Thursday, 13 September 2018


விஷ்ணுவின் கருணையால் விஷத்தை அருந்திய சிவபெருமான் !



பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய விஷத்தைக் குடித்து உலகைக் காத்தவர் சிவபெருமான்.

ஆனால், அச்யுத, அனந்த, கோவிந்த என்னும் பகவானின் திருநாமங்களை உச்சரித்துவிட்டு, அந்த விஷத்தை அவர் அருந்தியதாகவும், அந்த திருநாமங்களே விஷத்தின் பாதிப்பிலிருந்து அவரைக் காப்பாற்றியதாகவும் ஸ்ம்ருதி சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. விஷத்தைக் குடிப்பதற்கு முன்பாக கருடனின் மீதமர்ந்த விஷ்ணுவை சிவபெருமான் தியானித்ததாக பிரம்மாண்ட புராணத்திலும் கருட புராணத்திலும் கூறப்பட்டுள்ளது.

மேலும், "ஸ்ரீபிரஹலாதனை இரணியகசிபு வாசுகி முதலான அஷ்ட மஹா நாகங்களைப் கடிக்கவிடும்போது, அந்த விஷங்களை எல்லாம் அவர் அமிர்தம்போல் அமுது செய்து விட்டார்."

மேலும், "பூதனையினுடைய மார்பில் கலந்திருக்கும் விஷத்தை  பகவான் கிருஷ்ணர் குடித்ததாக' பாகவதம் சொல்கிறது.

அதாவது, திருப்பாற்கடல் கடையும்போது பிறந்த விஷத்தை தேவர்கள் கண்டு சகிக்கமாட்டாமல் பயந்து அருகிருந்த பகவானிடம் முறையிடாமல், சிவனிடத்தில் விஷத்தை பானம்செய்து, தங்களை காக்கவேண்டுமென வேண்டுமென்று முறையிட்டார்கள்.

அதைக் கேட்ட சிவன் அப்படியே சமுத்திரம் போலே பெருகிவருகிற விஷத்தைக் எடுகிறார், ஆனால், அந்த விஷமானது தடைபடாமல் மேன்மேலும் பெருகி வருகிறபடியைக் கண்டு ஸ்ரீமகாவிஷ்ணுவைத் தியானித்தார்.

உடனே, அங்கே பகவான் வந்து  என்னவேண்டு மென்று கேட்க, விஷத்தை பானம் பண்ணி காப்பேன் என தேவர்களுக்கு வரங்கொடுத்தேன், அந்த விஷமானது தடைப்படாமல் வருகையால், அந்த விஷத்தைத் நீங்களே பானம்பண்ணி எங்களை காக்கவேண்டுமென்று சிவன் பிராத்தனை செய்கிறார்.

அப்போது பகவானான விஷ்ணு இப்போது விஷத்தை பானம் பண்ணுமென்று சொல்கிறார், சிவன் மறுபடியும் அதை எடுத்ததும், அந்த விஷமானது பர்வபதம்போல் திரண்டு வந்தது. அதைக் கையிலேந்திக் கொள்ளுமென, ஏந்திக்கொண்ட சிவனைப் பார்த்து பானம் செய்யுமென்று விஷ்ணு என சொல்கிறார்.  சிவன் இவ்வளவு நான் குடிக்கமாட்டான் என சொல்கிறார்.  

பின்பு ருக்வேதத்தில்…..

' வாயுரஸ்மா உபாமந்தத் பிநஷ்டி ஸ்மாகுநந்நமா|
கேஸீ விஷஸ்ய பாத்ரணேயத் ருத்ரணோபிபத் ஸஹ|| "
- ருக்வேத (10. 136.7) 

வாயு          -எல்லாவிடத்திலுமிருந்த பரமபுருஷன்
அஸ்மை   - இந்த தேவஸமூஹத்திற்காக கடலை கடைந்தார்,
குநந்நமா  - தீய அசுரர்களை வணங்க வைக்கும் மோஹினியாகி
பிநஷ்டிஸ்ம      -( அசுரர்களை) பொடியாக்கினார்.
கேசீ           - கேசவனான இவர்
விஷஸ்ய பாத்ரணே ருத்ரணே ஸஹ - (ஆலகால) விஷத்திற்கு
                                   பாத்திருமாயிருக்கும் உருத்திரனோடு கூட
அபிபத்     - விஷத்தை குடித்தார்.

“உருத்திரனாகிற பாத்திரனால் அவன் கையிலிருந்த விஷத்தை மயிரழகாலே கேசியென்ற பெயரையுடைய விஷ்ணுவானவர் பானம் பண்ணினார்."
         
பின், கையில் சேர்ந்த விஷத்தை (பகவான் தான் அமுதுசெய்து மிச்சமான விஷத்தை)ப் பானம் பண்ணுமென்று சிவனுக்கு நியமிக்க; அதுவும் தான் நேரே பானம் பண்ணமாட்டேனென்று சொல்கிறார்.

பின், 'அச்சுத அநந்த கோவிந்த' என்கிற நாமத்தைப் பிரணவ நம: பதங்களுடனே உச்சரித்து புஜித்தாரென்ற கதை, பாத்மோத்தரத்தில், முப்பத்தேழாவது அத்தியாயத்தில் சொல்லியிருக்கிறது.

 அவ்வமயம் அங்கிருந்த பாம்பு, தேள், சிலந்தி போன்ற விஷஜந்துக்களும் ருத்ரன் பருகி வழிந்த விஷத்தினை உண்டன. அவைகளும் பல்லிலும், வாலிலும், கொடுக்கிலும் விஷத்தினை ஏற்றன. அதாவது, ஆலகால விஷத்தினை சிவபெருமான் மட்டுமல்ல  தேளும், பாம்பும், சிலந்தியும் ஆகிய பல உயிரினங்கள் குடித்துள்ளன.
  
விஷ்ணுவின் கருணையினால் சிவபெருமான் அத்தகு அதிசய செயல்களைச் செய்ய முடிந்தது என்பதை இதிலிருந்து உணரலாம். விஷத்திலிருந்து உலகைக் காக்கும்படி சிவபெருமானிடம் விஷ்ணுவே வேண்டியது ஏன் என்ற கேள்வியும் எழலாம். விஷ்ணுவினால் நிச்சயம் அச்செயலைச் செய்திருக்க முடியும்.


ஆனால் தனது பக்தர்களுக்கு புகழை வழங்க விரும்பும் பகவான், அவ்வப்போது இதுபோன்று செயல்படுவதைக் காணலாம்

குருக்ஷேத்திர யுத்தத்தில் அர்ஜுனனையும், இராவணனுடனான யுத்தத்தில் ஆஞ்சநேயரையும் பகவான் உபயோகிக்கவில்லையா ? அதுபோலத்தான் !

No comments:

Post a Comment