Friday 7 September 2018


பண்டைய தமிழரும் ஆயுதபூஜையும்




இன்றைய காலகட்டத்தில்# வாகனங்கள்,இயந்திரங்க­ளுக்கு பூசனை செய்து ஆயுதபூஜையை கொண்டாடுவதை போலவே பண்டைய தமிழர்கள் போர்கருவிகளுக்கு பூசனை செய்து சிறப்பித்து வழிபடும் வழக்கம் இருந்திருக்கிறது.

இந்­ ஆயுதபூஜையே பதிற்றுப்பத்தில் "வாளுடை விலவு” என்றும் தொல்காப்பியத்தில் வாள் மங்கலம் என்றும் அழைக்கப்படுகிறது. ஆயுதங்களை வாழ்த்தி செய்யப்படும் சிறப்புச் சடங்காக "மாணார்ச் சுட்டிய வாள் மங்கலம் " (தொல்)– பகைவரைக் குறித்த வாள் வென்றியாற் பசிப்பிணி தீர்த்த பேய்ச்சுற்றமும் பிறரும் வாளினை வாழ்த்தும் வாண்மங்கலமும்- (நச்சினார்க்கினியர் உரை ) என குறிப்பிடபடுகிறது.

சி­லப்பதிகாரம் வேட்டுவவரியில், வில்லுக்கு முன் கொற்றவை செல்வாள்என்ற குறிப்பு உள்ளது. ‘ கொள்ளுங் கொடியெடுத்துக் கொற்றவையுங் கொடுமரமுன் செல்லும்போலும் ‘ .

12 ஆம் நூற்றாண்டு விக்கிரம சோழன் உலாவில் ஒட்டக்கூத்தர், ஆயுதங்களில் வெற்றித் திருமகள் குடியிருப்பதாகச் சொல்கிறார்.’ வருங் கொற்ற மார்க்கு மணங்கினுடனே மருங்கிற் றிருவுடைவாள் வாய்ப்ப ‘ .

இப்படி ஆயுதங்களை தெய்வமாக கருதும் மரபு இருக்கும் காரணத்தினால், அவற்றிற்கு விழா எடுப்பதும், அந்த விழாவிலே அவற்றைக் கையாளும் வீரர்களைப் புகழ்ந்து பாடுவதும் மரபு.

ஆயுத பூஜை  பெயர் வந்ததன் வரலாறு

தமிழகம் முழுவதும் ஆயுத பூஜை இன்று கொண்டாப்படும் நிலையில்  இந்த விழாவுக்கான பெயர் சூட்டப்பட்டதன் வரலாறு மிக சுவாரஷ்யமானது.

பஞ்ச பாண்டவர்கள் சூதாட்டத்தில் தோற்று வனவாசம் சென்று பின்னர் யார் கண்ணிலும் தட்டுப்படாமல் இருக்கும் அஞ்ஞான வாசத்தை மேற்கொண்டனர்.

அப்போது அவர்கள் தங்கள் ஆயுதங்களை ஒரு வன்னிமரத்தில் உள்ள பொந்தில் மறைத்து வைத்திருந்தனர். அஞ்ஞான வாசம் முடிந்த பின் அதை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு வருடமும் அவர்கள் உபயோகித்த அந்த ஆயுதங்களை எடுத்து வன்னி மரத்தடியில் வைத்து பூஜை செய்தனர்.

அதோடு நவராத்திரியின் ஒன்பது நாட்களும் விரதம் மேற்கொண்டனர். பாண்டவர்கள் ஆயுதங்களை வைத்து வணங்கியதால் இவ்விழாவுக்கு ஆயுதபூஜை என பெயர் வந்ததாக கூறப்படுகிறது.

இந்த பூஜை அன்று வீட்டை சுத்தமாக துடைத்து (டிவி முதல் நாம் சமைக்க உதவும் கத்தி வரை) அனைத்து பொருள்களையும் கழுவி சுத்தமாக துடைத்து சந்தனம் குங்குமம் வைத்தும், வாகனங்களை தண்ணீர் விட்டு கழுவி சந்தனம் பொட்டும் பூ வைத்தும் தெய்வ படங்களுக்கு பூக்களை போட்டும் வழிபடுவார்கள்.

இவையே ஆயுத பூஜையின் சிறப்பம்சமாகும்.

ஆயுத பூஜை கொண்டாடுவது ஏன் ?

 ஆயுத பூஜை வெளியே இருக்கும் ஆயுதங்களுக்கு அல்ல. வெளி உலக ஆயுதங்களை மனிதன் தான் படைத்தான் மனிதனே நமக்கு பயன்படுத்தும் வித்தையை கற்றுக்கொடுக்க முடியும் உள் உலக ஆயுதங்களோ பல பல... அவற்றில்

*அன்பு,காதல்,பாசம்* 

*நட்பு பொறாமை,காமம்*

*நயவஞ்சகம்,சூழ்ச்சி*

 *தாழ்வு மனப்பான்மை*

 *உயர்வு மனப்பான்மை*

 *பயம்,துக்கம்,கவலை*

 *சுயநலம்,ஏமாற்றுதல்*

 *பிறரை,வீழ்த்துதல்*

 *நம்பிக்கையின்மை*

 *பேராசை,வெறுப்பு*

 *எதிரி,தன்மை*

 *அஹங்காரம்*

 *நன்றியின்மை*

 *பொறுப்பின்மை*

 *சோம்பல் தூக்கம்*

 *நேர்மறை எண்ணம்*

 *எதிர்மறை எண்ணம்*

 _இப்படி  எத்தனையோ ஆயுதங்கள் நமக்குள் கிடங்கு போல இத்தனை ஆயுதங்களும் நம்மை காயபடுத்தாமலும் பிறரை காயபடுத்தாமலும் எப்படி கையாள்வது மேலும் இந்த ஆயுதங்களை கொண்டு நம்மை நாமே எப்படி செதுக்கி

"அற்புத சிற்பமாய்வெளிபடுத்துவது என்ற வித்தையை சரஸ்வதி தாயிடம் வேண்டி வரபெரும் ஒரு மகத்தான பூஜையே ஆயுத பூஜை!

No comments:

Post a Comment