது.

மஹாபாரதத்திலிருந்து சில கூற்றுகள்..

மஹாபாரதம் வனபர்வம் பகுதி 311-ல், யுதிஷ்டிரர் யக்ஷனிடம் மேற்கொண்ட உரையாடலைக் காண்போம்.

யக்ஷன் யுதிஷ்டிரரிடம் வினவினார், "மன்னா, எத்தகைய பிறவி, நடத்தை, (வேத) படிப்பு அல்லது (சாஸ்திர) கல்வியினால் ஒரு மனிதன் பிராமணனாகிறான்?

யுதிஷ்டிரர் பதிலளித்தார், "யக்ஷனே, கேள்! பிறவியோ, படிப்போ, பிராமணத் தன்மைக்குக் காரணமில்லை. நடத்தையே பிராமணத் தன்மையாகும், இஃது எப்போதும் நன்கு பாதுகாக்கப்பட வேண்டும். நடத்தையைக் கெடாமல் பராமரித்தால். அவன் ஒருபோதும் கெடு நிலையை அடைவதில்லை. நான்கு வேதங்களைப் படித்தும், ஒருவன் இழிந்தவனாக இருந்தால், அவன் சூத்திரனிலிருந்து வேறுபட்டவன் அல்ல. புலன்களைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பவனே பிராமணன் என்று அழைக்கப்படுகிறான்."


அதேபோல ஒருமுறை பீமன் நகுஷன் என்ற பாம்பிடம் அகப்பட்டு, அதன் உணவாக இருந்த நிலையில், பீமனை விடுவிக்கவேண்டி நகுஷனிடம் யுதிஷ்டிரர் வேண்டினார். தான் கேட்கும் கேள்விகளுக்கு ஆதாரபூர்வமான பதிலளித்தால் பீமனை விடுவிப்பதாக நகுஷன் கூறினான். அவ்வுரையாடலில்,

 ஒரு சூத்திரன் பிறப்பால் மட்டுமே சூத்திரன் அல்ல என்றும், அதேபோல ஒரு பிராமணனும் பிறப்பால் மட்டுமே பிராமணன் அல்ல என்றும், யாரிடம் பிராமணருக்குரிய குணங்கள் இருக்கின்றனவோ அவரே பிராமணர் என்று ஞானமுள்ளோர் கூறியிருப்பதாகவும், யுதிஷ்டிரர் தனது முன்னவர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி நகுஷனிடம் பதிலளித்தார்.(வனபர்வம் பகுதி 83)


மேலும், மஹாபாரதத்தின் வனபர்வம் பகுதி 211-ல் தர்மவியாதன் என்ற வேடனை கௌசிகர் அணுகி நுட்பமான விஷயங்கள் குறித்து கேட்டறிந்தபோது, வேடன் பின்வருமாறு கூறலானான்:

 "ஒரு மனிதன் சூத்திர ஜாதியில் பிறந்திருக்கலாம், ஆனால் அவன் நற்குணங்களைக் கொண்டிருந்தால், வைசிய நிலையையும் சத்திரியருக்கு ஒப்பான நிலையையும் அடையலாம். மேலும், அவன் நேர்மையில் உறுதியாக இருந்தால், பிராமணராக ஆகலாம்."

மேலும், மனு சட்டத்திலும் ஒரு வசனம் ...

சூத்ரோ ப்ராமணதாமேதி ப்ராமணஸ்சைதி சூத்ரதாம்
க்ஷத்ரியாஜ்ஜாதவேதம் து வித்யாத்வைச்யாத்ததைவ

அதாவது –  ‘சூத்திரன்  பிராமணனாகி  விடலாம்பிராமணனும்  சூத்திரனாகலாம்அதே  போல்க்ஷத்ரிய  மற்றும்  வைசிய  வர்ணங்களைச்  சார்ந்தவர்களின்  மகன்களும்மகள்களும் வேறு  வர்ணத்தை  அடையலாம்’.    அவர்கள்  வேதம்  ஓதும்  பிராமணர்கள் கூட ஆகலாம்  என்று சொல்கிறது.


வர்ணம் என்பது பிறப்பை அடிப்படையாகக் கொண்டது அல்ல...

எவர் வேண்டுமானாலும் பிராமணராக இயலும்...
அதற்குரிய பல உதாரணங்கள் புராணங்களிலும் நிகழ்காலத்திலும் உள்ளன..
அவற்றை காண்போம்...

*புராணங்களில்*

வேதங்களை எழுதியவர் மீனவருக்கு பிறந்த வியாசர், இவர் தான் மகாபாரதம்,கீதை எழுதியது,
ராமாயணத்தை எழுதியது ஒரு வேடனான வால்மீகி,
பிராமணர்களால் தினமும் கூறும் காயத்திரி மந்திரம் சொன்னது விசுவாமித்திரர் என்கிற சத்திரிய அரசன்,

மேலும்,கௌசிகர்,ஜாம்பூகர், கௌதமர், வசிஷ்டர்,அகஸ்த்தியர் போன்ற ரிஷிகள், மஹா அதர்வண சத்யகாம ஜாபாலா என்ற வேத கால அறிஞர்போன்றோர் பிராமணனுக்கு பிறக்கவில்லை.

*நிகழ்காலத்தில்*

🕉குருக்கள் இனம் சைவ வேளாளரில் இருந்து உருவாக்கப் பட்டது. இன்றைக்கு குருக்கள் பிராமணர்களாகவே அறியப்படுகின்றனர்

🕉பட்டு நூல் நெசவு தொழிலாளிகளை கொண்டு உருவாக்கப் பட்ட சமூகம் "சௌராஷ்டிர பிராமணர்"

🕉தாழ்த்தப் பட்டவர்களுக்கு சமாஸ்ரயணம் கொடுத்து உருவாக்கப் பட்டவர்கள் தென்கலை ஐயங்கார்கள்

🕉தாழ்த்தப்பட்டவர்களில் இருந்து உருவாக்கப் பட்டவர்கள்  "சாத்தாணி" என்று அழைக்கப்படும் பிராமண பிரிவு

🕉கலப்பு இனமாக உருவாக்கப் பட்டது வட தேசத்து "மிஸ்ரா" பிராமணர்கள்

🕉வட தேசத்து பண்டாரங்களில் இருந்து உருவாக்கப் பட்டது "பண்டா" என்னும் பிராமண பிரிவு

🕉சோழிய வேளாளரில் இருந்து உருாக்கப் பட்டது "சோழியர்" என்னும் பிராமண பிரிவு

விஜய நகர சாம்ராஜ்யம் உதயமான பிறகு வடுக பிராமணரின் தூண்டுதலால் பிராமணராக்குதல் தடை செய்யப் பட்டது. ஐநூறு வருடங்களாக ஏதும் முன்னேற்றம் இல்லை

ஆனால் *கடந்த ஐம்பது வருடங்களாக புது முன்னேற்றம்* 🙂

🕉ஆரிய சமாஜத்தில் *ஜாதி வித்யாஸமில்லாமல் எல்லோருக்கும் பூணூல் போட்டு வேதம்* சொல்லி கொடுக்கின்றனர். இந்த சமூகம் "ஆர்யா" என்று அழைக்கப் படுகிறது

🕉ISKCON ஹரே கிருஷ்ணா இயக்கத்தில் *ஜாதி பேதமின்றி தீட்சை* வழங்கப் படும். முதல் தீட்சை வைஷ்ணவ தீட்சை. அடுத்த தீட்சை பிராமண தீட்சை.

🕉கௌடிய மடத்தில் *ஜாதி பேதமில்லாமல் பிராமண தீட்சை* வழங்கப் படுகிறது


🕉பிள்ளையார் பட்டி கிராமத்தில் பிச்சை குருக்கள் நடத்தும் வேத பாட சாலையில் *ஜாதி வித்யாஸம் பார்க்காமல் குழந்தைகள் சேர்க்கப் பட்டு பூணூல் அணிவிக்கப் பட்டு வேதம்* பயில்கின்றனர். சில வருஷ வேத ஆகம பயிற்சிக்கு பிறகு "சிவாச்சாரியார்" பட்டம் வழங்கப் படுகிறது.