இராமாயணத்தில் ராமர் சிவனை வழிபட்டாரா ?
ராவண வதம் முடிந்ததும் ஸ்ரீராமன் சீதை பிராட்டியுடனும், வானர சேனைகளுடனும், விபீஷணனுடனும், புஷ்பக விமானத்தில் புறப்படுகிறார்.
14 வருடங்கள் முடிந்தவுடன் வரவில்லை எனில் ஒரு நாள் கூட தாமதமானாலும் தீயில் இறங்கி விடுவேன் என ஸ்ரீ பரதாழ்வான் சபதம் மேற்கொண்டிருப்பதால், புஷ்பக விமானத்தில் புறப்படும் ஸ்ரீராமன், அயோத்தியில் உள்ள பரத்வாஜ ஆஸ்ரமத்திற்கு, வழியில் எங்கும் இறங்காது வந்து, அனுமன் மூலம் பரதனுக்கு தங்கள் வருகையை தெரிவிக்கிறார்.
ஸ்ரீலங்காவிலிருந்து, சீதையுடனும் பரிவாரங்களுடனும் புறப்பட்ட ஸ்ரீராமர் பரதனைக் காக்க நேரே அயோத்தி வந்ததாகத் தான் வால்மீகி மற்றும் கம்பன் என இரண்டு ஆதாரபூர்வமான ராமாயணங்களிலும் காணப்படுகிறது. அவர் வேறு எங்கும் இறங்கியதாகவோ, லிங்கபூஜை செய்ததாகவோ, எந்தக் குறிப்பும் இல்லை.
ஒரே பகலில் ஸ்ரீலங்காவிலிருந்து அயோத்தியாவிற்கு புஷ்பக விமானத்தில் வந்து கொண்டிருக்கும் போது ராவணன் சீதையை பிரிந்த பிறகு நடந்த நிகழ்ச்சிகளையும், தான் கடந்து வந்த இடங்களையும் சீதையிடம் சுட்டிக் காட்டிக் கொண்டு வரும் போது...
“அத்ர பூர்வம் மகாதேவ: ப்ரஸாதம் அகரோத் ப்ராபு:” என்கிறார் ஸ்ரீராமர்.
இதன் பொருள்: ஸமுத்திர ராஜன் தன் மீது அணை கட்டிக் கொள்ளச் சொன்ன நிகழ்ச்சியைக் குறிப்பது. அதனை உறுதி செய்யும் விதமாக, சேது தரிசனம் பாபத்தினை போக்கக்கூடியது என்றும் ஸ்ரீ ராமன் கூறுகிறார்.
இங்கு மகாதேவம் எனப்படுவது கடல் ராஜனை குறிப்பது,. சிவனை குறிப்பதல்ல. மேலும் அப்போது சீதையும் ஸ்ரீராமனுடன் இல்லை. மேலும் லிங்கபூஜைக்கு காரணமாக கூறப்படும் ராவண வதமும் நடைபெறவில்லை.
போரில் கொல்வது பாபமாகாது, கொல்லப்படுவது வீர ஸ்வர்க்கத்தினை தரும். இது தர்மம். மேலும் சிவனே, ராமனை ராவண வதத்திற்காக நேரில் சென்று துதி செய்கிறார் (ஸர்க்கம் 120- ஸ்லோகம் 10-15)
ராமர், ஒருவேளை சிவ பூஜை செய்ய வேண்டி இருந்தால் நேரில் சிவன் வந்த போதே செய்திருக்கலாமே?
பல அவதாரங்களில் பகவான் தர்மத்தினைக்காக்கும் பொருட்டு பல தீயவர்களை வதம் செய்துள்ளார், மேலும் முருகன், சூரனை சம்ஹாரம் செய்துள்ளான். அதனால் முருகன் பிரம்மஹத்தி தோஷத்தினை அடையவில்லை. அப்பொழுதெல்லாம் பகவானுக்கோ, முருகனுக்கோ ஏற்படாத பிரம்மஹத்தி தோஷம், ராவணவதத்தின் போது மட்டும் ஸ்ரீ ராமனுக்கு
எப்படி ஏற்படும்?
பிற்காலத்தில் இந்த தவறான பொய் செய்தி வேறு சில கோயில்களில் ராமர் லிங்க பூஜை செய்ததாக ஸ்தல புராணமாக மாறிவிட்டது. மாயூரம் தாலுக்கா, திருகுரைக்காவல் என்னும் ஊரில் உள்ள சிவன் கோயிலில் கூட இதை போன்ற ஸ்தல புராணம் உள்ளது.
தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் உள்ள சிவன் கோயிலில், தோஷம் நீங்க
ஸ்ரீராமர் 108 சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக ஸ்தல புராணம் கூறுகிறது.
இவை ஸ்ரீ ராமாயணத்தில் இல்லாத தவறான பொய்யான விஷயங்கள்... மீண்டும் மீண்டும் ஆன்மீக பத்திரிகைகளில், ஆன்மீக பிரசாரகர்களால் செய்யப்படும் இது போன்ற கட்டுக்கதைகள் உண்மையான ஆன்மீக, பக்தி, வளர்ச்சியை கெடுத்துவிடும்.
No comments:
Post a Comment