Thursday 1 June 2017

தமிழ் தாய் வாழ்த்து பாடல் இறை வணக்கம் ஆகுமா ?

வடமொழியான சமஸ்க்கிருதம் ஒரு தெய்வமொழி ஆகும். அதாவது, இந்த மொழி தெய்வீக மந்திரங்களை கொண்டிருப்பதாலும், தெய்வீக விஷயங்களை பற்றி பேசுவதாலும், தேவர்களுடைய உரையாடல் மொழியாக இருப்பதாலும் இதை தெய்வமொழி எனப்படுகிறது. இதை தெய்வமொழி என்று முன்னோர்கள் சொன்னதினால், அதற்க்கு ஒரு உருவம் செய்து, கோவில் கட்டி வழிபட்டதாக சரித்திரத்தில் எங்கேயும் சொன்னதில்லையே !

ஆனால், இன்று தமிழகத்தில் ஒரு நிகழ்ச்சி தொடங்கும் பொது 'நீராரும் கடலுடுத்த...' என்று தொடங்கும் தமிழ்மொழி வணக்கப்பாடலை படுகிறார்கள். மொழி வணக்கம் இறை வணக்கம் ஆகுமா ?

ஒரு மொழிக்கு கடவுளுக்கு சமமான அந்தஸ்து சனாதன தர்மத்திலோ அல்லது தமிழ் நூல்களான அகநானுறு,புறநாநூறு, பத்துப்பாட்டு,.....எப்படி தமிழ் இலக்கியங்களில் சொல்லப்பட்டிருக்கிறதா ?
மொழி தெய்வமாக முடியுமா ? என்பதே எங்கள் முதல் கேள்வி ?

மொழியை நாம் உருவாகுகிறோமா ? அல்லது நம்மை மொழி உருவாக்கிகிறதா என்று நாம் சிந்திக்கவேண்டும். பண்டைய காலங்களில் முதல் தமிழ் சங்கம்,இரண்டாம்....இப்படி தமிழை வளர்த்தார்களே தவிர, தமிழ் மொழி மன்னர்களை வளர்க்கவில்லை. ஆதி முதலில் மனிதன் வந்தான், அதன் பிறகு தான் மொழி வந்தது. மொழி என்பது நமது கருத்துக்களை மத்தவர்களுக்கு தெரிவிப்பதற்கான உள்ளவை ஆகும்.  அதனாலேயே மனிதன் அந்த மொழிக்கு இலக்கணம், நாடகங்கள், கவிதை..... இப்படி உருவாக்கி அதை வாழ வைக்கிறான்.

அந்த மொழி பேசும் எல்லா மக்களும் சேர்ந்து ஒருநாள்  'இனி நாம் இந்த மொழியை பேசுவதில்லை' என்று தீர்மானம் எடுத்தால், அந்த மொழியின் ஆயுள் முடிந்துவிடுகிறது. இப்படி தன ஆயுளை வளர்த்துக்கொள்ள முடியாத ஒரு மொழி, அதனை பேசும் மக்களுக்கு ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யம், .... ஆகியவை தரும் தெய்வமாக இருக்க முடியுமா ?

மேலும், சிலர் கூறுவதுபடி மொழியின் தேவதை 'சரஸ்வதியை' தான் நங்கள் தமிழ் தாய் வாழ்த்து என்கிற பெயரால் வணங்குவதாக சொன்னால், இதற்க்கு 'நாமக்கல் துதி' என்று அல்லவா அதன் பெயர் இருந்திருக்கவேண்டும். மேலும், தமிழ் மொழிக்கு தாய்மை அந்தஸ்து கொடுத்து அதை 'தாய்மொழி' என்று  கூறினால், பிற மாநிலத்தவரும் மலையாள தாய், தெலுங்கு தாய்.... இப்படி சொல்ல மாட்டார்களா ? அப்படி பார்த்தால் உலகிற் எத்தனை மொழிகள் உண்டோ அத்தனை தைகள் உண்டு தானே? இங்கிலிஷ் தாய், ஜெர்மன் தாய் .... எப்படி எத்தனை தாய்களுக்கு தெய்வ அந்தஸ்து எந்த மாதத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது ?

தாய் முதலில் சொல்லித்தருவதால் அதை தாய்மொழி என்கிறோம். நமது மாதத்தில் தாய், தந்தை, குரு பக்தி ஆகியவைகள் கூறுப்பட்டுள்ளது. நாம் காலம் காலமாக இருப்பதால் தேச பக்தி அவசியம் என்கிறார்கள். ஆனால் என்ன காரணத்திற்க்காக ஒரு மொழியை கடவுள் வணக்கம் என்கிற பெயரால் வணங்க வேண்டும் என்று யாரும் சொல்லவில்லை, எந்த சாஸ்திரமும் இதற்க்கு பதில் சொல்லவில்லை

எனவே, மொழி என்பது கருத்துக்களை தெரிவிக்கும் கருவி மட்டுமே. அதில் அளவுக்கு மீறி ஈடுபாடு வைப்பது தேவை இல்லாத இனவெறியை தான் தூண்டும். இப்படி இருப்பவர்கள் கூறுவதே தன மொழி உயர்ந்தது, பிறமொழி தாழ்ந்தது என்று பேசி தேவை இல்லாத சமூக சண்டைகளை தானே ஏற்படுத்தும்!
தமிழ்மொழி ஈடுபாடு என்பது வெறித்தனமாக இருக்கவேண்டுமென சிலர் கூறுவர். வெறி பிடிப்பது மனித செயல் அல்ல, அது விலங்குகளுடையது.

'யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம்' என்று பாரதியார், நான்கைந்து மொழிகளை தெரிந்து கூறியது. ஆனால் பாரதியின் இந்தவரியை கூறும் சிலருக்கு தமிழை தவிர வேறு மொழிகள் தெரியாது என்பதே உண்மை.

பொதுவாக தமிழ் ஆர்வலர்களின் 80 சதவிகிதத்திற்கு மேல் உள்ளவர்களுக்கு தமிழை தவிர வேறு மொழிகள் தெரியாது என்பதே உண்மை. தமிழ் மீது அன்பிருந்தால், அதற்காக பிற மொழிகளை வெறுக்க வேண்டுமா என்ன ?

ஹிந்தியை விரட்டினர், ஆங்கிலம் பழித்தார்கள்! அதன் விளைவு என்ன ? இந்து இந்தியாவிலேயே இதை தெரியாதவன் என்கிற பெருமை தமிழனுக்கு மட்டுமே உரித்தாகி விட்டது. மத்திய அரசு வேலைகளில் தமிழன் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. தமிழக எல்லையை தண்டி பிற மாநிலங்களுக்கு போனால்  தமிழன் பாடு பெரும் திண்டாட்டமே தான்.

அந்நிய மொழி என்பது இந்த உலகை அறிந்து கொள்ள உதவும் ஒன்று. நமது வீட்டின் ஜன்னல் கதவுகளை சாத்தி கொண்டால் வெளி உலக விஷயங்களை நம் இழக்கிறோம். உலகலவியா ரீதியில் நம்மால் போட்டி போட முடிவதில்லை. இந்த தமிழ் ஈடுபாடு தமிழனின் முன்னேத்ததை தடுக்குமாயின் அப்படி ஒரு ஈடுபாடு அவனுக்கு தேவையில்லை.

எனவே, தமிழ் வாழ வேண்டுமா ? தமிழன் வாழ வேண்டுமா ?

தமிழனைய் அழித்து, தமிழ் மொழியை வாழ வைப்பதால் யாருக்கு என்ன பயன் ?

தமிழ் மொழி தான் இனிமையானது என்று சொன்ன பாரதியாரும் 'சுந்தர தெலுங்கிலில் பாட்டிசைப்போம்' என்று பாடவில்லையா ?

எனவே, நமக்கு தமிழ் மொழியை விட, தமிழனின் முன்னேத்தமே பெரியது ஆகும்.

No comments:

Post a Comment