Monday 19 June 2017

ஆதிசங்கரரின் கீதைமஹாத்மியம்

பகவத் கீதை  உரையில் ஆதிசங்கரரின் கீதை மஹாத்மியம் கூறுவது....

கீத-ஷாஸ்திரம் இதம் புண்யம் ய: படேத் ப்ரயத: புமான்—

பகவத்கீதையின் உபதேசங்களை முறையாகப் பின்பற்றுபவன், வாழ்வின் எல்லா வித துயரங்களிலிருந்தும் ஏக்கத்திலிருந்தும் விடுபட முடியும்.

பய-ஷோகாதி-வர்ஜித:

இவ்வாழ்வின் பயம் முழுவதிலிருந்தும் விடுபட்டு, அவன் மறுவாழ்வில் ஆன்மீக வாழ்வை அடைகிறான்.

 (கீதை மஹாத்மியம் 1)

இதைத் தவிர மேலும் பலனுள்ளது:

கீதாத் யாயன-ஷீலஸ்ய
ப்ராணாயம-பரஸ்ய ச
நைவ ஸாந்தி ஹி பாபானி
பூர்வ-ஜன்ம-க்ருதானி ச

"பகவத் கீதையை முழு ஆர்வத்துடனும் அக்கறையுடனும் ஒருவன் படித்தால், பகவானின் அருளால் அவனது பூர்வ ஜன்ம பாவங்கள் செயல்படமால் போகும்."

( கீதை மஹாத்மியம் 2)

மல-நிர்மோசனம் பும்ஸாம்
ஜல-ஸ்நானம் தினே தினே
ஸக்ருத் கீதாம்ருத-ஸ்நானம்
ஸம்ஸார-மல-நாஷ னம்

"தினமும் குளிப்பதன் மூலம் ஒருவன் தன்னை சுத்தம் செய்து கொள்கிறான். ஆனால் கீதை எனும் புனித கங்கையில் ஒருமுறை குளிப்பதன் மூலம், ஜட வாழ்வின் களங்கள் எல்லாவற்றையும் கழுவி விடுகிறான்."

(கீதைமஹாத்மியம் 3)

கீதா ஸு-கீதா கர்தவ்யா
கிம் அன்யை: ஷாஸ்த்ர-விஸ்தரை:
யா ஸ்வயம் பத்மனாபஸ்ய
முக-பத்மாத் வினி:ஸ்ருதா

பரம புருஷ பகவானே கீதையை உபதேசித்திருப்பதனால், வேறு எந்த வேத நூலையும் படிக்க வேண்டிய அவசியமில்லை. பகவத் கீதையை தொடர்ந்து கவனத்துடன் கேட்பதும் படிப்பதுமே அவசியம். தற்போதைய யுகத்தில் பௌதிகச் செயல்களிலே மிகவும் ஆழ்ந்துள்ள மனித குலத்தினரால், எல்லா வேத நூல்களையும் படிப்பதென்பது இயலாது. ஆனால், இது தேவையானதுமல்ல. பகவத் கீதை என்னும் இந்த ஒரு நூலே போதுமானது. ஏனெனில், இஃது எல்லா வேத நூல்களின் சாரமும் முழுமுதற் கடவுளால் உபதேசிக்கப்பட்டதுமாகும்.

(கீதை மஹாத்மியம் 4)

இங்கே கூறப்பட்டுள்ளது போல:

பாரதாம்ருத-ஸர்வஸ்வம்
விஷ்ணு-வக்த்ராத் வினி:ஸ்ருதம்
கீதா-கங்கோதகம் பீத்வா
புனர் ஜன்ம ந வித்யதே

"கங்கையின் நீரைக் குடிப்பவன் முக்தி அடைகிறான், இப்படியிருக்க பகவத் கீதையின் அமிர்தத்தை குடிப்பவரைப் பற்றி என்ன சொல்வது? பகவத் கீதை மஹாபாரதத்தின் அமிர்தம், இது மூலவிஷ்ணுவான ஸ்ரீ கிருஷ்ணரால் உபதேசிக்கப்பட்டது."

(கீதை மஹாத்மியம் 5)

பகவத் கீதை முழுமுதற் கடவுளின் திருவாயிலிருந்து பொழிவது, கங்கையோ அவரது திருப்பாதங்களிலிருந்து வெளிப்படுவது. உண்மையில், முழுமுதற் கடவுளின் திருவாய்க்கும் திருபாதங்களுக்கும் வேறுபாடில்லாவிடினும், நமது பாரபட்சமற்ற ஆய்வின் மூலம் பகவத் கீதையை கங்கைக் காட்டிலும் முக்கியமானதாக மதிக்கலாம்.

ஸர்வோபனிஷதோ காவோ
தோக்தா கோபால-நந்தன:
பார்தோ வத்ஸ: ஸுதீர் போக்தா
துக்தம் கீதாம்ருதம் மஹத்

"எல்லா உபநிஷத்துகளின் சாரமான கீதோபநிஷத் என்றழைக்கப்படும் பகவத் கீதை பசுவைப் போன்றது. இடையர் குலச் சிறுவனாக புகழ்பெற்று விளங்கும் பகவான் கிருஷ்ணரால் கறக்கப்படுகிறது. அர்ஜுனன் கன்று போன்றவன். அறிவு சான்றவரும் தூய பக்தர்களும் பகவத் கீதை எனும் அமிர்தப் பாலைக் குடிக்க வேண்டியவர்கள்."
(கீதை மஹாத்மியம் 6)

ஏகம் ஷாஸ்த்ரம் தேவகீ-புத்ர–கீ தம்
ஏகோ தேவோ தேவகீ-புத்ர ஏவ
ஏகோ மந்த்ரஸ் தஸ்ய நாமானி யானி
கர்மாப்-யேகம் தஸ்ய தேவஸ்ய ஸேவா

(கீதை மஹாத்மியம் 7)

தற்சமயத்தில், ஒரு நூல், ஒரு கடவுள், ஒரு மதம், ஒரு தொழில் என்ற கருத்துக்களில் மனிதன் மிகவும் ஆவலாக இருக்கின்றான்.

 எனவே, ஏகம் ஷாஸ்த்ரம் தேவகீ-புத்ர-கீதம்— உலகம் முழுமைக்கும் ஒரே பொது நூல் இருக்கட்டும்—பகவத் கீதை.

ஏகோ தேவோ தேவகீ புத்ர ஏவ—உலகம் முழுமுமைக்கும் ஒரே கடவுள் இருக்கட்டும்—ஸ்ரீ கிருஷ்ணர்.

ஏகோ மந்த்ரஸ் தஸ்ய நாமானி யானி—மேலும், ஒரே மந்திரம், ஒரே பிரார்த்தனை-அவரது திருநாமத்தை உச்சரித்தல்: ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே / ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே.

 கர்மாப்-யேகம் தஸ்ய தேவஸ்ய ஸேவா—மேலும் ஒரே ஒரு செயலிருக்கட்டும்—பரம புருஷ பகவானுக்குத் தொண்டாற்றுதல்.

No comments:

Post a Comment