Sunday 26 August 2018


பைபிள் இயேசுவை ஆண்டவரே என கூறுகிறதா ?
“நான் அவர்தான்” என இயேசு கூறுவதன் அர்த்தம் என்ன ?


பழைய ஏற்பாட்டில் கர்த்தரை இறைவன் என்று தெள்ளத்தெளிவாக சொல்வது போல் இயேசுவை இறைவன் என்று சொல்லும் ஒரு வசனமும் இல்லை. ஆயினும் சில வசனங்களை திரித்து இயேசுவை இறைவனாக சித்தரிக்க கிறிஸ்தவர்கள் முயலுகின்றனர்.

/////13. நீங்கள் என்னைப் போதகரென்றும், ஆண்டவரென்றும் சொல்லுகிறீர்கள். நீங்கள் சொல்லுகிறது சரியே, நான் அவர்தான். யோவான் 13:13.////

இந்த வசனத்தில் சொல்லப்பட்டுள்ள ஆண்டவர் என்ற சொல்லை கொண்டு இயேசு தன்னை இறைவன் என்று சொல்வதாக கிறிஸ்தவர்கள் கூறுகின்றனர். ஆனால் பைபிளை பொருத்தவரையில் ஆண்டவர் என்ற சொல் இறைவனுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் சொல் அல்ல. ஆண்டவர் என்ற சொல் அரசனுக்கும்(முதலாம் ராஜாக்கள் 1:2), தீர்க்கதரிசிக்கும்(யாத்திராகமம் 7:1), கணவருக்கும்(1 பேதுரு 3:6), மக்களுக்கும்(சங்கீதம் 82:6) எஜமானனுக்கும் கூட பயன்படுத்தப்பட்டுள்ளது.

உதாரணத்திற்கு

வீட்டு எஜமானனும் ஆண்டவரே: வீட்டு எஜமானன் எழுந்து கதவைப் பூட்டின பின்பு நீங்கள் வெளியே நின்று ஆண்டவரே! ஆண்டவரே! எங்களுக்கு திறக்க வேண்டுமென்ற…” லூக்கா 13:25

பின்பு, மற்றக் கன்னிகைகளும் வந்து: ஆண்டவரே, ஆண்டவரே எங்களுக்குத் திறக்கவேண்டும் என்றார்கள். - மத்தேயு 25:11

ஆண்டவர் என்ற சொல்லை கொண்டு ஒருவரை இறைவன் என்று சொல்வதாக இருந்தால் பைபிளில் சொல்லப்பட்ட பல நபர்களை இறைவன் என்று சொல்ல வேண்டி வரும். இதிலிருந்து ஆண்டவர் என்ற சொல் பைபிளில் இறைவன் என்ற அடிப்படையில் பயன்படுத்தப்படவில்லை என்பதை புரிந்து கொள்ளலாம்.


“நான் அவர்தான்என இயேசு கூறுவதன் அர்த்தம் என்ன ?

"நான் அவர்தான்" என்ற வாசகத்தை நான்தான் மேசியா என்ற அடிப்படையில் இயேசு சொல்லியிருந்த போதிலும், கிறிஸ்தவர்கள் இந்த வாசகத்தை தவறான விளக்கம் கொடுத்து இயேசுவை இறைவனாக்க பார்க்கின்றனர். நான் தான் அவர் என்ற வார்த்தையை இயேசு நான் தான் கர்த்தர் என்ற அடிப்படையில்தான் பயன்படுத்தினார் என்பது கிறிஸ்தவர்களின் மற்றொரு வாதமாகும். இவர்களின் இந்த வாதமும் பைபிளுக்கு விரோதமானது.

25. அந்த ஸ்திரீ அவரை நோக்கி: கிறிஸ்து என்னப்படுகிற மேசியா வருகிறார் என்று அறிவேன், அவர் வரும்போது எல்லாவற்றையும் நமக்கு அறிவிப்பார் என்றாள்.

26. அதற்கு இயேசு: உன்னுடனே பேசுகிற நானே அவர் என்றார்.” - (யோவான் 4)


யோவான் சுவிஷேத்தின் மற்றொரு இடத்தில் சொல்லப்பட்ட மேசியா நான் தான் என்று சொல்வதற்கு " நான் அவர் தான்" என்ற பதத்தை இயேசு பயன்படுத்தியுள்ளார்.

உண்மையில் இயேசு நான் தான் கர்த்தர் அடிப்படையில் இந்த வார்த்தையை பயன்படுத்தி இருந்தால் இதற்கு அடுத்தடுத்த வசனங்களிலேயே தன்னை கர்த்தரின் ஊழியக்காரனாக ஏன் அடையாளப்படுத்தி கொள்ள வேண்டும்?

16. மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், ஊழியக்காரன் தன் எஜமானிலும் பெரியவனல்ல, அனுப்பப்பட்டவன் தன்னை அனுப்பினவரிலும் பெரியவனல்ல. - யோவான் 13

ஊழியக்காரன் தன் எஜமானிலும் பெரியவனல்ல, அனுப்பப்பட்டவன் தன்னை அனுப்பினவரிலும் பெரியவனல்ல என்று இயேசு தெளிவாக தன்னை கர்த்தரின் ஊழியக்காரன் என்றும் கர்த்தரால் அனுப்பப்பட்டவர் என்றும் அடையாளப்படுத்துகிறார்.


No comments:

Post a Comment