Monday, 27 August 2018


முகம்மது நபி தோன்றுவதற்கு முன் அரபு நாடுகளில் சிவ வழிபாடு நடைமுறையில் இருந்தது.



முகமது நபியின் பெரியப்பா ஓமர் பின் ஹாஸம் ஒரு கவிஞர் ஆவார். அவரது கவிதைகளில் ஹிந்த் மற்றும் ஹிந்துக்களைப் பற்றிய பல குறிப்புகள் இருக்கின்றன. மக்கள் அவரைஅபுல் ஹகீம்என்று மரியாதையோடு அழைத்தனர். இதற்குப் பொருள்அறிவின் தந்தைஎன்பதாகும்.

ஸை அருல் அகுல்என்ற கவிதைத் தொகுப்பில் காணப்படும் இவரது கவிதை ஒன்று..

கஃபாவிக் ஜிகராமின் அலூமின் தப் அஸேரூ
கலூபன் அமத்தூல் ஹவா தஜக்கரூ (1) 
      
வமத் ஜகேரிஹா ஊதன் எல்லா வத தில்வரா
வலுகயானே ஜாத் அல்லாஹ் ஹே யௌம தப் அஸேரூ (2)

அஹலோல்லாஹ் ஜெஹ் அரம்மன் மஹாதேவ
மனாஜில் இலமுத்தினே மினஹம வஸயதுரூ (3)

ஸஹவீ கேயாம் ஃபீ மகாமில் ஹிந்தே யௌமன்
வயகூலன் லாதஹஜன் ஃப இத்ரக் தவஜ்ஜரூ (4)

மஅஸ்ஸயரே அகலாகுன் ஹஸனன் குல்லஹும் (5)

நஜமுன் அஜாஅத் ஹும்ம காபூல் ஹிந்து (6)

இதன் பொருள் வருமாறு

எந்த மனிதன் தனது வாழ்க்கை முழுவதையும் பாபச் செயல்களிலும் அதர்மத்திலும் கழித்துவிட்டானோ காம குரோதச் செயல்களால் வாழ்க்கையை நாசப்படுத்திக் கொண்டு விட்டானோ அவன் பச்சாதாபத்தோடு வாழ்வின் இறுதியில் நல்ல வழியில வர விரம்பினால் அவனுக்கு அது சாத்தியமாகுமா?

சாத்தியமாகும் ! அத்தகையவன் வாழ்வில் ஒருமுறை மனப்பூர்வமாக ஹ்ருதய சுத்தியோடு சிவனை தியானித்தால் உயர்ந்த ஆன்மிக நிலையை அடைவது உறுதி.

இறைவா ! என் வாழ்நாள் முழுவதையும் நீ எடுத்துக்கொண்டுஎனக்கு ஹிந்து தேசத்தில் ஒரே ஒரு நாள் ஜீவிக்க அருள் புரிவாய். ஏன்னெல் அந்த மண்ணை அடைந்தவுடன் மனிதன் ஜீவன் முக்தனாவது நிச்சயம்.

அந்த தேசத்தில (ஹிந்து தேசம்) யாத்திரை மேற்கொள்வதால் அனைத்துப் புண்ணிய கர்மாக்களின் பலனையும் ஒருவன் அடைவதோடு ஹிந்து மஹாபுருஷர்களின் சத்ஸங்கமும் கிடைத்து விடுகிறது.

தில்லி ஸ்ரீ லக்ஷ்மி நாராயணர் ஆலயத்தில் (பிர்லா மந்திர) கீதா வாடிகாவில் மேலே கண்ட இரண்டு அரபுக் கவிதைகளும் அவற்றின் அர்த்தத்தோடு பொறிக்கப்பட்டுள்ளன.

அரபு தேசத்தில் முகமது நபி தோன்றுவதற்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அரபு தேசத்தில் வாழ்ந்தவர்கள் ஹிந்துக்களை மிகவும் மரியாதையுடன் கௌரவத்துடன் போற்றி வந்துள்ளனர். அரபு நாட்டில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை அகில அரபியக் கவிஞர்கள் மாநாடு நடைபெறும். மிக சிறந்த கவிதை தங்க தட்டில் பொறிக்கப்பட்டு இந்த மாநாட்டில் வைக்கப்படும் பின்பு இது மெக்காவில் உள்ள காபாவிற்கு பார்வைக்காகவும் பாதுகாப்பிற்காகவும் வைக்கப்படும். இந்த ஆலயம் மக்கேசுவரம் என்று வரலாற்றில் அறியப்பட்டது. மஹேஸ்வரன் என்பது சிவநாமங்களில் ஒன்று என்பது நமக்கு தெரியும்.

காபா சிவாலயத்தை முகமது நபி கைப்பற்றிய பின்னால் அந்த ஆலயத்தில் இருந்த விக்ரஹங்களை உடைக்கவும் அங்கிருந்த விலைமதிப்பற்ற பல நல்ல நூல்களையும் எரிக்கவும் செய்தார். ஆனால் சில அரபு கவிஞர்கள் அவரிடம் மன்றாடி கேட்டுக்கொண்டதால் ஒரு சில பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட்ட கவிதைகள் எரிக்கப்படாமல் விடப்பட்டன.

பின்னர் வந்த கலஃபா ஹருன் அல் ரஷீத்எரிக்கப்படாமல் விடப்பட்டக் கவிதைகளை தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிட்டார். இந்த நூல்ஸைஅகுல்எனப் பெயரிடப்பட்டது. இந்த நூலில் பகவான் மஹாதேவர் (சுவன்) ஹிந்து விக்ரமாதித்யா போன்ற சொற்கள் மிகவும் மரியாதையுடன் பக்தியுடன் குறிப்பிடப்பட்டுள்ளன

இந்த நூல் இஸ்தான்புல் (டர்கி) அரசு நூலகத்தில் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இந்த நூலில் மிகவும் குறிப்பிடதக்க ஒரு கவிதை உள்ளது. இதை இயற்றியவர் முகமத நபிக்கு பல நூற்றாண்டுகள் முன் வாழ்ந்தலபிபின் அகதப் பின் துர்பாஎன்ற கவிஞர் ஆவார். அந்த கவிதை

அயா முபார கேல் அரஜ் யூ ரௌயே நோஹா மிலன் ஹிந்தேவ
அராத கல்லாஹ் மஜ்யோனஜ்ஜேல் ஜிகரதுன் (1)

வஹல் தஜல்லீயதுன் எனானே ஸஹபீ அக அதுன் ஜிகரா
வஹாஜே ஹீ யோனஜ்ஜேலுரஸுல் மிலன் ஹிந்த்துன் (2)

யே குலுநல்லஹா அஹஜல் அரஜ அல்லமின் குல்லஹம்
ஃபட்டப்யூ ஜிகரதுல் வத ஹக்குனா மஜம் யோபஜ்ஜேலதுன் (3)

வா ஹோவ அல முஜ்ஜம் வாலயஜுரா மெஹல்லஹே தன ஜிலானா
ஃபாய்நோமா யா அரவ்வய்யோ முத்தபீன் யோபஸ்ஸேரியோ நஜதுன் (4)

வா இஸனேன் ஹுமாரிக் அதர் நாயிஹின்கா அகாவதுன் !
வா அஸ்நத ஆல ருதன்வோஹோவா மஸா எர்அதுன் (5)

(ஸை அருல் அகில் பக் – 157)

இதன் அர்த்தம்

புனித ஹிந்து பூமியே ! நீ பாக்யசாலி ! ஏனெனில் இறைவன் தன் பேரறிவை உனக்கன்றோ வழங்கியுள்ளான். (1)

ஹிந்து ரிஷிகளின் மூலம் நான்கு வேதங்களாக வெளிப்பட்ட அவனது பேரறிவு உலகின் நான்கு திசைகளிலும் நான்கு தீபஸ்தம்பங்களாக சுடர்விட்டுப் பிராகாசிக்கின்றன. (2)

தனது பேரறிவு வெளிப்பட்டு விளங்கும் இந்த வேதங்களைப் பின்பற்றி வாழுமாறு மனித குலத்திற்கு இறைவன் ஆணையிட்டுள்ளான். (3)

அறிவு களஞ்சியமான யஜுர் சாமம் ஆகியவை இறைவனின் வரப்பிரசாதம். ஆகையால் சகோதரர்களே அவற்றை பக்தியுடன் பாராயனம் செய்வீர். அவை மோக்ஷத்திற்கு வழிகாட்டுபவை. (4)

ரிக் அதர்வணம் ஆகிய இருவேதங்களும் சகோதரத்துவத்தை போதிக்கின்றன. இந்த வேதங்களால் தெளிவடைந்த யாரும் இருளை நோக்கித் திரும்பிச் செல்ல மாட்டார்கள்.(5)

எனவே, முகம்மது நபி தோன்றுவதற்கு முன்னால் அரபு நாடுகளில் சிவ வழிபாடே நடைமுறையில் இருந்தது.

இந்தியப் புராணங்களின் படி, விக்கிரமாதித்யன் மத்தியத்தரைக்கடல் நாடுகள் முழுவதையும் ஆண்டுவந்தான் என்றுள்ளது. விக்கிரமாதித்தியனின் கல்வெட்டு ஒன்று தங்கத்தட்டில் பதிக்கப்பட்டு, மெக்காவில் தொங்கவிடப்பட்டிருந்தது என்று ஷாயர்-உல்-ஓகுல் என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நூல் இஸ்தான்புல், துருக்கியில் உள்ள நூலகத்தில் உள்ளது.

BCE 14ம் நூற்றாண்டைச் சேர்ந்த பாகோஷ்காய் கல்வெட்டு வேதக்கடவுளர்கள் அங்கிருந்த மக்களால் வழிப்பட்டதாகக் கூறுகின்றது. அதனால் முகமதியம் தொன்றுவதற்கு முன்னாக், அப்பகுதிகளில் இந்தியர்கள் இருந்தனர் என்று தெரிகிறது.
முகமது நபியால் (570-632 CE) இஸ்லாம் தோற்றுவிக்கப்பட்டு, பிறகு காலிப்புகளால் அம்மதம் பரவ ஆரம்பிப்பதற்கு முன்னர், இந்துக்கள் அங்கிருந்தனர். அதற்குப் பிறகும் தொடர்புகள் இருந்தன. கிரேக்கர் முதல் மற்றவர்கள் இந்திய பல்கலைக்கழகங்களுக்குச் சென்று படித்து வருவது வழக்கம்

ஆனால், முகமதிய மதம் வளர ஆரம்பித்தவுடன், நிலைமை மாறியது. பல பல்கலைக்கழகங்கள் தாக்கப்பட்டன; நூலகங்களில் இருக்கும் புத்தகங்கள் அழிக்கப்பட்டன. பண்டிதர்கள், வல்லுனர்கள் தூக்கிச் செல்லப்பட்டனர் அல்லது கொல்லப்பட்டனர். இதனால், கல்வியறிவு, படிப்புகள் முதலியன குறிப்பிட்ட மடாலயங்களுக்குள் சுருங்கின. இதனால், இந்தியாவிலிருந்து பண்டிதர்கள் வரவழைக்கப்பட்டு, அவர்கள் மூலம் சமஸ்கிருத புத்தகங்கள், அரேபியத்தில் மொழிபெயர்க்கப்பட்டன. சுன்னிமத உமயாத் காலிப் ஆட்சியை (661-750 CE), ஷியாமத அப்பாஸித் புரட்சி தூக்கியெறிந்து, அப்பாஸித் ஆட்சியை நிறுவியது (750-1258 CE).

அக்காலத்தில் தான் சமஸ்கிருத நூல்கள் பல அரேபியத்தில் மொழிபெயர்க்கப்பட்டன. அல்-மன்சூர் (700-775 CE) காலத்தில் அரேபியத்தில் மொழிபெயர்க்கப்பட்டன. கணிதம், வானியல், மருத்துவம், தத்துவம் போன்ற புத்தகங்கள் அதிக அளவில் மொழிபெயர்க்கப்பட்டன.

ஹருன் அல்-ரஷீத் (786-809 CE) காலத்தில் சுஸ்ருத மற்றும் சரக சம்ஹிதைகள் அரேபியத்தில் மொழிபெயர்க்கப்பட்டன. இந்து மருத்துவர்களே அங்கிருந்தனர். இதனால், மனிதனின் இறப்பு-இறப்பு சுழற்சி, ஆத்மா, ஆத்மாவின் அழியாத்தன்மை, மறுபிறப்பு, அவதாரம், போன்றவை அரேபியர் மற்றும் பாரசீக கவிஞர்கள், எழுத்தாளர் மற்றும் இறையியல் வல்லுனர்களின் மனங்களை நெருடச் செய்தன. சூபித்துவத்தில் அவை பெருமளவில் வெளிப்பட்டன.

இந்தியப் பேரரசன் விக்கிரமாதித்தனின் தங்கத் தட்டு /வட்டில் காபா ,மெக்காவில் கண்டெடுக்கப்பட்டுள்ளது . இது விக்ரமாதித்தனின் அரசு அரபியன் வளை குடாவில் பரவி இருந்ததை உறுதி செய்கிறது.

((Ref: page 315 of a volume known as ‘Sayar-ul-Okul’ treasured in the Makhtab-e-Sultania library in Istanbul, Turkey)

அரேபியர்கள் நாடோடிகளாய் இருந்த காலத்தில் விக்கிரமாதித்தன் அரச சபையில் இறுதி சென்ற இந்து மத வேதியர்கள் அரேபியர்களிடையே இந்து மதம் பற்றிக் கூற ,இந்து மதம் அங்கு தழைக்கத் துவங்கியது .

       காபாவில் முன்பு நடைமுறையில் இருந்து வந்த OKAJ என்னும் வழக்கம் 
           இஸ்லாத்திற்கு முற்பட்டது .
        இப்போது வழக்கில் உள்ள ஹஜ் புனித யாத்திரையில் உள்ள வழக்குகளும் 
           இஸ்லாத்திற்கு முற்பட்டவை   ,இந்து மத அடிப்படையிலானது .
       சிவ வழிபாட்டுக் குறிகளை இன்றும் அங்கு  காணலாம் .
       காபாவில் வழிபடப்படும் புனித கல் சிவ ஆராதனையே .
       காபாவில் 360 விக்ரகங்கள் உள்ளன .
       இவற்றில் சனீஸ்வர விக்ரகம் அழிக்கப் பட்டுவிட்டது .
       சந்திரனின் விக்ரகஹுமும் அழிக்கப்படது .
       இஸ்லாத்திற்கு முன் நவக்ரக வழிபாடு இருந்துள்ளது .
       சிவனின் தலையில் உள்ள சந்திரன் இந்துக்களுக்கு  புனிடமானது.
       இதுவே இஸ்லாத்தின் கொடியாக உள்ளது .
      ஓம் என்பதை கண்ணாடியில் பார்த்தல் அது இஸ்லாத்திற்கு புனிதமான  786,அரபி மொழியில் .

எனவே, முகம்மது நபி தோன்றுவதற்கு முன்னால் அரபு நாடுகளில் சிவ வழிபாடே நடைமுறையில் இருந்தது.

No comments:

Post a Comment