Monday, 19 June 2017

சூத்திரன் சம்பூனை ராமர் வதம் செய்தது சரியா.?


ரிக் வேதத்தில்  சுதாஸ் என்னும் அரசன்  வசிஷ்டரது உதவியால் சுதாஸ் ’பேதம்’ என்பவனை ஒழித்தான் என்றும் ரிக் வேதம் கூறுகிறது (7-83).

 நாமும் ஐம்புலன்களையும் அடக்கிக் கொள்ளவேண்டும். ஐம்புலன்களும் ஐந்து எதிரிகள் போன்றவர்கள். இந்த ஐந்து எதிரிகளை அடக்கவில்லை என்றால், சங்கிலித் தொடர் போல மேலும் ஐந்து எதிரிகள் உண்டாவார்கள். ஆக மொத்தம் பத்து எதிரிகள் ஒரு மனிதனுக்கு உண்டு. கீதை 2- 62 &63

பத்து அரசர்கள் என்னும் எதிரிகளை குருவான வசிஷ்டர் துணையுடன், இந்திரன் அருளுடன், சுதாஸ் வெற்றி கொண்டான். அந்த சுதாஸுக்குப் பட்டாபிஷேகம் செய்தவர் வசிஷ்டர் என்று மஹாபாரதத்தில் சொல்லப்படுகிறது. அதே சுதாஸை சூத்திரன் என்றும் மஹாபாரதம் அழைக்கிறது. பிரம்ம ஞானம் பெற ஆசைகளை அடக்க வேண்டும். மேற்கூறிய  பத்து அரசர்களை சுதாஸ் அடக்கியது போல அடக்க வேண்டும். அப்படி அடக்காமல் பிரம்ம ஞானத்தைத் தேடி தவம் புரிந்தவன் சம்பூகன்.

சம்பூகன் என்பவன் எல்லா பௌதீக ஆசைகளை அடைவதற்க்காக தவம் செய்தான். அதாவது வேத சாஸ்திரதிற்க்கு எதிர்மாராக குரு இல்லாமலும்,சாஸ்திரம் கூறும் வேத சடங்களுக்கு எதிராகவும் தன்னிச்சையாக முரட்டுதனமான தவம்  செய்தான். அதனால் ராமனுடைய ஆடட்சியில் அதன் பின்விளைவாக ஒரு நல்ல,இதுவரையும் பொய்யோ,பிறரை துன்புறுத்தாமலும் வாழ்ந்ந பிராமணரின் மகன் எந்தவித காரணமும் இல்லாமல் சும்மா இறக்கிறான். எனவே இதன் காரணம் என்ன என்று ராமன் கேட்க்க. நாரதர் கூறூகிறார் 'சம்பூகனின் சாஸ்திவிதிகளுககு எதிராக செய்யும் தவமே'.என்கிறார்..

அதைச் சொல்லி அவனுக்குத் தண்டனை கொடுக்க வேண்டும் என்று சொன்னவர்  நாரத முனிவர். அவரது பூர்வீகம் என்று பார்த்தால் அவர் ஒரு பணிப்பெண்ணுக்குப் பிறந்தவர். அதனால் இங்கு சூத்திர நிந்தை செய்தவர் என்று எந்த பிராம்மணனையும் சொல்ல இடமில்லை. சம்பூகன் செய்தது தவறு என்று சொன்னது ஒரு பணிப்பெண்ணின் மகன். அதற்குத் தண்டனை கொடுத்தது ஒரு க்ஷத்திரிய அரசன்., ராமர் பிராம்மணன் இல்லை. அவர் க்ஷத்திரிய குல அரசன். க்ஷத்திரியன் என்றால், க்ஷத்தைப் போக்கிக் காப்பாற்றுபவன் என்பது பொருள்.


ராமரது ஆட்சியில் நான்கு வர்ணத்தவர்களும் திருப்தியுடனும், மகிழ்ச்சியுடனும் இருந்தனர் என்று ராமாயணம் கூறுகிறது. மேலும் ராமர் சூத்திரர்களுக்கு எதிரி என்றால், அவர் வேடனான குகனைக் கட்டித் தழுவி ‘குகனோடு ஐவரானோம்’ என்று எப்படிச் சொல்லியிருக்க முடியும்?

அோல், சூத்திரபெண் சபரி என்பவள் கடித்து எச்சில்பட்ட பழளை ராமர் விரும்பி உண்டது எவ்வாறு?

ராமர் சூத்திரர்களை அழிப்பவராக இருந்தால், வால்மீகி எப்படி ராமாயணத்தை எழுதியிருக்க முடியும்?

வால்மீகி வழிப்பறிக் கொள்ளை செய்து வந்தவர். பிறகு தவம் செய்து முனிவரானவர். அவரது ஆசிரமத்தில்தான் ராமனது பிள்ளைகள் பிறந்தனர். அவரிடம்தான் சீதை அடைக்கலம் கொண்டிருந்தாள். திருடனான வால்மீகி ஒரு தபஸ்வியானது எவ்வாறு? ஒரு சம்பூகன் தவம் செய்ததை ராமர் தடுத்தார் என்றால், திருடனான வால்மீகி ஒரு தவ ஞானியானதை ராமர் ஏன் தடுக்க வில்லை?

வால்மீகிக்கு ஒரு நீதி? சம்பூகனுக்கு ஒரு நீதியா?

இன்றைக்கும் ராமாயணம் பாராயணம் செய்யும் போது முதலில் வால்மீகியை வணங்கிவிட்டே தொடங்குவர். “ வந்தே வால்மீகி கோகிலம்” – மதுரமான மொழியால் ராம காவியம் பாடிய வால்மீகி என்னும் குயிலுக்கு நமஸ்காரம் – என்று ஒரு காலத்தில் திருடனாக இருந்தவனுக்கு இன்றுவரை மரியாதை கொடுக்கப்படுகிறது.

நாரதரே தன்னிடம் வழிப்பறி செய்ய முயன்ற ரத்னாகரனுக்கு (வால்மீயின் ஆரம்ப காலப் பெயர்), புத்திமதி சொல்லி, அவனைத் தவம் செய்ய ஊக்குவித்தார். வால்மீகி தவம் செய்து முனிவரான பின்னும், ராம கதையை அவருக்குச் சொன்னது நாரதரே.
சம்பூகன் ஒரு வேடன். அவனைச் சூத்திரன் என்று சொல்லி, அதனால் அவன் தவம் செய்வது தவறு என்று சொன்ன நாரதரே, திருட்டுத் தொழிலில் ஈடுபட்டிருந்த ரத்னாகரனை (வால்மீகியை) தவம் செய்யும் படி தூண்டியிருப்பதால், சம்பூகன் தவம் செய்யக்கூடாது என்று தடுத்திருப்பதற்கு வேறு ஒரு காரணம் இருக்க வேண்டும் என்று தெரிகிறது.  சூத்திரன் என்பது காரணமாக இருக்க முடியாது. அவன் பௌதீக சுகங்களை உடனே பெறவும்,, அதுவும் குரு இல்லாமலும, சாஸ்திரத்திற்க்கு விதிகளை கடைபிடிக்காமல் செய்தது தான் காரணம்.

மேலும் வால்மீகி தவம் புரிந்து முனிவரானதும், சம்பூகன் வாழ்ந்த சமகாலத்திலேயே நடந்திருக்கிறது. எனவே ஒருவன் சூத்திரன் என்று இன்று நாம் நினைக்கும் ஜாதி காரணமாக ராமர் சம்பூகனை வதைக்கவில்லை. 
ஆதிசங்கரரின் கீதைமஹாத்மியம்

பகவத் கீதை  உரையில் ஆதிசங்கரரின் கீதை மஹாத்மியம் கூறுவது....

கீத-ஷாஸ்திரம் இதம் புண்யம் ய: படேத் ப்ரயத: புமான்—

பகவத்கீதையின் உபதேசங்களை முறையாகப் பின்பற்றுபவன், வாழ்வின் எல்லா வித துயரங்களிலிருந்தும் ஏக்கத்திலிருந்தும் விடுபட முடியும்.

பய-ஷோகாதி-வர்ஜித:

இவ்வாழ்வின் பயம் முழுவதிலிருந்தும் விடுபட்டு, அவன் மறுவாழ்வில் ஆன்மீக வாழ்வை அடைகிறான்.

 (கீதை மஹாத்மியம் 1)

இதைத் தவிர மேலும் பலனுள்ளது:

கீதாத் யாயன-ஷீலஸ்ய
ப்ராணாயம-பரஸ்ய ச
நைவ ஸாந்தி ஹி பாபானி
பூர்வ-ஜன்ம-க்ருதானி ச

"பகவத் கீதையை முழு ஆர்வத்துடனும் அக்கறையுடனும் ஒருவன் படித்தால், பகவானின் அருளால் அவனது பூர்வ ஜன்ம பாவங்கள் செயல்படமால் போகும்."

( கீதை மஹாத்மியம் 2)

மல-நிர்மோசனம் பும்ஸாம்
ஜல-ஸ்நானம் தினே தினே
ஸக்ருத் கீதாம்ருத-ஸ்நானம்
ஸம்ஸார-மல-நாஷ னம்

"தினமும் குளிப்பதன் மூலம் ஒருவன் தன்னை சுத்தம் செய்து கொள்கிறான். ஆனால் கீதை எனும் புனித கங்கையில் ஒருமுறை குளிப்பதன் மூலம், ஜட வாழ்வின் களங்கள் எல்லாவற்றையும் கழுவி விடுகிறான்."

(கீதைமஹாத்மியம் 3)

கீதா ஸு-கீதா கர்தவ்யா
கிம் அன்யை: ஷாஸ்த்ர-விஸ்தரை:
யா ஸ்வயம் பத்மனாபஸ்ய
முக-பத்மாத் வினி:ஸ்ருதா

பரம புருஷ பகவானே கீதையை உபதேசித்திருப்பதனால், வேறு எந்த வேத நூலையும் படிக்க வேண்டிய அவசியமில்லை. பகவத் கீதையை தொடர்ந்து கவனத்துடன் கேட்பதும் படிப்பதுமே அவசியம். தற்போதைய யுகத்தில் பௌதிகச் செயல்களிலே மிகவும் ஆழ்ந்துள்ள மனித குலத்தினரால், எல்லா வேத நூல்களையும் படிப்பதென்பது இயலாது. ஆனால், இது தேவையானதுமல்ல. பகவத் கீதை என்னும் இந்த ஒரு நூலே போதுமானது. ஏனெனில், இஃது எல்லா வேத நூல்களின் சாரமும் முழுமுதற் கடவுளால் உபதேசிக்கப்பட்டதுமாகும்.

(கீதை மஹாத்மியம் 4)

இங்கே கூறப்பட்டுள்ளது போல:

பாரதாம்ருத-ஸர்வஸ்வம்
விஷ்ணு-வக்த்ராத் வினி:ஸ்ருதம்
கீதா-கங்கோதகம் பீத்வா
புனர் ஜன்ம ந வித்யதே

"கங்கையின் நீரைக் குடிப்பவன் முக்தி அடைகிறான், இப்படியிருக்க பகவத் கீதையின் அமிர்தத்தை குடிப்பவரைப் பற்றி என்ன சொல்வது? பகவத் கீதை மஹாபாரதத்தின் அமிர்தம், இது மூலவிஷ்ணுவான ஸ்ரீ கிருஷ்ணரால் உபதேசிக்கப்பட்டது."

(கீதை மஹாத்மியம் 5)

பகவத் கீதை முழுமுதற் கடவுளின் திருவாயிலிருந்து பொழிவது, கங்கையோ அவரது திருப்பாதங்களிலிருந்து வெளிப்படுவது. உண்மையில், முழுமுதற் கடவுளின் திருவாய்க்கும் திருபாதங்களுக்கும் வேறுபாடில்லாவிடினும், நமது பாரபட்சமற்ற ஆய்வின் மூலம் பகவத் கீதையை கங்கைக் காட்டிலும் முக்கியமானதாக மதிக்கலாம்.

ஸர்வோபனிஷதோ காவோ
தோக்தா கோபால-நந்தன:
பார்தோ வத்ஸ: ஸுதீர் போக்தா
துக்தம் கீதாம்ருதம் மஹத்

"எல்லா உபநிஷத்துகளின் சாரமான கீதோபநிஷத் என்றழைக்கப்படும் பகவத் கீதை பசுவைப் போன்றது. இடையர் குலச் சிறுவனாக புகழ்பெற்று விளங்கும் பகவான் கிருஷ்ணரால் கறக்கப்படுகிறது. அர்ஜுனன் கன்று போன்றவன். அறிவு சான்றவரும் தூய பக்தர்களும் பகவத் கீதை எனும் அமிர்தப் பாலைக் குடிக்க வேண்டியவர்கள்."
(கீதை மஹாத்மியம் 6)

ஏகம் ஷாஸ்த்ரம் தேவகீ-புத்ர–கீ தம்
ஏகோ தேவோ தேவகீ-புத்ர ஏவ
ஏகோ மந்த்ரஸ் தஸ்ய நாமானி யானி
கர்மாப்-யேகம் தஸ்ய தேவஸ்ய ஸேவா

(கீதை மஹாத்மியம் 7)

தற்சமயத்தில், ஒரு நூல், ஒரு கடவுள், ஒரு மதம், ஒரு தொழில் என்ற கருத்துக்களில் மனிதன் மிகவும் ஆவலாக இருக்கின்றான்.

 எனவே, ஏகம் ஷாஸ்த்ரம் தேவகீ-புத்ர-கீதம்— உலகம் முழுமைக்கும் ஒரே பொது நூல் இருக்கட்டும்—பகவத் கீதை.

ஏகோ தேவோ தேவகீ புத்ர ஏவ—உலகம் முழுமுமைக்கும் ஒரே கடவுள் இருக்கட்டும்—ஸ்ரீ கிருஷ்ணர்.

ஏகோ மந்த்ரஸ் தஸ்ய நாமானி யானி—மேலும், ஒரே மந்திரம், ஒரே பிரார்த்தனை-அவரது திருநாமத்தை உச்சரித்தல்: ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே / ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே.

 கர்மாப்-யேகம் தஸ்ய தேவஸ்ய ஸேவா—மேலும் ஒரே ஒரு செயலிருக்கட்டும்—பரம புருஷ பகவானுக்குத் தொண்டாற்றுதல்.
ஆதி சங்கரரின் அத்வைதக் கொள்கை இன்றைக்கும் ஏற்கத் தக்கவையா?

 எட்டாம் நூற்றாண்டில்  வாழ்ந்தவரான அதி சங்கரர் சிவபெருமானின் அவதாரமாவார்.  அவர் போதித்தது அத்வைதம் என்ற கொள்கையாகும்.  இன்றைக்கு உலாத்திக் கொண்டிருக்கும் போலிச் சாமியார்கள் எல்லோரும் இவரது கொள்கையின் சாயலைத்தான் எடுத்து தங்களுக்குப் பூசிக் கொண்டு ஊரையும் ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர்.  பலருக்கும் ஏற்ப்புடையதாகத் தோன்றும் இவை,  "உண்மையல்ல, சாத்திரத்தில் சொல்லப் படாத ஒன்றை பொய்ப் பிரச்சாரம் செய்தேன்" என்று அவரே சொன்னால் வியப்பாகத்தானே இருக்கும்!!

பிரஞம் பிரம்மம் - பிரம்மம் தூய உணர்வு
அயமாத்மா பிரம்மம் -- ஆத்மாவே பிரம்மம்
தத் துவம் அசி   - நீதான் அந்த உணர்வு
அஹம் பிரம்மாஸ்மி -  நானே பிரம்மம்

இதைப் பற்றி சுருக்கமாகச் சொன்னால், "பிரம்ம சத்ய ஜகன் மித்ய"  என்பதாகும்.  ஆதிசங்கரர் பிரம்மம் தான் எல்லாமும் என்றார்.  அதற்க்கு உருவம், இன்னபிற பண்புகள்  எதுவும் இல்லை, பிரம்மம் என்பது, "கோபம், அன்பு, வருத்தம், மகிழ்ச்சி போன்றவற்றை உணர்ந்து கொள்ளக் கூடிய ஒரு நபரும் [Personality] இல்லை" என்றார்.  மொத்தத்தில் பிரம்மம் என்றால் எந்த விதத்திலும் வர்ணிக்கவே முடியாதது!

பிரம்மத்தைத் தவிர வேறு எதுவும் இல்லவே இல்லை என்றார்.  அதாவது பிரம்மம் என்பதே இறுதியில் நிலைத்திருக்கும், இந்த படைப்பு  அனைத்தும் மாயை, நிஜத்தில் இல்லவே இல்லை".  ஜீவன்களுக்கு  தான் என்ற எண்ணம் மாயையில் சிக்குண்டு இருப்பதால் தான் வருகிறது, முக்தியடைந்தால் நாம் அந்த பிரம்மமே, வேறல்ல என்பதை உணர்ந்து விடுவோம் என்றார்.

"அப்படியானால், முதற்க்கண் நாம் உருவானது எப்படி?" என்ற கேள்விக்கு, பிரம்மம் மாயையின் பிடியில் சிக்கும்போது ஜீவன்களாகிறது, என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

 இவருக்கு அடுத்து 11-ஆம் நூற்றாண்டின் பிற்ப்பகுதியில் தோன்றிய  ஸ்ரீஇராமானுஜர்  இந்த விளக்கத்தை  எதிர்த்து கேள்விகளை எழுப்பலானார்.  "பிரம்மம் தான் எல்லாவற்றுக்கும் மேலானது, அதற்க்கு மிஞ்சியது எதுவுமே இல்லை என்றால், அது எப்படி மாயையின் கட்டுப் பாட்டிற்குள் வர முடியும், அப்படி வரும் என்றால் மாயை பிரம்மத்தை விட மேலானது என்று ஆகிவிடுமே?

 மேலும், பிரம்மம் என்பது பகுக்க முடியாதது எனில், இங்கே இருக்கும் கணக்கிலடங்கா ஜீவன்களாக பகுக்கப் பட்டது எப்படி? " என்று கிடிக்கிப் பிடி போட்டார்.  இந்தியாவைச் சுற்றி மேற்கொண்ட பயணங்களில் பல்வேறு விதத்தில் ஆதி சங்கரரின் கொள்கைகளை ஸ்ரீஇராமானுஜர் தோற்கடித்து, இறைவன் உருவம் கொண்டவன், அவனுக்கு எண்ணற்ற கல்யாண [Auspicious] குணங்கள்  உண்டு. ஜீவன் ஒருபோதும் பரப் பிரம்மனான பகவானுடன் ஐக்கியமாக முடியாது, சேவகனாகத்தான் நிலைத்திருக்க முடியும், இந்த படைப்பு மாயை இல்லை, நிஜம்தான் ஆனால் நிலையற்றது,  காலத்தால் அழிந்து போகக் கூடியது என்று சாஸ்திரங்கள் மூலமாக ஆதரப் பூர்வமாக நிலை நிறுத்தினார்.

 இவரை அடுத்து வந்த ஸ்ரீ மத்வாச்சார்யாரும் ஆதி சங்கரரின் கொள்கைகளைத் தவிடுபொடியாக்கினார்.  தற்போது நமக்குள் ஒரு கேள்வி எழும், மேற்க்கண்டவாறு இரண்டு ஆச்சார்யர்கள் தவறு என்று ஆதாரப் பூர்வமாக நிரூப்பிக்கும்படியான ஒரு கொள்கையை எதற்காக சிவனின் அவதாரமான ஆதி சங்கரர் போதிக்க வேண்டும்?

 மேற்கண்ட கேள்விக்கு பதிலைத் தேடும் முன்னர் ஆதி சங்கரர் எந்த மாதிரியான ஒரு காலகட்டத்தில், எதற்காகத் தோன்றினார் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.  கி.மு. 243 வாக்கில்  அசோகரின் ஆட்சியின் ஆதரவோடு இந்தியா முழுவதும் புத்த மதம் பரவியிருந்தது.   புத்தர் விஷ்ணுவின் அவதாரமாவார்.  இதை வைணவக் கவி, ஜெயதேவ் [நான் இல்லீங்க!!]  தனது தசாவதார ஸ்தோத்ரத்தில் இவ்வாறு பாடுகிறார்.


nindasi yajna-vidher ahaha sruti-jatam
sadaya-hridaya darsita-pasu-ghatam
kesava dhrita-buddha-sarira jaya jagadisa hare

யாகங்களில் பலியிடப்படும் உயிர்களின் மேல் பரிவு கொண்டு, அவற்றைக் காக்க புத்தரின் வடிவில் வந்து உயிர்பலியிடுவதை தடுத்து நிறுத்திய கேசவனே,  ஜகன்னாதனே தங்களுக்கு ஜெயம் உண்டாகட்டும்.

யாகங்களின் போது உயிர் பலியிடப் படும்போது அவற்றுக்கு நேரடியாக மனித பிறவி கிடைக்கும்.  ஆனால் தகுதியற்றவர்களால் யாகம் நடத்தப் படும் போது இது நடவாது.   மேலும், யாகங்களில் உயிர்ப் பலியிடுவது கலி யுகத்தில் தடை செய்யப் பட்டதாகும். இவ்வாறு உயிர்கள் முறையின்று கொள்ளப் படுவதை தடுத்து நிறுத்த புத்தர் அவதரித்தார்.  உயிர்ப்பலி வேண்டாம் என்றார். அதை எதிர்த்தவர்கள், வேதங்களை மேற்க்கொள் காட்டி "இது அனுமதிக்கப் பட்டுள்ளது" என்றார்கள்.  அதற்க்கு புத்தர், "வேதங்களை நான் நிராகரிக்கிறேன்" என்றார்.  இதன் விளைவாக இந்தியாவில் புத்தரின் கொள்கைகள் எங்கும் வியாபித்தது, வேதங்களைப் பின்பற்றுவது நின்று போனது.  கடவுள் என்று ஒன்று இல்லை, இறுதியில் சூன்யமே எல்லாம் என்று போதித்தார்.

இந்த நிலையில், வேதங்களை மறந்த மக்கள் மீண்டும் வேதங்களை பின்பற்றும் நிலையை ஏற்ப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டது.  புத்த மத்தத்தை முற்றிலும் தவறு என்று திடீரென போதித்தால் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள், எனவே வேதங்களின் போதனையை புத்தரின் போதனையைப் போலவே தோற்றமளிக்கும் படி செய்து போதிக்கும் வேலையை சிவ பெருமான் ஏற்றுக் கொண்டார்.  ஆதி சங்கரராக வந்தார்.  புத்தர் எல்லாம் சூன்யம் என்றார்.  இவரோ, சூன்யம் இல்லை, பிரம்மம் தான் இறுதியானது, ஆனால் அதற்க்கு குணமில்லை நிறமில்லை, வடிவமில்லை..... என்று எல்லாம் இல்லை என்றார்.  அதாவது, புத்தர் பூஜ்ஜியம் என்றார், ஆதி சங்கரர் ஏதோ இருக்கிறது ஆனால் அதன் மதிப்பு பூஜ்ஜியம் என்றார்.  அதே சமயம் வேத கலாச்சாரத்தை மக்களின் மத்தியில் கொண்டு வருவதில் ஆதி சங்கரர் வெற்றியடைந்தார்.  இவ்வாறு தான் செய்யப் போவதை பத்ம புராணத்தில் பார்வதியிடம் சிவ பெருமானே கூறுகிறார்.

mayavadam asat-sastram  pracchanam-baudham ucyate mayaiva kalpitam devim  kalau brahmana rupinah

 தேவி, கலியுகத்தில் பிராமணன் வடிவத்தில் நான் அவதரித்து சாத்திரங்களில் சொல்லப்படாத,  புத்தமதத்தைப் போலவே தோன்றும், மாயாவாதம் என்னும் ஒரு போலி  கொள்கையைப் பரப்புவேன். [asat-sastram இந்தப் பதத்தில் asat என்றால் sat [சத்யம்-உண்மை] என்பதற்கு எதிர்ப் பதமாகும்.

அதாவது அவர் சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளதற்கு எதிராக போதித்தார் என்று பொருள்.]  (Padma Purana 6.236.7)

சிவ பெருமான் மேலும் தொடர்கிறார்:
vedarthan maha-sastram mayavadam avaidikam
mayaiva kathitam devi jagatam nasakaranat

மாயாவாதம் என்னும் இந்த சக்திவாய்ந்த கொள்கை வேதங்களைப் போலவே தோன்றினாலும், அது உண்மையல்ல.  தேவி, உலகில் நான் செய்யப் போகும் பொய்ப் பிரச்சாரம் இதுவாகும். (Padma Purana 6.236.11)


 வாழ்நாள் முழுவதும் பிரம்மம் மட்டுமே உண்மை என்று போதித்த ஆதிசங்கரர் உலகை விட்டுப் புறப்படும் முன்னர் இறுதியாகச் சொன்னது இந்த பாடலைத்தான்:

பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
பஜ கோவிந்தம்  மூடமதே
சம்பிராப்தே சந்நிகிதே காலே
ந ஹி ந ஹி ரக்ஷதி துக்ரியகரனே

 "முட்டாள்களே, மூடர்களே கோவிந்தனை வழிபடுங்கள்........  கோவிந்தனை வழிபடுங்கள்........  கோவிந்தனையே வழிபடுங்கள்.........   உங்களுடைய இலக்கணம், வார்த்தை ஜாலங்கள் எதுவும் சாகும் தருவாயில் உங்களை வந்து காப்பாற்றாது.

இது மட்டுமன்றி, பூரி ஜகன்னாதரைப் பற்றியும், நரசிம்மரைப் பற்றியும் அழகிய பாடல்களை ஆதி சங்கரர் வடித்துள்ளார், வடிவம் இறைவனுக்கு இல்லை என்றால் ஏன் இப்படி இறைவனின் வடிவில் உருகிப் போகும் பாடல்களை அவர் எழுத வேண்டும் என்பதையும் நாம் யோசிக்க வேண்டும்.

 ஆதிசங்கரர் போதித்த கொள்கைகள் அந்த காலகட்டத்தில் ஒரு குறிப்பிட்ட நோக்கத்தை நிறைவேற்ற மட்டுமே, அது இன்றைக்கு நமக்கு ஏற்ப்புடையதல்ல.  எனவே பின்பற்றவேண்டிய அவசியமும் இல்லை.  சங்கர மடத்தில் உண்மையில் துறவை பின்பற்றும் சன்னியாசிகளுக்கு மரியாதை செலுத்தலாம், எனினும் பின்பற்றத் தேவையில்லை.  

,  ஆதி சங்கரர் அன்றைக்குச் சொன்னதற்கு அந்த காலகட்டத்தில் ஒரு காரணம் இருந்தது,

எனவே தவிர்ப்போமே!!  ஆதி சங்கரர் போதித்த பஜ கோவிந்தம், ஜகன்னாதாஷ்டகம் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம், ஆனால் அவரது அத்வைதக் கொள்கைகள் நிராகரிக்கப் பட வேண்டியவையே.

கோயில் கோபுரங்களில் ஆபாச சிலைகள் ஏன்.?


இந்துக்களால் மிக புனிதமான இடமாக கருதப்படும் கோயில் கோபுரங்களில் ஏன் ஆபாச சிலைகள் இருக்கிறது ...

பொதுவாக எல்லோரும் கூறும் விடயம் எல்லாம்வல்ல இறைவனை காண காம என்னம் தடையாகயிருக்கும். அத்தகைய காமத்தை, காம என்னத்தை, குரோதம் (பலி பீடம்) கடந்து வந்தாலே இறைவனை அடையலாம் என்பார்கள்.

இதனை சற்று விவாதிப்போம் வாருங்கள்....

சமணர்கள், பௌத்தர்களின் கோவில்களில் உள்ளதே இவைகள். இவர்கள் பல காலங்களுக்கு முன்பே இந்து கோவில்களை கைப்பற்றி, அவர்களது இப்படிப்பட்ட கருத்துக்களை சிலைகளில் வடிவமைத்து இருந்தார்கள்.

இடைக்காலத்தில், முகமதியர்களின் கொக்கோக சிந்தனைகளால் அத்தகைய சித்தரிப்புகள் உருவாகின. உண்மையில், ஜைன-பௌத்த நிர்வாணங்கள், கிருத்துவ-முகமதிய மதங்களில் தொடர்ந்தன.

அதன்பிறகு, இந்த கோவில்கள் இந்து கோவில்களாக உருமாறியதால், அந்த சிற்பங்களைமாத்தாமல் அப்படியேவிட்டு விட்டது தான் இவைகள்.

உண்மையில், இப்படிப்பட்ட சிற்பங்கள் இந்து கோவில்களில் கிடையாது. அப்படி இருந்துஎனில், அந்தகோவில் முன்பு சமணர்களது / பௌத்தர்களின் கைகளில் இறந்ததாக இருக்கும்.

அதற்க்காக இந்து கோவில்களில் முழுவதுமாக ஆபாச சிலைகள் இல்லையெனவில்லை. ஆனால் இப்போதுள்ள அளவுக்கு ஆபாசம் இல்லை. உண்மையில் நாகரீகமான சிலைகளே இருந்தன. அதாவது மனித நாகரீகத்தின் எல்லா அம்சங்களும் சிலை வடிவில் செதுக்கியிருந்தனர். அதாவது காமமும் வாழ்க்கையின் ஒரு அங்கமாக காட்ட சிலை நாகரீகமான சிலைகள் இருந்தன. ஆனால் அசிங்கப்படதக்க சிலைகள் கிடையாது.

ஊருக்கு வெளியிலிருந்தே பார்க்கும்போது கண்ணில் படுவது, வானளாவிய கோபுரம் அது ரொம்ப அழகாயிருக்க்கிறது என்று தோன்றும். அதை பார்க்க அருகில் போவோம். கோபுரத்தை அண்ணாந்து பார்க்கிறோம்.  அதில் அடுக்கடுக்காக பல பொம்மைகள்.  கீழ் வரிசையில் உள்ள உருவங்களில் சில ஆபாச சிலைகள் காணப்படுகிறது.

ஆனால் அவற்றுடன் கூடவே யோகியரும், முனிவர்களும், உழவர்களும், குறவர்களும், அவதாரங்களும், கர்ப்பிணி பெண்டிரும், நாக தேவதைகளும், யட்சணிகளும், கந்தர்வர்களும், அரசரும், வீரகாதைகளும் காட்டப்படுகின்றன அவற்றில் ஆபாசமான தன்மை இல்லை


வாழ்க்கையின் ஒட்டுமொத்தத்தைக் காட்டும் பலவகையான சிலைகள் உள்ளன, அவற்றில் உடலுறவுச்சிலைகளை மட்டும் தவிர்ப்பது இந்து மதத்தின் வழக்கம் அல்ல. வாழ்க்கையின் எல்லா அம்சங்களையும் கணக்கில் கொண்டு ஒரு முழுமையை உருவகிக்கவே அது முயல்கிறது. ஆகவே துறவுக்கு இருக்கும் அதே முக்கியத்துவம் காமத்துக்கும் இருக்கும்.

இது ஆலயங்கள் நமக்குக் கற்றுத் தரும் முதல் பாடம்.  "நீ உன் மனதைக் கட்டுப் படுத்தினால் உயர்வாய்" என்பதை போதிக்கிறது.

வேத மந்திரங்களைக் கற்கவோ, ஆன்மீக சொற் பொழிவுகளைக் கேட்கவோ, இசை, நடனம், நாடகம் போன்றவற்றைக் கேட்டு, பார்த்து  ரசிக்கவோ வசதி.  சொல்லப் போனால் இலவச பாட சாலைகள்தானே கோயில்கள்.

இந்த உலக வாழ்க்கையில் உள்ள எல்லா விஷயங்களுமே புனிதமானவை தான். எதையும் தவறாகச் செய்யும் போது அதன் புனிதம் போய் ஆபாசமாகி விடுகிறது. உதாரணமாக, நல்ல விஷயங்களைப் பேசினால் அது அர்த்தமுள்ள பேச்சு. அப்பேச்சுடன் தீய வார்த்தைகளை உபயோகித்துப் பேசினால் அதுவே ஆபாச பேச்சாகி விடுகிறது.


புனிதமான தாம்பத்ய உறவு இல்லையென்றால் குழந்தைகள் எப்படிப் பிறக்கும்? உலக இயக்கம் எப்படி நடக்கும்? உலக வாழ்க்கையில் மனிதன், மிருகம், செடி, கொடி, மரம்.. இப்படி உயிருள்ள எல்லாமே இனப்பெருக்கம் செய்ய வேண்டியது அவசியம். இந்த நோக்கில் பார்த்தால் தாம்பத்ய உறவு என்பது திருக்கோயில் சிலையாக வடிக்கக் கூடிய அளவிற்குப் புனிதத்தன்மை வாய்ந்தது. சினிமா, நாடகம், டிவி போன்றவை வந்து, இந்தப்புனிதத்தை ஆபாசமாக்குவதற்கு முன்பு, கோயில் சிற்பங்களில், இதனைக் கண்டு புனிதமாக வாழும் நெறியை மனித இனம் உணர்ந்து கொள்ளவே இப்படிப்பட்ட சிற்பங்களை வடித்தார்கள். மேற்கொண்டு ஆராய்ந்து இதனை ஆபாசமாக்க கூடாது.




ஒரு கலங்கிய மனதிலிருந்து எழும் வக்கிர விகாரமாக காமத்தைக் காட்டும் சிலைகள் தமிழரின் கோவில்களில் அமைந்திடவில்லை. மாறாக, காமத்தை முழுதாக அறிந்து அதனை அச்சமின்றி வாழ்வின் ஒரு பாகமாக எதிர்நோக்கும் வாழ்க்கைப் பார்வை தான் அங்கு காணப்பட்டது. ஆபாச சிலை தோற்றமானது சூரியனை வழிபடும் சௌர மதத்தில் காமத்தைக் காட்டும் சிலைகள் பெருமளவு இருந்தன. பின்னர் சௌரம் வைணவத்தில் கலந்தபோது அச்சிலைகள் விஷ்ணு ஆலயத்திலும் இடம்பெற்ற்றன. அதில் இருந்து பின் படிப்படியாக மற்றைய கோயில்களுக்கும் பரவியது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
காமத்தை மனிதனின் இயற்கையான ஆற்றலாக எண்ணுபவை தாந்த்ரீக மதங்கள். அந்த ஆற்றலை அறிவதும் அறிவதன் மூலம் கடந்துசெல்வதுமே மானுட உண்மையின் உச்சநிலையை அறிய உதவும் வழி என அவை நினைத்தன. ஆகவே அவை காமத்தை அறிவின் வழியாகக் கண்டன. அந்தத் தாந்த்ரீக மரபும் பாலியல் சிற்பங்களை உருவாக்கியது. சைவ, சாக்த ஆலயங்களில் அவை காணப்படுகின்றன.

இந்து மதம் நீங்கள் மன ஒருமை கொண்டு கற்போடு வாழ்வதற்காகத் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஒரு நன்னெறித்தொகுப்பு அல்ல. அது வரலாற்றில் பல்வேறு வழிபாட்டுமரபுகளும் சிந்தனைகளும் பின்னிக்கலந்து உருவாகி வந்த ஒரு பெரும் ஞானத்தொகை. அந்த ஞானத்தை முறையாக அறிவதும் அந்த அறிவின் அடிப்படையில் வாழ்க்கையை உருவாக்கிக்கொள்வதுமே ஓர் இந்துவின் கடமை.

எளிமையான கேள்வியை மட்டும் கேட்டுக்கொள்ளுங்கள். அந்தச் சிற்பங்கள் மட்டும் இல்லையேல் உங்களுக்கு மன ஒருமை கைகூடி விடுகிறதா? உங்கள் மனதில் காமம் எந்நேரமும் கொந்தளித்துக்கொண்டுதானே இருக்கிறது? அது நிகழாத, வேறெதிலாவது உங்கள் மனம் நிலைத்திருக்கக்கூடிய, எத்தனை மணிநேரம் வாய்க்கிறது உங்கள் வாழ்க்கையில்?

காமச்சிற்பங்கள் தேவை இல்லை என்றால் கோயிலுக்குப் பெண்கள் வரக்கூடாது என்று சொல்லலாமே .அவர்களைப்பார்த்தால் காமசிந்தனை வரலாமே. ஏன் பெண்கள் வராவிட்டால்கூட மல்லிகை மணம் வந்தாலே போதுமே? இசை, ஓவியம் எதுவாக இருந்தாலும் அதே காம ஈர்ப்பு நிகழலாமே?

மன ஒருமை எதையும் இறுக்கமாக மூடிவைப்பதன் வழியாக நிகழ்வதில்லை. பிரச்சினை மனதில் இருக்கிறது, வெளியே அல்ல. கொஞ்சம் கண்மூடினால் அந்தச் சிற்பங்களை விட பல்லாயிரம் மடங்கு பிரம்மாண்டமாக உங்கள் மனதில் பிம்பவெளி ஓடுவதை நீங்களே காணலாம்.
எல்லாம் கடவுளின் லீலை என நம்பி ஏறிட்டே பார்க்காமல் நேராகச் சென்று கும்பிட்டு மீள முடிந்தால் அதைச்செய்யுங்கள். அது பக்தியின் வழி. நம்மில் தொண்ணூறு சதவீதம் பேர் அதையே செய்கிறார்கள்.

அது ஏன் என அறிவதே அதைக் கடந்து செல்லும் வழி. அதுவே ஞானத்தின் பாதை. அனைத்தையும் ஒரு மாபெரும் கட்டுமானத்தின் பகுதிகளாகக் காணும்போது உருவாகும் முழுமையை நோக்கு மூலமே நாம் விடுபடுகிறோம்.

https://indianhistoriography.wordpress.com/2015/06/26/indian-divine-symbols-figures-attacked-by-mohammedan-poets-sufis/

Wednesday, 14 June 2017

கலியுகத்தில் அதர்மம் எங்கும் நடந்தும், பகவான் ஏன் அவதாரம்செய்யவிலை.?




பகவான் கிருஷ்ணரை பற்றி சொல்லும்போதெல்லாம் பிரபலமான இந்த சுலோகம் எல்லோருக்கும் நினைவில் வருகிறது. ஆனாலும், சிலர் இந்த சுலோகத்திற்கும்  தனது சொந்த கற்பனை கருத்துக்களை எந்தவித ஆதாரமும் இல்லாமல் கூறுகிறார்கள். இதை நாம் பார்க்கலாம்...

யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர் பவதி பாரத
அப்யுத்தானம் அதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்-யஹம்

"எப்போதெல்லாம் எங்கெல்லாம் தர்மம் சீர்குலைந்து அதர்மம் ஆதிக்கம் செலுத்துகின்றதோ, பரத குலத் தோன்றலே, அப்போதெல்லாம் நான் தோன்றுகின்றேன்" - பகவான் கிருஷ்ணர் - கீதா 4-7

பரித்ராணாய ஸாதூனாம் வினாஷாய ச துஷ்க்ருதாம்
தர்ம-ஸம்ஸதாபனார்தாய ஸம்பவாமி யுகே யுகே

"பக்தர்களைக் காத்து, துஷ்டர்களை அழித்து, தர்மத்தின் கொள்கைகளை மீண்டும் நிலைத்துவதற்காக, நானே யுகந்தோறும் தோன்றுகிறேன்" - 4.8

இதில் தர்மம் மறைந்து அதர்மம் தலைதூக்கும் பொது பகவான் கிருஷ்ணர் தானே நேரடியாக அவதாரம்(இறங்கி வருவது) வருகிறதா சொல்கிறார். ஆனால், சிலர் இப்படிப்பட்ட சில கேள்வியை நம்மிடம் கேட்பதுண்டு "கிருஷ்ணர் வந்து பல ஆயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த காலகட்டங்களில் தர்மம் அழிந்து அதர்மம் மேலோங்கியிருந்த நாட்கள் இருந்தன. எனினும், கிருஷ்ணர் வரவில்லை"  என்று கூறுகிறார்கள்.


பொதுவாக, இந்த கலியுகத்தில் மக்கள் பெரும்பாலும் பெரும் பாவம் செய்பவர்களாகவே உள்ளார்கள். எனவே, பகவான் இந்த கலியுகத்தில் வந்தால் கூட இங்கே ஒருவரும் மிஞ்சமாட்டார்கள். ஏனெனில், இந்த கலியுகத்தில் பாவம் செய்பவர்களே  99 % உள்ளார்கள். இந்த சமயத்தில் பகவான் வந்தால் எல்லோருமே அழிக்கப்படுவார்கள். மேலும், அவர் முக்கியமாக வருவது தூய பக்தர்களின் திருப்திக்காக மட்டுமே வருவது தான் அவருடைய முதல் காரணம், தீயவர்களை அழிப்பது என்பது அவருக்கு ஒரு பொருட்டல்ல. அவரது உலகிலிருந்தபடியே அவரால் இதை செய்யமுடியும். எனவே, அவர் வருவது தூய பக்தர்குக்காகவே தான் வருகிறார். ஆனால், இந்த கலியுகத்தில் இப்படிப்பட்ட தூய பக்தர்கள் இருக்கிறார்களா ? என்பது சந்தேகமே !

இப்போது பகவான் அவதாரம் பண்ணினானேயானால் அவனுக்கு நிறைய ஹிரண்ய கசிபுகள் கிடைப்பார்கள்; நிறைய ராவணர்கள் கிடைப்பார்கள்; நிறைய சிசுபாலர்கள் கிடைப்பார்கள் .ஆனால் ஒரே ஒரு பிரஹலாதன் கிடைப்பானா? பகவான் அந்த ஒரு ப்ரஹலாதனுக்குத் தான் காத்துக் கொண்டிருக்கிறான்.

பிரஹலாதன் போல ஒரு நிஜ பக்தனுக்குக் கெடுதல் ஏற்பட்டால் இந்த க்ஷணமே பகவான் அவதாரம் பண்ணி விட சித்தமாயிருக்கிறான். அப்படிப் பட்ட நிஜ பக்தி உள்ளவன் ஒருத்தன் இருந்தால் கூட போறும்.

ஆனாலும், அவர் ஒவ்வொரு யுகத்திலும் வருவதாக அவரே கூறியதால், இந்தமுறை மக்களை அழிப்பதற்கு பதிலாக, மக்களுக்கு இறைவனின் நாமங்களை கொடுப்பதற்காக பகவான் இந்த கலியுகத்தில் ஸ்ரீ சைதன்யர் என்கிற நாமத்தில், கல்கத்தாவிலுள்ள, நவதீபம் என்கிற ஒரு ஊரில் 1486 ஆண்டு அவதரித்தார்.  இவரை பற்றிய குறிப்புகள் வேத இலக்கியங்களில் பல இடங்களில் காணப்படுகிறது.

மிகச்சிறந்த யோகிகளின் கற்பனைக்குக்கூட எட்டாத அசாதாரணமான செயல்களாலும் சாஸ்திர குறிப்புகளாலும் ஒரு உண்மையான அவதாரத்தினை அறிந்துகொள்ளலாம்.

ஸ்ரீ சைதன்யர் சாக்ஷாத் கிருஷ்ணரே, தன்னை எவ்வாறு வழிபடுவது என்பதை மற்றவர்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்காகவும், தானே தனது பக்தனின் வடிவில் வந்தார். தான் ஏற்றுக் கொண்டிருந்த பக்தன் என்னும் மனோபாவத்திற்கு பாதிப்பு ஏற்படலாம் என்பதால், அவர் தன்னை முழுமுதற் கடவுளாக விளம்பரப்படுத்திக் கொள்ளவில்லை. இதனால், அவர் மறைக்கப்பட்ட அவதாரம் என்று அறியப்படுகிறார். கலி யுகத்தில் முழுமுதற் கடவுள் மறைக்கப்பட்ட உருவில் தோன்றுகிறார் என்று வேத இலக்கியங்களில் தலைசிறந்த ஸ்ரீமத் பாகவதத்தில் (7.9.38)  கூறுகிறது..

இத்தம் ந்ரு-திர்யக்-ருஷி-தேவ-ஜஷாவதாரைர் லோகான் விபாவயஸி ஹம்ஸி ஜகத் ப்ரதீபான்
தர்மம் மஹா-புருஷ பாஸி யுகானுவ்ருத்தம் சன்ன: கலௌ யத் அபவஸ் த்ரி-யுகோ ஸ த்வம்

“எம்பெருமானே, மனிதன், மிருகம், சாது, தேவர், மீன், ஆமை என பல்வேறு ரூபங்களில் அவதரித்து, அதன் மூலமாக முழு படைப்பையும் பராமரித்து ஒவ்வொரு யுகத்திலும் அசுரக் கொள்கைகளை நீங்கள் வதம் செய்கிறீர்கள். இதனால், எம்பெருமானே, நீங்கள் தர்மத்தின் பாதுகாவலராகத் திகழ்கிறீர்கள். கலி யுகத்திலோ நீங்கள் உங்களை பரம புருஷ பகவானாக வெளிக்காட்டிக்கொள்வதில்லை. எனவே, நீங்கள் த்ரி-யுக, அல்லது மூன்று யுகங்களில் மட்டும் தோன்றக்கூடிய இறைவன் என்று அறியப்படுகிறீர்கள்.” (ஸ்ரீமத் பாகவதம் 7.9.38)

ஸ்ரீமத் பாகவதத்தில் (11.5.32) விவரிக்கப்பட்டுள்ளது:
க்ருஷ்ண-வர்ணம் த்விஷாக்ருஷ்ணம் ஸாங்கோபாங்காஸ்த்ர-பார்ஷதம்
யக்ஞை: ஸங்கீர்தன-ப்ராயைர் யஜந்தி ஹி ஸு-மேதஸ:

“கலி யுகத்தில், கிருஷ்ணரின் நாமங்களை இடைவிடாமல் கீர்த்தனம் செய்யும் முழுமுதற் கடவுளின் அவதாரத்தை புத்திசாலி நபர்கள் ஸங்கீர்த்தனம் செய்து வழிபடுவர். அவரது மேனி கருமையாக இல்லாவிடினும் அவர் கிருஷ்ணரே. அவர் தனது சகாக்கள், சேவகர்கள், ஆயுதங்கள், மற்றும் இரகசிய துணைவர்களால் சூழப்பட்டவர்.”

இங்கே அவர் சன்ன: கலௌ என்று அழைக்கப்படுகிறார். கலி யுகத்தில் அவர் நரசிம்மதேவர், வாமனதேவர், இராமசந்திர பகவான் ஆகியோரைப் போன்று தோன்றுவதில்லை. அவர் ஒரு பக்தராகத் தோன்றுகிறார். ஏன்? இஃது அவருடைய மிகமிகக் கருணை வாய்ந்த அவதாரமாகும்.

ஸ்ருதி வேத வாங்கியங்களிலிருந்து :
அதர்வண வேதம் - ஸ்ரீ சைதன்யா உபநிஷத் ...

ito 'ham krta-sannyaso 'vatarisyami sa-guno nirvedo
niskamo bhu-girbanas
tira-stho 'lakanandayah kalau catuh-sahasrabdhopari
panca-sahasrabhyantare gaura-varno dirghangah
sarva-laksana-yukta
isvara-prarthito nija-rasasvado bhakta-rupo
misrakhyo vidita-yogah syam

கலியுகம் நான்கு ஆயிரம் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு இடையில், இந்த கட்டத்தின் முடிவில், நான் கௌரங்கா , கங்கை 'கரையில் ஒரு இடத்தில் ஒரு தங்க நிறத்தில், அந்தண குடும்பத்தில் பூமியில் இறங்கி வருவேன். பின்னர் சன்னியாசம் எடுத்து, உச்ச துறவும், பொருள் ஆசைகள் இருந்து முழுமையான பற்றின்மை உட்பட அனைத்து என் ஆழ்நிலை குணங்கள் வெளிப்படுத்துவேன். . இறைவன் கௌரங்கா, வடிவத்தில், நான் என் கைகள் என் முழங்கால்கள் விரிவாக்கும் ஒரு பெரிய ஆளுமை அனைத்து முப்பத்தி இரண்டு உடல் அறிகுறிகள் காண்பிக்கும்.
நான் என் சொந்த பக்தர்களையும், எனது புனித பெயர்களையும் பக்தர்கள் ஜெபிப்பார்கள்,  அந்த நேரத்தில் என் மிகவும் ரகசியமான பக்தர்கள் மட்டுமே என்னை புரிந்து கொள்ள முடியும்.
    (அதர்வன வேதத்தில், மூன்றாவது கண்ட பிரம்மா-விபாக)

sa eva bhagavan yuge turiye 'pi brahma-kule
jayamanah sarva upanisadah uddidirsuh
sarvani dharma-astrani vistarayisnuh sarvan
api janan santarayisnuh sarvan api vaisnavan
dharman vijrimbhayan sarvan api pasandan nicakhana

கலியுகத்தில், உன்னத இறைவன் ஒரு அந்தணர் குடும்பத்தில் தோன்றுவார். அவர் உபநிஷத் மற்றும் தர்மம்-சாஸ்திர செய்தியை சொல்லிக்கொடுக்கவும், . அவர் நாத்திகர்கள் மற்றும் வேத துவேசம் செய்பவர்களை  தோற்கடிக்க வேண்டியும்,  அவர் வைஷ்ணவ தர்மத்தின்  உண்மையை நிறுவ வேண்டும் என்பதர்காகவும் வருகிறார்.
 - கிருஷ்ண உபநிஷத்  2.6, உறுதி பதிப்புகள்: வைஷ்ணவ  உபநிடதங்கள் ஆங்கில மொழிபெயர்ப்பு (ராமநாதன்)

kaleh prathama-sandhyayam gaurango 'ham mahi-tale
bhagirathi-tate bhumni bhavisyami sanatanah
முதல் சந்தியா வேளையில் கலியுகத்தில், நான் கங்கை கரையில், என்னுடைய தங்க நிற வடிவத்தில் இந்த பூமியில் வருவேன்  -  பிரம்மா புராணம்

nama-siddhanta-sampati prakasana-parayanah
kvacit sri-krsna-caitanya nama loke bhavisyati
‘உன்னத இறைவன் மீண்டும் இந்த பூமியில் வருவார். அவரது நாமம் 'ஸ்ரீ கிருஷ்ணா சைதன்ய' ஆகும். இவர் பகவானின் புனித நாமங்களை பிரச்சாரம் செய்வார்'  -  தேவி புராணம்

yad gopi-kuca-kumbha-sambhrama-bhara-
rambhena samvardhitah yad va gopa-kumara-
sara-kalaya range subhandi-krtam yad
vrndavana-kanane pravilasac chridama-
damadibhis tat prema-pradatam cakara
bhagavan caitanya-rupah prabhuh
'உன்னத பகவான், தன்னுடைய முந்தைய விருந்தவன  லீலைகளை காண்பதற்க்காகவும், தூய அன்பை வெளிப்படுத்தவும்,  மீண்டும் இந்த உலகிற்கு வருகிறார். அவரது நாமம் 'சைதன்ய' எனப்படும்' - கருட புராணம்

aham purno bhavisyami yuga-sandhau visesatah
mayapure navadvipe bhavisyami saci- sutah
‘என்னுடைய முழுமையான ஆன்மிக வடிவத்தில், நான் நவதீப, மாயாப்பூர் எனும் இடத்தில, சசி தேவிக்கு மகனாக கலியுகத்தில் நான் (சைதன்யர்) அவதரிப்பேன். -   கருட புராணம்

danda-mandita-bhutah sannyasa-vesah sva-
yam nihsandedham upagatah ksiti-tale
caitanya-rupah prabhuh
பகவான் இந்த பூமியில் ஒரு சந்நியாசியாக வருகிறார். அவரது நாமம் 'சைதன்ய பிரபு '  - கருட புராணம்


இப்படி அவரது அவதாரம் பற்றிய வேத ஆதாரங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். எனவே, இந்த கலியுக அவதாரமாக பகவான் சைதன்யர் எல்லா வேத இலக்கியங்களிலும் தெளிவாக  அறிந்து கொள்ளலாம்.

சாத்தான் இறைவனின் போட்டியாளனா?


சில மத நம்பிக்கைகளில், இறைவனுக்கு எதிரான காரியங்கள் சாத்தானால் செயல்படுத்தப்படுவதாக கூறப்படுகின்றது. மேலும், இப்புவியினை மட்டுமே சாத்தான் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கின்றது என்றும், கடவுள் பணியில் ஈடுபடுகின்றவர்களை இந்த சாத்தான் திசை திருப்பவும் தடுக்கவும் முயலும் என்றும் கூறி வருகின்றனர்.

இத்தகைய தகவல்கள் இறைவனின் உன்னத நிலை மற்றும் அவரது உன்னத சக்தியைப் பற்றிய ஞானமில்லா தன்மையினை வெளிப்படுத்துகின்றது. இந்த உலகில் ஏற்படும் தீமைகளுக்கு முறையான தத்துவ விளக்கம் வழங்க இயலாதபோது புனையப்பட்ட கற்பனையான கதையே சாத்தான் எனப்படும் கருத்து.

இறைவன் சர்வ வல்லமை படைத்தவர்

இறைவன் சர்வ சக்திகளையும் பெற்றவராவார்; அவருக்கு சமமாகவோ அவரை விட உயர்வாகவோ அவருக்கு போட்டியாகவோ யாரும் இருப்பதில்லை, அவ்வாறு இருப்பதும் இயலாத ஒன்று. அவ்வாறு யாரேனும் கடவுளுடன் போட்டியிடும் அளவிற்கு திறன் படைத்தவராக அல்லது உயர்ந்தவராக இருப்பாரேயாயின், அந்தக் கடவுள் நிச்சயம் கடவுளாக இருக்க முடியாது என்பது அடிப்படை அறிவாகும்.

எனவே, அவரால் கட்டுப்படுத்த முடியாமல் தீமைகளை இழைப்பவர் என்று யாரும் இருக்க முடியாது. கடவுள் தனக்கு எதிராக ஒருவனைப் படைத்தார், அவன் கடவுளை எதிர்த்து அனைவரையும் ஒன்று கூட்டி புரட்சி செய்கிறான் என்று கூறுபவர்கள் சற்று சிந்தித்துப் பாருங்கள்! ஒருவன் புரட்சி செய்யும்போது, அவனை ஒன்றும் செய்ய இயலாது கையைப் பிசைந்து கொண்டிருக்க கடவுள் ஒன்றும் திறமை இல்லாதவர் அல்லவே.

நமக்கு துன்பம் வருவது ஏன்?

கடவுளுக்கு போட்டியாக சாத்தான் என்று யாரும் இல்லை. அப்படியெனில், மக்களுடைய துயரத்திற்கு காரணமாக இருப்பது என்ன?

ஒவ்வொரு ஜீவனுக்கும் தனித் தன்மை உள்ளது, கொஞ்சம் சுதந்திரமும் உள்ளது. இறைவன் பூரண சுதந்திரம் கொண்டவர், அவரது அம்சங்களான ஜீவன்களுக்கு சிறிதளவு சுதந்திரம் உள்ளது.

இந்த ஜீவராசிகள் அனைவரும் கடவுளைப் போன்று நிரந்தரமானவர்கள். இறைவனுக்குப் பல்வேறு சேவைகளைப் புரிய வேண்டிய ஜீவன்கள், சுயமாக அனுபவிக்க விரும்பும் வேளையில், கருணைக் கடலாக விளங்கும் இறைவன், இவர்களுக்கென தனி இடத்தினை உருவாக்கி இவர்களை அங்கே அனுப்புகின்றார். இறைவனே உன்னத அனுபவிப்பாளர், நாம் அவரால் அனுபவிக்கப்பட வேண்டியவர்கள். இதுவே நமது உண்மையான நிலை. இதனை மறுத்து சுயமாக அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் நம்மில் வந்த பொழுதிலே, அத்தகைய எண்ணம் தவறு என சுட்டிக் காட்டுவதற்காகவும், நம்மைத் திருத்துவதற்காகவும் ஏற்படுத்தப்பட்ட இடமே இந்த ஜடவுலகம்.

இந்த ஜடவுலகம் பார்ப்பதற்கு தனித்து செயல் புரிவது போன்று தோன்றினாலும், இந்த ஜட சக்தியினை இறைவனே இயக்குகின்றார்.

ஜீவன்களை மீண்டும் தன்னகத்தே அழைக்க விரும்பும் பகவான், ஜட சக்தியினை துன்பம் நிறைந்ததாகவும் தற்காலிக மானதாகவும் படைத்துள்ளார். ஜடவுலகில் நாம் துன்புறுவதற்கு இதுவே இறுதி காரணம். நாம் இவ்வுலகில், எந்த உடலை எடுத்தாலும் அது தற்காலிகமானதே, எந்த மகிழ்ச்சியைப் பெற்றாலும் அது தற்காலிகமானதே. எனவே, துன்பங்கள் என்பது நம்மைத் திருத்துவதற்கான தண்டனையே தவிர, கடவுளுக்கு எதிராக நிகழக்கூடியவை அல்ல.

ஒவ்வொருவரும் தத்தமது விருப்பத்தின்படி குணங்களில் சிக்கி மாயையினால் வசப்படுத்தப்பட்டுள்ளனர், இதில் இறைவனின் சதியும் இல்லை, இறைவனது போட்டியாளரது (சாத்தானது) சதியும் இல்லை–ஜீவனின் ஆசையே காரணமாக அமைந்துள்ளது. மாயை என்பது இறைவனின் கட்டுப்பாட்டில் செயல்படும் சக்தியே தவிர, இறைவனுக்கு போட்டியாக செயல்படும் சாத்தான் அல்ல. தங்களின் உள்ளே ஏராளமான ஜட ஆசைகளைக் கொண்டுள்ள ஒருவன், தன்னுள்ளே ஏராளமான குப்பைகளை வைத்துக் கொண்டு, உண்மையான தத்துவ நிலைகளை அறிந்திடாமல், சாத்தானின் மேல் கல்லெறிவதும் யாரேனும் ஒருவனை சாத்தான் எனக் குறிப்பிடுவதும் உசிதமான செயல்கள் அல்ல.

நமது துன்பத்திற்கு நாமே காரணம் என்பதை உணர்ந்து, கிருஷ்ணரிடம் சரணடைவோமாக. அவ்வாறு நாம் சரணடைந்தால், மாயை உடனே நம்மைவிட்டு விலகிவிடும். மாயையை வெல்வது மிகவும் கடினம் என்றபோதிலும், கிருஷ்ணரிடம் சரணடைவோர் அதனை எளிதில் வெல்லலாம் என்று பகவத் கீதை (7.14) நமக்கு உறுதியளிக்கின்றது. எனவே, வீண் குழப்பங்கள் ஏதுமின்றி, மற்றவர் மீது பழி போடாமல், பக்தித் தொண்டில் ஈடுபடுவோமாக.

Sunday, 11 June 2017

கடவுளின் அணுத்துகள் / ஹிக்ஸ் போஸான்”  என்பதை கண்டுபிடிச்சாச்சா?


பிரபஞ்சம் உருவான வரலாற்றை ஆய்வு செய்து வரும் விஞ்ஞானிகள், ஆய்வின் முக்கியமான முன்னேற்றமாக “கடவுளின் அணுத்துகள்” என்று அழைக்கப்படும் “ஹிக்ஸ் போஸான்” (Higgs boson) என்ற பொருளைக் கண்டுபிடித்துள்ளது குறித்த ஒரு சிறு ஆய்வு.


நிறை எங்கிருந்து வந்தது
உலகம் சூன்யத்திலிருந்து தோன்றியதாகக் கூறும் விஞ்ஞானிகள் அதனை நிரூபிப்பதற்கான தங்களின் முயற்சியில் பல்வேறு பிரச்சனைகளை சந்திந்து வருகின்றனர். பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த அதிர்வெடியினால் உலகம் தோன்றியிருக்கலாம் என்னும் தங்களின் கொள்கையை, அதிர்வெடிக் கொள்கை (Bing Bang) என்று பெயரிட்டுள்ளனர். எல்லையற்ற வெப்பமும் அழுத்தமும் தங்களின் சுய ஈர்ப்புவிசையினால் இணைந்தபோது அதிர்வெடி நிகழ்ந்ததாகவும், அதனால் எலக்ட்ரான், புரோட்டான், மற்றும் நியூட்ரான்கள் தோன்றி ஜடப் பொருட்கள் தோன்றத் தொடங்கின என்றும் அவர்கள் கூறுகின்றனர். இதில் அவர்களுக்கு மிகுந்த பிரச்சனையைக் கொடுத்து குழப்பச் செய்யும் ஒரு கேள்வி: இந்த அடிப்படைப் பொருட்களுக்கான நிறை (Mass) எங்கிருந்து வந்தது என்பதாகும்.

ஹிக்ஸ் போஸான்
1964இல், பீட்டர் ஹிக்ஸ் என்ற விஞ்ஞானியும் அவரது குழுவினரும் இணைந்து ஹிக்ஸ் கொள்கை (Higgs theory) என்னும் கொள்கையை வெளியிட்டனர். “மிகச்சிறிய ஆரம்பநிலை மூலக்கூறுகள், வெற்று இடத்திலும் சற்று பலம் கொண்ட ஒரு பரிமாணத் தளத்துடன் (Quantum Field) தொடர்பு கொண்டபோது அவற்றிற்கு நிறை உண்டானது,” என்பதே அவர்களின் (அனுமானக்) கொள்கை. அந்த பரிமாணத் தளத்திற்கு ஹிக்ஸ் தளம் என்றும், அத்தளத்தில் இருந்திருக்கலாம் என்று கற்பனை செய்யப்பட்ட சிறிய அணுத்துகள்களுக்கு ஹிக்ஸ் போஸான் (Higgs boson) என்றும் பெயரிட்டனர்.

பிரபஞ்சம் தோன்றியதற்கான அதிர்வெடிக் கொள்கையில் இருக்கும் பல்வேறு குறைகளையும் பிரச்சனைகளையும் சமாளிப்பதற்கு ஹிக்ஸ் கொள்கை உதவியாக அமைந்ததால், அதனை பெரும்பாலான விஞ்ஞானிகள் அடித்தளமாக ஏற்றுக் கொண்டனர். ஏதேனும் ஒன்றினை அடித்தளமாக ஏற்க வேண்டுமெனில், அதற்கென்று சில விதிகள், தன்மைகள், மற்றும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு நிரூபிக்கப்பட வேண்டும். ஹிக்ஸ் கொள்கையானது ஈர்ப்புவிசையை விளக்கத் தவறுவது மட்டுமின்றி, ஆராய்ச்சியில் சில முரண்பாடுகளையும் கொண்டிருந்தது; இருப்பினும், அதனை விஞ்ஞானிகள் அடித்தளமாக ஏற்று செயல்படத் தொடங்கினர். ஹிக்ஸ் தளம் மற்றும் ஹிக்ஸ் போஸான் ஆகிய இரண்டில் எதற்குமே எந்தவொரு ஆதாரமும் இல்லாததால், ஹிக்ஸ் போஸோனின் இருப்பினை உறுதி செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

கடவுளின் அணுத்துகள்
ஹிக்ஸ் போஸான் “கடவுளின் அணுத்துகள்” என்றும் அழைக்கப்படுகிறது. பிரபஞ்சம் தோன்றியதில் இருக்கும் விடுகதையைத் தீர்ப்பதற்கு இஃது உதவும் என்று அவர்கள் நம்பினர். நோபல் பரிசு பெற்றவரான லியோன் லேடேர்மேன் என்பவர் ஹிக்ஸ் போஸோனிற்கு “கடவுளின் அணுத்துகள்” என்று பெயரிட்டார்.

கடவுளின் அணுத்துகள்: பிரபஞ்சம் பதில் என்றால், கேள்வி என்ன? (The God Particle: If the Universe Is the Answer, What is the Question?) என்னும் தனது புத்தகத்தை பிரபலமாக்குவதற்காக லியோன் அவர்கள் “கடவுளின் அணுத்துகள்” என்ற பெயரை உபயோகித்தார். “கடவுள்” என்னும் தலைப்புடன் விஞ்ஞான புத்தகம் வெளிவந்தால், அது விரைவாக விற்றுவிடும் என்பதே அவரது எண்ணம். மேலும், அணு விஞ்ஞானத்தில் இத்துகள் முக்கிய பங்காற்றியுள்ளபோதிலும் கண்டறியப்படாமலே இருந்து வந்தது. ஆயினும், ஹிக்ஸ் போஸோனிற்கு கடவுளின் அணுத்துகள் என்று பெயர் கொடுத்ததை ஹிக்ஸ் விரும்பவில்லை. கடவுள் என்று ஒருவர் இல்லாதபோது, அவரை இதனுள் கொண்டுவருவது ஒரு பெரிய வேடிக்கை என்பது அந்த நாத்திக விஞ்ஞானியின் கருத்தாகும்.

ஹிக்ஸ் போஸோனின் ஆராய்ச்சி
ஹிக்ஸ் போஸான் என்று ஒன்று உண்டா என்பதை அறிவதற்கான முயற்சியில் முதலில் ஈடுபட்ட அமெரிக்க விஞ்ஞானிகள், சுமார் 11,000 கோடி ரூபாயை செலவழித்த பின்னர், அதனால் பலனில்லை என்று கைவிட்டனர். இருப்பினும், சுவிட்சர்லாந்திலுள்ள ஜெனீவா நகரில் செயல்படும் ஐரோப்பிய அணு ஆராய்ச்சிக் கழகம் (CERN) அப்பணியினை தொடர்ந்து மேற்கொண்டது. சுமார் முப்பது நாடுகளைச் சார்ந்த 5,000 விஞ்ஞானிகள் இணைந்து, அணுக்களை துரிதப்படுத்துவதற்கான 17 மைல் சுற்றளவு கொண்ட மிகவும் சக்திவாய்ந்த இயந்திரம் ஒன்றினை தயாரித்தனர். ஒளியின் வேகத்தைக் காட்டிலும் சற்றே குறைந்த வேகத்தில் துகள்களை (புரோட்டான்களை) மோதச் செய்வதற்காக அதனை வடிவமைத்தனர். அவற்றின் மோதல் மிகவும் சிறியதாகவும் சக்தி வாய்ந்ததாகவும் அமைந்தது. அந்த மோதலினால் மிகச்சிறிய நுண்ணிய துகள்கள் தோன்றினால், அவை தோன்றும் அதே கணத்தில் மறைந்துவிடும் என்பதால், அதற்கு முன்பாக அதனை அறிவதற்கு உகந்தாற்போல நுண்கருவிகளையும் ஏற்பாடு செய்தனர்.

ஆராய்ச்சியின் முடிவு
ஜுலை 4, 2012: ஆராய்ச்சி இயந்திரத்தில் 30,000 கோடி முறை மோதல்கள் ஏற்படுத்தப்பட்டு, அதனை ஆராய்ந்தபோது ஹிக்ஸ் போஸோனின் தன்மைகளை ஒத்த துகளை விஞ்ஞானிகள் தங்களது கருவியில் கண்டனர். அது ஹிக்ஸ் போஸோனாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்து, அதனைக் கண்டறிந்துவிட்டதாக முடிவு செய்து அறிவித்தனர். இதன் கண்டுபிடிப்பு விஞ்ஞான உலகில் ஒரு திருப்புமுனையாக அறிவிக்கப்பட்டது.

பின்னர், ஜுலை 12ஆம் நாளன்று, ஹிக்ஸ் போஸோனைப் போலத் தோன்றிய அணுத்துகள்கள் ஒரு கருத்துதானே தவிர உறுதியானது அல்ல என்று மற்றொரு அறிக்கையை வெளியிட்டனர். மேலும், அடிப்படை மூலக்கூறுகள் எடையை எவ்வாறு பெற்றன என்பதற்கு ஹிக்ஸ் கொள்கையைத் தவிர மேலும் பத்து (அனுமானக்) கொள்கைகளை கைவசம் வைத்திருப்பதாகத் தெரிவித்தனர். மேலும், இதனை இன்னும் சில வருடங்களில் முழுமையாக கண்டுபிடித்துவிடுவோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

சுமார் 55,000 கோடி ரூபாயையும், வருடங்களையும் செலவழித்த பின்னர், “இது ஹிக்ஸ் போஸோனாக இருக்கலாம்,” என்று மற்றொரு யூகத்தை வெளியிடுகின்றனர். உலகில் செய்ய வேண்டிய செயல்கள் எத்தனையோ இருக்கும்போது, இத்தகு ஆராய்ச்சியில் நேரத்தையும் பணத்தையும் விரயம் செய்த பின்னரும் இதுவரை முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா என்றால், இல்லை என்பதே பதிலாக உள்ளது.

கேள்விகள் முடிந்துவிடுமா?
அப்படியே ஹிக்ஸ் போஸோனை உண்மையாகக் கண்டறிந்துவிட்டாலும், அதில் பிரபஞ்ச கேள்விக்கான பதில் முடிந்துவிடாது! மற்றுமொரு கேள்வி மீண்டும் எழும்:  ஹிக்ஸ் தளமும் ஹிக்ஸ் துகள்களும் எங்கிருந்து வந்தன? இக்கேள்விக்கான பதில் இதுவரை கற்பனை செய்யப்படவில்லை. அதற்கு ஏதேனும் ஒன்றை கற்பனை செய்தால், அதற்கான ஆதாரம் என்ன என்று கேள்விகள் சுழன்று கொண்டே இருக்கும். இம்முயற்சிகள் பிரச்சனைகளுக்கு தீர்வு கொடுப்பதில்லை, மாறாக பிரச்சனையை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றுகின்றன.

கேள்விகளுக்கு பதிலளிக்காமல் அதனைத் தள்ளிப் போடுவதையும், அதற்காக ஆராய்ச்சி நடத்துவதையும் புத்திசாலித்தனம் என்று நவீன விஞ்ஞானிகள் நினைக்கின்றனர். இது நிச்சயம் துரதிர்ஷ்டமே. பிரபஞ்சத்தில் பரவியிருக்கும் சக்தியைப் பற்றி பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் இந்த விஞ்ஞானிகள், இந்த சக்திகள் அனைத்திற்கும் தோற்றுவாயாக, சக்திகளைக் கட்டுப்படுத்துபவராக ஒரு நபர் இருக்க வேண்டும் என்பதை மறந்துவிடுகின்றனர்.

 முட்டாளும் விஞ்ஞானியும்

ஹிக்ஸ் போஸோனைக் கண்டுபிடிப்பதற்கான இயந்திரங் களும் முயற்சிகளும் தானாகத் தோன்றின, ஒன்றுமே இல்லாமல் திடீரென்று தானாக வந்தன என்று யாரேனும் கூறினால், அவ்வாறு கூறும் நபரை பைத்தியம் என்றோ முட்டாள் என்றோ கூறுவர். ஆனால் இந்த இயந்திரங்களைக் காட்டிலும் பல மடங்கு நுணுக்கமான இயந்திரமான இந்த உலகமானது தானாகத் தோன்றியது, சூன்யத்திலிருந்து தோன்றியது என்று யாரேனும் கூறினால், அவரை விஞ்ஞானி என்று உலகம் பாராட்டுகிறது. வெறும் வாயில் கூறுபவன் முட்டாள், பல்லாயிரம் கோடிகளை செலவழித்து கூறுபவன் விஞ்ஞானி. என்னே உலகம்!

ஆனால், இதுவரை ஆராய்ச்சி செய்து துளியும் நிரூபிக்கப் படாத அதிர்வெடிக் கொள்கை இன்றைய பாடப் புத்தகத்தில் உள்ளதே! வருடந்தோறும் படிக்கப்படும் இக்கொள்கை இதுவரை நிரூபிக்கப்படவில்லை. இதனைப் பாடப் புத்தகத்தில் வைப்பது எப்படி நியாயம்?

திரு. பிரணாப் முகர்ஜியே ஜனாதிபதி என்பது ஏறக்குறைய உறுதியானபோதிலும், தேர்தலுக்கு முன்பே அதனை வெளியிட்டது தவறு என்று கூறுவோர், அதிர்வெடிக் கொள்கையினைப் பாடப் புத்தகங்களில் வைத்திருப்பதை ஏன் எதிர்ப்பதில்லை? மக்களுக்கு அரசியல் தெரிந்த அளவிற்கு அறிவியல் தெரியவில்லை என்பதையும், விஞ்ஞானிகள் என்போர் மக்களை ஏமாற்றுகின்றனர் என்பதையும் நாம் அறிய வேண்டும்.
ராமாயணம்- ராமர் வாழ்ந்தது உண்மையா ? ராமர் பாலம் உண்மையா ?

இராமயணத்தில் இராம சேது என குறிப்பிடப்பட்டுள்ள வரலாற்று பொக்கிஷம். இதை இன்னும் பலர் உண்மையா, பொய்யா என விவாதித்துக் கொண்டிருக்கையில், ஆம்! இராம சேது உண்மை தான்,

இது ஒரு வியக்கத்தக்க கட்டுமானம் என புகழாரம் சூட்டியிருக்கிறார்கள் நாசாவின் விஞ்ஞானிகள். இன்றைய உயர் தரமான தொழில்நுட்பங்களை வைத்து கூட இப்படி ஒரு கட்டுமானத்தை வெறும் ஐந்து நாட்களில் கட்டிமுடிக்க முடியாது. நமது இந்தியர்கள் கட்டிட கலையிலும், தரத்திலும் அப்போதே மிக சிறந்தவர்களாக இருந்துள்ளனர். கடந்த சில நூற்றாண்டுகள் வரையிலும் கூட அதற்கு ஆதாரங்கள் இருக்கின்றன. அதற்கு நமது தஞ்சை பெரியக்கோவில் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

இராமாயணம் அறிந்திருப்போம், இராம புராணம் மற்றும் இராம சேது எப்படி கட்டப்பட்டது என பலவன அறிந்து வைத்திருப்போம். ஆனால், அந்த கட்டுமானத்தின் பின் உள்ள பல வியக்கத்தக்க விஷயங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா? எண்ணற்ற அதிசயங்களை தன்னுள் அடக்கி வைத்திருக்கிறது இராம சேது. அதைப் பற்றி தெரிந்துக் கொள்ள தான் இந்த கட்டுரை, தொடர்ந்து படியுங்கள்…

நாசா கூறும் விளக்கம்
நாசா விண்வெளி மூலம் தனது செயக்கைக்கோளை பயன்படுத்தி எடுத்த புகைப்படத்தை0க் கொண்டு செய்த ஆராய்ச்சியின் மூலமாக கூறுவது, இராம பாலம் வெறும் மணல் திட்டுகள் அல்ல. மற்றும் இது வெறுமென கற்களை தூக்கி வீசி கட்டியவாறு இல்லை. மிக சரியாக திட்டமிட்டு கட்டிமுடிக்கப்பட்ட கட்டுமானம் தான் இராம சேது. என கூறியிருக்கிறார்கள்
இராமாயணத்தில் சொல்லப்பட்டுள்ளதை போலவே மிக சரியான இடத்தில் இராமர் பாலம் இடம் பெற்றுள்ளது. அதனால் இராமாயணம் சொல்வது உண்மை
உபயோகத்தில் இருந்த இராம சேது
இராம சேது கட்டமைக்கப்பட்டு ஏறத்தாழ 17 லட்சம் ஆண்டுகள் ஆகின்றன என கூறப்படுகிறது. கடந்த 1480 கி.மு.வில் கடலில் ஏற்பட்ட ஒரு சூறாவளியினால் இராம சேது பாலம் அழிந்துவிட்டதாக அறிவியல் கூற்றுகள் கூறுகின்றன. எனவே, 1480 கி.மு.விற்கு முன்பு வரை இராம சேது பயன்பாட்டில் தான் இருந்திருகிறது. அதை மக்கள் நடப்பதற்கு உபயோகப்படுத்தியுள்ளனர்.

மனிதர்களால் கட்டப்பட்டதா?
இராம சேதுவில் ஆராய்ச்சி மேற்கொண்ட பல புவியியலாளர்கள், இராம சேது இயற்கையாக உருவானதல்ல இது மனிதர்களால் கட்டமைக்கப்பட்டது தான் என கூறுகின்றனர். இராமாயணம் மட்டுமல்லாமல் மற்றும் பல கூற்றுகள் இதை உண்மை என தான் சொல்கிறது.

மிதக்கும் கற்கள்
மிதக்கும் கற்கள் பற்றிய கூற்றுகள் இன்னும் மர்மமாக தான் இருக்கிறது. இது நலா மற்றும் நீலின் கைகரியத்தால் தான் கற்கள் மிதக்கின்றன என சிலர் புராணங்களில் கூறியுள்ளனர். ஆனால், கடந்த முறை சுனாமியின் சீற்றத்தின் போது கடலில் சிலர் அந்த மிதக்கும் கற்களை கண்டதாகவும். அவை இன்னும் கூட இருப்பதாகவும் கூறுகின்றனர்.

தொடக்கமும், முடிவும்
இராம சேது பாலம் தனுஷ்கோடியின் பாம்பன் தீவில் தொடங்கி இலங்கையின் மன்னார் தீவு வரை நீள்கிறது. இந்த பகுத்தியில் கடல் மிகவும் ஆழமற்று காணப்படுகிறது. கிட்டதாட்ட 1௦ மீட்டர் ஆழம் மட்டுமே இங்கு கடலின் ஆழம் உள்ளதாய் கூறுகின்றனர்.

இராம சேதுவின் அளவு
இராம சேது பாலத்தினை வடிவமைக்க மிதக்கும் கற்களை பயன்படுத்தியுள்ளனர். கிட்டத்தட்ட 30 கி.மீ நீளமும், 3 கி.மீ அகலமும் கொண்டது இராம சேது பாலம் என கூறப்படுகிறது. இதை வெறும் ஐந்து நாட்களில் கட்டிமுடித்துள்ளனர் என்பது ஆச்சரியமான விஷயம் தான்

இராம சேது பாலத்தின் வயது
அகழ்வாராய்ச்சியாளர்களின் கூற்றின் படி, இராம சேது பாலம் கட்டிமுடிக்கப்பட்டு ஏறத்தாழ 17 லட்சம் ஆண்டுகளுக்கு மேல் இருக்கலாம் என கூறப்படுகிறது. இதை வைத்து பார்க்கும் போது இராம சேதுவின் வயது 17 லட்சம் ஆண்டுகள்!!!

ஐந்தே நாட்களில்
வெறும் ஐந்தே நாட்களில் ஒரு கோடி வானரங்களின் உதவியோடு, நலா என்ற தலைமை வானரத்தின் கட்டுமான திட்டத்தின் படி கட்டிமுடிக்கப்பட்டது இராம சேது பாலம்.

ஆதாம் பாலம்
இராம சேது பாலத்தை ஆதாம் பாலம் எனவும் குறிப்பிடுகின்றனர். இது இராவணனிடம் இருந்து சீதையை மீட்க இராமர் செல்லும் போது அவர் கடல் கடந்து செல்ல நலன் நீலன் என்ற தேவ சிற்பிகள் வானரங்களின் உதவியோடு கட்டப்பட்ட பாலம் ஆகும்.

அறிவியல் அறிஞர் உயர்திரு. Dr.பத்ரிநாராயணன்:

---------------------------------------------------------------------------------
National Institute of Ocean Technology அமைப்பை சேர்ந்த உயர்திரு. Dr.பத்ரிநாராயணன் அவர்கள் தனது அறிக்கையில் தெள்ளத் தெளிவாக இப்பாலமானது Coral Rocks எனப்படும் கடலில் கிடைக்கும் பவளப்பாறையால் செய்யப்பட்டது என்றும் இது மிதக்கும் தன்மைக் கொண்டது என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த அறிக்கையை அவர் 12/05/2007 ஆம் ஆண்டு இந்த அறிக்கையை சமர்பித்தார்.


http://krishna.org/nasa-images-discover-ancient-bridge-between-india-and-sri-lanka/

Courtesy: NASA Digital Image Collection] [Homepage: http://www.nasa.gov/

இராமரால் சீதை தீக்குளித்தது சரியா?



மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்னும் பண்பாட்டை அறிந்தவர்கள் இதனை ஏற்றுக்கொள்வர். ஒரு பெண் தனது கணவனிடமிருந்து பிரிக்கப்பட்டு வேறொரு ஆணுடன் ஒருநாள் இருந்தால்கூட அது மாபெரும் குற்றமாகும். சமுதாயம் முறையான கற்புள்ள பெண்களை அடிப்படையாகக் கொண்டிருப்பதால், அவர்களின் கற்பு மிகவும் வலியுறுத்தப்படுகிறது.

அத்தகு சமுதாயத்தின் மத்தியில் இராமரால் எவ்வாறு சீதையை ஏற்றுக்கொள்ள முடியும்?

ஏனெனில் அவரது மக்களாலேயே சீதையை பற்றி தப்பாக கூற வாய்புள்ளது. எனவே தான் அப்படி கேட்கும் முன்னமே அவர் தனது மனைவியின் கற்ப்பை எல்லோருக்கும் தெரியப்படுத்தவும் இப்படி முடிவெடுக்கிறார்.

சீதையின் மீது இராமருக்குத் துளியளவும் சந்தேகம் கிடையாது, ஆனால் அவதூறு பேசும் மக்களின் வாயை அடைப்பதற்காகவும் சீதையின் உயர்ந்த கற்பை அனைவருக்கும் உணர்த்துவதற்காகவும் மட்டுமே இராமர் சீதையைத் தீயில் இறங்கச் சம்மதிக்கிறார். சீதையைத் தீயில் இறங்க வேண்டாம் என்று இராமர் ஒருவேளை தடுத்திருந்தால், அவர் சீதையை காமத்தினால் ஏற்றுக் கொண்டார் என்று மக்கள் குற்றம் சாட்டியிருப்பர்.

யுத்த காண்டம்,சர்க்கம்-121...

'சீதை மாசு இல்லாதவள் எண்டு எனக்கு தெரியும். ஆனால், ராவணனுடைய அந்தபுரத்தி பல நாள்கள் தங்கியிருந்தவளின் தூய்மையை, பலரும் அறிய பரிசோதித்து பார்க்காமல் நான் ஏற்று கொண்டால், நான் காம மிகுதியால் அறிவிழந்து அவளை ஏற்று கொண்டேன்' என்று மேன்மக்கள் பேசுவார்கள். மூன்றுலக மக்களும் இகழ்த்துரைப்பார்கள்' - வசனம் 13, 14 சொல்கிறார்.

'சீதை, என்னை தவிர வேறிடம் செல்லாத மனதை உடையவள், ஆழமான அன்பு கொண்டவள், என் விருப்பத்திற்கேற்ப நடப்பவள் என்பதை நானும் மனதார அறிவேன். சத்தியத்தையே முற்றிலுமாக நம்பி கொண்டிருக்கும் நான், மூன்று உலகிலுள்ள மக்களுக்கு சீதையின் தூய்மையில் நம்பிக்கை ஏற்படவேண்டும் என்பதற்காகவே, நெருப்பில் விழ போன வைதேகியை தடுக்கவில்லை.(அவளுடைய கற்பு அவளை காப்பாற்றும் என்கிற முழு நம்பிக்கை எனக்கு இருந்தது)" - வசனம் 15,16 கூறுகிறார் .

'மைதிலி, கொழுந்து விட்டெரியும் அக்னியை போல் ஆனவள். யாராலும் நெருங்க முடியாதவள். எவராலும் அடைய முடியாதவள். கொடுமதி கொண்ட அவனால், மனத்தால்கூட இவளை கெடுக்க முடியாது' - வசனம் 18 சொல்கிறார் ..

'கற்புக்கரசியான இவள், ராவணனுடைய அந்தப்புரத்தில் இருந்துகொண்டு செழிப்பான வாழ்க்கையை விரும்பமாட்டாள், ஏனெனில் சூரியனிடமிருந்து பிரிக்கமுடியாத ஒளியை போல, இவள் என்னிடத்திலிருந்து பிரிக்க முடியாதவள்' - வசனம் 19 சொல்கிறார்.


இப்படி சீதை பெருமைகளை மக்கள் அறியவேண்டும் என்பதற்காகவே இவர் சீதையிடம் கடிந்து கடுமையான சொற்களை கூறுவதாக இதன் மூலம் அறிந்து கொள்ளலாம். இந்நிகழ்ச்சியின் மூலம் சீதையின் புகழ் மூவுலகிலும் நிரந்தரமாக இடம் பெற்றுவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் உண்மை சீதை ராவணன் சீதை கடத்தும் போதே, பூமி தேவியால் அனுப்பபட்ட போலி சீதையையே ராவணன் கடத்தினான். இது ராமருக்கு மட்டுமே தெரியும். பின் இந்த போலி சீதை நெருப்பில் இறங்கிய பின், மறுபடியும் உண்மை சீதை வெளி வருகிறாள்.
         
கூர்ம புராணத்திலிருந்து நாம் அறிவது என்னவெனில், இராவணனால் கடத்திச் செல்லப்பட்ட சீதை உண்மையான சீதை அல்ல, மாயா சீதை. உண்மையான சீதையை இராவணனைப் போன்ற அசுரர்களால் தொட முடியுமா என்ன!

கூர்ம புராணத்தில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது:

ஸீதயாராதிதோ வஹ்னிஷ் சாயா-ஸீதாம் அஜீஜனாத்
தாம் ஜஹார தஷ-க்ரீவ: ஸீதா வஹ்னி-புரம் கதா
பரீக்ஷா-ஸமயே வஹ்னிம் சாயா-ஸீதா விவேஷ ஸா
வஹ்னி: ஸீதாம் ஸமானீய தத்-புரஸ்தாத் அனீனயத்

“சீதாதேவியால் வேண்டுகோள் விடுக்கப்பட்ட அக்னிதேவர், சீதையைப் போன்ற ஒரு மாய ரூபத்தை இராவணனின் முன்பு நிறுத்த, பத்து தலை கொண்ட இராவணன் அந்த மாயா சீதையை கடத்திச் சென்றான். உண்மையான சீதை அக்னி தேவரின் இருப்பிடத்திற்குச் சென்றாள். பகவான் இராமச்சந்திரர் சீதையை அக்னிப் பரிட்சைக்கு உட்படுத்தியபோது, அக்னியினுள் நுழைந்தது போலியான மாயா சீதையே. அச்சமயத்தில் உண்மையான சீதையை தனது இருப்பிடத்திலிருந்து அழைத்து வந்த அக்னிதேவர், அவளை ஸ்ரீ இராமரிடம் ஒப்படைத்தார்.”
         
உண்மையான சீதை அக்னி தேவரின் பாதுகாப்பில் இருக்க, இராவணன் மாயா சீதையை மட்டுமே இலங்கைக்கு எடுத்துச் சென்றான். அந்த மாயா சீதையை ஏற்றுக்கொள்ள விரும்பாத இராமர், அவளை நெருப்பில் இறங்கச் செய்தார்; அக்னி தேவர் உண்மையான சீதையினை இராமரிடம் திருப்பியளித்தார்.

எனவே, இது மக்களுக்காக நடத்தப்பட்ட ஒரு சம்பவமே.

சீதையால் அக்னிபகவான் தனது தூய்மையை மீண்டும் பெறவே இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்தது. ராவணனின் யாகசாலையில் வேலைசெய்த அக்னிபகவான் பல பாவங்களை செய்ய வேண்டியதாக இருந்தது. பல முனிவர்களையும் சாதுக்களையும் ராவணனின் உத்தரவுப்படி அவன் அழித்தான். இந்த பாவத்தில் இருந்து நீங்கி பரிசுத்தம் ஆகவேண்டுமானால் சீதாதேவி என்னுள் மூழ்கி எழவேண்டும் என கோரிக்கை விடுத்தான். ராமனும் அதை ஏற்றுக்கொண்டு சீதாவை தீயில் மூழ்கிவரும்படி உத்தரவிட்டான். பகவானின் உத்தரவை ஏற்ற சீதா தீக்குள் இறங்கினாள். அவளது கற்புத்தீ முன் அக்னியின் பாவங்கள் எல்லாம் அழிந்துபோயின. இதுதான் சீதாதேவி அக்னிக்குள் இறங்கிய வரலாறு. நெருப்பையும் பரிசுத்தமாக்கும் வல்லமை பெற்றவள் சீதா.


இது போல், இரண்டாவது முறையாக ராமருக்கும், சீதைக்கும் நடந்த பிரிவு:

இதன் பின்பு ராமரும், சீதையும் அயோத்தி சென்று சில மாதங்களுக்கு பின்பு, மக்களின் மனநிலையை பரதனிடம் கேட்கிறார். அவர்  கூறுவது  'மாட்டான் வீட்டில் பல நாட்கள் தங்கிய தம் மனைவியை ராமர் ஏற்று கொண்டதாக' .
  
ராமர் கூறுகிறார்.. 'ஒருவனுடைய ஆச்சாரம் வதந்திக்கு உட்படுத்த படுகிறது என்பதால் அவன் மிகுந்த தாழ்வு மனப்பான்மையும், அவதூறுகளையும், மிகுந்த துயரத்தையும் அனுபவிக்கிறான். தகுந்த ஆச்சாரம் என்பது அழிக்கப்படுகிறது. சிறந்தவர்கள் நல்ல ஆசாரங்களை நோக்கி இருப்பார்கள். பொது ஜனங்களின் அவதூறுகளை தவிர்க்க தேவைப்பட்டால் என் உயிரையும் இழக்க நான் முன் வருவேன். உண்மையில் கூறப்போனால் சீதை எனக்கு ஒரு பொருட்டல்ல' என்கிறார்.

இதன் பின்பு, சீதையை லட்சுமணனால் காட்டிலுள்ள வால்மீகி ஆசிரமத்தில் விட்டுவர செய்தார். பின் பல ஆண்டுகள் மக்களின் விருப்பப்படி ராமர் ஆட்சி செய்கிறார். பின் அவரது குழந்தைகள் லவ,குசன் மூலம் திரும்பவும், வால்மீகி மூலம் சீதையை சந்திக்கிறார் .

பின் வால்மீகி கூறுகிறார்... 'பொதுமக்களுக்காக நீ யாரை துறந்தாயோ, அந்த சீதை தன் பதிவிரதம் பிரகணபடுத்த இங்கு கூட்டி வந்திருக்கிறேன்' என்கிறார்.

பின், ராமர், உத்திரகாண்டம்-சர்க்கம் -97 இல்  பதில் கூறுகிறார் ...

'மக்களின் குற்றச்சாட்டு என்பது மிகவும் வலிமையுடையது. அதனால் தான், நான் சீதையை துறந்தேன். ப்ரம்மஜானியே ! இவள் குற்றமற்றவள் என்பது எனக்கு தெரியும் , ஆனாலும் மக்கள் சமுதாயத்தின் வலிமையை காப்பதர்காகவே இவளை கைவிட நேர்ந்தது' - வசனம் 4

மேலும், இந்த சமயத்தில் ராமராது அவதார நோக்கம் முடியப்போகும் நேரம் வந்ததால் அவர் சீதையை திரும்பவும் ஏர்க்காமல் அவளை திரும்பவும் பதிவிரதையை நிரூபிக்க செய்யுமாறு கூறினார். (ராமருக்கு தெரியும் அவளது பதிவிரதா தன்மை, இருந்தும் இப்பொது அவரது அவதார நோக்கம் முடியும் நேரம் வந்ததால் அவர் சீதையை ஏற்க மறுத்தார். அதாவது, சீதையை, அவளது இருப்பிடமான வைகுண்ட இடத்திற்கு போகவே அவர்  இவ்வாறு கூறினார்.)

பின் சீதை கூறினாள்... 'பூமா தேவியே என் விண்ணப்பத்தை கேளுங்கள், நான் ராமரை தவிர மற்றவரை ஏறெடுத்து நினைக்காமல் இருந்திருந்தால், என்னுடைய வாக்கு,மனம், செயலில் நான் குற்றம் இல்லாதவள் என்று நினைத்தால் எனக்கு இடம் கொடுங்கள் பூமா தேவியே! இனி நான் இந்த தகுதி இல்லாத மக்கள் முன்னிலையில் நாணத்துடன் தலை குனிந்து நிற்கக்கூடிய நிர்பந்தம் ஏற்படாது'... 

என்று கூறி பூமி இரண்டாக பிளந்து சீதையை ஒரு விமானத்தில் மக்கள் முன்னிலையில், தான் மீண்டும் பதிவிரதை என்பதை நிரூபித்து, அவளை ஏற்று கொண்டது .

பின்,  உத்திரகாண்டம்-சர்க்கம் -98 இல் பிரம்ம பதில் கூறுகிறார் ...

'நீங்கள் மீண்டும் சீதையை வைகுண்டலோகத்தில் சந்திப்பீர்கள்' - வசனம் 15

எனவே, இவை எல்லாமே பகவானின் எண்ணங்கள் படியே எல்லாம் நடக்கிறது என்பதை அறியலாம்.