Thursday, 1 June 2017

வேதங்களில் இறைவனுக்கு உருவமில்லை என்கிறதா ?


ஒரு சில முஸ்லிம்களும்,கிறிஸ்தவர்களும் நமது வேத இலக்கியங்களை அரைகுறையாக படித்துவிட்டு அதில் இறைவனுக்கு உருவம் இல்லையென வாதிடுகிறார்கள். அது முழுக்க முழுக்க பொய்யான கருத்து. எனவே தான் வேதங்களில் உருவ வழிபாடு பற்றிய தகவல்களை இங்கே வழங்கியுளேன்..

வேதங்கள் இறைவனை இரண்டு அம்சங்களை  விவரிக்கிறது,  அது

1. நிர்குணா  பிரம்மம் (உருவமற்ற பிரம்மன்) -

குணங்கள் , சிறப்பு பண்புகள்  இல்லாமல்,  உருவமற்ற, மாற்ற முடியாத, நித்தியமானது  என்று நிர்குணா கடவுளை சொல்கிறது. இதை சதாஷிவ, பரமேஸ்வர, பரமாத்மா  என்கிறார்கள்.

2. சகுண பிரம்மம் (உருவமுள்ள பகவான்)

 இது குணங்கள், முழுமையான தனிப்பட்ட பண்புகளின் அம்சம் வந்தது.. இந்த சகுண பிரம்மனே  உருவாக்குதல், பராமரிப்பு, அழிவு என்று பண்புகளுடன் கூறினார்கள்.

அதனால்  கடவுள்  நிர்குணா பிரம்மம் (உருவமற்ற)  நிலையில் அவர்  குணங்கள்,  உருவம், பண்புகள்  இல்லாமல்  இருக்கிறார்.
கடவுள் சகுன (உருவமுள்ள) நிலையில் குணம்,வடிவம்,பண்புகள் உடையவராக இருக்கிறார். அதாவது இந்த இரண்டு நிலைகளும் இறைவனின் அம்சம் தான்.

வேத இலக்கியங்களில் இறைவனின் நிலைகளை சொல்வது ....

dve vāva brahmaṇo rūpe, mūrtaṃ caivāmūrtaṃ ca [Brh. Up - 2.3.1]
 God (Brahman) has two modes, formless (nirakara, asambhuta) as well as form (sakar, sambhuta).

இறைவன் (பிரம்மன்) என்பது இரண்டு நிலைகளில் அறியப்படுகிறது, அது உருவமில்லா தன்மை (asambuta) மற்றும்  உருவமுள்ள தன்மை(sakar, sambhuta). 

- யஜுர் வேத  2.3.1 (ப்ரஹதாரண்ய உபநிஷத்)


அதாவது,  ஒரே  இறைவனின் இரண்டு வித  அம்சங்களே  இந்த  நிர்குண,  சகுன பிரமன்  ஆகியவை. தனது பக்தர்ளுக்கும் மட்டுமே அவர் உருவமுள்ள சகுண பிரம்மனாக காட்சியளிக்கிறார். ஆனால் அறிவற்ற அபக்தர்களுக்கு அவர் தனது அந்தரங்க சக்தியால் (ப்ரஹ்ம ஜோதி எனும் (  இதுவே நிர்குண நிலை) திரையினால்  மறைக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீமத் பாகவத்தில் (1.8.19), யோகமாயை எனும் திரையினால் பகவான் மறைக்கப்பட்டிருப்பதாகவும், சாதாரண மக்கள் அவரைப் புரிந்து கொள்ள முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது.

இது வேத சாஸ்திரம்- ஈஷோபநிஷத்திலும் (மந்திரம் 15) உறுதி செய்யப்பட்டுள்ளது,

ஹிரண்மயேன பாத்ரேண ஸத்யஸ்யாபிஹிதம் முகம்,
தத் தவம் பூஷன்ன-அபாவ்ருணு ஸத்ய-தர்மாய த்ருஷ்டயே

“எம்பெருமானே, அகிலங்களை எல்லாம் பராமரிப்பவர் நீரே, உமக்கு பக்தித் தொண்டு ஆற்றுவதே அறக் கொள்கைகளில் தலைசிறந்தாகும். எனவே, என்னையும் பராமரிக்குமாறு உம்மிடம் வேண்டுகிறேன். உமது திவ்யமான ரூபம், யோக மாயையினால் மறைக்கப்பட்டுள்ளது. பிரம்மஜோதியே அந்தரங்க சக்தியின் திரையாகும். உமது ஸச்-சித்-ஆனந்த-விக்ரஹத்தை (நித்தியமான அறிவு நிறைந்த ஆனந்த ரூபத்தினை) காணவிடாமல் என்னைத் தடுக்கும் இந்தப் பேரொளியினை தயவு செய்து விலக்குவீராக.”

ஆனந்தமும் அறிவும் நிறைந்த பரம புருஷ பகவானின் திவ்ய ரூபம், அவரது அந்தரங்க சக்தியான பிரம்மஜோதியினால் கவரப்பட்டுள்ளதால், அறிவில் குன்றியவர்களான அருவவாதிகள் பரமனைக் காண முடியாது.

பகவான் கிருஷ்ணர் பகவத் கீதையில் தான் மறைக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்....

Bg 7.25 — சிற்றறிவுடையோருக்கும் முட்டாளுக்கும் நான் ஒருபோதும் தோன்றுவதில்லை. நான் எனது (ப்ரம்ம ஜோதி எனும்)  அந்தரங்க சக்தியால் மறைக்கப்பட்டுளேன், எனவே நான் பிறப்பற்றவன், அழிவற்றவன் என்பதை இவர்கள் அறிவதில்லை.


அதாவது, பகவான் கிருஷ்ணர் உருவமே - சகுன பிரம்மன் நிலைஆகும்.. அவரை காணவிடாமல் தடுக்கும் ப்ரஹம்ம ஜோதியே - நிர்குண பிரம்மன் நிலை ஆகும்.

பரம புருஷ பகவானை அவரது ரூபத்தின் மூலம் கோவிலில் வழிபடுவது சிலையை வழிபடுவதாகாது. ஆலயத்திற்குள் விக்ரஹத்தை வழிபடுதல் ஸகுண வழிபாடாகும், ஏனெனில், பகவான் பௌதிக குணங்களின் மூலம் அங்கே தோற்றமளிக்கின்றார். கல், மரம் அல்லது ஓவியம் போன்ற பௌதிக குணங்களின் மூலம் தோற்றமளிக்கும் போதிலும், பகவானது ரூபம் உண்மையில் பொளதிகமல்ல. இது பரம புருஷரின் பூரண தன்மையாகும்.

பண்படாத உதாரணம் ஒன்று இங்கு கொடுக்கப்படலாம். தெருவிலே நாம் சில தபால் பெட்டிகளை பார்க்கிறோம். நமது கடிதங்களை அந்தப் பெட்டிகளில் இட்டால், அவை செல்ல வேண்டிய இடத்திற்கு எவ்விதமான சிரமமும் இன்றி இயற்கையாகவே செல்கின்றன. ஆனால் ஏதாவதோரு பழைய பெட்டியிலோ, அஞ்சலகத்தால் வைக்கப்படாத ஒரு போலிப் பெட்டியிலோ நமது கடிதத்தை இட்டால், அது போய் சேராது. அது போலவே அர்சா-விக்ரஹம் இறைவனது அதிகாரப்பூர்வமான தோற்றமாகும். இந்த அர்சா-விக்ரஹம் பரம புருஷருடைய ஓர் அவதாரம். இவ்வுருவத்தின் மூலமாக இறைவன் சேவையை ஏற்றுக்கொள்கிறார். அவர் சர்வ சக்திமான், அனைத்து சக்திகளும் உடையவர்;

எனவே, பக்தனைப் பொறுத்தவரையில், பகவானை நேரடியாகவும் உடனடியாகவும் அணுகுவதில் சிரமம் ஏதும் இல்லை, ஆனால் ஆன்மீகத் தன்னுணர்விற்காக அருவத் தன்மையை பின்பற்றுபவர்களது வழி மிகவும் சிரமமானதாகும். அத்தகையோர் உபநிஷத்துகள் போன்ற வேத இலக்கியங்களின் மூலமாக பரமனின் தோன்றாத தன்மையினைப் புரிந்துகொள்ள வேண்டும்,

வேத மொழியினைக் கற்று எல்லையற்ற உணர்வுகளைப் புரிந்துகொள்ள வேண்டும்—மேலும், இவையனைத்தையும் உணரவும் வேண்டும். இது சாதாரண மனிதனுக்கு அவ்வளவு சுலபமானது அல்ல. மாறாக, கிருஷ்ண உணர்வில் இருப்பவன், அங்கீகரிக்கப்பட்ட ஆன்மீக குருவின் வழிகாட்டுதலைப் பின்பற்றுதல், விக்ரஹத்தினை நெறிப்படி வழிபடுதல், இறைவனது பெருமைகளைக் கேட்டல், இறைவனுக்குப் படைக்கப்பட்ட உணவுப் பொருள்களை பிரசாதமாக உண்ணுதல் போன்ற எளிமையான வழிமுறைகளின் மூலம் பக்தித் தொண்டில் ஈடுபட்டு பரம புருஷ பகவானை மிகவும் சுலபமாக உணர்ந்து கொள்கிறான்.

அருவவாதிகள், இறுதியில் பூரண உண்மையை உணராமல் போகலாம் என்ற அபாயம் இருக்கும்போதிலும், மிகவும் கடினமான பாதையை அவசியமின்றி பின்பற்றுகின்றனர் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

ஆனால் பக்தனோ, எவ்வித அபயமோ, சிக்கலோ, கடினமோ இன்றி முழுமுதற் கடவுளை நேரடியாக அணுகுகின்றான்.

No comments:

Post a Comment