இயேசு மறித்து பின் உயிருடன் வந்தவரா ? இயேசு ரட்சகரா?
பைபிளில் அப்போஸ்தலர் 2-25 to 35 வரை அதில் இயேசுவே உயிர்விட்ட பின் அந்த இறைவன் தான் நேரில் வந்து இயேசுவிற்க்கு உயிர் கொடுத்து,தனது வலது கையால் இயேசுவை தூக்கிவிட்டதாக வருகிறது.
ஏன் இயேசுவுக்கே அந்த இறைவன் தான் உயிர் கொடுக்கிறார். அப்புறம் எப்படி ரட்சகர் ஆவார்..?
பின்வரும் இயேசு கூறியதன் அர்த்தம் என்ன ?
'எவன் என்னை பார்த்து கர்த்தாவே (இறைவனே)! கர்த்தாவே(இறைவனே) என்று சொல்பவன், கடவுளின் ராஜ்யத்தில் செல்ல முடியாது'-
மத்தேயு -7.21
"நான் பிதாவின் இடத்திற்கு போவேன் என்றும், பிதா என்னை விட மிக பெரியவராக
இருக்கிறார்." - யோவான் -14-28
இதில் 'பிதா' என்று இயேசு யாரை கூறுகிறார் ? அந்த இறைவன் யார்
?
மேற்கூறிய வசனங்களை பார்த்தால் புரியும். இயேசு இறைவன் அல்ல என்று. மேலும் எவன் என்னை இறைவன் (கர்த்தா) என்று சொல்பவன், கடவுளின் ராஜ்யத்தில் (பரலோகம் அல்லது வைகுண்டலோகம்) போக முடியாது என்றுேரிடையாகவே கூறுகிறார்.
'இந்த இயேசுவை தேவன்(கர்த்தர்) எழுப்பினார் ! இதற்க்கு நாங்களெல்லோரும் சாட்சிகளாயிருக்கிறோம்'
அப்போஸ்தலர் 2-32
இதில் இயேசு வேறு கர்த்தர் வேறு என் தெளிவாக பன்மையில் சொல்கிறது !
அடுத்து, அப்போஸ்தலர்
2-32 சொல்கிறது..
'அவர் தேவனுடைய வலகரத்தினாலே உயர்த்தப்பட்டு, பிதா (கர்த்தர்) அருளிய வாக்குத்தத்தத்தின்படி
பரிசுத்த ஆவியைப்பெற்று, நீங்கள் இப்பொது காண்கிறதும் கேட்கிறதுமாகிய இதை பொழிந்தருளினார்'
- அப்போஸ்தலர் 2-33
இந்த வசனத்தில் மிக தெளிவாக சொல்கிறது. இறைவன்(கர்த்தரின்) அருளினால் தான் இயேசு உயிரூட்டப்பட்டு, அவரது கருணையினால் தான் இயேசு இந்த அற்புதங்கள்/பிரச்சாரங்கள் செய்கிறார் தான் சொல்கிறது !
'அதற்க்கு, இயேசு: ஸ்திரீயே! நான் சொல்லிகிறதை நம்பு, இந்த மலையிலும் எருசலேமிலும் மாத்திரமல்ல, எங்கும் பிதாவை தொழுக்கொள்ளும் காலம் வருகிறது.
நீங்கள் அறியாததை தொழுதுகொள்கிறீர்கள். நாங்கள் அறிந்திருக்கிறதை
தொழுது கொள்கிறோம்" - யோவான் 4-21 & 22 சொல்கிறார் .
இந்த வசனத்தில் இயேசு தன்னை வணங்க சொல்லவில்லை, மாறாக ஒருவரையே வணங்க சொல்கிறார். அதுமட்டுமல்ல கர்த்தரை வணங்குபவர்களில் ஒருவராக தன்னை காட்டுகிறார். இயேசு இறைவன் என்று கூறினால் ! இயேசு ஏன் தன்னை வணங்க சொல்லவில்லை ?
மேலும், மத்தேயு-2-28 இல் சொல்கிறார்..
'நான் தேவனுடைய (இறைவனுடைய) ஆவியினாலே (சக்தியினாலே)
பிசாசுகளை துரத்துகிறபடியால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறது'' என்கிறார்.
இதில் தெளிவாக தேவனுடைய (இறைவன்) சக்தியினாலே தான் நான் பிசாசுகளை துரத்தினேன் என பன்மையில் தெளிவாக சொல்கிறார் !
மேலும், இயேசு கூறுகிறார் ..
"அந்த நாளையும், அந்த நாழிகையையும் பிதா (கர்த்தர்)
ஒருவர் தவிர மற்றோருவனும் அறியான், பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள், குமாரனும்
(ஏசுவும்) அறியார்" - மாற்கு - 13-32 இல் கூறுகிறார்.
இதில் தெளிவாக சொல்கிறார் அந்த பரம இறைவனே எல்லாம் அறிந்தவன். குமாரனாகிய இயேசு கூட இதை அறியமுடியாது என பன்மையில் தெளிவாக கூறுகிறார்
மேலும், யோவான் 8-40 இல் மிக தெளிவாக நான் மனிதன் என சொல்கிறார் ...
'தேவனிடத்தில் (இறைவனிடத்தில்) கேட்டிருகிற சத்தியத்தை
உங்களுக்கு சொன்ன மனுஷனாகிய என்னை சொல்ல தேடுகிறீர்கள், ஆபிரகாம் இப்படி செய்யவில்லையே"
இந்த வசனத்திலும் தான் மனிதன் என்றும், அந்த இறைவனின் வார்த்தைகளை தான் பிரச்சாரம் செய்தேன் எனவும் பன்மையில் சொல்கிறார்.
இதிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம் இயேசு நம்மை போல் ஒரு சாதாரண மனிதர் தான். ஆனால் இயேசு இறைவனின் ஒரு பிரதிநிதியாக இருப்பதால் பல அற்புதங்களை அவரால் செய்யமுடிந்தது !
இப்படி சொல்லி கொண்டே போகலாம். இதில் இயேசு ஒரு சாதாரண மனிதராக தான் சொல்கிறது.
அவரை தாண்டிய ஒரு இறைவன் இருக்கிறார்.
அவரே பகவான்
நாராயணர் / கிருஷ்ணர். இவரே எல்லோரின் பிதா
கேள்வி & பதில் :
///வேதவாக்கியங்கள் ஆவிக்குரியவைகள். அவைகள் ஆவிக்குரியவர்களால் மாத்திரமே ஆராய்ந்து நிதானித்து அறிந்து கொள்ள வேண்டியவைகள்.
/// யோவான் 8:24 இல் நானே அவர் என்று நீங்கள் விசுவாசியாவிட்டால் உங்கள் பாவங்களிலே சாவீர்கள் என்றார். யோவான் 14:6_11வரை வாசியுங்கள். ///
அதே யோவான்.8:26 கூறுகிறது….
'என்னை அனுப்பியவர் (பரம இறைவன்
) சக்தியுள்ளவர், அவரிடத்திலிருந்து
கேட்டவைகளையே உலகத்துக்கு சொல்லுகிறேன்' என்கிறார்.
இதில் இயேசு பன்மையில் தானே சொல்கிறார். அதாவது இறைவனது வார்த்தையை கேட்காதவன் பாவி அவனே சாவான். அதாவது பிதா இயேசுவிற்க்கு கூறியதை கேட்காதவனை தான் கூறுகிறார்.
அடுத்து யோவான் 14 ல் கூறுவது இயேசுவின் மூலமே அந்த பரம இறைவனை அடையமுடியும் என கூறுகிறார். ஏனெனில் அவர் வாழ்ந்த காலத்தில் அவர் மட்டுமே குருவாக இருந்ததினால் அவ்வாறு கூறுகிறார். இது எல்லா காலகட்டத்திற்க்கும் பொறுந்ததாது. இதன் கிரேக்க மொழி பெயர்பெயர்பில் இதில் 'எர்கிதை' என்கிற வார்த்தையை பயன்படுத்துகிறார். இது நிகழ்கால வினைசொல் என வல்லுனர்களால் கூறியது. எனவே இதன் உண்மை மொழிபெயர்ப்பு ' நானே வழியும்....... என்னை அல்லாது இக்காலத்தில் இறைவனை அடைய முடியாது' என்பதே.
அடுத்து, இப்படி இயேசு என்னுடைய பிதா என்று தெளிவாக குறியபின்பும் இயேசு தான் பிதான் என்று கூறினால். ஒன்னு அவன் முட்டாளாக இருக்கணும்.
நீங்களும், உங்கள் அப்பாவும் ஒன்று என கூறினால் ஒப்பு கொள்வீர்களா ! அது போல் தான் இதுவும்.
இயேசு பைபிளில் தன்னை ஆயிரம் தடவைகள் 'நான்பிதாவின் பிள்ளை'
(son of god) என்று கூறுகிறார், அதே போல் தன் தந்தையை 'பிதா' என்று 200 தடவைகள் கூறுகிறார்.
மேலும், தன்னுடைய பிதா தான் என்னை இங்கு அனுப்பியதாகவும் சொல்கிறார். .. அப்புறம் எப்படி ரெண்டு பெரும் ஒன்னாக
முடியும் ?
இறைவன் உங்கள் பிதாவாக இருந்தால் என்னிடம் அன்பாக இருங்கள், ஏனெனில் நான் அவரிடத்தில் இருந்து வந்தேன். நான் சுயமாக வரவில்லை, அவரே(பிதா) என்னை இங்கு அனுப்பினார்" - யோவான் -8-42
No comments:
Post a Comment