Sunday 26 August 2018

தேவன் என்ற வார்த்தை இறைவன் என்று அர்த்தத்தம ?


ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. (யோவான் 1:1)

மேற்கண்ட வசனம் இயேசுவை இறைவன் என்ற அர்த்தத்தில் சொல்லவில்லை.

கர்த்தரை (God) குறிக்க பயன்படும் சொல்லும் வார்த்தை தேவனாக(god) இருந்தது என்ற சொல்லும் கிரேக்கத்தில் வித்தியாசப்படுத்தி காட்டப்பட்டுள்ளது.

Ton Theon( The God) இந்த வார்த்தைதான் பிதாவை குறிக்கப் பயன்படுகிறது.

ஆனால் வார்த்தையை (இயேசுவை) தேவன் என்று குறிக்க Theos என்ற சொல்லும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இங்கு கர்த்தரையும் வார்த்தையும் தேவன் என்று சொல்ல ஒரே வார்த்தையை பயன்படுத்தவில்லை என்பது மிக முக்கியமானது. அதே சமயம் பைபிளின் படி ஒருவரை தேவன் என்று சொல்வதால் அவர் இறைவனாகி விட முடியாது. ஏனெனில் பைபிள் பல இடங்களில் தேவன் என்ற சொல்லை கொண்டு பலரையும் அழைத்துள்ளது. தேவன் என்ற சொல்லை கொண்டு ஒருவரை நாம் இறைவன் என்று தீர்மானித்தால் பைபிளில் உள்ள பலரையும் இறைவன் என்று சொல்ல வேண்டி வரும்.

இன்னும் யோவான் 10:34ல் இஸ்ரவேல் மக்களை தேவன் என்று குறிக்க இதன் பண்மை சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: தேவர்களாயிருக்கிறீர்கள் என்று நான் சொன்னேன் என்பதாய் உங்கள் வேதத்தில் எழுதியிருக்கவில்லையா? (யோவான் 10:34)

தேவன் என்ற வார்த்தையை கொண்டு ஒருவரை இறைவன் என்று தீர்மானிப்பதாக இருந்தால் இஸ்ரவேல் மக்களையும் தேவன் என்று கிறிஸ்தவர்கள் நம்ப வேண்டும். ஆனால் இஸ்ரவேல் மக்களை கர்த்தரால் தேர்நதெடுக்கப்பட்ட சாதாரண மனிதர்கள் என்றும் நம்பும் கிறிஸ்தவர்கள் இயேசுவை மட்டும் கடவுள் என்று சொல்வது வேடிக்கையானது.

மேலும், யோவான் 17:3 வசனத்தின்படி, தமக்கும் தம்முடைய பரலோகப் பிதாவுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை இயேசு தெளிவாகக் காட்டினார். தம்முடைய பிதாவைஒன்றான மெய்த் தேவன்என்று இயேசு அழைக்கிறார்.

ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவ” (யோவான் 17:3)

மேற்கண்ட வசனத்தில் மெய்த்தேவன் என்று கர்த்தரை தான் அடையாளப்படுத்தி இயேசு சொல்கிறார். ஒட்டு மொத்த பைபிளிலும் மெய்த்தேவன் என்ற சொல் இயேசுவுக்கோ அல்லது பரிசுத்த ஆவிக்கோ பயன்படுத்தப்படவில்லை.

யோவான் சுவிஷேத்தின் ஆசிரியர் எந்த ஒரு இடத்திலும் இயேசுவை இறைவன் என்ற அர்த்தத்தில் அடையாளப்படுத்தவில்லை என்பதை மேற்கண்ட வசனங்கள் சொல்வதை நம்மால் காண முடிகிறது. இனிமேலாவது கிறிஸ்தவர்கள் திரித்துவம் எனும் சாத்தானிய பாதையை விட்டும் விலகி தீர்க்கதரிசிகள் போதித்த உண்மை மார்க்கத்தில் பயணிக்க முயற்சிக்க வேண்டும்

Question & Answers:2
/////10 நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா? நான் உங்களுடனே சொல்லுகிற வசனங்களை என் சுயமாய்ச் சொல்லவில்லை, என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே இந்தக் கிரியைகளைச் செய்துவருகிறார். யோவான் 14:10//////

இப்படிப்பட்ட வசனங்கள் இந்துமதங்களிலும் பல உள்ளன. இது எல்லோருமே இறைவனின் அங்கம் என்பதே இதன் அர்த்தம்.

அதாவது இறைவனின் அதே  குணங்கள் தான் நம்மிடமும் உள்ளன. ஆனால் அளவுகளில் வித்தியாசங்கள் உள்ளன அவ்வளவு தான். இதை தான் இந்துக்கள் 'அஹம் ப்ரம்மாஸ்மி' என்கிறது' . இதன் அர்த்தம் நானும் கடவுளின் அங்கம் என்பதே . இதை தான் இங்கே நான் பிதாவிலும், பிதா எனிலும் இருக்கிறார் என்கிற வாக்கியங்கள் !

 உதாரணமாக ஒரு கடல் & கடல் நீரை எடுத்து கொள்ளுங்கள். கடல் என்பது பரம்-ப்ராம்மணான இறைவனை கூறுகிறது, கடல் நீர் என்பது ஜீவாத்மாக்களை (நம்மை) குறிக்கிறது.
அதாவது, நீங்கள் ஒரு பாத்திரத்தில் கடல் நீரை மட்டும் சிறிது எடுத்துவிட்டு இது  கடல் (பிரம்மன்) என கூறினால் ஏற்பார்களா ?

இல்லையே ! இது கடலின் ஒரு அங்கம் அவ்வளவுதான். அதாவது கடலின் எல்லா குணாதிசியங்களை இந்த கடல் நீரில் இருக்கிறது.ஆனால், அளவுகளில் வித்தியாசங்கள் உள்ளன.
அதுபோல் தான் பரம்-ப்ராம்மணான இறைவனும், ஜீவாத்மாக்களான நாமும். நாம் இறைவனானான் (நாராயணர்) பாரம்-ப்ரம்மமத்தின் அங்கம். அவரிடமுள்ளள எல்லா குணங்களும் சிறிதளவு நிமிடமும் இருக்கிறது.

 தங்கத்தின் ஒரு துகள் எவ்வாறு தங்கமோ, கடல் நீரின் ஒரு துளி எவ்வாறு உப்பு கரிக்கின்றதோ, அது போல நம் ஈஸ்வரன் எனப்படும் உயர் ஆளுநரான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அம்சங்களாகையால், அந்த முழுமுதற் கடவுளின் குணங்களனைத்தும் அணுவளவில் நம்மிடம் உள்ளது. ஏனெனில் நாம் மிகச்சிறிய ஈஸ்வரன்கள், கீழ்படிந்த ஈஸ்வரன்கள். நாம் இயற்கையை கடடுப்படுத்த முயல்கிறோம். (இப்போது விண்வெளியையும் கிரகங்களையும் கட்டுப்படுத்த முயல்வது போல),

ஆனால் கட்டுப்படுத்த விரும்பும் இது போன்றத் தன்மை கிருஷ்ணரிடம் உள்ளதாலேயே நம்மிடமும் இருக்கின்றது.

No comments:

Post a Comment