இயேசுவும்
இறைவனின் ஊழியக்காரரா ?
பைபிளை முழுமையாக படிக்கும் எவரும் இயேசுவை இறைவன் என்று சொல்ல மாட்டார்கள். இயேசுவை கர்த்தரின் ஊழியக்காரர் என்றே சொல்வார்கள்.
“நம்முடைய ஆண்டவர் பெரியவரும் மகா பெலமுள்ளவருமாயிருக்கிறார்;
அவருடைய அறிவு அளவில்லாதது.” - சங்கீதம் 147:5
இத்தகைய அளவற்ற அறிவுள்ள கர்த்தருக்கு சமமாக கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படும் இயேசு எப்படிப்பட்டவர்?
“இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும், தேவகிருபையிலும்,
மனுஷர் தயவிலும் அதிகமதிகமாய் விருத்தியடைந்தார்.” - லூக்கா 2:52
இவ்வாறு இயேசு ஞானத்தில் மனிதர்களை போன்று விருத்தியடைந்தவராகத்தான் இருந்துள்ளார். இயேசு கர்த்தருக்கு இணையான அறிவை பெற்று இருந்தார் என்று பைபிள் எங்கும் சொல்லவில்லை.
“அந்த நாளையும் அந்த நாழிகையையும் பிதா ஒருவர் தவிர
மற்றொருவனும் அறியான், பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள், குமாரனும் அறியார்.”
- மாற்கு 13:32
மறுமை நாள் எப்போது நடக்கும் என்ற அறிவை குமாரனுக்கும் இல்லை, பரிசுத்த ஆவி உட்பட மற்ற யாவரும் அறிய மாட்டார்கள். கர்த்தர் மட்டுமே அந்த நாளை அறிவார் என்று இயேசு இந்த வசனத்தில் தெளிவாக சாட்சியம் பகர்கிறார். அதுமட்டுமல்ல இயேசு மனிதர்களை போன்று சோதனைக்கு உட்பட்டவராகத் தான் வாழ்ந்துள்ளார் என்று பைபிள் கூறுகின்றது.
“நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத
பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப் போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற
பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார்.” - எபிரேயர் 4:15
இயேசு மனிதர்களை போன்று சோதிக்கப்பட்டார் என்று சொல்லும் பைபிள் மற்றொரு இடத்தில் கர்த்தர் சோதிக்கப்படமாட்டார் என்று கூறி கிறிஸ்தவர்களின் இயேசு இறைவன் என்ற வாதத்தை சுக்குநூறாக உடைத்து விட்டது.
“சோதிக்கப்படுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன்
என்று சொல்லாதிருப்பானாக; தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல, ஒருவனையும் அவர்
சோதிக்கிறவருமல்ல.” - யாக்கோபு 1:13
பைபிளில் இயேசுவை குறித்து சொல்லப்பட்ட விஷயங்களில் சிலவற்றை கர்த்தரோடு ஒப்பிட்டும், திரித்தும் இயேசுவை இறைவன் என்று சொல்பவர்கள் இயேசுவை சாதராணவராக காட்டும் மிக தெளிவான வசனங்களை கண்டு கொள்ளாமல் விட்டு விடுகின்றனர்.இயேசு கர்த்ருக்கு கீழ்பட்டு தான் வாழ்ந்தார் என்றும் பைபிள் போதிக்கிறது.
“அவர் குமாரனாயிருந்தும் பட்டபாடுகளினாலே கீழ்ப்படிதலைக்
கற்றுக்கொண்டு”- எபிரேயர் 5:8
இயேசு மற்ற தீர்க்கதரிசிகளை போன்றவர் தான். அதனால் தான் இயேசு தான் செய்த உபதேசங்கள் என்னுடையது அல்ல, என்னை அனுப்பின பிதாவுடையது என்று கூறுகிறார்.
“இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: என் உபதேசம்
என்னுடையதாயிராமல், என்னை அனுப்பினவருடையதாயிருக்கிறது.” - யோவான் 7:16
உண்மையில் இயேசு இந்த பூமிக்கு வந்த கர்த்தரின் மறுபாகம் என்றால் குறைந்தபட்சம் உபதேசங்களாவது அவரது சொந்த உபதேசமாக இருக்க வேண்டும்.
இயேசு எந்த காரியத்திலும் எந்த இடத்திலும் எந்த உபதேசத்திலும் தன்னை இறைவன் என்றோ அல்லது கர்த்தரின் அவதாரம் என்றோ அல்லது திரித்துவத்தில் உள்ள ஒருவர் என்றோ சொல்லவில்லை. கிறிஸ்தவர்கள் தான் திரித்து கூறப்படும் பைபிள் வசனங்களை கொண்டு இயேசுவை இறைவன் என்று கூறி வருகின்றனர்.
தன்னை தவிர வேறு யாரையும் வணங்கக்கூடாது என்று கர்த்தர் தெளிவாக சொல்லும்போது இயேசு என்ற மனிதனை வணங்கி பாவச்சுமையை கிறிஸ்தவர்கள் வாங்கி கொள்கின்றனர். இந்த பாவச்சுமை நிரந்தர நரகத்தை கொடுக்க கூடியது என்பதை கிறிஸ்தவர்கள் சிந்திக்க வேண்டும்.
“7. என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம்.
8. மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த்
தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சுரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும்
நீ உனக்கு உண்டாக்கவேண்டாம்.
9. நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்;
(உபாகமம் 5)
முடிவாக இயேசு கூறும் அறிவுரைகள் :
1. கிறிஸ்து இந்த கூட்டத்திலிருக்கிறார் அந்த கூட்டத்திலிருக்கிறார்
என்று சொன்னால் நம்பாதிருங்கள். (மத் 24:23)
2. எந்த தேவைக்கும் தேவனிடம் நேரடியாக ஜெபியுங்கள்.
சுகமளிக்கும் வரம் வைத்திருக்கிறேன் என்று சொல்லி வஞ்சிப்பவரிடம் செல்லாதீர். (பிலி
4:6)
3. வேதத்திற்கு விரோதமான காரியங்களை கிறிஸ்தவ மேடைகளில்
செய்யும் கள்ள ஊழியர்களை கடிந்துகொள்ளுங்கள். (எபே 5:11)..
No comments:
Post a Comment