பிரமணராகி-கோவிலில் பூஜை செய்யும் உரிமை வேண்டுமா ?
மூன்று நான்கு மணிக்கு பிரம்ம முகூர்த்தத்தில் எழ வேண்டும்.குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும்.. குருவுக்கு செய்யும் முதல் பூஜை ஆரம்பித்து காலை எட்டு மணி வரை நடக்கும் பூஜைகளில் கலந்து கொள்ள வேண்டும்.. சமையலுக்கு உதவி செய்ய வேண்டும்.. கோவிலை சுத்தம் செய்ய வேண்டும்..கோவில் வெளியே சுத்தம் செய்ய வேண்டும். புற்களை வெட்ட வேண்டும். குப்பைகளை அகற்றவேண்டும். சாக்கடைகளை சுத்தம் செய்ய வேண்டும் கோவில் கழிவறைகளை சுத்தம்செய்ய வேண்டும். சமையலுக்கு பயன்படுத்திய பொருட்களையும், பக்தர்கள் சாப்பிட்ட தட்டுகளையும் கழுவி சுத்த படுத்தவேண்டும். பசுக்களை மேய்க்க வேண்டும்.. சாணியை அள்ளி, பசு தொழுவங்களை சுத்தம்செய்ய வேண்டும்.
கீதை வகுப்பு, பாகவதம் வகுப்பு, இராமாயண மகாபாரத வகுப்பு,உபநிடத தத்துவங்களை போதித்தல், பூஜைகள் செய்யும்முறை, ஆகமம் கற்றல், இளம்வயதிலியே ஏகாதசி, போன்ற விரத நாட்களில் விரதம் எடுக்குமாறு
நியமனங்களை கடும்மையாக பின்பற்ற வலியுறுத்தபடுதல், தெருதெருவாக நடந்து, ஆடி பாடி கீர்த்தனம் செய்தல், பிரச்சாரம் செய்தல், புத்தகம் விற்றல், இப்படி மூன்று வயது முதல், பக்தியை, கடும் ஒழுக்கத்தை,கட்டுபாட்டை , கடமையை குழந்தைகளுக்கு கற்று கொடுத்து,
அதன் பிறகு, இருபது இருபத்தி ஐந்தாவது வயதில், யாகம் செய்யவும், கோவில் கர்பகிரகத்தில் பூஜைகள் செய்யவும் அனுமதிக்க படுவார்கள்.. ஆனால், நான் கோவில் கர்பகிரகத்தில் உள்ளே நுழைந்துதான் பூஜை செய்வேன் என்று எவரும் அடம் பிடிப்பதில்லை.. அவர்களை பொறுத்தவரை, பூஜைசெய்வதும், கழிவறை கழுவுவதும் ஒன்றுதான்.. இரண்டும் இறைவனுக்கு செய்யும் சேவைதான்.
இது அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம்.. இஸ்கான் என்று அழைக்கப்படும் ஆன்மீக இயக்கத்தால், நடத்தப்படும் குருகுலத்தில் போதிக்கபடுபவை.. அமெரிக்காவில், ஐரோப்பா நாடுகளில், இந்தியா பிருந்தாவனம் மாயாபூரில் குருகுலங்கள் உள்ளன. மேற்கத்திய கிருஷ்ண பக்தர்கள், தங்கள் குழந்தைகள், ஒழுக்கத்தில் சிறந்து விளங்கி,எதிர்காலத்தில் சிறந்த வைஷ்ணவராக திகழ வேண்டும் என்ற நோக்கத்தில், ஐந்து வயதிலியே, அவர்களை இங்கு சேர்த்து விடுவார்கள்.. இப்படி வளரும் குழந்தைகள் எதிர்காலத்தில், நிச்சயம், உடல் சுத்தம், மனசுத்தத்தோடு, நன்கு வேதம், ஆகமம் கற்ற பக்தர்களாக திகழ்வார்கள்.
தமிழ் நாட்டில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்களாக ஆக வேண்டும் என்று போராட்டம் செய்பவர்கள், அப்படி ஆக விரும்புபவர்கள்.. தங்கள் குழந்தைகளை, முதலில், இப்படிபட்ட குருகுலங்கள், வேதபாடசாலைகளில் கல்வி கற்க அனுப்பட்டும்.. பகுதி நேரமாக அல்ல.. முழு நேரமாக, அங்கேயே தங்கி வாழ்ந்து வேதம் கற்கட்டும்.. நான்கு ஐந்து வயதிலியே அனுப்பி விட வேண்டும். அங்கு இவர்களுக்கு போதிக்கும் கடுமையான அனுஸ்டானங்களை பின்பற்றி வளரட்டும்.
பிற்காலத்தில் நிச்சயம், சிறந்த ஞானம் உள்ளவர்களாக திகழ்வார்கள். அதன் பிறகு, அதிலயே தகுதியானவர்களை பூஜைகள் செய்ய அனுமதிக்கலாம். அதைவிடுத்து, இருபது, இருபத்தி ஐந்து வயதில் வேத உபான்யசம் செய்ய தொடங்கி ஆகமம் கற்பதாக சொல்லி, மூன்று வருடங்களில் ஒரு சான்றிதழை வைத்து கொண்டு, சில பூஜைமுறைகளை தெரிந்து வைத்திருப்பதால், கோவில் கர்பகிரகத்தில் உள்ளே திமிராக நுழைந்து நானும் அவனுக்கு நிகராக ஆகி விட்டேன்.. என்று மார்தட்டுவது எல்லாம் வேலைக்கு ஆகாது.. இதற்கு பெயர் இறைசேவை அல்ல..
எவனோ, ஒரு ஆகமம் கற்றதாக சொல்லியவன், அர்ச்சகராக அனுமதிக்கவில்லை என்பதால், கழுத்தில் அணிந்திருந்த ருத்ராக்ஷா மாலையை கழற்றி தூக்கி எறிந்ததாக படித்தேன்..இதுவே அதற்கு சான்று!
வெள்ளைகார குழந்தைகளால் முடிந்தால்,, உங்கள் குழந்தைகளால், அதுவும், ஜாதி குலம் வேறுபாடு அனைத்தும் அழிய வேண்டும், இறைவனிடத்தில் அனைவரும் சம உரிமை பெற வேண்டும் என்று வாழ்நாள் முழுதும் போராடும் உங்கள் குழந்தைகளால் இது முடியாதா என்ன?
வாருங்கள், சாணி அள்ளுவது, கழிவறை சுத்தம் செய்வது தொடங்கி, பிறகு கர்பகிரகத்தில் நுழையும் தகுதியை வளர்த்து கொள்வோம்.
No comments:
Post a Comment