Thursday, 1 June 2017

வேதங்களில் விக்ரக வழிபாடு  இல்லையா  ?


ஒரு சிலர் நமது வேத இலக்கியங்களை அரைகுறையாக படித்துவிட்டு அதில் விக்ரக வழிபாடு  இல்லையென வாதிடுகிறார்கள். அது முழுக்க முழுக்க பொய்யான கருத்து. எனவே தான் வேதங்களில் விக்ரக வழிபாடு பற்றிய தகவல்களை இங்கே வழங்கியுளேன்.. 

வேதங்கள் ரிக்,யஜுர், சாம,அதர்வண  ஆகியவை. இந்த வேதங்கள் வேதாந்த சூத்திரத்தின் விளக்கங்கள் ஆகும். வேதாந்த சூத்திரத்தில், வசனங்கள் மிக சிறிய அளவில் உள்ளது. அதாவது '1.1.2 -'எங்கிருந்து  எல்லாம் வந்தது, அதுவே இறைவன்என்கிறது. வேதாந்திர சூத்திரத்தில் வசனங்கள் எல்லாமே சிறிய சூத்திர அளவில் கருத்தை சொல்கிறது.

ஆனால்   அந்த இறைவனின் அம்சங்களை இன்னும் விரிவாக கூறுவது நான்கு வேதங்கள். அதில் இறைவனின் இரண்டு வித அம்சங்களை கூறுகிறது .

1. நிர்குண பிரம்மன் (உருவமமில்லா தன்மை) .
2. சகுன பிரம்மன் (உருவமுள்ள தனி தன்மை) .

dve vāva brahmaṇo rūpe, mūrtaṃ caivāmūrtaṃ ca

 God (Brahman) has two modes, formless (nirakara, asambhuta) as well as form (sakar, sambhuta).

"இறைவன் (பிரம்மன்) என்பது இரண்டு நிலைகளில் அறியப்படுகிறது, அது உருவமில்லா தன்மை (asambuta) மற்றும்  உருவமுள்ள தன்மை(sakar, sambhuta)"  
                                              - யஜுர் வேதம் - ப்ரகாதாரண்யக உபநிஷத்து - 2.3.1

அதாவதுஒரே  இறைவனின் இரண்டு வித  அம்சங்களே  இந்த  நிர்குணசகுன பிரமன்  ஆகியவை. தனது பக்தர்ளுக்கும் மட்டுமே அவர் உருவமுள்ள சகுண பிரம்மனாக காட்சியளிக்கிறார். ஆனால் அறிவற்ற அபக்தர்களுக்கு அவர் தனது அந்தரங்க சக்தியால் (ப்ரஹ்ம ஜோதி எனும்இதுவே நிர்குண நிலை) திரையினால்  மறைக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீமத் பாகவத்தில் (1.8.19), யோகமாயை எனும் திரையினால் பகவான் மறைக்கப்பட்டிருப்பதாகவும், சாதாரண மக்கள் அவரைப் புரிந்து கொள்ள முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது.

இது வேத சாஸ்திரம்- ஈஷோபநிஷத்திலும் (மந்திரம் 15) உறுதி செய்யப்பட்டுள்ளது..

ஹிரண்மயேன பாத்ரேண ஸத்யஸ்யாபிஹிதம் முகம்,
தத் தவம் பூஷன்ன-அபாவ்ருணு ஸத்ய-தர்மாய த்ருஷ்டயே

எம்பெருமானே, அகிலங்களை எல்லாம் பராமரிப்பவர் நீரே, உமக்கு பக்தித் தொண்டு ஆற்றுவதே அறக் கொள்கைகளில் தலைசிறந்தாகும். எனவே, என்னையும் பராமரிக்குமாறு உம்மிடம் வேண்டுகிறேன். உமது திவ்யமான ரூபம், யோக மாயையினால் மறைக்கப்பட்டுள்ளது. பிரம்மஜோதியே அந்தரங்க சக்தியின் திரையாகும். உமது ஸச்-சித்-ஆனந்த-விக்ரஹத்தை (நித்தியமான அறிவு நிறைந்த ஆனந்த ரூபத்தினை) காணவிடாமல் என்னைத் தடுக்கும் இந்தப் பேரொளியினை தயவு செய்து விலக்குவீராக.”

ஆனந்தமும் அறிவும் நிறைந்த பரம புருஷ பகவானின் திவ்ய ரூபம், அவரது அந்தரங்க சக்தியான பிரம்மஜோதியினால் கவரப்பட்டுள்ளதால், அறிவில் குன்றியவர்களான அருவவாதிகள் பரமனைக் காண முடியாது.

பகவான் கிருஷ்ணர் பகவத் கீதை - 7.25 தான் மறைக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்....

சிற்றறிவுடையோருக்கும் முட்டாளுக்கும் நான் ஒருபோதும் தோன்றுவதில்லை. நான் எனது (ப்ரம்ம ஜோதி எனும்அந்தரங்க சக்தியால் மறைக்கப்பட்டுளேன், எனவே நான் பிறப்பற்றவன், அழிவற்றவன் என்பதை இவர்கள் அறிவதில்லை

இப்படி வேத இலக்கியங்களில் இறைவனுக்கு ஒரு உருவம் உண்டு என தெளிவாகிறது.

மேலும், நான்கு வேதங்களிலும் பகவானின் பெயர்கள் நாராயணர்,விஷ்ணு,கிருஷ்ணர்,வாமனர்,நரசிம்மர்,.... இப்படி பகவானை குறித்து பல உள்ளன . இந்த பகவானாவின் உருவங்கள் குறித்தும், அவரை குறித்துள்ள மந்திரங்களும் மட்டுமே வேதங்களில் கூறியுள்ளன. எனவே, உருவ வழிபாடு மற்றும் அவதாரம் குறித்து வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது .

வேதங்களில் விக்ரகவழிபாடு பற்றிய வசனங்கள் இதோ...

சம்வத்சரஸ்ய ப்ரதிமாம் யாம் த்வா ராத்ர்யுபாசதே ப்ரஜாம் சுவீராம் கருத்வாவிச்வ மாயுர் வியச்னவத் ப்ரஜாபத்யாம்

(5ஆம் கண்டம்,7ஆம் பிரசினம்,2ஆம் அநுவாகம்,யஜூர் வேதம்)

'காலரூபியாகிய உமது பிரதிமையை செய்து இருட்டறையில் உபாசிப்பவன் வலிமையுள்ள புத்திரனையும் பூரண ஆயுளும் அடைகிறான்..பிரஜைகளுக்கு எஜமானனாகுந் தன்மையையும் மடைகிறான்'…

 “அச்மானம் ஆகணம் ப்ரபத்யே-(4ஆம் பிரசினம்,யஜூர் வேத ஆரண்யகம்)

'நன்கு சித்திரிக்கப்பட்ட சிலையை வணங்குகிறேன்'

ஏஹி அச்மானம் ஆதிஷ்ட அச்மாபவது தே தநூ : ” 

– ( 1ஆம் காண்டம்,2ஆம் கற்பகம்,3ஆம் துவனி,அதர்வண வேதம்)

'சுவாமி வாரும் இந்த கற் பிரதிமையில் நில்லும் இந்தக் கற்பிரதிமையே உமக்குச் சரீர மாகுவதாக'

ஆக,வேதத்தில்,விக்கிரக வழிபாடு,சுருக்கமாக கூறப்பட்டிருக்கிறது.

அதன் பின்பு, இந்த வேதங்களின் விரிவான விளக்கங்களே புராணங்களும், இதிகாசங்களும் ஆகும். இது ஐந்தாவது வேதம் என்கிறது வேத சாஸ்திரம்.

'பொதுவாக, புராணங்களும், இதிஹாசங்களான ராமாயணமும், மகாபாரதமும் ஐந்தாவது வேதம் எனப்படுகிறது" - சாந்தோக்ய  உபநிஷத் 7.1.4

பகவான் விஷ்ணுவின் வாமன கதை கதை ரிக்வேதப் பல பாசுரங்கள் ( ரிக் வேதம்  1.154.1,2,3,4,5.... &  2.54.24 ) காணப்படுகிறது.

 ரிக்வேதம் வரலாற்றில் புராணங்கள் உதவியுடன், வேதங்கள் விரிவாக்கப்பட வேண்டும் என்று கூறப்படுகிறது. எனவேபுராணங்கள்  'வேத-பாஷ்ய' என அழைக்கப்படுகின்றன., 10 வது மண்டல் சில பாடல்களில், 22 சூக்தம் மீண்டும் மீண்டும் வாமன அவதாரம் குறிப்பிடுகிறது. நாம் புராணங்கள் பார்த்தாலும் அதே கதைஅதாவது

ஸ்ரீமத் பாகவதம்,விஷ்ணு புராணம், கருட புராணம்.... இப்படி பல  புராணங்கள் இறைவனுடைய வடிவம், வழிபாடு  செய்யும் முறைகள், விக்ரகங்கள் எதில் செய்து கொள்ள முடியும் என செயல்முறை விளக்கங்களை நமக்கு அளிக்கிறது.

இறைவனின் வடிவம் எட்டு வகையான பௌதீக பொருள்களில் தோன்றுவர் என்று கூறப்படுகிறது. அவைகள் கல், மரம், உலோகம், பூமி, ஓவியம், மணல், நகைகள் ஸ்ரீமத் பாகவதம்  - 11.27.12]

na kāśṭhe vidyate devo na śilāyam na mrutsuca
bhāve hi vasate devastasmādbhāvo hi kāraṇam

தேவா (கடவுள்மரம் அல்லது கல்லில் அல்லது மண்ணில் இல்லை (அதாவது இவற்றால் செய்யப்பட்ட விக்கிரகங்கள் அல்ல). ஆனால், அவர் உணர்வு அல்லது உணர்ச்சிகளில் (பாவா) மட்டுமே இதில் இருக்கிறார்,எனவே பகவான் பாவ இருப்பதற்கு (பக்தி / உணர்ச்சி) ஒரே காரணம்- கருட புராணம் 2.28.11

bhaktasya ca yathā-labdhair hṛdi bhāvena caiva hi [SB - 11.27.15]

"ஒரு பக்தர், அவர் பெறக்கூடிய எந்தப் பொருள்களாலும் என்னை வணங்கலாம், மற்றும் அவர்களது இதயத்தில் உணர்வுபூர்ணமாக  என்னை வணங்குவதால் தான்" 
                                                                         - .ஸ்ரீமத் பாகவதம் 11.27.15

ஆலயத்திற்குள் விக்ரஹத்தை வழிபடுதல் ஸகுண வழிபாடாகும், ஏனெனில், பகவான் பௌதிக குணங்களின் மூலம் அங்கே தோற்றமளிக்கின்றார். கல், மரம் அல்லது ஓவியம் போன்ற பௌதிக குணங்களின் மூலம் தோற்றமளிக்கும் போதிலும், பகவானது ரூபம் உண்மையில் பொளதிகமல்ல. இது பரம புருஷரின் பூரண தன்மையாகும்.

பண்படாத உதாரணம் ஒன்று இங்கு கொடுக்கப்படலாம். தெருவிலே நாம் சில தபால் பெட்டிகளை பார்க்கிறோம். நமது கடிதங்களை அந்தப் பெட்டிகளில் இட்டால், அவை செல்ல வேண்டிய இடத்திற்கு எவ்விதமான சிரமமும் இன்றி இயற்கையாகவே செல்கின்றன. ஆனால் ஏதாவதோரு பழைய பெட்டியிலோ, அஞ்சலகத்தால் வைக்கப்படாத ஒரு போலிப் பெட்டியிலோ நமது கடிதத்தை இட்டால், அது போய் சேராது. அது போலவே அர்சா-விக்ரஹம் இறைவனது அதிகாரப்பூர்வமான தோற்றமாகும். இந்த அர்சா-விக்ரஹம் பரம புருஷருடைய ஓர் அவதாரம். இவ்வுருவத்தின் மூலமாக இறைவன் சேவையை ஏற்றுக்கொள்கிறார். அவர் சர்வ சக்திமான், அனைத்து சக்திகளும் உடையவர்;

எனவே, கட்டுண்ட வாழ்விலிருக்கும் மனிதனின் வசதிக்காக, அவர் தனது அர்சா-விக்ரஹ அவதாரத்தின் மூலம் பக்தனுடைய சேவைகளை ஏற்றுக்கொள்கிறார்.

எனவே.

வேதாந்த சூத்திரம் - சூத்திர வடிவில் இறைவனை பற்றிய சிறிய தகவல்களை நமக்கு சொல்கிறது.
*  4 வேதங்கள் - அந்த இறைவன் யார், அவரை வழிபட மந்திரங்கள்  ஆகியவை கூறுகிறது
* 18 புராணங்கள் - இந்த வேதங்கள் கூறும் இறைவனை குறித்து இன்னும் விரிவாக சொல்கிறது. அவரின் அவதாரங்களையும் அவற்றினை எப்படி வழிபடுவது என்பதையும் கூறுகிறது.


எனவே, சனாதன தர்மத்தில்  வேதாந்த சூத்திரம், நான்கு வேதங்கள், உப வேதங்களாகிய 18 புராணங்களும்,2 இதிஹாசங்களும் மற்றும் உப புராணங்களும் இவைகள் எல்லாமே சேர்த்தது தான் சனாதன தர்மத்தின் வேத சாஸ்திரம். இதில் ஒன்றினை மட்டும் எடுத்து கொண்டு, பிறதை புறக்கணித்தால் அது தவறு. இவ்வாறு சிலை வழிபாடு சனாதன தர்மத்தின் ஒரு அங்கமே. இவைகள் எல்லாமே சேர்ந்ததே சனாதன மதம்


No comments:

Post a Comment