முஹம்மது நபி கல்கிபகவானா ?
பாகவத புராணம்:அத்தியாயம்12:ஸ்லோகம்18-2
ஸம்பலக்ராம: முக்யஸ்ய ப்ராஹ்மனஸ்ய மகாத்மன:
பவனே விஷ்னுயஸஸ: கல்கி ப்ராதுர் பவிஷ்யதி
?சம்பல கிராமத்தில் முக்கியமான பிராமணரும் மகாத்மாவுமான விஷ்ணுயாஸரின் வீட்டில் கல்கி பிறப்பார்”
உலகத்தில் எந்தவொரு அறிவாளியாவது பெயரை மொழிபெயர்த்து இருவரை ஒப்பிடுவானா? இது அறிவுக்கு பொருத்தமானதா? "அவரை போல் இவர்" என்று இருவரை ஒப்பிட்டால் கூட பெயரை மொழிபெயர்ப்பது பொருந்தாது. ஆனால் "அவர்தான் இவர் " என அடித்துகூறினால் அனைத்துமே பொருந்தவேண்டும். ஒன்று முரண்பட்டால்கூட இருவரும் வேறென்பது தெளிவாகிவிடும். புராணத்தில் தெளிவாக பெயர் கொடுக்கப்பட்டிருக்கும்போது இவர் ஏன் அவசியமே இல்லாமல் மொழிபெயர்க்கவேண்டும்?
மற்றும் இங்கு விஷ்ணு என்றால் கடவுள் என்றுபொருள் கொடுத்துள்ளான். "அல்லாஹ்" என்ற சொல்லின் பொருள் கடவுளின் பெயரை குறிப்பதல்ல. "கடவுள்" என்ற பொருளை தருவது. ஆக இப்படி சொல்லை பயன்படுத்தினால்தானே அவன் நினைத்தது நிறைவேறும்.
விஷ்ணு என்றால் எங்கும் வியாபித்தவர் என்று பொருள். இதையேதான் விஷ்ணு சஹஸ்ர நாமத்தில் முதல் ஸ்லோகம் விளக்குகிறது. ஆக இங்கு விஷ்ணுயாஸருக்கும் அப்துல்லாஹ் என்ற பெயருக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது.
'முக்யஸ்ய ப்ராஹ்மனஸ்ய மகாத்மன: பவனே விஷ்னுயஸஸ'
?முக்கியமான பிராமணரான மகாத்மாவான விஷ்ணுயாஸர் வீட்டில் கல்கி அவதரிப்பார். அதாவது தனது தந்தையின் வீட்டிலேயே கல்கி பிறப்பார்”
ஆனால் சாகிரோ நூதனமாக சொல்லை கையாண்டு தந்தையின் வீட்டில் பிறப்பதை மறைத்து ஊர்தலைவர் என மாற்றி தனக்கு சாதகமாக திரித்துள்ளான் என தெளிவாக புரியும்.
கல்கி புராணம்:காண்டம்1:அத்தியாயம் 2 :ஸ்லோகம்15
த்வாதஸ்யாம் சுக்ல பக்ஷஸ்ய மாதவே மாஸி மாதவம்
ஜாதம் தத்த்ருசது: புத்ரம் பிதரௌ ஹ்ருஷ்ட மாநஸௌ
“மாதவ மாதத்தின் சுக்ல பக்ஷ துவாதசியில் பன்னிரெண்டாம் நாள் பகவான் விஷ்ணு கல்கியாக ஜனனம் செய்வார். அந்த புத்திரனை கண்டு பிதாவான விஷ்ணுயாஸரும் தாயான சுமதியும் மனம் நிறைந்து மகிழ்வார்கள்”
இந்த ஸ்லோகத்தின் படி கல்கிபகவான் மாதவமாதத்தில் சுக்ல பக்ஷ துவாதசியில் பன்னிரெண்டாம் நாள் அவதரிப்பார் என கொள்ளமுடியும். ஆனால் இந்த இடத்தில் மாபெரும் சதி செய்துள்ளான் சாஹிர் நாயக். மாதவ மாதம் என்பது வைகாசிமாதத்தை குறிப்பதாகும்.அதாவது ஒருவருடத்தின் ஐந்தாவது மாதம். முஹம்மது நபி பிறந்ததோ ரபி உல் அவ்வல் மாதத்தில்.அதாவது இஸ்லாமிய நாட்காட்டியின் படி வருடத்தில் மூன்றாவது மாதத்திலாகும்.
மற்றும் இச்சுலோகத்தில் கவனிக்க வேண்டிய முக்கிய விடயம் கல்கி பகவான் பிறக்கும்போது அவரின் தந்தை உயிருடன்தான் உள்ளார். ஆனால் முஹம்மது நபி பிறப்பதற்கு முதலே அவனின் தந்தை இறந்துவிட்டார். ஆக இந்த சான்றும் முற்றிலுமாக தவறானது என்பது புலப்படுகிறது.
அடுத்தாக முஹம்மதின் ஞான வெளிப்பாடு பற்றி நோக்குவோமாயின் சாஹிரின் கோமாளிதனத்தை அறியலாம்.
கல்கிபுராணம்: காண்டம் 1:அத்யாயம் 3:ஸ்லோகம்1
'சூத உவாஸ ;ததோ வஸ்தம் குருகுலே யத்வம் கல்கிம்
நிருக்ஸய சுஹ மஹேந்திர பர்வத ஸ்டித் இதோ ராம
ஆஸ்ரமம் பிரபோ'
“சூத முனிவர் கூறுகிறார்: கல்கிபகவான் குருகுல கல்வியை கற்கவேண்டியது உள்ளது. அதனால் கல்கியை குருகுல கல்விக்காக சக்தி வாய்ந்த நீண்ட
ஆயுள் கொண்ட பரசுராமர் வாழும் மஹேந்திர மலைக்கு அழைத்து செல்லுங்கள்”
அதாவது கல்கிபகவான் மனித அவதாரமாக ஜனிப்பதால்
அதனைபூரணத்துவ படுத்த குருகுலகல்வியை கற்கவேண்டும். அதற்காக அவரின் அம்சமான பரசுராமரிடமே கல்வி பயில்கிறார். அதுவும் மஹேந்திர பர்வதத்தில் இதே போல் முஹம்மதுக்கு அல்லாஹ் வந்து கல்வி பயின்று தந்தாரா?
கல்கி பகவானிற்குரிய விஷேஷ அட்ட குணங்களாக ஞானம், பலம், ஐஸ்வர்யம், வீர்யம், சக்தி, தேஜஸ், செளசீல்யம், வாத்சல்யம் திகழ்கிறது. இவற்றுள் ஒரு, சிலவே ஒத்துபோகின்றன. மற்ற அனைத்தும் முரணானது என்பதால் தாமாகவே சில குணங்களை இயற்றி தனது வாதத்திற்கு பலம் சேர்த்துள்ளான்.
கல்கி புராணம்:காண்டம்1:அத்தியாயம்2:ஸ்லோகம்5
'கட்யூர் பஹ்ஹிர் பரத்ர பஹ்ஹிர் தேவா;கரிஷ்யாமி கலிக்சவம் பவந்தோ,
பந்தவா தேவ்;ஸ்வம்சேன அவதாரிஸ்வதா'
“என் இவ்வவதார நோக்கம் பொல்லாத இக் கலியுகத்தை அகற்றுவதாக இருக்கும்;அதற்கு உறுதுணையாக என்அம்சம் பொருந்திய மூன்று சகோதரர்கள் உறுதுணையாக இருப்பர்.அதர்மத்தை அழித்து உங்களை காப்பாற்றவே நான் இவ்வவதாரத்தை எடுத்தேன்”
இச்சுலோகத்தின் படி கல்கிக்கு மூன்று சஹோதரர்கள் துணையாக நிற்பர். ஆனால் முஹம்மதுக்கோ உடன் பிறந்தோர் யாருமில்லை. ஆகவே சகோதரர்களை நண்பர் என திரித்து தனது கருத்தை மெய்பிக்க முயன்றுள்ளான்.
மற்றும் இங்கு இன்னொரு கோமாளிகூத்து என்னவெனில் முஹம்மது 'புராக்' என்ற குதிரையில் சவாரி செய்தாராம், கல்கிபகவானும் குதிரையில் போர் செய்வாராம் ஆகையால் இருவரும் ஒன்றாம். உலகில் 99சதவீதமான போர்
வீரர்கள் பயணிப்பது குதிரைகளில் தானே? உப்பு சப்பில்லாத கருத்துக்களை திணித்தால்கூட விபரம்தெரியாத இந்துக்கள் தலையை ஆட்டுவார்கள் என்ற எண்ணத்தில்தான் இப்படி குருட்டுதனமாக ஒரு கதையை உருவாக்கியுள்ளான்.
ஆக
இதுவரை நாம் பார்த்தவற்றில் சாகிரின் புரட்டு வாதத்திற்கு பலம்சேர்க்க அவன் வைத்த அனைத்து சான்றுகளுமே ஒன்றொக்கொன்று முரணானதாக உள்ளது. சாகிர் அமைத்த இக்கற்பனை கோட்டையின் அஸ்திவாரமே ஆட்டம் காணுகையில் அதற்கு மேல் அடிமேல் அடியாய் நபிக்கும் கல்கிபகவானுக்கும் இருக்கும் மிகப்பெரிய வித்யாசங்களை காண்போம்.
கல்கிபுராணம்:காண்டம்1:அத்யாயம் 2: ஸ்லோகம் 31
கல்கிபகவானுக்கு கவி,பிராக்ஞன், ஸுமந்தரன் என்று மூன்று சகோதரர்கள் இருப்பார்கள் ஆனால் நபிக்கு உடன் பிறந்தவர்கள் யாருமில்லை.
கல்கி புராணம்:காண்டம் 1:அத்யாயம் 2 ஸ்லோகம் 16…
“கல்கிபகவான் பிறக்கும்போது ஒரு தாதியாக ஷஷ்டி எனும் தேவி நாபிக்கொடியை அறுப்பாள், சிவன் தன் சிரம்தாழ்த்தி வணங்க கங்காதேவி ஸ்னானம் செய்விப்பார். ஸாவித்ரி தேவி உடலை சுத்தம் செய்தார். பூமாதேவி முதல்முறையாக பால்கொடுப்பார். வாயுதேவன் செய்த விக்ஞாபத்திற்கேற்ப தன் நான்குகரங்களை மறைத்து சாதாரண குழந்தையாக மாறுவார்”
இவற்றில் ஒன்றேனும் முஹம்மது நபியின் பிறப்பில் நிகழவில்லை
,
கல்கி புராணம் காண்டம்1:அத்யாயம்:6…
“கல்கிபகவான் பத்மாவதிக்கு தனது கிளியை தூதாக விடுகிறார்”.
இப்படி நபி எந்த மனைவிக்கு கிளியை தூது விடுகிறார்
கல்கிபுராணம்: காண்டம் 2:அத்யாயம் 3
“கல்கிபகவான் சிம்ஹல தீபத்தை சேர்ந்த பத்மாவதிதேவியை திருமணம் செய்து ஏகபத்தினி விரதனாய் திகழ்வார்”
நபியோ பதினொரு பெண்களை மணந்தான். அவர்களுள் யாருமே சிம்ஹலதீபத்தில் பிறக்கவில்லையே.
அத்தோடு சீக்கிய மதநூலான கிரந்த சாகிபு என்ற நூலில் பரமபுருஷனான கல்கியின் முதல்போர் சீனாவுடன் தான் என்றும், ஜின் என்று சொல்லப்படுகின்ற பௌத்தர்களையும், நிரீச்வரவாதிகளையும், தன்னை எதிர்த்து வரும் பல லக்ஷம் பைசாச மத (பிசாசு மதத்தவர்-இஸ்லாமிய) துஷ்டர்களையும், முகம்மதியர்களையும் கொன்றொழிப்பார். என்றும் சொல்லப்படுகிறது. இதையே கல்கிபுராணமும்கூறுகிறது.
இவ்விஷயம் முகம்மதுநபி விஷயத்தில் எவ்விதம் பொருந்தும்?முகம்மது நபி தான் வாழ்நாளில் பௌத்தர்களையோ, முகம்மதியார்களையோ, பல லக்ஷம் மனிதர்களையோ கொன்றொழித்ததாக எங்குமே பதிவுசெய்யபடவில்லைை.
இதுபோன்று ஒன்றல்ல, இரண்டல்ல முஹம்மது நபி கல்கிபகவானல்ல என்பதற்கு பல ஆதாரங்களை வைக்கமுடியும்.
No comments:
Post a Comment