Saturday 18 August 2018


ரிக்  வேத மந்திரங்கள் இயேசுவை துதிக்கிறதா ?


சில கிறிஸ்தவர்கள் இந்துமத வேதமான ரிக் வேதத்தில் இயேசுவை தான் சொல்வதாக குறிப்பிடுகிறார்கள். இதன் உண்மைகளை இங்கே கொடுத்துளேன் ...

1) ரிக் வேதம் 10:90:2 கூறுகிறது...

'புருஷ எவேத: சர்வம் I  யத் பூதம் யச்ச பவ்யம் I
உதாம் ருதத்வஸ்யா ஈசான யதன்னேனதிரேஹதி II

கிறிஸ்தவர்களது விளக்கம்...

அதாவது கடவுளின் தலைப்பேறான மகனே ஆதியில் இருந்ததும், இன்று இருப்பதும், இனி வரப்போவதுமாவான். மனிதர்க்கு அவர்தம் செயல்களுக்கேற்ப கைமாறு அளிக்க அவன் வருவான்.
           
இதன் உண்மையான மொழிபெயர்ப்பு இதோ..

" (யத் பூதம்) எது முன்னிருந்ததோ, (யச்ச பவ்யம்) எது இனி வரப்போகிறதோ, (இதம்) இப்பொது காணப்படுவது (சர்வம்) எல்லாம் (புருஷ ஏவ) பரம புருஷனே(நாராயணரே),. மேலும், (அம்ருதத்வஷ்ய) சாகாநிலைக்கு (ஈசான) இறைவனாக இருப்பவரும் - பரம புருஷனே (நாராயணரே). எது (அன்னேன) அன்னமயமான இப்பிரபஞ்சத்தால் (அதிரோஹதி) மறைவிலிருந்து வெளிப்படுகிறதோ- அதுவும் பரம புருஷனே(நாராயணரே)"

"எது முன்னிருந்ததோ , எது இனி வரப்போகிறதோ, இப்பொது காணப்படுவது எல்லாம் பரம புருஷனே(நாராயணரே). மேலும், சாகாநிலைக்கு இறைவனாக இருப்பவரும் - பரம புருஷனே (நாராயணரே). எது அன்னமயமான இப்பிரபஞ்சத்தால் மறைவிலிருந்து வெளிப்படுகிறதோ- அதுவும் பரம புருஷனே(நாராயணரே)" - ரிக்வேதம் 10.90.2

 என தான் சொல்கிறது. இந்த அத்தியாயத்தில் தலைப்பே " புருஷா" எனவும் , "நாராயணர்" எனவும் சொல்கிறது !

அப்புறம் எப்படி இது இயேசுவை குறிப்பிடுவதாக வரும் ?


2. ரிக் வேதம் 10:90:8

'தம் யஜ்யம் பரிஹிஷி ப்ரெனசஷம்  I புருஷம் ஜாதமக் ரத:I
தேன தேவா அயஜந்தா I ஸாத்யா  ருஷயஷ்ச்ச  யே

கிறிஸ்தவர்களது விளக்கம்...

கடவுளின் தலைப்பேறான இம்மகன் மரத்தாலான பலிக்கம்பத்தில் கட்டப்பட்டு தேவர்கள், அரசர்கள் மற்றும் ஞானிகள் முதலியோரால் பலியாக்கப் பட்டான். நான்கு சுவிசேஷங்களும் கூறுவது: இயேசு மரத்தாலான சிலுவையில் ஆட்சியாளர்களாலும் (ஏரோது, பிலாத்து), ஞானிகளாலும் (அன்னாஸ், கைப்பாஸ்) அறையப்பட்டார். 

இது உண்மையில் வசனம்-8 தான்.  உண்மை மொழிபெயர்ப்பு இதோ..

" (அக்ரத) - முதலில், (ஜாதம்) உண்டான, (தம்)  அந்த, (யஜ்யம்) யாகத்திற்கேறற, (புருஷம்) புருஷனை (நாராயணரை), (பரிஹிஷி)  யாகத்தில், (தேன) புரோஷித்தார்கள்(வலம் வந்தார்கள்), அதனால் ஸாத்யர்கள்(பக்தர்கள்) என்கிற, (தேவா) தேவர்களும், (ருஷய) ரிஷிகளும், (யே) எவர்கள் உண்டோ (அயஜந்தா) அவர்கள் யாகத்தை நடத்தினார்கள்"

"முதலில் உண்டான அந்த யாகத்திற்கேறற புருஷனை (நாராயணரை) யாகத்தில் புரோஷித்தார்கள்(வலம் வந்தார்கள்), அதனால் ஸாத்யர்கள்(பக்தர்கள்) என்கிற தேவர்களும், ரிஷிகளும், எவர்கள் உண்டோ அவர்கள் யாகத்தை நடத்தினார்கள்" - ரிக்வேத, புருஷ சூக்தம் 10-90-8
           
இதில் மகன் என எங்கே வருகிறது ? இதில் மரத்தில் அறையப்பட்டதாக எங்கே உள்ளது ?

 இதில் கூறுவது பகவான் நாராயணரை தான் ! ஏனெனில் இந்த அத்தியாயத்தின் தலைப்பே 'புருஷ - நாராயணர்'  என தான் உள்ளது ! இந்த அத்தியாயத்தில் கூறப்படும் எல்லாமே புருஷ (நாரணனாரை) தான் குறிப்பிடும். வேறு யாரையும் இது குறிக்காது ! எனவே, இது தவறானது !         


3. யசூர் வேதம் 31:18, ரிக் வேதம் 10:90:16

தாதா புரஸ்தாத் உதாஜஹார சத்ர: ப்ரவித்வான் ப்ரதிசச்சாதஸ்ர  I
தமேவம் வித்வானம்ருதா  இஹ பவதி I
நான்ய பந்தா அயனாய-வித்யதே

கிறிஸ்தவர்களது விளக்கம்...

இப்பலியே மனிதன் மீட்படையவும், விடுதலையடையவும் உள்ள ஒரே வழி. இம்மனிதனை தியானித்து அடைவோரும், அவனை இதயத்தில் விசுவசித்து வாயினால் அறிக்கையிடுவோரும் இவ்வுலகிலேயே விடுவிக்கப்படுவர். மீட்பிற்கு இதைத்தவிர வேறு வழியில்லை.

இது உண்மையில் வசனம் 17 தான் உள்ளது . இந்த ரிக்வேதம் 10.90.17 வசனத்தின் உண்மையான மொழிபெயர்ப்பு இதோ..

"எந்த புருஷனை (நாராயணரை) பிரம்மா ஆதியில் பரமாத்மா என கண்டு வெளிப்படுத்தினாரோ , நான்கு  திக்குகளிலும், திசைகளிலும் எங்கும் இந்திரன் சிறப்பாக கண்டறிந்தாரோ அவரை (புருஷ-நாராயணரை) இவாறாக அறிபவன் இங்கேயே, இப்பிறவியிலேயே முக்தியடைந்தவனாக ஆகிறான். மோக்ஷத்திற்கு வேறு வழி இல்லை"  - ரிக் வேதம் 10-90-17

இதில் பிரம்மா தன்னை உருவாக்கிய மூல காரணமான உள்ளவராக பகவான் நாராயணரை (புருஷரை) இங்கே வழிபடுவதை தான் சொல்கிறார் !

இதில், இயேசு எங்கே வருகிறது ? ஏனெனில், இந்த அத்தியாயத்தின் தலைப்பே 'புருஷ - நாராயணர்' என்பது தானே ! இதில் பகவான் நாராயணரை பற்றி தான் கூறுகிறது !

மேலும், இதே புருஷ சூக்தம் (2.6), இரண்டாவது அணுவாகத்தில் வசனம் 6 கூறுகிறது, இந்த புருஷருக்கு (நாராயணருக்கு) ஹரிதேவியும், லட்சுமி தேவியும் மனைவிகள் என்கிறதே ?

அப்புறம்  எப்படி இந்த புருஷ என்பது இயேசுவை குறிக்கும் ?

எனவே, இதிலிருந்தே எளிதாக அறியலாம், ரிக்வேத புருஷ சூக்ததில் குறிப்பிடும் புருஷ என்பது பகவான் நாரயணரை குறிப்பிடுகிறது !  இயேசுவை அல்ல ! எனவே, மேலே கூறியது தவறு என அறியலாம்



No comments:

Post a Comment