சாகீர் நாயக் & ரவிசங்கர் குருஜிக்கும் - “கடவுள் கோட்பாடு” தலைப்பில் நடைபெற்ற விவாதம்
சாகீர் நாயக்கும், இந்துமத ஆன்மிக வாதியும் உலக அமைதிக்கும் போறாடும் ரவிசங்கர் குருஜிக்கும் இடையில் “கடவுள் கோட்பாடு” எனும் தலைப்பில் நடைபெற்ற விவாதத்தம்.
இந்துமக்கள் வேதங்களில் பெரிதாக பாண்டியத்தை பெற்றவர்கள் இல்லை இதனை கருத்திக்கொண்டு பலவாறான வார்த்தைகளை திரிபுபடுத்தி இந்துமதத்துக்கு கறை பூசுகின்றார். ஜாகிர் நாய்க் உபநிஷத்தின் சில வாசகங்களுக்கு எப்படி மாற்றீடு கொடுத்துள்ளார் என்பதை பாருங்கள்.
1) "ஹிந்து" என்கிற சொல்
ஜாகிர் நாய்க் : "ஹிந்து" என்பது ஒரு பாரசீக சொல். அது சிந்து சமவெளியில் வாழ்ந்த மக்களை குறிக்கும்.
உண்மை: இந்து (தேவநாகரி:हिंदू) என்பது இந்தியத் துணைக்கண்டத்தின் மெய்யியல், சமயங்கள் மற்றும் பண்பாடு ஆகியவற்றைக் குறிக்கும் அடையாளச் சொல்லாகும். இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி "இந்து" என்பது இந்திய சமயங்களைக் குறிக்கிறது. (உதா: இந்து சமயம், சைவம், வைணவம், சமணம், பௌத்தம் அல்லது சீக்கியம்). பொதுவாக இந்து சமயத்தவரைக் குறிப்பிட இந்து என்ற சொல் பயன்படுகிறது.
செங்கிருதச் சொல்லான சிந்துவிலிருந்து இந்து மறுவியதாகும். முதன்முதலாக சிந்து என்ற சொல் இந்தியத் துணைக்கண்டத்தின் வடக்குப்பகுதி ஆறான சிந்து ஆற்றை குறிப்பிட ரிக் வேதத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதை ரிக் வேத ஸ்ருதி வாக்கியத்தின் வாயிலாக அறியலாம்.
"ஹிம்சைச துய்யதாம்ய -ஹிம்துனே அக்ஷகம்""
“ஹிந்து என்பதன் அர்த்தம் ஹிம்சையில் துய்ப்பவன் அடுத்தவர் படும் கஷ்ட்டத்தை ஹிம்சையை தான் படுவதாக எண்ணி வருந்துபவனே ஹிந்து”.
ப்ருஹஸ்பதீய சாஸ்திரம், பவிஷ்ய புராணம், காலிகா புராணம், கல்பத்ரும, மாதவ திக் விஜயம், பாரிஜாத நாடகம், சப்த கோஷங்கள் ஆகியவற்றில் ஹிந்து என்கிற சொல் குறிக்கப்பட்டுள்ளதோடு அதற்க்கு மிக உன்னதமான அர்த்தங்களும் கொடுக்கப்பட்டுள்ளன ...
பிரகாஸ்பதி ஆகமத்தில் (கி.மு. 4ம் நூற்றாண்டு)…
ஹிமாலயன் ஸமாரப்ய யாவ்திந்துஸரோவரம் .
தன் தேவ்னிர்மிதன் தேஷன் ஹிந்துஸ்தானன் ப்ரசக்ஷ்யதே ..
“கடவுள் படைத்த நிலப்பரப்பான இமயமலை முதல் தென் பெருங்கடல் வரை இந்துசுதான் என்று அழைக்கப்படுகிறது.”. இதில் இந்து என்கிற சொல் இந்துசுதானில் உள்ளது.
புத்த ஸ்ம்ருதி கி.மு. 4ம் நூற்றாண்டு…
"ஹிம்ஸாயா தூயதே யஷ்ச ஸதாசரண தத்பர:
வேத, கோ, ப்ரதிமா ஸேகி ஸ ஹிந்து முகவர்ணபாக்"
“ யார் ஹிம்சிக்கப்பட்டாலும் எவன் துக்கமடைகிறானோ, ஒழுக்கமான வாழ்க்கை நடத்துவதில் முனைப்புடன் உள்ளானோ, வேதம், பசு, விக்ரகங்கள் ஆகியவைகளை பக்தியுடன் வழிபடுகிறானோ அவனே ஹிந்து”
சம்ஸ்கிருத நூல்களில் தொடங்கிய ஹிந்து என்ற சொல்லின் பயன்பாடு 9-10ம் நூற்றாண்டுகளில் வட இந்திய பிரதேச மொழிகளின் இலக்கியத்தில் அழுத்தமாக இடம் பெற்று விட்டது.
·
பிருத்விராஜனின் பெருமைகளை விவரித்து அவரது அரசவைக் கவிஞரான சந்த பரதாயி எழுதிய பிருத்விராஜ் ராஸோ (11ம் நூற்றாண்டு) என்ற ஹிந்தி வீரகதைப் பாடலில் ஹிந்து என்ற சொல் ஏராளமான இடங்களில் வருகிறது. ”ஹிந்துக்கள் மிலேச்சர் மீது நடத்திய போர்”, “ஹிந்துக்களாகிய நாங்கள் மிலேச்சர்களைப் போல மானமற்றவர்களல்ல” போன்ற வரிகள் இந்த நூலில் விரவியுள்ளன.
·
13ம் நூற்றாண்டில் வாழ்ந்த கபீர்தாசர், குருநானக், தாதூ தயால், நாபா தாசர் ஆகிய பக்தி இயக்கக் கவிஞர்களின் பாடல்களில் ஹிந்து, துரக் ஆகிய சொற்கள் முறையே இந்துக்களையும், இஸ்லாமியர்களையும் வேறுபடுத்திக் காட்டும் வகையில் பயின்று வந்துள்ளன. பாரதத்தின் கிழக்குப் பகுதியான வங்கத்தைச் சேர்ந்த தர்க்க சாஸ்திர நூல் ஒன்றில் “சிவ சிவா, அவன் ஹிந்துவும் அல்ல யவனனும் அல்ல” (சிவ சிவ ந ஹிந்துர் ந யவன:) என்ற சொற்றொடர் காணப் படுகிறது.
·
தென்னிந்தியாவை இஸ்லாமியப் படையெடுப்பிலிருந்து காப்பதற்காக 14ம் நூற்றாண்டில் எழுந்தது விஜய நகர சாம்ராஜ்யம். இதனைத் தோற்றுவித்த ஹரிஹர, புக்க சகோதரர்களின் அரசு முத்திரையில் “ஹிந்து ராய ஸுரத்ராண” என்ற பட்டப் பெயர் இடம் பெற்றுள்ளது.
·
ராஜபுத்திர மன்னர்களின் ஆவணங்கள் அனைத்திலும் ஹிந்து என்ற பெயர் பெருமிதத்துடன் கூறப்படுகிறது.
·
மகாராஷ்டிரத்தில் தோன்றிய சமர்த்த ராமதாசர் என்ற மகானின் பாடல்களில் “ஹிந்துஸ்தான் பளாவலேம்” போன்ற வரிகள் உள்ளன.இவரது ஆசியுடன் சத்ரபதி சிவாஜி அமைத்த சுதந்திர இந்து ராஜ்ஜியம் ”ஹிந்து பதபாதசாஹி” என்றே தன்னை அழைத்துக் கொண்டது. ”ஹிந்துவின் குரலையும், ஹிந்துவின் குடுமியையும், ஹிந்துவின் திலகத்தையும், வேத புராணங்களையும் காத்தவன்” என்று சிவாஜியைக் குறித்து கவிஞர் கவிராஜ பூஷண் புகழ்ந்து பாடியுள்ளார். வடக்கில் ஆப்கானிஸ்தானம் முதல் தெற்கே தஞ்சை வரை பரந்து விரிந்திருந்தது இந்த மராட்டிய ஹிந்து அரசு.
·
தமிழில் தஞ்சை மராட்டியரின் ஆவணங்களிலேயே முதன் முதலில் ஹிந்து என்ற சொல் காணப் படுகிறது.
·
சீக்கிய குருமார்களின் பல பாடல்களில் தங்களது அற நெறியை ஹிந்து தர்மம் என்று குறிப்பிடுகின்றனர். குரு தேக்பகதூர் அவர்களை இஸ்லாமிய மத அதிகார வர்க்கம் அச்சுறுத்திய போது, அவர் “என்னுடையது ஹிந்து தர்மம்; உயிரினும் மேலாக இதை நேசிக்கிறேன்” (uttar bhanyo dharam ham hindu, ati priyako kima kare
nikandu) என்று பதிலிறுத்தார்.
·
சீக்கிய மதத்தை வீரர்களின் திருக்கூட்டமாக மாற்றியமைத்து அதற்கு காலசா என்று பெயரிட்ட குரு கோவிந்த சிங் (1666 – 1708) அந்தப் பிரகடனத்தையே ஹிந்து என்ற சொல்லால் அலங்கரிக்கிறார் .
·
மேலும், கிறிஸ்தவ மத நூலான சுமார் கி.மு 3000 வருடங்களுக்கு முன்பு இருந்த பழைய ஏற்பாட்டில் இந்துமதம் பற்றிய குறிப்புகள் உள்ளது ..
"இந்துதேசம் முதல் எத்தியோப்பியா தேசம் வரைக்குமுள்ள ..... "
- பைபிள் - பழைய ஏற்பாடு , எஸ்தர் : 1-1
இவ்வாறு, கி.மு 4ம் நூற்றாண்டு தொடங்கி 18ம் நூற்றாண்டு வரை பாரதத்தின் பல மொழிகளிலும், பல பகுதிகளிலும் ஹிந்து என்ற சொல் ஏற்கனவே ஒட்டுமொத்த ஹிந்து மதத்தையும், அதைப் பின்பற்றும் சமுதாயத்தையும் குறித்திருக்கிறது. அதன் தொடர்ச்சியாகவே பிரிட்டிஷாரும் இந்தச் சொல்லைப் பயன்படுத்த ஆரம்பித்தார்கள்.
சாம வேதத்தில் மட்டும் 22 இடங்களில் இந்து என்ற சொல் உள்ளது,அவை
அத்தியாயம் 79 சுலோகம் 4, அத்தியாயம் 85 சுலோகம் 6, அத்தியாயம் 89 சுலோகம் 5, அத்தியாயம் 91 சுலோகம் 10, அத்தியாயம் 98 சுலோகம் 3 & 10, அத்தியாயம் 103 சுலோகம் 12 & 14,
அத்தியாயம் 105 சுலோகம் 15, அத்தியாயம் 106 சுலோகம் 10, அத்தியாயம் 108 சுலோகம் 1, அத்தியாயம் 115 சுலோகம் 1 & 3, அத்தியாயம் 119 சுலோகம் 6, அத்தியாயம் 124 சுலோகம் 2, அத்தியாயம் 125 சுலோகம் 4, அத்தியாயம் 129 சுலோகம் 4, அத்தியாயம் 131 சுலோகம் 5, அத்தியாயம் 135 சுலோகம் 6, அத்தியாயம் 155 சுலோகம் 7, அத்தியாயம் 165 சுலோகம் 7 & 9,….
2) சந்த்க்யோ உபநிஷத் 6:2:1, "ஏகம் ஏவம் அத்விதயம்"
ஜாகிர் நாய்க்: அவன் ஒருவனே: வேறு எவரும் இல்லை.
உண்மை: "ஏகம் ஏவம் அத்விதயம் பிரம்மன்" “
பிரம்மன் ஒருவனே, ஒருவனேயன்றி வேறில்லை”
இதில் ' பிரம்மன்' என்பது இறைவனை சொல்கிறது .
அதாவது இறைவன் (பிரம்மன்) என்பது ஒருவர் தானே ? எல்லா மதங்களிலும் இதை தானே சொல்கிறது. சனாதன தர்மத்தில் இறைவனை 'நாராயணர்' என்கிறது. ஆனால், இவர் இதில் உள்ள வசனத்தில் பிரம்மன் ஒரு வார்த்தையை மட்டும் எடுத்துவிட்டு கூறுகிறார். எனவே இது முற்றுப்பெறாத ஒரு வாக்கியமாகும்.
மேலும், பிரம்மன் (இறைவன்) என்பது இரண்டு நிலைகளில் (உருவம் & உருவமில்லாத நிலை ஆகிய) அறியப்படுகிறதாக யஜுர் வேத 2.3.1 (ப்ரஹதாரண்ய உபநிஷத்) சொல்கிறது. எனவே, இதன் அர்த்தம் ' பிரம்மன் (இறைவன்) ஒருவரே ! வேறு எவருமில்லை' என்கிறது. அதே வேதம் இதை வேறு இடத்தில, அந்த ஒரே இறைவன் யார் என சொல்கிறது
“ஷவோ தேவே எக நாராயணா ந துவித்யச கர்ஷித்”
“பகவான் ஸ்ரீநாராயணரே ஒருவரே முழுமுதற் கடவுள். அவரைத்தவிர இரண்டாவதாக வேறு எவறும் இல்லை”
எனவே, இங்கே ஒரே இறைவனாக (நாராயணர்) என்கிறது !
3) ஸ்வதேஸ்வதரா உபநிஷத் 6:9 “Na casya kascij janita na cadhipah.”
ஜாகிர் நாய்க்: அவனுக்கு பெற்றோர்களோ ஆண்டவனோ இல்லை.
உண்மை: “na tasya kaścit patir
asti loke na ceśitā naiva ca tasya liṅgaṃ
sa
kāraṇaṃ karaṇādhipādhipo na cāsya kaścij janitā na cādhipaḥ”
“அவனுக்கு இவ்வுலகில் தலைவனோ ஆட்சியாளனோ போன்ற அதிகாரம் செலுத்தும் யாரும் கிடையாது. அவனே மூலகாரணம், அவனே உறுப்புகளின் தலையாயவன். அவனுக்கு மூதாதையரோ, கட்டளையிடுவோரோ இல்லாதவன். அவனுக்கு எந்த சின்னமும் இல்லை. எந்த சின்னத்தையும் கொண்டு அவனை குறிக்க வேண்டாம்” - ஸ்வதேஸ் வதரா உபநிஷத் 6:9
ஆமாம். அந்த ஏக இறைவனான (பகவான் நாராயணருக்கு) தாய்,தந்தை ... மற்றும் அவரிடம் அதிகாரம் செலுத்துபவர் என எவரும் இல்லை ! இதை தான் வேதத்தில் வேறு இடத்தில சொல்கிறது...
ஏகோ வை நாராயண ஆஸீன் நப் ரஹ்மா ந ஈஷானோ நாபோ நாக்னி-ஸமௌ நேமே த் யாவ்-ஆப்ருதிவீ ந நக்ஷத்ராணி ந ஸூர்ய:
"படைப்பின் ஆரம்பத்தில் பரம புருஷரான நாராயணர் மட்டுமே இருந்தார். பிரம்மாவோ, சிவனோ, நீரோ, அக்கினியோ, ஆகாயத்தில் சந்திரனோ, நட்சத்திரங்களோ, சூரியனோ இருக்கவில்லை" - மஹா உபநிஷதம்: I-1-4)
இப்படி ஆதியில் இறைவன் (பகவான் நாராயணர்) மட்டுமே இருந்தார் என சொல்கிறது.
4) ஸ்வதேஸ் வதரா உபநிஷத் 4:19 , “Na tasya
pratima asti”
ஜாகிர் நாய்க்: அவனை போல் உருவமில்லை
உண்மை: “nainam ūrdhvaṃ na
tiryañcaṃ na madhye parijagrabhat /
na tasya pratimā asti yasya nāma mahad yaśaḥ”
“மேலிருந்தோ, பக்கமிருந்தோ நடுவிலிரிந்தோ அவனை யாரும் பிடிக்க முடியாது. அவருக்கு பௌதீகமான உருவமுடையவர் அல்ல. அவன் நாமம் மகா கீர்த்தி. (Mahad Yasah)”
இந்த வசனத்தில் முக்கியமான வார்த்தை 'ப்ரதிமா' (pratima) என்பது. இதன் அர்த்தம் 'உருவமில்லை' என்கிறார். ஆனால், வேதங்களில் இந்த வார்த்தை பௌதீகமான உருவங்களால் அறியப்படமுடியாதவன் என தான் சொல்கிறது ! அதற்காக இதற்க்கு உருவமில்லை என்பது அல்ல. இதை பௌதீகமான பொருள்களுடன் ஒப்பிடுகிறதே தவறானது !
ஸம்ஸகிருதத்தில், प्रतिमा (Pratima”) வார்த்தை 'உருவமில்லாத' என்பதை குறிப்பிடவில்லை, ஆனால் உருவமில்லை என்பதற்கான சரியான சமசுகிருத வார்த்தை “चित्रम” தான். எனவே ‘ப்ரதிமா’ என்பது ‘உருவம்' என்கிற வார்த்தை குறிப்பிடவில்லை. எனவே, இந்த வசனத்தின் உண்மையான அர்த்தம் ..
'அவர் பௌதீகமான உருவமுடையவர் அல்ல' (தசியா ப்ரதிமா அஸ்தி .....)
அதாவது அவர் ஆன்மீகமானவராக இருக்கிறார், அதாவது வேதத்தில் இந்த ஆன்மீக வடிவத்தை 'சத், சித் ஆனந்த' என கூறுகிறது, அதாவது, நித்தியம், அறிவு மற்றும் பேரின்பம் என்று பொருள்படும். அவர் ஆன்மீகம் என்று பொருள். அதாவது இவர் பௌதீகமான பொருள்களான (பூமி, நீர், நெருப்பு, காற்று மற்றும் ஈத்தர்), ஆகிய பஞ்ச பூதங்களால் ஆனவர் அல்ல என்பதை தான் குறிப்பிடுகிறது. அதாவது
"சர்வ வல்லமையுள்ள கடவுள் எந்த பிரமாண்டமான (சித்திரம், ஓவியம், சிலை) ஆனவர் அல்ல.
என்பதே !.
5) ஸ்வதேஸ் வதரா உபநிஷத் 4:20
“Na samdrse tisthati rupam asya, na caksusa
pasyati kas canainam.”
ஜாகிர் நாய்க்: அவன் உருவம் தெரியாது. யாரும் அவனை தம் கண்ணால் காண முடியாது.
உண்மை: “na saṃdṛśe
tiṣṭhati rūpam asya na cakṣuṣā paśyati kaścanainaṃ /
hṛdā hṛdisthaṃ manasā ya
enam evaṃ vidur amṛtās te bhavanti “
“அவன் உருவம் காண்பதற்கான பொருள் அல்ல. யாரும் அவனை கண்ணால் காண முடியாது. கூர்மையான அறிவாற்றலும், ஆழ்ந்த சிந்தனை தரும் ஒருமித்த ஞானமும் கொண்டோர் அவன் நெஞ்சத்தில் குடி இருப்பதை உணர்ந்து மரணமில்லாமல் வாழ்வர்”
பொதுவாக, இறைவனின் நிர்குண பிரம்மன் நிலையில் அவரை ஆன்மிக ஜோதி வடிவத்தில் (உருவத்தில்) பார்க்கலாம். ஆனால் அவரின் சகுன பிரம்மன் நிலையில் அந்த பகவானின் தனிநபர் உருவத்தை நமது சாதாரண கண்களினால் பார்க்க முடியாது. இந்த நிலையில் அவரை பார்க்க வேண்டுமானால் நமக்கு ஆன்மீகமான கண்கள் வேண்டும், அதை பாகவனலே நமக்கு தர முடியும். அதாவது அவர் நினைத்தால் தான் நாம் அவரை பார்க்கமுடியும்.
இந்த வசனத்தில் அவரின் இந்த சகுன (தனி பகவான்) உருவத்தை யாரும் அவர்களின் கண்களால் பார்க்கமுடியாது என்கிறது. இறைவனை நமது இந்த தற்போதைய பௌதீக குறைபாடுடைய புலன்களால் பார்க்கமுடியாது ! இறைவனை பார்ப்பதற்கு ஆன்மீகமான சக்தியை இறைவனே நமக்கு கொடுப்பதாக கீதையில் அருஜுனக்கு கூறுகிறார் ….
" ஆனால் உன்னுடைய தற்போதைய கண்களால் என்னை நீ காண முடியாது. எனவே, நான் உனக்கு திவ்யமான கண்களைத் தருகிறேன். எனது யோகத்தின் ஐஸ்வர்யத்தைப் பார்" - பகவத் கீதை 11.8
எனவே, இறைவனை நமது குறைபாடுகளுடைய சாதாரண கண்களால் காணமுடியதே என்பதே இந்த வசனத்தின் அர்த்தம்.
6) யஜூர் வேதம் 32:3:5 “நா தஸ்ய ப்ரதிமா அஸ்தி”
ஜாகிர் நாய்க்: அவனுக்கு(இறைவனுக்கு) உருவம் கிடையாது
உண்மை: ”நா தஸ்ய ப்ரதிமா அஸ்தி, யஸ்ய நாம் மஹாத்யாஷ்
ஹிரண்யகர்ப் இதெஷ்ய மா மா ஹின்ஸிடித்யேஷ்ய யாஷ்மன்ன ஜத் இதேஷா”
"ஹிரண்யகர்ப், யஸ்மான்ன ஜட், மா மா ஹின்சிட்" போன்ற வாசகங்களில் முதன்மையான கடவுளின் பெயரும் புகழும் அதிகமானவை. ஆனால் அவருக்கு ஒரு குறிப்பிட்ட கட்டமைப்பு இல்லை “
இந்த வசனத்தில் முக்கியமான வார்த்தை 'ப்ரதிமா' (pratima) என்பது. இதன் அர்த்தம் 'உருவமில்லை' என்கிறார்கள். ஆனால், வேதங்களில் இந்த வார்த்தை பௌதீகமான உருவங்களால் அறியப்படமுடியாதவன் என தான் சொல்கிறது ! இதை தான் நாம் மேலே விளக்கி இருக்கிறேன் .....
7) யஜூர் வேதம் 40:8:6, “ ஷுதம போவாவிதம்”
ஜாகிர் நாய்க்: அவன் உடம்பில்லாதவன், பரிசுத்தமானவன்
உண்மை: “ஸ பர்யகாசுக்ரம்கயம்வ்ரன்மஸ்னவீர் ஷுத்தம்பப்வித்தம் கவிர்மனிஷி பரிபுஹ் ஸ்வயம்புர்யதட்த்யடொர்தான் வ்யட்ஜச்ஹாஷ்வடிப்யாஹ் ஸமப்யாஹ்”
“அவன் எங்கும் வியாபித்துள்ளான், அற்புதமானவன். அவனுக்கு
பௌதீகமான உடம்பில்லை. நரம்பில்லை. தோல் துவாரங்கள் இல்லை. அவன் பரிசுத்தமானவன் பாவமற்றவன். அவன் கவிஞன் (இங்கே கவிஞன் என்பது அவன் நினைக்கிற எதையும் உருவாக முடியும் என்று பொருள்) அவனே மொழி ( சொற்கள் உதிக்கும் மனதை ஆட்சி செய்பவன்), வெற்றியாளன், தானே சிருஷ்டிதுக்கொண்டவன்(ள்). காலம் துவங்கியதிலிரித்து எல்லோரையும் தன் கட்டுபாட்டில் வைத்திருக்கும் தகுதியானவன்”
இதில் குறிப்பிடுகிற ‘அவனுக்கு பௌதீகமான உடம்பில்லை ' என்கிறது. அதாவது இவரது உடல் ஆன்மீகமானது, வேதத்தில் இந்த ஆன்மீக வடிவத்தை 'சத், சித் ஆனந்த' என கூறுகிறது, அதாவது, நித்தியம், அறிவு மற்றும் பேரின்பம் என்று பொருள்படும். அவர் ஆன்மீகம் என்று பொருள். அதாவது இவர் பௌதீகமான பொருள்களான (பூமி, நீர், நெருப்பு, காற்று மற்றும் ஈத்தர்), ஆகிய பஞ்ச பூதங்களால் ஆனவர் அல்ல என்பதை தான் குறிப்பிடுகிறது. அதாவது "சர்வ வல்லமையுள்ள கடவுள் எந்த பிரமாண்டமான (சித்திரம், ஓவியம், சிலை) ஆனவர் அல்ல. என்பதே !.
8) யஜூர் வேதம் 40:9:7, “அந்தடம
ப்ரவிஷாந்தி யெ அசும்பூதி முபஸ்தே”
ஜாகிர் நாய்க்: இயற்கையை(நீர்,நிலம், நெருப்பு போன்றவை) வணங்குபவர்கள் இருட்டிற்கு செல்கின்றனர். சம்பூதிகளை வணங்குபவர்கள் மேலும் ஆழ்ந்த இருட்டிற்கு செல்கின்றனர்.
உண்மை: “அந்தம் தமஹ ப்ர விஷாந்தி யேஷம்பூதியுபஸ்தே
த்தோ புய இவ தே தமோ ய ஓ சம்புத்யம் ரத”
“எவரெல்லாம் பிரிவுகளையும் அழிவுகளையும் வணங்குகிறார்களோ, அதை மட்டுமே விளையாட்டாக செய்கிறார்களோ, அவர்கள் இருட்டிற்கு (இருட்டு என்பது அறியாமை) செல்கிறார்கள். அந்த அறியாமையில் மூழ்கி அதில் உருவாக்கப்படும் பொருட்களை வணங்குகிறவர்கள் மேலும் அறியாமையில் மூழ்குகின்றனர்”
குறிப்பு: இங்கு வழிபாடு என்பது எப்போதும் பக்தியில் மூழ்கி இருப்பதாகும். சம்பூதி என்றால் கூடுவது, அசம்பூதி என்பது பிரிவு மற்றும் புறவாழ்க்கையில் மூழ்கி இறைவனை வணங்க மறுப்பதாகும். இங்கே எங்கேயும் இயற்கை (காற்று, தண்ணீர், அக்னி போன்றவை) வணக்கம் பற்றி சொல்லவே இல்லை.
9) யஜூர் வேதம் 40:16:8
ஜாகீர் நாயக் : "நம்மை நல்ல பாதையில் அழைத்து செல். தப்பான பாதையில் சென்று குழம்புவதற்கு காரணமாக இருக்கும் பாவத்தை நீக்குவாயாக."
உண்மை: "அக்னே நய சுபத ராய அஸ்மன்விஷ்வாணி தேவ்வாயுனானி வித்வான"
“இறைவனே!! எங்களது அனைத்து செயல்களும் உங்களுக்கு தெரியும். தயவு கூர்ந்து எங்களை நல்வழிப்படுத்தி , வளமான ஆன்மீக பாதையில் எங்களை இட்டுச்செல்வாயாக”
10) அதர்வண வேதம் 20:58:3:9
“Dev maha osi”
ஜாகீர் நாயக் : "கடவுள் மகத்தானவர்"
உண்மை: The truth: baṇ
mahāṃ asi sūrya baḍ āditya mahāṃ asi
mahas te sato mahimā panasyate ‘ddhā deva mahāṃ
asi .
“உண்மையாக. இறைவனே! நீ உண்மையில் மகத்துவம் வாய்ந்தவன். ஆதித்ய நீ மகா வல்லவன், கடவுளே!”
11. ரிக் வேதம் 1:164:46
ஜாகீர் நாயக் : "ரிஷிகள் இறைவனை பல பெயர்களில் அழைக்கின்றனர்”
உண்மை: índram mitráṃ váruṇam
agním āhur /
átho divyáḥ sá suparṇó
garútmānékaṃ sád víprā bahudhâ vadanty /
agníṃ yamám mātaríśvānam
āhuḥ
“ இந்திரா, மித்ரா, வருணம், அக்னி, திவ்யா, சுபர்ண, கருட்மான், யமா, மாட்ரிஷ்வா போன்ற பெயர்கள் அவனுக்கு உண்டு. இறைவன் ஒருவனே. அறிவுள்ளோர் பல பெயர்களில் அழைப்பர்”
12. ரிக் வேதம் 2:1
ஜாகிர் நாய்க்: "பிரம்மாவும் விஷ்ணுவும் இறைவனின் தன்மையான படைத்தல், காத்தல் மட்டுமே."
உண்மை: tvamaghna indro vṛṣabhaḥ
satāmasi tvaṃ viṣṇururughāyo namasyaḥ |
tvaṃ brahmā rayivid brahmaṇas pate tvaṃ
vidhartaḥsacase purandhyā ||
“வீரனுக்கு வீரனே, அக்னி நீதான், இந்திரன் நீயே, பீடு நடையுள்ளவனும் பெருமைக்குரியவனும் நீயே, நீயே செல்வமிக்க பிரமனஸ்பதி, பிரமன். காப்பவனே, உன் ஞானம் கொண்டு எங்களை அருள்வாய்”
13. ரிக் வேதம் 8:1:1:10
“Ma cid anyad vi
sansata sakhayo ma rishanyata"
ஜாகிர் நாய்க்: "அன்பர்களே! அவனை தவிர வேறு யாரையும் வணங்காதீர். அவன் ஒருவனே புகழுக்குரியவன்.
உண்மை: mā cidanyad vi śaṃsata
sakhāyo mā riṣaṇyata |
indramitstotā
vṛṣaṇaṃ sacā sute muhurukthā ca śaṃsata ||
"அன்பர்களே! அவனை தவிர வேறு யாரையும் வணங்காதீர். அவன் ஒருவனே புகழுக்குரியவன். அதனால் எந்த துயரமும் உங்களை அணுகாது. நீர் (தண்ணீர்) கொட்டும் போது வல்லமை பொருந்திய இந்திராவை புகழவும். உங்கள் பாராட்டுகளை தொடர்ந்து சொல்லவும்”
ஜாகிர் நாய்க் என்ன சொல்ல நினைத்தார் என்று தெரியவில்லை. ஆனால் இரண்டாவது வரியினை மிகவும் தந்திரமாக மறைத்து முதல் பாடலை மட்டும் காட்டி இருக்கிறார்.
14. ரிக் வேதம் 5:1:81:11 ,
“Devasya samituk parishtutih”
ஜாகிர் நாய்க்: உண்மையாக, புனித படைப்பாளனின் பெருமை மகத்துவமே.
உண்மை: yuñjate mana uta yuñjate
dhiyo viprā viprasya bṛhato vipaścitaḥ |
vi hotrā dadhe vayunāvid
eka in mahī devasya savituḥ pariṣṭutiḥ ||
“துதி பாடல்களில் தேர்ச்சிமிக்க அவனுடைய குருமார்கள் ஆன்மாவையும் புனித எண்ணங்களையும் ஒன்று குவிப்பார்கள். அவனுக்கு பணிவிடை ஒன்றே அவர்களுடைய திருப்பணி. இறை சவிதாவிற்கு கம்பீர பாராட்டுகள்”
15. பகவத் கீதை 7:20
ஜாகிர் நாய்க்: "எவரெருவர் பரம்பொருளை தாமாக உண்டாக்கி வணங்குகிறாரோ அவர் பொய்யானவற்றையே வணங்குகிறார்".
உண்மை: "ஜட ஆசைகளால் அறிவை இழந்தவர்கள், தேவர்களிடம் சரணடைந்து, தங்களது இயற்கைக்கு ஏற்ற வழிபாட்டு முறைகளையும் நியமங்களையும் பின்பற்றுகின்றனர்."
இதில் பகவான் கிருஷணர் கூறுவது ஜட ஆசைகளுக்காக அறிவற்ற மக்கள் பிற தேவர்களான முருகர், விநாயகர்...... இப்படி வழிபடுவதை தான் சொல்கிறார்.
ஜாகிர் நாய்க், ஏன் அவர் வேதங்களில் இருந்து மேற்கோள் காட்டும் போது, வாசகங்கள்/வரிகள் முழுதாக பயன் படுத்தாமல் அவர் விருப்பதிற்கேற்ப பகுதிபடுத்தி அவற்றின் பொருள்களை சிதைக்க வேண்டும்?
No comments:
Post a Comment