Saturday 18 August 2018


திருக்குறள், வேத, உபநிஷத்துக்கள  இயேசுவை துதிக்கிறதா ?




திரு.ஜே.ரமேஷ் என்பவர் இயக்கத்தில் வெளிவந்தசத்தியத்தை தேடிஅல்லதுஅசதோமா சத் கமையஎன்ற படம் திரு.சாருஹாசன் நடித்தார். அவர் சனாதன தர்ம திருக்குறள், வேத, உபநிஷத்துக்களை பற்றி கூறும் பொய் மூட்டைகளை ஒவ்வொன்றாக அவிழ்போம்.


1) முதலில் திருக்குறளில் இருந்துபொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ்வார்”.

 கிறிஸ்தவர்களது விளக்கம்...

 “பொறியாகிய சிலுவையில் தம் ஐம்புலன்களையும் பலி ஆக்கினார் ஏசு. பொய் தீர்க்கும் நெறி ஆகிய ரட்சிப்பை ஏற்படுத்தியவர் என்றும் அவ்வழியில் நடப்பவர் நீடு வாழ்வார் அல்லது நித்ய ஜீவனை பெற்று கொள்வார்”. என்கிறார்.

உண்மையான பொருள்

ஐம்புல ஆசைகளையும் ஒழித்த கடவுளின் ஒழுக்க நெறியில் தவறாது நின்றவர், நீண்டகாலம் நல முடன் வாழ்வார்.என்று வள்ளுவர் கூறுகிறார்.

இதில் ஏசு எங்கு வந்தார் என்று நானும் தேடி தேடி சலித்து விட்டேன். கிடைக்கவே இல்லை. ஐம்புல ஆசைகளையும் ஒழித்த கடவுள் ஏசு என்பதற்கு இவர்களிடம் என்ன ஆதாரம் உள்ளது?

2) ஸ்வேதஸ்வதரா உபநிஷத் சதுஷ்யே திஷ்டதி ரூபமஸ்ய நச்சக்ஷுசே கஷ நயனம் ஹிதா திஷ்டம் மனசாய யேனா மேவம் விதுர் முதஸ்தே பவந்தி”.

கிறிஸ்தவர்களது விளக்கம்...


இவர் கூறுவது, கடவுளின் உருவம் கண்ணுக்கு தெரியாது. யாரும் பார்த்ததில்லை. இருதயதில்லும், ஆவியிலும் ஏற்றுகொள்பவரை இறைவன் ரட்சிப்பார் என்று ஏசுவை பற்றி சொன்னார்.


உண்மையான பொருள்
                                                                                      
இறைவன் நமது கண்ணிற்கு புலப்படாதவன். பக்தி என்ற உள்ளுணர்வு மூலம் பரமாத்மாவை உணர்ந்தால் பிறப்பு என்ற கர்மத்தை வெல்லலாம். பரமாத்மாவை அடையலாம்

இதில் ஆவி எங்குமே வர வில்லை. ஏசுவும் எங்கும் வர வில்லை.

3) கதோ உபநிஷத் 3.11 “அவயக்த புருஷா பர புருஷ்மனா பரம் விசித் சஹசஸ்தா ப்ருஹதி

விளக்கம்..

இந்த புருஷரிலும் மேன்மையானவர் எவரும் இல்லை”. அவரே மோட்சத்திற்கு வழி.

4) ரிக் வேதத்தில் உள்ள புருஷ சுக்தம் சொல்லும்புருஷ்என்பவர் என்றென்றும் அழியாமல் வாழும் ஒரே மேன்மையான பரமபுருஷ. அவர் தான் பிரஜாபதி, என்று கூறுகிறார்.

கிறிஸ்தவர்களது விளக்கம்...

இந்த இரண்டையும் கூறி விட்டு வேதங்கள் கூறிய பிரஜாபதி தான் ஏசு என்று நினைக்கிறன் என்று அவரே அவரது பிதற்றலை ஒப்புக்கொண்டார்.

உண்மையான பொருள்

 “புருஷஎன்றால் “Supreme lord”. அதனால் தான் புருஷோத்தமன், புருஷ சுக்தம் என்று ஸ்ரீமன் நாராயணை போற்றுகிறோம். “பிரஜாபதிஎன்றால் “lord of creatures” அல்லது அனைத்து உயிர்களையும் படைத்த இறைவன். அந்த இறைவன் தான் விஷ்ணு என்று ரிக் வேதம் குறிப்பிடுகிறது.

அவரே விரிவடைந்து சிவபெருமான். பிரம்மன் உருவாக அப்படியே பிரம்மாவின் மகன் விஸ்வகர்மன் போல 26 ப்ரஜாபதிகள் உண்டு. இவர்கள் தான் இவ்வுலகில் உள்ள உயிர்களை படைத்தவர்கள் என்று ஸ்ரீமத் பாகவதம் 8.8.16 குறிப்பிடுகிறது. அண்டசராசரங்களை காக்க ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தொழில் என்றுபிரஜாபதியால்வகுக்கப்பட்டுள்ளது. மனு ஸ்ம்ரிதி இல் (1.34) கூட உள்ளது. மகாபாரத்தில் கூட நாரத மக ரிஷி மூலம் குறிப்பு உண்டு..

4) சாம வேத தண்டய ஆரண்யகா மஹா பிராமணம் பற்றி கூறுகிறார். “யக்ஞம் பிரஜாபதி தேவாப்யாம் ஆத்மாநாம் க்ரித்வ சித்

கிறிஸ்தவர்களது விளக்கம்...

 அதற்கு இவர் கூறுவதுபிரஜாபதிமனித குலம் மீட்பதற்கு தன்னையே பலி கொடுப்பார் என்கிறார். அந்த பிரஜாபதி தான் ஏசு நாதர் மக்களுக்காக தன உயிரை கொடுத்தவர் என்கிறார்.

உண்மையான பொருள்

 இந்த வாசகம் முழுமையாக இல்லை. “யக்ஞம் பிரஜாபதி தேவாப்யாம் ஆத்மாநாம் க்ரித்வ சித்”. உதாரணம். நாம் ஒருவரிடம். “உங்களுக்கு கெட்ட காலம் போய் விட்டதுஎன்பதற்கு பதிலாகஉங்களுக்கு கெட்ட காலம்என்ற பாதி வார்த்தையை மட்டும் கூறினால் என்ன பொருள் தரும்? அதனால் இதை நம்புவதற்கு இல்லை. இதை இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள 6) படியுங்கள்.

5) புனரபி ஜனனம் புனரபி மரணம் புனரபி ஜனனீ ஜடரே சயனம் என்றபஜ கோவிந்தம்பாடல்

கிறிஸ்தவர்களது விளக்கம்...

மரணத்தை வென்ற ஒரே கடவுள் ஏசு நாதர் தான் என்றார். இந்த பகுத்தறிவை என்ன வென்று சொல்வது.

உண்மையான பொருள்

இதற்கு முன்பு இவர் கூறிய விளக்கத்தில்பிரஜாபதிமனித குலத்திற்காக இறப்பான் என்று கூறி விட்டு அப்படியே அதற்க்கு முரண்பாடான ஒரு பதில் மிகவும் வேடிக்கையாக உள்ளது. இதிலிருந்து என்ன தெரிகிறது? இவர் கூறியசாம வேத தாண்ட்ய ஆரண்யகா மஹா பிராமணம்பற்றிய கருத்து சுத்த பொய் என்பது உண்மையாகி விட்டது.

6) தேத்ரிய ஆரண்யகாபற்றி கூறினார். “சர்வ பாப பரிஹார ரத்த ப்ரொக்ஷனம் அவசியம். தத் பரமாத்னேன புண்ய தான பலியகம்

கிறிஸ்தவர்களது விளக்கம்... 
பாவத்திலிந்து விடுதலை பெற ரத்தம் சிந்த பட வேண்டும். அந்த ரத்தத்தை பரமாத்மாதான் சிந்த வேண்டும் என்றார். அதனால் ரத்தம் சிந்தி இறந்த ஏசு, தான் கடவுள் என்கிறார். கடவுள் தான் பலியாக வேண்டும் என்கிறார்.

உண்மையான பொருள்

 “பரமாத்நேனஎன்பதற்கு அர்த்தம் பரமாத்மாவிற்கு என்பது தானே தவிர பரமாத்மாவே இல்லை. இதன் விளக்கம் என்னவென்றால் பாபத்தை போக்கபரமாத்மாவிற்குமிருகங்களை ஹோமத்தில் பலி கொடுப்பார்கள். வேத காலத்தில் அப்படி ஒரு சம்ப்ரதாயம் உண்டு. மந்திரங்கள் மூலமாக மிருகங்களை மூர்சயாக்கி விடுவார்கள், அதனால் அதற்கு உணர்ச்சி, வலி எதுவும் இருக்காது.

இந்த விஷயத்தை அப்படியே திரித்து பரமாத்மாவே பலி ஆவார் இறந்து போவர் என்று கூறுவது அபத்தம், மகா முட்டாள்தனம். கர்மம், மாயை என்ற சுழற்சியில் சிக்குவது ஜீவாத்மா தான். பராமாத்மா அல்ல. அப்படி இறந்தால் அவர் பரமாத்மாவே அல்ல.

7) இறுதியாகப்ருஹதாரன்யக உபநிஷத்” — I.III.28.

அசதோமா சத்கமைய
தமசோமா ஜ்யொதிர்கமய
ம்ருத்யோமா அம்ருதம் கமைய

இதன் உண்மையான பொருள்இருளிலிருந்து வெளிச்சத்திற்கு, வெளிவந்து உண்மையான பரமாத்மனை அறிய பிறப்பு, இறப்பு என்பதில் இருந்து விடு படுவோம்”.


எனவே, இதிலிருந்தே எளிதாக அறியலாம், வேத, உபநிஷத்துக்கள  குறிப்பிடும் புருஷ என்பது பகவான் நாரயணரை குறிப்பிடுகிறதுஇயேசுவை அல்ல ! எனவே, மேலே கூறியது தவறு என அறியலாம்

1 comment:

  1. நன்றி. அருமையான விளக்கம்

    ReplyDelete