Thursday, 13 September 2018


சிவபெருமானின் பாதத்தைப் பார்க்க இயலாத விஷ்ணு ?


    சிவபெருமானின் பாதத்தைக் காண்பதற்காக விஷ்ணு பன்றி ரூபத்தையும், அவரது தலையைக் காண்பதற்காக பிரம்மதேவர் அன்ன ரூபத்தையும் ஏற்று இறுதியில் தோல்வி கண்டதாகவும், அதனால் சிவனே முழுமுதற் கடவுள் என்றும் சிலர் கூறுவதைக் கேட்கிறோம்.

புராணங்களில் மூன்று வகையுண்டு: ஸாத்வீக புராணங்கள், ராஜஸீக புராணங்கள், மற்றும் தாமஸீக புராணங்கள். சாத்வீக புராணம் தான் உயர்ந்தது 18 புராணம்களை தொகுத்த வேத வியாசர் சொல்கிறார் புராணங்களில் ரத்னம் என்பது விஷ்ணு புராணம். விஷ்ணுவே உயர்ந்த பரம்பொருள் அப்படி இருக்க ஏன் சிவனை உயர்ந்த தெய்வமாக சிவபுராணம், லிங்க புராணம் ஆகியவை சொல்ல வேண்டும் என்ற கேள்வி வரலாம்.

கலியுகம் என்பது குழப்பத்தின் யுகம் ! யார் பரம்பொருள் என்பதில் குழப்பம் உண்டாகும் என்பதே இந்த யுகத்தின் விதி ! கர்மா மகாவிஷ்ணு தான் பரம்பொருள் என அறிவதற்கு உங்கள் கர்ம வினை ஒத்துழைப்பு தரவேண்டும். அப்போது தான் கலியுகத்தின் மிக முக்கிய மாயை விலகும் எல்லோரும் விஷ்ணுவே பரம்பொருள் என அறிய முடியாது !

இந்த பிறவியில் நியாயமாக சிவ பக்தி செய்தால் இறப்பிற்குப் பின்னர் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு சிவ லோக வாழ்வை அனுபவித்து பின்னர் பூமியில் விஷ்ணு பக்தி செய்து பிறப்பு இறப்பு இல்லாத முக்தி அடைவர் . விஷ்ணுவால் மட்டும் தான் முக்தி தரமுடியும் என சிவனே பத்ம புராணம்ல சொல்லி உள்ளார் .

இதனை எவ்வாறு அணுகுவது?  புராணங்களுக்கு மத்தியில் ஏதேனும் அபிப்பிராய பேதங்கள் இருப்பின், ஸாத்வீக புராணங்களின் கருத்தினை ஏற்க வேண்டும் என்று பத்ம புராணம்,மத்ய புராணம்,மனுவும் தனது ஸ்மிருதி சாஸ்திரத்தில் கூறுகிறார்.


பதினெட்டு புராணங்கள் மூணு பிரிவுகளை  பத்ம புராணம் (உத்தர காண்ட  236.18-21) இல்…. 

சிவபெருமான்,  உமா தேவிக்கு சொல்கிறார் ...

"ஓ அழகான பெண் (உமா தேவி):-  விஷ்ணு, நாரத, பாகவத, கருடன், பத்ம மற்றும் வராக புராணங்கள் நற்குணத்தின் (சத்வ குண) புராணங்கள் என்பதை அறிய வேண்டும். ப்ரஹ்மாண்ட, பிரம்மா வைவர்த்த, மார்க்கண்டேயர், பவிஷ்ய, வாமன மற்றும் பிரம்மா ஆகியவை தீவிர (ரஜோ குண) புராணங்களாக உள்ளன. மத்ஸ்ய, கூர்ம, லிங்க, சிவ, ஸ்கந்த அக்னி ஆகியவை அறியாமை (தமோ குண) புராணங்களாக உள்ளன. "

மேலும்,  மத்ஸ்ய புராணம் , 290 வது அத்தியாயத்தில் கூறுவது
மத்ஸ்ய புராணம் (53.65, 68-69)

" ஸாத்விக  புராணங்கள் பகவான் ஹரியின்  புகழையும். ரஜோ குண புராணங்கள் பிரம்மா புகழையும், தாமச குண  புராணங்கள் சிவன் மற்றும் அக்னி ஆகியோர்களின் புகழை சொல்கிறது “

அதன்படி, எல்லா புராணங்களிலும் விஷ்ணுவின் உயர்தன்மை நிலைநாட்டப்பட்டுள்ள சமயத்தில், மேற்குறிப்பிட்ட கதையினை நாம் தாமஸீக புராணமான லிங்க புராணத்தில் காண்கிறோம். விஷ்ணுவே பரம்பொருள் என்னும் வேதஞானத்தின் இறுதி முடிவிற்கும் ஸாத்வீக புராணங்களின் அதே முடிவிற்கும் இக்கதை முரண்பட்டதாக இருப்பதால், இது நிராகரிக்கப்பட வேண்டியதாகும்.

இதனை ஸ்கந்த புராணத்தில் சிவபெருமானே முருகனிடம் கூறுகிறார்.

ஷிவ-ஷாஸ்த்ரேஷு தத் க்ராஹ்யம் பகவச்-சாஸ்திர-யோகி யத்
பரமோ விஷ்ணுர் ஏவைகஸ் தஜ் ஜியானம் மோக்ஷ -ஸ்தானம்
ஷாஸ்திராணம் நிர்ணையஸ் தவ் ஏஷஸ் தத் அன்யன் மோஹனாய ஹி

'சிவ சாஸ்திரங்களின் கூத்துக்கள் விஷ்ணு சாஸ்திரங்களோடு ஓத்திருக்கும்போது மட்டுமே ஏற்றுக்கொள்ளவேண்டும். பகவான் விஷ்ணு மட்டுமே முழுமுதற் கடவுள். மேலும், அவரை பற்றிய அறிவே விடுதலைக்கான வழி. அதுவே  எல்லா சாஸ்திரங்களின் முடிவு. பிற எல்லா முடிவுகளும் மக்களை மோகிப்பதாகாது' என்கிறார்.

எனவே, மேற்குறிப்பிட்ட கதையானது  அறியாமையினால் கவரப்பட்டு கிருஷ்ணரின் உயர்தன்மையை அறிய இயலாமல் இருக்கும் சிவபெருமானது பக்தர்களிடம் நம்பிக்கையை அதிகரிப்பதற்கானதாகும்

ஏதேனும் ஒரு தேவரின் மீது வைக்கப்படும் நம்பிக்கை அவர்களை படிப்படியாக உயர்த்தும் என்பதால், அந்த நம்பிக்கையை கிருஷ்ணரே பலப்படுத்துகிறார் என்பதை நாம் கீதையில் (7.21) காண்கிறோம்


‘எல்லோரது இதயத்திலும் நான் பரமாத்மாவாக இருக்கிறேன். தேவர்களை வழிபட வேண்டுமென ஒருவன் விரும்பும்போது, அந்த குறிப்பிட்ட தேவனிடம் பக்தி செய்வதற்கான அவனது நம்பிக்கையை நானே பலப்படுத்துகிறேன்.’ - பகவத் கீதை - 7 -21

‘இத்தகைய நம்பிக்கையுடன் இணைந்து, அவன் ஒரு குறிப்பிட்ட தேவரை வழிபட்டு, தனது ஆசைகளைப் பூர்த்தி செய்ய முயற்சி செய்கிறான். ஆனால் உண்மையில் இந்த நன்மைகளெல்லாம் என்னால் மட்டுமே அளிக்கப்படுபவையாகும்’ - பகவத் கீதை - 7 -22

‘தேவர்களை வழிபடும் சிற்றறிவு படைத்த மக்களது பலன்கள், தற்காலிகமானதும் ஓர் எல்லைக்கு உட்பட்டதுமாகும். தேவர்களை வழிபடுவோர் தேவர்களின் உலகங்களுக்குச் செல்வர், ஆனால் எனது பக்தர்கள் இறுதியில் எனது உன்னத உலகை அடைகின்றனர்’ - பகவத் கீதை - 7 -23

எந்த தெய்வத்தையும் வழிபடாமல் இருப்பவனை விட சிவனை வழிபடுபவன் ஆயிரம் மடங்கு சிறந்தவன். சிவ பக்தியே மறுபிறவியில் அல்லது சிவனை வழிபட்ட அதே பிறவியில் விஷ்ணுவே பரம்பொருள் என உணர வைக்கும் விஷ்ணுவே பரம்பொருள் என உணர்ந்தாலும் முறையாக வழிபட்டால் ஓரே பிறவியில் முக்தி இல்லை என்றால் மீண்டும் பிறவி எடுக்க வேண்டும் பிறவி என்பது பெரும் கடல் அதை கடக்க பல ஆயிரம் பிறப்புகள் கடக்க வேண்டும்
  
எனவே, பகவான் கிருஷ்ணர் / விஷ்ணு /நாராயணர் - முழுமுதற் கடவுள் என்று எல்லா ஸாத்வீக சாஸ்திரங்களும் கூறுவதால் நாமும் புராணங்களில் உள்ள உண்மையை புரிந்து கொள்ளலாம்.


No comments:

Post a Comment