ஹரியும் சிவனும் ஒண்ணா ?
அறியாதவன் வாயில் மண்ணா?
சிவபெருமான் சாதாரண ஜீவனுமல்ல, விஷ்ணுவிற்கு சமமானவரும் அல்ல.
அவர் ஜீவ தத்துவத்திற்கும் விஷ்ணு தத்துவத்திற்கும் இடைப்பட்டவர். ஹரியையும் சிவனையும் ஒன்றாகக் காண்பதும், வெவ்வேறு துருவங்களாக காண்பதும் மிகவும் கண்டிக்கத்தக்கது.
ஹரி, சிவன் என்று இரு பெயர்கள் இருக்கின்றன; அவர்கள் இருவரும் ஒருவராக இருந்தால் இரு வேறு பெயர்களை ஏன் சாஸ்திரங்கள் உபயோம்த்திருக்க வேண்டும்? ஹரி, விஷ்ணு போன்ற பெயர்கள் பகவானின் இதர அவதாரங்களான மத்ஸர், கூர்மர், வராஹர், நரசிம்மர் போன்றவர்களுக்கும் உபயோகிக்கப்படும்ன்றன, ஆனால் சிவபெருமானுக்கு உபயோகிக்கப்படுவது இல்லையே. இருவரும் ஒருவரே என்றால் ஏன் பெயர்களை மாற்றி உபயோகிப்பதில்லை?
பெயர் மட்டுமின்றி, ஹரி, சிவன் ஆகிய இருவரின் குணங்கள், ரூபங்கள், செயல்கள், பக்தர்கள், வாழுமிடம் என எல்லாம் வேறுபட்டு இருக்கும்போது, அவர்கள் வேறுபட்டவர்கள் என்பதை உணர்வது எளிதானதாகும்.
யஸ் து நாராயணம் தேவம் ப்ரம்ம-ருத்ராதி-தைவதை:
சமத்வேனைவ
வீக்க்ஷேத
ஸ
பஷாண்டீ
பவேத்
த்ருவம்
'யாரொருவர் பகவான் விஷ்ணுவை, ப்ரம்மா அல்லது சிவபெருமான் ஆகிய தேவர்களில் ஒருவராக கருதுகிறார்களோ அல்லது பகவான் விஷ்ணுவிற்கு சமமாக கருதுகிறார்களோ, அவர்கள் பாஷாண்டீயாக (நம்பிக்கையில்லாத நாஸ்திகர்) என கருதப்படுவர்' = பத்ம புராணம்
விஷ்ணுவே முழுமுதற் கடவுள், சிவபெருமான் அவருக்கு கீழிருக்கும் அவரது மிகச்சிறந்த பக்தர் இவற்றை புரிந்துகொள்வதில் கடினம் ஏதும் இருக்கக் கூடாது. இருப்பினும், சிவபெருமானை எக்காரணம் கொண்டும் தரக்குறைவாக நினைத்து இகழ்ந்து பேசுதல் கூடாது. ஜட இயற்கையுடன் தொடர்பு கொண்டுள்ள பகவானின் குண அவதாரமான அவருக்கு நாம் உரிய மரியாதையைச் செலுத்த வேண்டும்.
பௌதிகச் செயல்களைச் செய்ய விரும்பும் விஷ்ணு, அதனை சிவபெருமானின் மூலமாகச் செய்ம்றார். விஷ்ணுவின் செயல் வடிவமாகத் திகழ்வதால், சிவபெருமானுக்கு நாம் உரிய மரியாதையைச் செலுத்துதல் அவசியம். அவர் ஒரே சமயத்தில் விஷ்ணுவுடன் ஒன்றாகவும் வேறுபட்டும் உள்ளார்.
புகையினால் சூழப்பட்ட நெருப்பினால் முழு வெளிச்சத்தைக் கொடுக்க முடியாது; அதுபோல, அறியாமையுடன் தொடர்பு கொண்டுள்ள சிவபெருமானின் சக்தியானது விஷ்ணுவின் சக்தியுடன் ஒப்பிட இயலாததாகும்.
ரிக் வேதம் 7.40.5 கூறுகிறது..
'ருத்திரர் தனக்கு தேவையான சக்தியை பகவான் விஷ்ணுவிடமிருந்து பெறுகிறார்'
ஒரு எறும்புக்குகூட மரியாதை கொடுக்கும் வைஷ்ணவர்கள் நிச்சயம் சிவபெருமானுக்கு மரியாதை கொடுக்க தவறுவதில்லை.
ஆரம்ப நிலை பக்தர்கள் தங்களுக்கு பிடித்த தெய்வத்தை மட்டும் வணங்கி மற்றவர்களுக்கு மரியாதை கொடுப்பதில்லை. பட்டை போட்டுக் கொண்ட அனைவரும் பக்குவமான சைவர்களும் அல்ல, நாமத்தை போட்டுக் கொண்ட அனைவரும் பக்குவமான வைஷ்ணவர்களும் அல்ல.
கூர்ம புராணத்தில் பகவான் விஷ்ணு கூறுவது,
“களங்கமற்ற அன்புடன் என்னை வழிபட்டு, அதே சமயத்தில் சிவபெருமானை நிந்திப்பவர்கள் நரகத்திற்குச் செல்வர்.”
வைஷ்ணவர்களில் சிலர் சிவபெருமானின் நிலையை உணராது அவரை நிந்திப்பதையும், சைவர்கள் விஷ்ணுவின் உயரிய தன்மையை அறியாது அவரை நிந்திப்பதையும் அன்றாடம் காண்ம்றோம். இவையாவும் பக்குவமற்ற அறிவினால் எழுபவை. மற்றுமொரு பக்குவமற்ற நிலையின் வெளிப்பாடே.
சிவபெருமானை நிந்திக்கக் கூடாது.
மேலும், கீழ்காணும் பிரபலமான ஸ்லோகத்தில், தான் எப்போதும் ராம நாமத்தை உச்சரித்து அதில் இன்பம் காண்பதாக சிவபெருமான் தனது மனைவியிடம் கூறுகிறார்:
ராம ராமேதி ராமேதி ரமே ராமே மனோரமே
ஸஹஸ்ர-நாமபிஸ் துல்யம் ராம-நாம வரானனே
“தேவி! நான் ராம, ராம, ராம என்று திருநாமங்களை உச்சரித்து அந்த அழகிய ஒலியினால் இன்பமடைகிறேன். இராமரின் இந்த திருநாமம் பகவான் விஷ்ணுவின் ஆயிரம் நாமங்களுக்கு சமமானதாகும்.”
- பத்ம புராணம், உத்தர-காண்டம், பிருஹத்-விஷ்ணு-ஸஹஸ்ர-நாம-ஸ்தோத்ரம் 72.335
"விஷ்ணுவின் கருணையால் மட்டுமே முக்தி சிவபெருமானின் பெயர்களில் ஒன்று, முக்திநாதர், “முக்தியளிப்பவர்.” ஆயினும், அவர் கிருஷ்ணரின் கருணையால் அவரது சார்பாகவே அச்செயலைச் செய்கிறார். சுதந்திரமாக முக்தி வழங்க சிவபெருமானால் இயலாது" - பிருஹத் பாகவதாம்ருதம் 1.2.84
காசியில் இறப்பவர்களுக்கு சிவன் மோக்ஷம் கொடுக்கின்றார் என்பதை பெரும்பாலானோர் அறிவர். ஆனால் அவர் எவ்வாறு மோக்ஷம் கொடுக்கின்றார் என்பதை வெகு சிலரே அறிவர் ஒருவர் காசியில் மரணத்தைத் தழுவுவதற்கு சற்று முன்பு, அவரது காதுகளில், சிவபெருமான் ராம நாமத்தை ஓதுகிறார். அந்த இராம நாமமே ஒருவருக்கு முக்தியைக் கொடுக்கின்றது
- பத்ம புராணம், பாதாள காண்டம், மதுரா-மஹாத்மியம்
சிவபெருமானின் தனிச் சக்தி அல்ல. இதனை சிவபெருமானே ஒப்புக் கொள்கிறார்:
முக்தி-ப்ரதாதா ஸர்வேஷாம் விஷ்ணுர் ஏவ ந ஸம்ஷய:,
“விஷ்ணுவைத் தவிர வேறு யாராலும் முக்தியளிக்க முடியாது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.”
சிவபெருமான் ஒரு விஷ்ணு பக்தர் வழிபாட்டு முறைகளில் சிறந்தது எது என்ற தனது மனைவியின் கேள்விக்கு சிவபெருமான் பின்வரும் பதிலை பத்ம புராணத்தில் வழங்குகிறார்:
ஆராதனானாம் ஸர்வேஷாம் விஷ்ணோர் ஆராதனம் பரம்,
“எல்லாவித ஆராதனைகளிலும் சிறந்தது பகவான் விஷ்ணுவை வழிபடுவதே.”
மேலும், சாஸ்திரங்களில் பல்வேறு இடங்களில் சிவபெருமான் விஷ்ணுவை வழிபடுவதை நாம் காண்கிறோம். சிவபெருமான் எப்போதும் தியானத்தில் இருக்கின்றார். அவரே முழுமுதற் கடவுள் என்றால், அவர் ஏன் தியானத்தில்இருக்க வேண்டும்? இதை பெரும்பாலான மக்கள் யோசிப்பதில்லை.
"முழுமுதற் கடவுளான விஷ்ணுவின் மிகச்சிறந்த பக்தரான சிவபெருமான் தனது எஜமானரை எண்ணி எப்போதும் தியானத்தில் இருக்கின்றார் என்பதே உண்மை. தனது இருப்பிற்கு மூல காரணமான ஸங்கர்ஷணரை (விஷ்ணுவை) தான் எப்போதும் தியானிப்பதாக சிவபெருமானே கூறியுள்ளார்"
- ஸ்ரீமத் பாகவதத்தில் (5.17.16)
"முழுமுதற் கடவுளான விஷ்ணுவின் மிகச்சிறந்த பக்தரான சிவபெருமான் தனது எஜமானரை எண்ணி எப்போதும் தியானத்தில் இருக்கின்றார் என்பதே உண்மை. தனது இருப்பிற்கு மூல காரணமான ஸங்கர்ஷணரை (விஷ்ணுவை) தான் எப்போதும் தியானிப்பதாக சிவபெருமானே கூறியுள்ளார்"
- ஸ்ரீமத் பாகவதத்தில் (5.17.16)
எல்லா பக்தர்களிலும் சிவபெருமான் மிகச்சிறந்தவர் என்பதை ஸ்ரீமத் பாகவதம் அறுதியிட்டு கூறுகின்றது:
நிம்ன-கானாம் யதா கங்கா தேவானாம் அச்யுதோ யதா
வைஷ்ணவானாம் யதா ஷம்பு: பூராணானாம் இதம் ததா
“எவ்வாறு நதிகளில் கங்கை மிகச்சிறந்ததோ, கடவுள்களில் அச்யுதர் (விஷ்ணு) மிகச்சிறந்தவரோ, வைஷ்ணவர்களில் சிவபெருமான் மிகச்சிறந்தவரோ, அதுபோல புராணங்களில் இந்த ஸ்ரீமத் பாகவதம் மிகச்சிறந்ததாகும்.”
"சிவபெருமான் ஒரு மிகச்சிறந்த வைஷ்ணவர் என்பதோடு அல்லாமல், வைஷ்ணவ தர்மத்தை மக்களுக்கு எடுத்துரைக்கும் பன்னிரண்டு மஹாஜனங்களிலும் ஒருவராக உள்ளார்" - ஸ்ரீமத் பாகவதம் 6.3.20
"மிகச்சிறந்த வைஷ்ணவர்களான பிரசேதர்கள் விஷ்ணு பக்தியை சிவபெருமானின் கருணையாலேயே பெற்றனர். அவர்களுக்கு வைஷ்ணவ தர்மத்தைக் கற்றுக் கொடுத்தவர் அவரே. சிவபெருமான் விஷ்ணுவிற்கு மிகவும் பிரியமானவர் என்றும், நெருங்கிய நண்பர் என்றும், அவருடன் ஏற்பட்ட சகவாசத்தினால் தாங்களும் விஷ்ணு பக்தர்களாக மாறினோம் என்றும் பிரசேதர்கள் கூறியுள்ளனர்." - ஸ்ரீமத் பாகவதம் 4.30.38
ஹரியும் சிவனும் ஒன்று, அறியாதவன் வாயில் மண்ணு என்று சொல்வதில் உள்ள பிழைகள் அனைவருக்கும் புரிந்திருக்கும் என்று நம்பும்றோம். சிவபெருமானுக்கும் விஷ்ணுவிற்கும் உள்ள ஒற்றுமையையும் வேற்றுமையையும் அறிதல் அவ்வளவு எளிதல்ல என்றபோதிலும், அடிப்படை அறிவினை இங்கு வழங்கியுள்ளோம்.
இதற்கு மேலும்,
யாரேனும், ஹரியும் சிவனும் ஒன்று, அறியாதவன் வாயில் மண்ணு என்று கூறினால், அவ்வாறு சொல்பவரின் வாயில்தான் மண்ணை வைக்க வேண்டும்.
ஹரியும் சிவனும் ஒன்று, சொல்பவன் வாயில் மண்ணு.
No comments:
Post a Comment