Monday 19 June 2017

கோயில் கோபுரங்களில் ஆபாச சிலைகள் ஏன்.?


இந்துக்களால் மிக புனிதமான இடமாக கருதப்படும் கோயில் கோபுரங்களில் ஏன் ஆபாச சிலைகள் இருக்கிறது ...

பொதுவாக எல்லோரும் கூறும் விடயம் எல்லாம்வல்ல இறைவனை காண காம என்னம் தடையாகயிருக்கும். அத்தகைய காமத்தை, காம என்னத்தை, குரோதம் (பலி பீடம்) கடந்து வந்தாலே இறைவனை அடையலாம் என்பார்கள்.

இதனை சற்று விவாதிப்போம் வாருங்கள்....

சமணர்கள், பௌத்தர்களின் கோவில்களில் உள்ளதே இவைகள். இவர்கள் பல காலங்களுக்கு முன்பே இந்து கோவில்களை கைப்பற்றி, அவர்களது இப்படிப்பட்ட கருத்துக்களை சிலைகளில் வடிவமைத்து இருந்தார்கள்.

இடைக்காலத்தில், முகமதியர்களின் கொக்கோக சிந்தனைகளால் அத்தகைய சித்தரிப்புகள் உருவாகின. உண்மையில், ஜைன-பௌத்த நிர்வாணங்கள், கிருத்துவ-முகமதிய மதங்களில் தொடர்ந்தன.

அதன்பிறகு, இந்த கோவில்கள் இந்து கோவில்களாக உருமாறியதால், அந்த சிற்பங்களைமாத்தாமல் அப்படியேவிட்டு விட்டது தான் இவைகள்.

உண்மையில், இப்படிப்பட்ட சிற்பங்கள் இந்து கோவில்களில் கிடையாது. அப்படி இருந்துஎனில், அந்தகோவில் முன்பு சமணர்களது / பௌத்தர்களின் கைகளில் இறந்ததாக இருக்கும்.

அதற்க்காக இந்து கோவில்களில் முழுவதுமாக ஆபாச சிலைகள் இல்லையெனவில்லை. ஆனால் இப்போதுள்ள அளவுக்கு ஆபாசம் இல்லை. உண்மையில் நாகரீகமான சிலைகளே இருந்தன. அதாவது மனித நாகரீகத்தின் எல்லா அம்சங்களும் சிலை வடிவில் செதுக்கியிருந்தனர். அதாவது காமமும் வாழ்க்கையின் ஒரு அங்கமாக காட்ட சிலை நாகரீகமான சிலைகள் இருந்தன. ஆனால் அசிங்கப்படதக்க சிலைகள் கிடையாது.

ஊருக்கு வெளியிலிருந்தே பார்க்கும்போது கண்ணில் படுவது, வானளாவிய கோபுரம் அது ரொம்ப அழகாயிருக்க்கிறது என்று தோன்றும். அதை பார்க்க அருகில் போவோம். கோபுரத்தை அண்ணாந்து பார்க்கிறோம்.  அதில் அடுக்கடுக்காக பல பொம்மைகள்.  கீழ் வரிசையில் உள்ள உருவங்களில் சில ஆபாச சிலைகள் காணப்படுகிறது.

ஆனால் அவற்றுடன் கூடவே யோகியரும், முனிவர்களும், உழவர்களும், குறவர்களும், அவதாரங்களும், கர்ப்பிணி பெண்டிரும், நாக தேவதைகளும், யட்சணிகளும், கந்தர்வர்களும், அரசரும், வீரகாதைகளும் காட்டப்படுகின்றன அவற்றில் ஆபாசமான தன்மை இல்லை


வாழ்க்கையின் ஒட்டுமொத்தத்தைக் காட்டும் பலவகையான சிலைகள் உள்ளன, அவற்றில் உடலுறவுச்சிலைகளை மட்டும் தவிர்ப்பது இந்து மதத்தின் வழக்கம் அல்ல. வாழ்க்கையின் எல்லா அம்சங்களையும் கணக்கில் கொண்டு ஒரு முழுமையை உருவகிக்கவே அது முயல்கிறது. ஆகவே துறவுக்கு இருக்கும் அதே முக்கியத்துவம் காமத்துக்கும் இருக்கும்.

இது ஆலயங்கள் நமக்குக் கற்றுத் தரும் முதல் பாடம்.  "நீ உன் மனதைக் கட்டுப் படுத்தினால் உயர்வாய்" என்பதை போதிக்கிறது.

வேத மந்திரங்களைக் கற்கவோ, ஆன்மீக சொற் பொழிவுகளைக் கேட்கவோ, இசை, நடனம், நாடகம் போன்றவற்றைக் கேட்டு, பார்த்து  ரசிக்கவோ வசதி.  சொல்லப் போனால் இலவச பாட சாலைகள்தானே கோயில்கள்.

இந்த உலக வாழ்க்கையில் உள்ள எல்லா விஷயங்களுமே புனிதமானவை தான். எதையும் தவறாகச் செய்யும் போது அதன் புனிதம் போய் ஆபாசமாகி விடுகிறது. உதாரணமாக, நல்ல விஷயங்களைப் பேசினால் அது அர்த்தமுள்ள பேச்சு. அப்பேச்சுடன் தீய வார்த்தைகளை உபயோகித்துப் பேசினால் அதுவே ஆபாச பேச்சாகி விடுகிறது.


புனிதமான தாம்பத்ய உறவு இல்லையென்றால் குழந்தைகள் எப்படிப் பிறக்கும்? உலக இயக்கம் எப்படி நடக்கும்? உலக வாழ்க்கையில் மனிதன், மிருகம், செடி, கொடி, மரம்.. இப்படி உயிருள்ள எல்லாமே இனப்பெருக்கம் செய்ய வேண்டியது அவசியம். இந்த நோக்கில் பார்த்தால் தாம்பத்ய உறவு என்பது திருக்கோயில் சிலையாக வடிக்கக் கூடிய அளவிற்குப் புனிதத்தன்மை வாய்ந்தது. சினிமா, நாடகம், டிவி போன்றவை வந்து, இந்தப்புனிதத்தை ஆபாசமாக்குவதற்கு முன்பு, கோயில் சிற்பங்களில், இதனைக் கண்டு புனிதமாக வாழும் நெறியை மனித இனம் உணர்ந்து கொள்ளவே இப்படிப்பட்ட சிற்பங்களை வடித்தார்கள். மேற்கொண்டு ஆராய்ந்து இதனை ஆபாசமாக்க கூடாது.




ஒரு கலங்கிய மனதிலிருந்து எழும் வக்கிர விகாரமாக காமத்தைக் காட்டும் சிலைகள் தமிழரின் கோவில்களில் அமைந்திடவில்லை. மாறாக, காமத்தை முழுதாக அறிந்து அதனை அச்சமின்றி வாழ்வின் ஒரு பாகமாக எதிர்நோக்கும் வாழ்க்கைப் பார்வை தான் அங்கு காணப்பட்டது. ஆபாச சிலை தோற்றமானது சூரியனை வழிபடும் சௌர மதத்தில் காமத்தைக் காட்டும் சிலைகள் பெருமளவு இருந்தன. பின்னர் சௌரம் வைணவத்தில் கலந்தபோது அச்சிலைகள் விஷ்ணு ஆலயத்திலும் இடம்பெற்ற்றன. அதில் இருந்து பின் படிப்படியாக மற்றைய கோயில்களுக்கும் பரவியது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
காமத்தை மனிதனின் இயற்கையான ஆற்றலாக எண்ணுபவை தாந்த்ரீக மதங்கள். அந்த ஆற்றலை அறிவதும் அறிவதன் மூலம் கடந்துசெல்வதுமே மானுட உண்மையின் உச்சநிலையை அறிய உதவும் வழி என அவை நினைத்தன. ஆகவே அவை காமத்தை அறிவின் வழியாகக் கண்டன. அந்தத் தாந்த்ரீக மரபும் பாலியல் சிற்பங்களை உருவாக்கியது. சைவ, சாக்த ஆலயங்களில் அவை காணப்படுகின்றன.

இந்து மதம் நீங்கள் மன ஒருமை கொண்டு கற்போடு வாழ்வதற்காகத் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஒரு நன்னெறித்தொகுப்பு அல்ல. அது வரலாற்றில் பல்வேறு வழிபாட்டுமரபுகளும் சிந்தனைகளும் பின்னிக்கலந்து உருவாகி வந்த ஒரு பெரும் ஞானத்தொகை. அந்த ஞானத்தை முறையாக அறிவதும் அந்த அறிவின் அடிப்படையில் வாழ்க்கையை உருவாக்கிக்கொள்வதுமே ஓர் இந்துவின் கடமை.

எளிமையான கேள்வியை மட்டும் கேட்டுக்கொள்ளுங்கள். அந்தச் சிற்பங்கள் மட்டும் இல்லையேல் உங்களுக்கு மன ஒருமை கைகூடி விடுகிறதா? உங்கள் மனதில் காமம் எந்நேரமும் கொந்தளித்துக்கொண்டுதானே இருக்கிறது? அது நிகழாத, வேறெதிலாவது உங்கள் மனம் நிலைத்திருக்கக்கூடிய, எத்தனை மணிநேரம் வாய்க்கிறது உங்கள் வாழ்க்கையில்?

காமச்சிற்பங்கள் தேவை இல்லை என்றால் கோயிலுக்குப் பெண்கள் வரக்கூடாது என்று சொல்லலாமே .அவர்களைப்பார்த்தால் காமசிந்தனை வரலாமே. ஏன் பெண்கள் வராவிட்டால்கூட மல்லிகை மணம் வந்தாலே போதுமே? இசை, ஓவியம் எதுவாக இருந்தாலும் அதே காம ஈர்ப்பு நிகழலாமே?

மன ஒருமை எதையும் இறுக்கமாக மூடிவைப்பதன் வழியாக நிகழ்வதில்லை. பிரச்சினை மனதில் இருக்கிறது, வெளியே அல்ல. கொஞ்சம் கண்மூடினால் அந்தச் சிற்பங்களை விட பல்லாயிரம் மடங்கு பிரம்மாண்டமாக உங்கள் மனதில் பிம்பவெளி ஓடுவதை நீங்களே காணலாம்.
எல்லாம் கடவுளின் லீலை என நம்பி ஏறிட்டே பார்க்காமல் நேராகச் சென்று கும்பிட்டு மீள முடிந்தால் அதைச்செய்யுங்கள். அது பக்தியின் வழி. நம்மில் தொண்ணூறு சதவீதம் பேர் அதையே செய்கிறார்கள்.

அது ஏன் என அறிவதே அதைக் கடந்து செல்லும் வழி. அதுவே ஞானத்தின் பாதை. அனைத்தையும் ஒரு மாபெரும் கட்டுமானத்தின் பகுதிகளாகக் காணும்போது உருவாகும் முழுமையை நோக்கு மூலமே நாம் விடுபடுகிறோம்.

https://indianhistoriography.wordpress.com/2015/06/26/indian-divine-symbols-figures-attacked-by-mohammedan-poets-sufis/

No comments:

Post a Comment