Sunday, 26 August 2018


இயேசு மட்டுமே ஒரே வழியா? இயேசு ஒரேவரே குரு ?



இயேசு ஒரேவரே குரு ! இயேசு மட்டுமே ஒரே வழி... என பல கிறிஸ்தவர்கள் கூறுகிறார்கள்.. இது என்ன என்பதை பார்க்கலாம் ..

இது, 'இயேசுவின் வழியாக தான்" என்கிற கொள்கை குறுகிய மனப்பான்மை கொண்டது. உண்மையில் கிறிஸ்தவ மதத்தில் கொள்கையில் இது நிச்சயமாக இல்லை . இந்த குறிப்பிட்ட கொள்கை 'கிறிஸ்தவர்களின் தனித்துவம்' வைக்க யோவான் என்பவரின் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளதை அடிப்படையாக கொண்டதாகும் ! அதில் இயேசு கூறுகிறார் ..

'நானே வழி, நானே சத்தியம், நானே ஜீவன், என் மூலமே அல்லாமல் யாரும் பரபபிதாவிடம் வருகிறதில்லை'  - யோவான் 14-6

ஆனால், "இயேசுவின் மூலமாக தான்'' என்பதை கிறிஸ்தவர்கள் எப்போதும் சொல்லுகிறார்கள். ஆனால், இது தவறான விளக்கமாகும். ஆரம்பத்தில் கிரேக்கம் வேறுவிதமாக சொல்கிறது. அது இது தான் ...

   "Ego eimi ha hodas kai ha zoa oudeis erketai proston patera ei ma di emou"

இதன் கிரேக்க மொழி பெயர்பெயர்பில் இதில் ‘erkitai’ (எர்கிதை) என்கிற முக்கியமான வார்த்தையை  பயன்படுத்துகிறார். இது நிகழ்காலத்தை மட்டுமே குறிக்கும் வினைசொல் ஆகும். எனவே இதன் உண்மை மொழிபெயர்ப்பு...

'நானே வழி, நானே சத்தியம், நானே ஜீவன், என் மூலமே அல்லாமல் யாரும் இக்காலத்தில்  பரபபிதாவிடம் வருகிறதில்லை'  - யோவான் 14-6

அதாவது 2000 ஆண்டுகளுக்கு முன்பு பாலஸ்தீனத்தில் அவர் வாழ்ந்த காலத்தில் அவர் மட்டுமே குருவாக இருந்ததினால் அவ்வாறு கூறுகிறார். அவர் எல்லா காலகட்டத்திற்கு தான் ஒருவரே குரு என அவர் விரும்பியிருந்தால் , அவர் 'ஏற்கிதை'  (இக்காலத்தில்) என்கிற வார்த்தையை பயன்படுத்தியிருக்க வேண்டிய அவசியமில்லை ! அதற்க்கு பதில் அவர் வேறு சொல்லை பயன்படுத்தி இருந்திருப்பார் . ஆனால் அவர் அப்படி செய்யவில்லை

எனவே, இது எல்லா காலகட்டத்திற்க்கும் பொறுந்ததாது.

No comments:

Post a Comment