Thursday 1 June 2017

மஹாபாரதத்தில் மாமிசம் உண்டார்களா ?



மகாபாரதத்தில் பசுக்கள் பல ஆயிரம் பலியிட்டதாக ப்ரமாணம் உள்ளது யாகத்தில் பலியிடலாம் நாங்கள் கொல்லகூடாதா அப்படியானால் அதுவும் பாவமில்லையா? என்று பசுவதையாளர்கள் கேள்வி கேட்கிறார்கள். புராணங்களை சரியாக படிக்காதவர்கள்.

மகாபாரதத்தில் பீஷ்மர் தருமனுக்கு உபதேசம் செய்யும் சமயம் தர்மா பசுக்களையும் நன்கு வேதம் கற்ற ப்ராமணர்களையும் நன்கு இரட்சிப்பாயாக என்று அறிவுறுத்தி மகாபாரதத்தில் ரத்திதேவன் என்ற மன்னன் யாகத்தில் பசுக்கள் உயிர்பலி கொண்ட கதையை ஸ்லோகம் கூறி விவரிக்கிறார்

அதில் வரும் ஸ்லோகத்தை ( ஓரிரு வரிகளை) பசுவதையாளர்கள் ப்ரமாணமாக டீவியிலும் சோசியல் மீடியாக்களுலும் பரப்புகிறார்கள்

மஹாபாரதத்தில் பீஷ்மர் தருமனுக்கு கூறிய ஒரு அதிரடியான உதாரணத்தை எடுத்துக்காட்டி பசுவின் புலால் மறுப்பாளர்களை பார்த்து பசுவைக் கொல்வது பாவமில்லை கூட்டம் கூட்டமாக வைதிகர்கள் பசுவைக் கொன்றதற்குப் பல ப்ரமாணங்கள் உள்ளன (அப்படியெல்லாம் இல்லை) அவற்றினுள் முக்யமான ப்ரமாணம் இது ( இந்த ஓரிரு வரிகள் உள்ளது) என்று கூறுகிறார்கள்

ரந்திதேவன் எனும் அரசன் செய்த யாகத்தில் அனேகமாயிரம் பசுக்கள் பலி கொடுக்கப்பட்டன (கொல்லப்பட்டன). இப்படி அனேகமாயிரம் வருடங்கள் நடந்த யாகத்தில் கொல்லப்பட்ட பசுக்களின் தோல்களும், கொழுப்புகளும் நிறைந்திருந்தன. அவற்றிற்குக் கணக்கே இல்லை (.பா. அநுசாஸநபர்வம் - 124 - 10 - 13).

ராக்ஞே மஹா நயே பூர்வரத்தி
தேவஸ்ய வைத்வேஜ அஹந்ய ஹநி பந்யேதேத்வே 
ஸஹஸ்த்ரே கவாம் ததா!
ஸமாம்ஸ தததோஹ்மங்ஙங் ரந்தி தேவஸ்ய நித்தியஸஹ 
அதுலா கீர்த்திர்பவந்.
ந்ரூபஸ்ய த்விஜ ஸத்தம்.   - வன பர்வம் (208;8.10)

பிராமண சங்கிருதியின் மகனான ஷத்ரியன் அரசன் ரந்திதேவன் நடத்திய ஒரு விருந்தினர் மாளிகையில் நாள் தோறும் இரண்டாயிரம் பசுக்கள் கொள்ளப்பட்டன.

 மஹாநதி சர்மராஸே ருத்க்லேதாத் ஸங்ஸ்ருஜே யதஹ
ததஸ் சர்மன் வதிக்யேவம் விக்யாதாஸா மஹாநதி      - சார்ந்தி பருவம் (29.23)

அவற்றின் ஈரத்தோல்கள் சமையல் கட்டின் பக்கத்தில் குவிக்கப்பட்டு இருக்கும். அவற்றில் இருந்து கசியும் நீர் ஒரு நதியாக ஓடும். அந்த நதியின் பெயர் சர்மன்வதி.

இதுதான் விஷயம். இதைப் படிக்கும் போது நாமும் திடுக்கிடுகிறோம் இந்த வசனங்கள் உண்மை தான். ஆனால், இந்த கதையை பிதாமகர் கூறுவதன் பொருள் என்ன என ஆராயலாம்.

“பசுக்கள் ப்ரஹ்மதேவரால் மனதில் படைக்கப் பட்டவைகள். பிரும்மா அம்ருதம் அருந்தியபின் அவரின் முகத்திலிருந்து வீசிய மணத்திலிருந்து பசுக்கள் உண்டாயின அதனால் அவைகளுக்கு அமுதஸுரபி (மணம் மிக்கவை) எனும் பெயர் உண்டானது. உலகில் மேன்மையை அடைய விரும்புபவன் எக்காரணத்தாலும் பசுக்களையும் உயர்ந்த ப்ராம்மணர்களையும் அவமதிக்கக் கூடாது. இத்தகைய பசு ஒருவனுக்கு எல்லாவிதத்திலும் வணங்கத் தக்கதாகிறது.” - அநுசாஸந பர்வத்தில் - கோ (பசு) மாஹாத்மியங்கள்

இனி ரந்தி தேவனுடைய பசுக்களை பலிகொண்ட யாகக் கதையைப் பார்க்கும் முன்பாக சுமித்ரர் எனும் ராஜரிஷியை அறியவேண்டும்

ப்ருகு வம்சத்தில் பிறந்த ராஜரிஷியான சுமித்ரருக்கு அங்கிரஸ் எனும் மஹரிஷி ஒரு நல்ல பசுவை (கோதானம்)தானமளித்தார். அதைபெற்றுக்கொண்டு மிகுந்த பக்தியுடன் ச்ரத்தையுடன் சுமித்ரர் கோஸம்ரக்ஷணம் செய்தார். இதனால் அவரின் ஒரு பசு பல்லாயிரக்கணக்கில் பெருகி பெரும்(கோசாலை)மந்தையாகியது. எருதுகளும் பசுக்களுமாகிய மாபெரும் மந்தையால் பூலோகமே நிறைந்தது

ஒருநாள் சுமித்ரரின் பசுக்கள் தாங்கள் இரை உண்ணும் இடத்தில் அழகிய பெண்ணுருவில் இனிமையாக விளையாடும் ஒரு சிலரைக்கண்டு ஆச்சர்யமடைந்து அவர்களை யாரென்று கேட்டன. அதற்கு அந்த பெண்ணுருவம் கொண்டவர்கள்  நாங்களும் உங்களை போன்ற பசுக்கள் தான் எங்களுக்கு கோலோகம் (பசு உலகம்) தான் இருப்பிடம். கோலோகத்தில் எங்களின் பால் மூத்திரம் சாணம் என அனைத்தையும் மஹரிஷிகள் யாகத்தில் உபயோகிக்கின்றனர் அதனால் நாங்கள் சுகமாகவும் சில நேரங்களில் நினைத்த உருவத்தை எடுக்கும் ஆற்றல் பெற்றவராகவும் இருக்கிறோம் இன்று இந்த பெண்ணுருவம் எடுத்து பூலோகம் வந்தோம் உங்களையும் கண்டோம் என்றன

இங்கே உங்களை வளர்க்கும் ரிஷி (சுமித்ரர்) உங்களின் மீது அதீத பரிவு கொண்டு உங்கள் மடுவிலிருந்து பாலைக்கூட கறப்பதில்லை. அவர் கன்றுகள் வாயிலிருந்த பால் அருந்திய பின் உள்ள நுரையையே உண்பதால் பேனபர் என்று பெயர் பெற்றுள்ளார். உங்களின் உயர்ந்த அம்ருதமயமான பால் சாணம் கோமேயம் முதலியவை யாகத்தில் உபயோகிக்கப் படாமையால் உங்களால் முழுதும் தெய்வாம்சம் பெற முடியவில்லை என்றன

இது கேட்டு சுமித்ரரின் பசுக்கள் தாங்கள் தெய்வாம்சம் பெறுவதற்கு என்ன வழி என்று கேட்டன. அதற்கு கோலோகபசுக்கள் பசுமந்தையர்களே இப்போது மஹாத்மாவான ரந்தி தேவன் என்பவன் ஆயிரம் வருடகாலம் செய்யக்கூடிய ஸத்ரயாகத்தைச் செய்து வருகிறான். நீங்கள் அனைவரும் சென்று அவனது யாகத்தில் பசுக்களாகிய்உங்களின் தேகத்தை விடுத்திடுங்கள் அவ்விதம் பரிசுத்தமான யாகத்தில் நீங்களாக முன்வந்து உங்களது தேகத்தை த்யாகம் செய்வதினால் நீங்கள் மிக உயர்ந்த கோலோகத்தை அடைவீர்கள் பின்பு நீங்களும் எங்களை போல் இனிமையாக வாழலாம் என்று சொல்லின

கோலோகபசுக்கள் சொல்லுவதை கேட்டுக் கொண்டிருந்த சில முரட்டு கபிலை பசுக்கள்  எங்களுக்கு இதுபோன்ற ஸந்மார்கத்தைக் காண்பிக்காத சுமித்ரரைக் இப்போதே கொல்வோம் எனத் தீர்மானித்தன. இதையறிந்த கோலோக பசுக்கள் சுமித்ரரின் தேகத்திலிருந்து அவரின் ஆத்மாவை பிரித்து அவரை புண்யமான கோலோகத்திற்கு அழைத்துச் சென்று உபசரித்தன. சுமித்ரரின் தேகத்தின் மீது கோபம் கொண்டு அதனை முட்டியும் குத்தியும் ஏனைய பசுக்கள் அழித்தன இதனால் கோபமுற்று அவற்றின் முகம் அமங்கலமாக வேண்டியது என கோலோக பசுக்கள் சாபம் அளித்தன. இதனால்தான் பூலோகபசுக்களின் முன்புறத்தை விட பின்புறம் உயர்ந்தது காரணம் அந்த பின்புறத்தில் தான் லக்ஷ்மியின் வாசம் உள்ளது

அதே வேளையில்  சுமித்ரரின் பல ஆயிரம் பசுக்கள் ரந்திதேவனிடம் சென்று தேவரீர் செய்யும் யாகத்தில் பலியிட்டு தங்களைக் கொல்லுமாறு வேண்டின. அன்பர்களே! கூர்ந்து கவனியுங்கள். பசுக்கள் யாகத்தில் தங்களைக் கொல்லுமாறு வேண்டின. ஆனால் தர்மாத்மாவான ரந்திதேவன் மாபாதகமான இக்கொடிய செயலைச் செய்வதைவிட நான் உயிரை விடுவதே மேல் எனத் பசுக்களிடம் தெரிவித்தான்

சுமித்ரரின் பசுக்களோ  அரசே ஜீவகாருண்யம் உள்ள சிறந்த தர்மசீலரான தங்களின் யாகத்தில்தான் எங்களுக்கு நற்கதி கிடைக்கும் எங்கள் அனைவரையும் கரையேற்றுங்கள் என்று இறைஞ்சின ( கோலோக பசுக்கள் கூறியவைகளை எடுத்து கூறின). அதை கவனமாக கேட்டு அதன்படி அரசனும் ஓர் உடன்படிக்கை செய்து கொண்டான். சரி இந்த யாகத்தால் உங்களுக்கு உயர்ந்த கோலோக ப்ராப்தியுண்டானால் அதற்கு நான் சம்மதிக்கிறேன் ஆனால் நீங்கள் கூட்டம் கூட்டமாக இறக்கும் போது ஏதாவது ஒரு பசுவாவது மரணத்தைக் கண்டு அஞ்சினால் உடனே யாகத்தில் பசுவை பலியிடுவதை நிறுத்திவிடுவேன்

உங்களுக்கு உதவி செய்யும் எனக்கு பசுவதையினால் எவ்வித பாபமும் ஏற்படக்கூடாது என்றான். அரசனின் வேண்டுகோளை ஏற்ற அனைத்து பசுக்களும் அவ்வாறே நடக்கட்டும் என வரம் தந்தன. அதன் பின்னர் தான் இந்தக் கட்டுரையின் முதல் பகுதியில் சொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான பசுக்களின் பலி. அதன் ரக்தமும் நுணநீரும் மாமிசமும் கலந்து ஒரு நதீ உண்டானது அதுதான் சர்மண்வதி

மஹாபாரதம், துரோண பர்வம் பகுதி – 067 - "மன்னன் ரந்திதேவன்!"....

" அவனிடம் {ரந்திதேவனிடம்}, சொர்க்கத்திற்குச் செல்ல விரும்பும் எண்ணற்ற விலங்குகள் தானாக வந்து சேர்ந்தன"- வசனம் [3].

"அந்த மன்னனின் {ரந்திதேவனின்} அக்னிஹோத்ரத்தில் பலியிடப்படும் விலங்குகளின் பெரும் எண்ணிக்கையால், அவனது மடைப்பள்ளியில் {சமையலறையில்} தேக்கப்படும் தோற்குவியல்களில் இருந்து பாயும் சுரப்புகள் உண்மையான ஆறு ஒன்றையே உண்டாக்கிய காரணத்தால், அது {அந்த ஆறு} சர்மண்வதி என்று அழைக்கப்படலாயிற்று" - வசனம்  [4].

மேலும், இந்த யாகத்தில் நந்திதேவன் பிராமணர்களுக்கு பொன்னும்,பொருளும் கொடுத்ததாக தான் இங்கே சொல்கிறது...

நான் உமக்கு நிஷ்கங்களைக் கொடுக்கிறேன், “நான் உமக்கு நிஷ்கங்களைக் கொடுக்கிறேன் என்ற வார்த்தைகளையே அவன் இடையறாது உச்சரித்துக் கொண்டு, பிராமணர்களுக்குப் பிரகாசமான தங்கத்தாலான நிஷ்கங்களை {பொன் நாணயங்களை} இடையறாமல் தானமளித்துக் கொண்டிருந்தான்"  - வசனம் 4


மன்னன் ரந்ததேவன் இறைச்சியுண்டதில்லை என்ற குறிப்பு அனுசாசன பர்வத்தில் காணக்கிடைக்கிறது. இங்கேயும் ரந்திதேவன், தன் விருந்தினர்களுக்கு இறைச்சியைப் படைத்தான் {பிராமணர்களுக்கு அல்ல} என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இவ்விதம் பசுக்கள் யாகத்தில் பலியாகி கோலோகத்தை அடைந்து கொண்டிருந்த சமயம் ஒரே ஒரு பசுவானது தன் கன்றை நினைத்து உருகியது.

இதைக்கண்ட ரத்தி தேவன் உடனேயே யாகத்தில் பசு பலியிடுவதை நிறுத்திவிட்டான். ஏனைய பல்லாயிர பசுக்கள் பூலோகத்தில் பெருகின. அந்த பசுக்கள் மன்னனை வேண்டி இனிமேல் யார் யாகம் செய்தாலும் தங்ளின் பால் அதனின்று வரும் தயிர் நெய் இவற்றை பயன்படுத்தி எங்களையும் கோலோகம் அடைய செய்யவேணும் என பிரார்த்தித்தன.

அவ்வாறே செய்வதாக கூறி அன்றுமுதல் பசுவின் பால் தயிர் நெய் கோமேயம் சாணம் ஆகியன யாகங்களில் உபயோகப்பட்டு பூமியிலே நல்ல பசுக்களும் அவைகளினால்  இந்த பூமியும் நல்ல வளத்தை அடைந்தன.

யுதிஷ்டிரருக்கு இக்கதையைச் சொன்ன பீஷ்ம பிதாமஹர்

“பசுக்களை எப்போதும் மன்னனும் மக்களும் பூஜிக்க வேண்டும் ஹிம்சை செய்யக்கூடாது. கோவதம் பெரும் பாபம் கோமாம்ஸம் உண்பவன் மீளமுடியாத நரகத்தில் வீழ்வான். ஆகையால் தர்மபுத்ரா பசுக்களையும் வேதமறிந்த ப்ராம்மணர்களையும் எப்போதும் வணங்குவாயாக என்றார்

இவ்விதம் முன் பின் தொடர்புகளில் அனேக விஷயங்கள் விளக்கப்பட்டிருக்க அதையெல்லாம் விடுத்து தங்களுக்கு அனுகூலமான ஒரே ஒரு ச்லோகத்தை மேற்கோள் காட்ட  அது கண்டு நம்மவர்கள் ப்ரமிப்பதைக் கண்டுதான் மனது வேதனையடைகின்றது

இதே அநுசாஸந பர்வத்தில் சுமார் பத்து அத்யாயங்களில் பசுக்களின் மேன்மை அதை தானம் செய்யும் முறை யாருக்குச் செய்வது செய்யும் போது சொல்லவேண்டிய மந்த்ரங்கள் என பல அபூர்வ விஷயங்கள் விளக்கப்பட்டுள்ளன. பசுவதை ப்ரமாணத்தைச் சொல்பவர் இந்த ப்ரமாணத்தை ஒப்புக் கொள்பவராக இருக்கவேண்டும்

நல்லது நடக்க பசுவுக்காக அந்த கோபாலனை கோவிந்தனை பிரார்த்தனை செய்யுங்கள். பசுவுக்கு வாரத்தில் ஒரு வேளையாவது ஒரு கைபிடி அருகம்புல் அல்லது பழங்கள் உணவாக கொடுங்கள் அகத்திகீரையை அதிகம் கொடுக்காதீர்கள் அதுவும் அவற்றின் ஆயுளை குறைக்கும் மறைமுகமாக ஒரு தவறுக்கு காரணமாக வேண்டாம்

No comments:

Post a Comment