Friday 7 September 2018


உபநிடதங்கள்  என்ன ?




சான்றோர் உப, நி, ஸத் எனும் மூன்று பதங்களின் கூட்டே உபநிஷத் என்று கூறுவர்.

"உப"எனும் பதம் ஆன்ம வேட்கை உடையவன், ஆத்ம ஞானியான குருவின் பக்கத்திலிருப்பதையும் "நி"எனும் பதம் குருவின் பணியில் தன்னை முற்றிலும் ஈடுபடுத்திக் கொள்வதையும்,"ஸத்"எனும் பதம் ரஹசியமான வித்தைகளை பெறுவதையும் குறிப்பதாகப் பெரியோர்கள் உள்ளனர்.
                                                                                              "யதா வை பலீ பவதி அத உத்தாதி பவதி,
          உத்திஷ்டன் பரிசரிதா பவதி,                     
 பரிசரன் உபதஸ்ஸா பவதி, உபஸீ தன் த்ரஷ்டா பவதி,  ச்ரோதா பவதி, விஜ்ஞாதா பவதி".              (சாந்தி பாடம் 7-8-1).

மனிதன் வலுவுற்றதும் எழுந்து நிற்கிறான்; எழுந்து நின்றதும் குருவுக்குப் பணிவிடை செய்கின்றான்; பிறகு குருவின் அருகில் (உப) சென்று அமருகிறான் (ஸத்); அங்கிருந்து குருவின் வாழ்க்கையைக் கூர்மையாகக் கவனிக்கிறான்; அவரது மொழிகளைக் கேட்கிறான்; மனனம் செய்கிறன்; ஆய்ந்து தெளிகின்றான்; பின் அதன்படி நடந்து கொள்கிறான்; அதிலிருந்து அவனுக்கு இறுதியில் ஆத்ம ஞானமெனும் அனுபூதி வருகிறது.”

ஆதலினால், உபநிடத உண்மைகளை தக்கதொரு குருவின் அருகிருந்து பணிபுரிந்தே அறிந்துணர வேண்டும். அத்தகைய பக்குவம் வருவதற்கே, பலன் கருதாப் பணி, தருமம் மிகுந்த வாழ்க்கை முறை, உண்மை தேடும் வேட்கை ஆகிய ஒழுக்கங்களை நமக்குப் பெரியோர்கள் கற்கத் தந்திருக்கிறார்கள். எனவே உபநிடதக் கருத்துக்களை, புத்தக வாயிலாகப் பயில்வது, பயணம் மேற்கொள்ளாதவன் வெறும் பயணப்புத்தகத்தில் ஊர் சுற்றுவது போலத்தான். என்றாலும், உபநிடதங்களைப் பற்றித் தெரிந்து கொள்ளவும், படிப்பதன் மூலம் மேலும் அறிவிலும், அனுபவத்திலும் முதிர்ந்தவர்களிடத்தே இவ்வுண்மைகளைத் தெளிந்து கொள்ளவும், என்றேனும் ஓர்நாள் தக்க குருவைத் தேடிச் செல்லும் வேட்கைக்கு ஒரு வித்தாக இருந்துதவும்

108 உபநிஷத்துக்கள்

சாமானிய வேதாந்த உபநிடதங்கள்

ரிக் வேதத்தைச் சார்ந்தவை மூன்று:

1.ஆத்மபோதம்
2.கௌஷீதகீ
3.முத்கலம்

கிருஷ்ண யஜுர்வேதத்தைச் சார்ந்தவை ஒன்பது:

4.அக்ஷி
5.ஏகாக்ஷரம்
6.கர்ப்பம்
7.பிராணாக்னிஹோத்ரம்
8.சுவேதாசுவதரம்
9.சாரீரகம்
10.சுகரகசியம்
11.ஸ்கந்தம்
12.ஸர்வஸாரம்

சுக்ல யஜுர்வேதத்தைச் சார்ந்தவை ஆறு:

13.அத்யாத்மம்
14.நிராலம்பம்
15.பைங்களம்
16.மந்த்ரிகா
17.முக்திகம்
18.ஸுபாலம்

சாம வேதத்தைச் சார்ந்தவை நான்கு:

19.மஹத்
20.மைத்ராயணீ
21.வஜ்ரஸூசி
22.சாவித்ரீ

அதர்வண வேதத்தைச் சார்ந்தவை இரண்டு:

23.ஆத்மா
24.சூர்யம்

சன்னியாச உபநிடதங்கள்

ரிக் வேதத்தைச் சார்ந்தவை ஒன்று:

25.நிர்வாணம்

கிருஷ்ண யஜுர்வேதத்தைச் சார்ந்தவை மூன்று:

26.அவதூதம்
27.கடருத்ரம்
28.பிரம்மம்

சுக்ல யஜுர்வேதத்தைச் சார்ந்தவை ஆறு:

29.ஜாபாலம்
30.துரீயாதீதம்
31.பரமஹம்ஸம்
32.பிக்ஷுகம்
33.யாஞ்ஞவல்க்யம்
34.சாட்யாயணி

சாம வேதத்தைச் சார்ந்தவை நான்கு:

35.ஆருணேயம்
36.குண்டிகம்
37.மைத்ரேயீ
38.ஸன்னியாஸம்

அதர்வண வேதத்தைச் சார்ந்தவை மூன்று:

39.நாரத பரிவ்ராஜகம்
40.பரப்பிரம்மம்
41.பரமஹம்ஸ பரிவ்ராஜகம்

யோக உபநிடதங்கள்

ரிக் வேதத்தைச் சார்ந்தவை ஒன்று:

42.நாதபிந்து

கிருஷ்ண யஜுர்வேதத்தைச் சார்ந்தவை பத்து:

43.அமிருதநாதம்
44.அமிருத பிந்து
45.க்ஷுரிகம்
46.தேஜோபிந்து
47.தியான பிந்து
48.பிரம்ம வித்யா
49.யோக குண்டலினீ
50.யோகதத்வம்
51யோகசிகா
52.வராஹம்

சுக்ல யஜுர்வேதத்தைச் சார்ந்தவை நான்கு:

53..அத்வயதாரகம்
54.த்ரிசிகிப்பிராம்மணம்
55.மண்டலப்பிராம்மணம்
56.ஹம்ஸம்

சாம வேதத்தைச் சார்ந்தவை இரண்டு:

57.ஜாபலதர்சனம்
58.யோகசூடாமணி

அதர்வண வேதத்தைச் சார்ந்தவை மூன்று:

59.பசுபதப்பிரம்மம்
60.மஹாவாக்யம்
61.சாண்டில்யம்

சாக்த உபநிடதங்கள்

ரிக்வேதத்தைச் சார்ந்தவை மூன்று

62.த்ரிபுரா
63.பஹ்வ்ருசா
64.ஸௌபாக்யலக்ஷ்மி

கிருஷ்ண யஜுர்வேதத்தைச் சார்ந்தவை ஒன்று:

65.ஸரஸ்வதிரஹஸ்யம்

அதர்வண வேதத்தைச் சார்ந்தவை ஐந்து:

66.அன்னபூர்ணா
67.த்ரிபுராதாபனீ
68.தேவீ
69.பாவனா
70.ஸீதா

சைவ உபநிடதங்கள்

ரிக்வேதத்தைச் சார்ந்தவை ஒன்று

71.அட்சமாலா

கிருஷ்ண யஜுர்வேதத்தைச் சார்ந்தவை ஐந்து:

72.காலாக்னிருத்ரம்
73.கைவல்யம்
74.தட்சிணாமூர்த்தி
75.பஞ்சப்பிரம்மம்
76.ருத்ரஹ்ருதயம்

சாம வேதத்தைச் சார்ந்தவை இரண்டு:

77.ஜாபாலி
78.ருத்ராட்ச ஜாபாலம்

அதர்வண வேதத்தைச் சார்ந்தவை ஆறு:

79.அதர்வசிகா
80.அதர்வசிரம்
81.கணபதி
82.பிருஹஜ்ஜாபாலம்
83.பஸ்மஜாபாலம்
84.சரபம்

வைணவ உபநிடதங்கள்

கிருஷ்ண யஜுர்வேதத்தைச் சார்ந்தவை இரண்டு:

85.கலிஸந்தரணம்
86.நாராயணம்

சுக்ல யஜுர்வேதத்தைச் சார்ந்தவை ஒன்று:

87.தாரஸாரம்

சாம வேதத்தைச் சார்ந்தவை இரண்டு:

88.அவியக்தம்
89.வாஸுதேவம்

அதர்வண வேதத்தைச் சார்ந்தவை ஒன்பது:

90.கிருஷ்ணம்
91.கருடம்
92.கோபாலதாபனீ
93.த்ரிபாத்விபூதி மஹாநாராயணம்
94.தத்தாத்ரேயம்
95.நரசிம்மதாபனீ
96.ராமதாபனீ
97.ராமரஹஸ்யம்
98.ஹயக்ரீவம்

10 முக்கிய உபநிஷத்துக்கள். அவையாவன:

99.ஈசா வாஸ்ய உபநிடதம்

(சுக்ல யசூர்வேதம் - வாஜஸனேய சாகை)

100.கேன உபநிடதம்

(சாம வேதம் - தலவகார சாகை)

101 கடோபநிடதம்

(கிருஷ்ணயஜுர் வேதம் - தைத்திரீய சாகை)

102 பிரச்ன உபநிடதம் (அதர்வண வேதம்)

103 முண்டக உபநிடதம் (அதர்வண வேதம்)

104 மாண்டூக்ய உபநிடதம் (அதர்வண வேதம்)

105 ஐதரேய உபநிடதம் (ரிக் வேதம் - ஐதரேய சாகை)

106  தைத்திரீய உபநிடதம்

(கிருஷ்ணயஜுர் வேதம் - தைத்திரீய சாகை)

107 பிரகதாரண்யக உபநிடதம்

(சுக்லயஜுர் வேதம் - கண்வ சாகை, மாத்யந்தின சாகை)

108 சாந்தோக்யம் (சாம வேதம் - கௌதம சாகை)

இவற்றுள் சொற்ப அளவு உபநிஷதங்களை பின்வரும் தொடரில் பார்ப்போம்..


1 comment: