Sunday, 11 June 2017


ஆதி சங்கரர் கூறும் - பகவான் யார் ?




ஆதிசங்கரர் பல தெய்வங்களை ஒவ்வொரு நெறிமுறைகளில் பரம்பொருளாக காட்டினார் என்று அவைகள் சைவம்,வைணவம், சாக்தம், காணாபத்யம், கௌமாரம், சௌரம்  என்னும் மதங்கள் ஆதிசங்கரரால் ஸ்தாபிக்கப்பட்டதாகவும் அவற்றுக்கு ஷண்மதங்கள் என்று பெயர் என்றும் கூறுவதற்கு ஐந்நூறு வருடங்களுக்குள் ஏற்பட்ட சங்கரவிஜயம் முதலான சில நூல்களில் அத்வைதிகள் கற்பித்து எழுதிவரும் கட்டுக்கதைகளைத் தவிர ஆதிசங்கரர் முதலான ப்ராசீனரான அத்வைதாசார்யர்களின் நூல்களிலும், மற்ற பண்டைச் சான்றோர்களின் நூல்களிலும் எவ்வித ஆதாரமும் கிடையாது.

பண்டையச் சான்றோர்களின் நூல்களில் ஷண்மதங்கள் என்றும், ஷட்தர்ஸனங்கள் என்றும் வழங்கப் படுபவை வேதத்துக்குப் புறம்பான (1) சாக்யம் (பௌத்தம்) (2) உலூக்யம் (வைஸேஷிகம்) (3) அக்ஷபாதமதம்(நையாயிகம்) (4) க்ஷபணக (சமண) மதம் (5) கபில (ஸாங்க்ய) மதம் (6) பதஞ்சலி (யோக) மதம் என்னும் ஆறு மதங்களேயாம். "பிணக்கற்ற அறுவகைச் சமயமும்" [திருவாய்1-3-5] என்னுமிடத்தின் வியாக்யானங்களைக் காணலாம், 

ஐந்நூறு வருடத்திற்கு முற்பட்ட எந்த மதநூலிலும் ஷண்மதம் என்று காணாபத்யம் முதலானவற்றைக் கூறியிருப்பதாக காணவில்லை. இதிலிருந்தே இக்கற்பனை ஐந்நூறு வருடங்களுக்குள் ஏற்பட்டது என்பதும், ஆதிசங்கரர் இந்த ஷண்மதங்களை ஸ்தாபித்திருக்கமுடியாது என்பதும் விளங்கும்.

அதி சங்கரர் ஒரு அத்வைத ஆச்சாரியார் அவர். ஆனால், அவரது ப்ரம்ம சூத்திரம், பகவத் கீதா பாஷ்ய உரைகளிலும், அவரது 10 உபநிஷத்துகளிலும் கூறும் இறைவன் ஒருவரே, அது விஷ்ணு / நாராயணர் / கிருஷ்ணர்.


சங்கரர் தனது கீதாபாஷ்யத்தின் தொடக்கத்தில்….

"நாராயண:பரோவ்யக்தாத் அண்டமவ்யக்த்த ஸம்பவம்
அண்டஸ்யாந்தஸ்த்விமேலோகா: ஸப்தத்வீபா ச மேதிநீ"

"நாராயணனையே ஸகல ஜகத் காரணம்" என  காட்டும் மங்கள ஸ்லோகத்தை, முதலில் கூறி தான் ஆரம்பிக்கிறார் .

பின் அவதாரிகையில் இப்படி  கூறுகிறார்..

"ஆதிகர்த்தா நாராயணாக்யோ விஷ்ணு: பௌமஸ்ய ப்ரஹ்மண:
ப்ராஹ்மணத்வஸ்ய ச அபிரக்ஷணார்த்தம் தேவக்யாம்
வஸுதேவாதம் சேந க்ருஷ்ண: கில ஸம்பபூவ"

“உலகிற்கெல்லாம் ஆதி கர்த்தாவாய், நாராயணன் என்னும் பெயரையுடைய விஷ்ணு பூமியிலுள்ள அந்தணர்களையும், ப்ராஹ்மண்யத்தையும், ரக்ஷிப்பதற்காகவே தேவகீ வசுதேவர்களுக்குப் பிள்ளையான கிருஷ்ணனாய், அம்சாவதாரமாய்ப் பிறந்தார்”

 என்று மிகத்தெளிவாகப் பரதத்வ நிர்ணயம் செய்தார்.
  
மேலும் கீதை(6-47) உரையில்,

"யோகிநாமபி ஸர்வேஷாம் ருத்ராதித்யாதி பராணாம், மத்கதேந-
மயிவாஸுதேவே ஸமாஹிதேந அந்தராத்மநா- அந்த:கரணேன
ச்ரத்தாவாந்- ச்ரத்ததாந: ஸந்பஜதே- ஸேவதேயோ மாம் ஸமே- மம
யுக்ததம: -அதிசயேந யுக்த:மத: -அபிப்ரேத இதி".

"அதாவது, உருத்திரன்(சிவன்), ஆதித்யன் முதலானவர்களிடம் பக்தி செலுத்தும் யோகிகளைக் காட்டிலும் ,என்னிடத்தில் பக்தி செலுத்தியவனாய், சிரத்தையுடையவனாய்" எவனொருவன் என்னை வழிபடுகிறானோ  அவனே மிகச்சிறந்த யோகி என்று என்னால் கருதப்படுகிறான்"

என மிக தெளிவாக பிற தேவர்களான சிவனை காட்டிலும்  உயந்தவர் என் இங்கே சங்கரர் நிலைநாட்டுகிறார்.

மேலும், சங்கரரின் பகவத் கீதா பாஷ்யத்தில் - 11-43. இல் கூறுகிறார்

'விஷ்ணுவே பரம இறைவன் மற்றும் இவருக்கு நிகர் வேறு எந்த இறைவனும் இல்லை'

  பகவான் ஸ்ரஷ்த்வேதம் ஜகத்

  'அவரே இந்த உலகத்தின் உண்மை மூலம்/படைப்பவர்'

ப்ரஹ்மஸூத்ரம் (2-2-4) "உத்பத்யஸம்பவாத்" என்னும் ஸூத்ரபாஷ்யத்தில் பாஞ்சராத்ரத்தைப்பற்றி விசாரிக்கும்போது….

"தத்ர யத்தாவதுச்யதே யோஸௌநாராயண:
பரோவ்யக்தாத் ப்ரஸித்த: பரமாத்மா ஸர்வாத்மா...இதி,
தந்ந நிராக்ரியதே|.... யதபி தஸ்ய பகவதோபிகமநாதி
லக்ஷண மாராதநமஜஸ்ரமநந்யசித்தயாபிப்ரேயதே.
ததபி ந ப்ரதிஷித்த்யதே||"

“நாராயணன் அவ்யக்தத்தைக் காட்டிலும் மேலானவனென்றும் பிரஸித்தனென்றும் பரமாத்மாவென்றும் ஸர்வாத்மா வென்றும், பாஞ்சராத்ரிகள் கூறுவதை நாம் மறுக்கவில்லை, பகவானான அவனை அபிகமனம் முதலான வகைகளிலே எப்போதும் வேறுஎவரிடமும் நெஞ்சைச் செலுத்தாமல் ஆராதிப்பதை அவர்கள் ஆதரிப்பதை நாம் தள்ளவில்லை.”

என்று நாராயணனே பரமாத்மா என்றும், வேறு எந்த தேவதையிடமும் நெஞ்சு செலுத்தாமல் நாராயணன் ஒருவனிடமே பக்திசெலுத்த வேண்டும் என்று கூறும் பாஞ்சராத்ர மதமே தம் மதம் என்று காட்டியிருக்கிறார் ஆதிசங்கரர்.

மேலும், காலத்தால் முந்தைய உபநிஷத்துக்கள் 10 உள்ளது. அதில் இடைச்சொருகள் இருக்க வாய்ப்பில்லை. அந்த உபநிஷத்துக்களுக்கு ஆதிசங்கரர் காலத்தில் அவர் உரை எழுதி உள்ளார். இவர் வைஷ்ணவரும் அல்ல. சைவரும் அல்ல. இவரின் 10 உபநிஷதுகளில், நாராயணர் முழுமுதற் கடவுள் என்றும் மிக தெளிவாக கூறுகிறார்.

1. ஆதிசங்கரர்_ப்ருஹதாரண்யகம் உபநிஷத் பாஷ்யம்

ப்ருஹதாரண்யகம் - 3-7-3 கூறுகிறார்..

"உன்னத இறைவனது நாமம் 'நாராயண''

-          


": ப்ருதிவ்யாம் திஷ்டந்” என்னும் அந்தர்யாமி ப்ராஹ்மண வாக்யத்தை விபரிக்கும் போது..

": ஈத்ருகீஸ்வரோ நாராயணாக்ய: ப்ருதிவீம்
ப்ருதி வீதேவதாம் யமயதி ஸ்வவ்யாபாரே அந்தர:”
அப்யந்தரஸ்திஷ்டந் ஏஷ தே ஆத்மா-தே தவ.
மம ஸர்வபூதாநாம் இத்யுபலக்ஷணார்த்தமேதத்"

“இப்படி பட்ட ஈஸ்வரனான நாராயணன் என்னும் பெயரையுடைய தேவனே பிருதிவீதேவதையை உள்ளே நின்று கொண்டு தன் தொழிலில் நியமிக்கிறான். அவனே உனக்கும் எனக்கும் எல்லா பூதங்களுக்கும் ஆத்மா”

இப்படி நாராயணனே பரமாத்மா என்று ப்ருஹதாரண்யக பாஷ்யத்தில் காட்டிய ஆதிசங்கரர் சாந்தோக்யம் மூன்றாவது அத்தியாயத்தில் ""ப்ரஹ்ம வா இதமக்ர ஆஸீத்"" என்று தொடங்கி, ப்ரஹ்மத்தினால் ஸ்ருஷ்டிக்கப்பட்டவர்களை காட்டும் வேதம்,

""இந்த்ரோ வருண: ஸோமோ ருத்ர:" என்று படித்திருக்கும் வாக்கியத்தை விவரிக்கும் போது... "இந்த்ரோ சேவாநாம் ராஜா....ருத்ர: பஸூநாம்" என்று பாஷ்யமிடுவதன்மூலம் பசுபதியான உருத்ரன் ப்ரஹ்மத்தால் ஸ்ருஷ்டிக்கப்பட்டவனே என்று காட்டினார்.


2. ஆதிசங்கரர் முண்டக உபநிஷத் பாஷ்யம்

"விஷ்ணு அல்லது அனந்தா, இவரே முதன்மையானவர், இவரது   உடலில் மூன்று உலகங்களையும் உடையவர், எல்லா மனிதர்களிடமும் இருக்கும் ஆத்மாவானவர் இவரே "

-          சங்கர் - முண்டக உபநிஷத் பாஷ்யம், 2.1.4

3. ஆதிசங்கரர்  கத  உபநிஷத் பாஷ்யம்

பிரம்மன், பரமாத்மா என அழைக்கப்படுபவர்  'வாசுதேவ (கிருஷ்ணர்)
-         சங்கரரின் - கத  உபநிஷத் பாஷ்யம் , 1.3.9

மேற்குறிய, ப்ரகாதாரண்ய, முண்டக, கத உபநிஷத் இவைகள் அதி சங்கரரர் பாஷ்யம் எழுதப்பட்டது. இதில் அவர் விஷ்ணு / நாராயணர் / வாசுதேவ இவர்களே பரம புருஷ கடவுள் என்று கூறுகிறார்.

 மேலும், சங்கரரின் நாராயண ஸுக்த, இல் கூறுகிறார் ..

"நாராயண பரம் ப்ரம்ஹ " 
“நாராயணர் பரம் பிரம்மம் "  என்கிறார்

"purANeShu nArAyaNashabdena vyavahriyamANo yaH parameshvaraH, sa eva 'paraM' utkR^iShTaM"

'உன்னத இறைவன் நாராயணர் என்கிறது புராணங்கள்' என்கிறார்

புருஷ சூக்தம் கூறும் நாராயண என்பது வேறு எவரையும் குறிக்காது என்று ' ஸாயன' என்கிற வேத வல்லுநர் ஸாயன மற்றும் பட்ட பாஸ்கரர் என்பவரின் தைத்ரிய ஆரண்யக விளக்கவுரையில்.

மேலும், நாராயண என்பது தனிப்பட்ட பெயர். இது விஷ்ணுவை மட்டுமே குறிக்கும் என்கிறார், பாணினி' என்பவரின் இலக்கணப்படி.
(Bhatta Bhaskara on Narayana Sukta commentary)

எனவே, அத்வைதியான அதி சங்கரர், தனது நூல்களில் நாராயணர் /விஷ்ணு / வாசுதேவ, இவர்களே முழுமுதற் கடவுள் என்று கூறுகிறார். இவர் ருத்திரரையோ/சிவனையோ, அக்னினியையோ, இந்திரனையோ ..... இறைவனாக குறிப்பிடப்பட வில்லை .

No comments:

Post a Comment