Tuesday, 30 May 2017



நான்கு வர்ண பிரிவு நாத்தீகம், கம்யூனிஸ்டிலும் கூட உள்ளதா.?

தற்போதைய உலகில் வர்ணாஷ்ரம தர்மம் பின்பற்றப்படுகிறதா என்றால், ஆம் என்றும் இல்லை என்றும் பதில் கூறலாம். வர்ணாஷ்ரம தர்மத்தின் பல்வேறு நெறிகளும் அதன் அமைப்பும் இன்றைய சமுதாயத்தில் இல்லை. ஆனால் அதே நேரத்தில், வர்ணாஷ்ரம தர்மம் எவ்வாறு மனிதர்களை பாகுபடுத்துகின்றதோ, அதே போன்ற பாகுபாடு இன்றும் மனித சமுதாயத்தில் (நாத்திகர்கள் மற்றும் கம்யூனிஸ்ட்டுகள் மத்தியிலும்கூட) இருக்கத்தான் செய்கிறது. பிரிவுகள் இல்லையெனில் உலகம் சீராக இயங்க இயலாது.

உதாரணமாக, ஒரு பெரிய நிறுவனம் ஒன்றில் இந்த நால்வகை பிரிவினர்களும் உள்ளனர் என்பதை ஆராய்வோம். நிறுவனத்தின் கொள்கைகளையும் படைப்புகளையும் வடிவமைக்கக்கூடிய புத்திசாலிகள் ஒரு பிரிவினர், இவர்கள் பொதுவாக குறைந்த எண்ணிக்கையிலேயே இருப்பர், இவர்களை பிராமணர்களுடன் ஒப்பிடலாம். நிறுவனத்தினை நிர்வகிப்பவர்கள் இரண்டாம் பிரிவினர், இவர்களை சத்திரியர்களுடன் ஒப்பிடலாம். நிறுவனத்தின் படைப்புகளை வெளியில் சென்று விளம்பரம் செய்து வியாபாரம் செய்பவர்கள் மூன்றாம் வகையினர், இவர்களை வைசியர்களுடன் ஒப்பிடலாம். நிறுவனத்தின் படைப்புகளை உற்பத்தி செய்யும் தொழிலாளர்கள் நான்காம் வகையினராகவும் அதிக எண்ணிக்கையில் இருப்பவர்களாகவும் உள்ளனர், இவர்களை சூத்திரர்களுடன் ஒப்பிடலாம்.

கடவுளை மறுக்கும் நாத்திகன், சமத்துவம் விரும்பும் கம்யூனிஸ்டுகள் போன்றவர்களுக்கும்கூட, கட்சி நடத்துகையில் இந்த நால்வகைப் பிரிவினர் கட்டாயம் தேவைப்படுகின்றனர். கட்சியின் கொள்கைகளை வகுப்பவர்கள் (அறிவாளி பிரிவினர்), எதிர்கட்சியினரிடம் போராடி கட்சியை நடத்துபவர்கள் (நிர்வாக பிரிவினர்), கட்சிக்கு தேவையான நிதியை திரட்டுபவர்கள் (வியாபார பிரிவினர்), ஆகியோர் மட்டுமின்றி அதிக எண்ணிக்கையில் தொண்டர்களும் (தொழிலாளர்கள்) தேவைப்படுகின்றனர். இந்த தொண்டர்கள் கூட்டம் நடத்த பந்தலிடுவது முதல், போஸ்டர், பேனர் ஒட்டுவது வரையுள்ள எல்லா வேலைகளையும் பார்க்கின்றனர்.

இப்போது சொல்லுங்கள் இந்த நால்வகை பிரிவினர்கள் இல்லாமல் உலகம் இயங்குதல் சாத்தியமா என்று.
பிறப்பின் அடிப்படையில் பிரிக்கவில்லையே

Monday, 29 May 2017

மனுஸ்ம்ருதி மூலம் திராவிடன் எப்படி வந்தான்?

ஒரு குறிப்பிட்ட வர்ணத்தவர் தங்கள் வர்ண சுபாவத்தைக் கடைப் பிடிக்கவில்லை என்றால் அதனால் அவர்கள் அந்த வர்ணத்தவர் என்னும் அடையாளத்தை இழக்கின்றனர். அப்படி உருவானதுதான் ”திராவிடன்” என்பது.
மனுஸ்ம்ருதி 10-22 ஆம் ஸ்லோகத்தின் மூலம்,  திராவிடன் எப்படி உருவாகிறான் என்று தெரிகிறது.

க்ஷத்திரியனாகப் பிறந்தவன்,  அதாவது க்ஷத்திரிய சுபாவத்துடன் பிறந்தவன், க்ஷத்திரியத் தொழிலைச் செய்யவில்லை என்றால், அவனுக்குப் பிறக்கும் பிள்ளை ‘க்ஷத்திரியன்’ எனப்பட மாட்டான். அவன் ‘கல்லன்’ எனப்படுவான்.

அவனும் க்ஷத்திரிய சுபாவத்துடன், க்ஷத்திரியத் தொழிலைச் செய்யவில்லை என்றால் அவன் ‘மல்லன்’ எனப்படுவான்.
இவ்வாறே ஒவ்வொரு தலைமுறையிலும், க்ஷத்திரியம் வெளிப்படவில்லை என்றால் அவர்க்ள் க்ஷத்திரியத்தை இழப்பார்கள். இப்படி ஆறு தலைமுறை சென்றுவிட்டால் அதற்குப் பிறகு பிறப்பவன் திராவிடன் என்ப்படுவான்.

அந்த வரிசை:-  க்ஷத்திரியன்

1. கல்லன், 2. மல்லன், 3. லிக்கிவி, 4. நடன்., 5. கரணன், 6. கஸன்,7. திராவிடன்.

திராவிடனுடன் இந்த வரிசை முடிந்து விடுகிறது. எனவே ஏழாவது தலை முறையில் க்ஷத்திரிய சுபாவமானது முழுதும் மறைந்து விடுகிறது என்று தெரிகிறது. இப்படி வர்ண சுபாவம் மறைந்து போவது மூன்று வர்ணத்தவருக்குமே உண்டு. அவர்களுள் க்ஷத்திரிய சுபாவம் மறைந்தவன் திராவிடன் எனப்பட்டான் என்பது மனு ஸ்ம்ருதி தரும் விளக்கம்.

சுபாவம் மறைந்து போவதால்,  அந்த வர்ணத்தவர்கள் செய்யும் செயல்களைச் செய்வதில்லை. ஹோமம் உட்பட எந்தக் கிரியையும் செய்யாமல் போவதால் அவர்கள் சூத்திரர்களது சுபாவத்தை அடைகிறார்கள். (10- 43)

ஆனால் அவர்கள் சூத்திரர்கள் என்று சொல்லவில்லை. ஏனெனில் சூத்திரர்களும் ஆரியர்கள். அவர்கள் வேத மத நம்பிக்கைகள் கொண்டவர்கள்.  தியானம், பக்தி எல்லாம் உண்டு. ஆனால் திராவிடர்களோ வேத மதத்திற்குப் புறம்பாகச் சென்றவர்கள். வேத மத வழக்கங்களைக் கைவிட்டவர்கள்.

இந்த விதத்தில் க்ஷத்திரியர்கள் திராவிடர்களாக மாறியது பரசுராமர் கலத்தில்தான் ஏற்பட்டது என்று சொல்லும் வண்ணம் மஹாபாரதத்தில் ஓரிடம் உள்ளது. பரசுராமர் க்ஷத்திரிய வம்சத்தைப் பூண்டோடு ஒழிக்கிறேன் என்று 21 முறை க்ஷத்திரியர்களை அழித்தார்.  அவரிடமிருந்து தப்ப விரும்பிய க்ஷத்திரிய மக்கள்,  தாங்கள் க்ஷத்திர்யர்கள் என்று மறைக்க விரும்பி, தங்கள் க்ஷத்திரியத் தொழிலைச் செய்யவில்லை. இவ்வாறு ஆறு தலைமுறை சென்றவுடன் அவர்கள் திராவிடர்கள் ஆனார்கள்.

பரசுராமருக்குப் பயந்து க்ஷத்திரியத்தை விட்டவர்கள் திராவிடன், அபிரன், புண்டரன், சவரன் என்பவர்கள் என்கிறது மஹாபாரதம் 14-29
மேலும் இரண்டு இடங்களில், ப்ராம்மணர்கள் கோபத்துக்குப் பயந்து திராவிடர்கள் உட்பட கலிங்கர்கள்,புளிந்தர்கள்,உசீனரர்கள்,கோலிசர்பர்கள்,மஹிஷகர்கள், மேகலர்கள்,லதர்கள்,பௌண்டரர்கள்,கொன்வாஸிரர்கள்,சௌண்டிகர்கள், தரதரர்கள்,தர்வர்கள்,சௌரர்கள்,ஸவரர்கள்,வர்வரர்கள்,கிராடர்கள், யவனர்கள், போன்றோர் க்ஷத்திரிய தர்மத்தை விட்டு சூத்திரர்கள் போலானார்கள் என்கிறது மஹாபாரதம் 13 – 33 & 35.

இங்கு பிராம்மணர்கள் என்றது, பிராம்மணரான பரசுராமரை. இவரது தந்தையான ஜமதக்னியை, ஹேஹய அரசனான கார்த்தவீர்யார்ஜுனன் என்பவன் கொன்று விடவே,  க்ஷத்திரிய வம்சத்தையே பூண்டோடு அழித்து விடுவதாக சபதம் எடுக்கிறார்.   அதன்படி கார்த்த வீர்யார்ஜுனனையும், அவனுக்கு உதவிய மன்னர்களையும் கொன்றார். மொத்தம் 21 முறை பல அரச பரம்பரைகளையும் கொன்று அவர்கள் நாடுகளைக் கைப்பற்றினார். அரசர்கள் செய்யும் அஸ்வமேத யாகத்தையும் செய்து, தன்னை எதிப்பவர்கள் யாரும் இல்லாமல் செய்தார்.
அவருக்குப் பயந்து தலையைக் காட்டாமல் மறைந்து வாழ்ந்த க்ஷத்திரியர்கள் நாளடைவில் திராவிடர்கள் ஆனார்கள்.

அவர்கள் சூத்திர தர்மத்தைக் கொண்டவர்கள் ஆனார்கள் என்னும் இந்த விவரத்தை, பிராம்மணர்கள், திராவிடர்களை அடக்கு முறை செய்ததாகவும் அந்தத் திராவிடர்கள் சூத்திரர்கள் ஆவார்கள் என்றும், இதனால், பிராம்மணர்கள் சூத்திரர்களை அடக்கிக் கொடுமைப்படுத்தியதாகவும், ஆங்கிலேய மிஷனரிகள் ஒரு சித்தாந்தத்தைப் பரப்பினார்கள்.
இதன் மூலத்தை ஆராயாமல், கிளிப்பிள்ளை போல எடுத்துக் கொண்டார்கள் தமிழ் பேசும் திராவிடவாதிகள்.


தனிமனித உரிமையில் நாஸ்திகம் ?

உரிமைகள் என்பது நியாயத்தின் அடிப்படையில் ஒருவருக்கு மரபு ரீதியாக அனுமதிக்கப்படும் விஷயங்களைக் குறிக்கின்றன. தற்போதைய உலகில், மரபுகள் அனைத்தும் சட்டங்களாக மாற்றப்பட்டு வருவதால், சட்ட ரீதியாக அனுமதிக்கப்படுபவையும் உரிமைகளின் பிரிவில் அடங்குகின்றன. உதாரணமாக, தந்தையின் சொத்தினை அனுபவிப்பதற்கான உரிமை மகனுக்கு மரபு ரீதியாக வந்து கொண்டுள்ளது. நவீன காலத்தில், (இந்தியாவில்) 18 வயதை அடைந்தவர்கள் அனைவருக்கும் ஓட்டுரிமை என்பது சட்ட ரீதியாக வழங்கப்பட்டுள்ளது. சமுதாயத்தில் உள்ள ஒவ்வொருவரும் தத்தமது பணியினை சிறப்பாக ஆற்றுவதற்கும் மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கும் மற்றவர்களின் தொல்லையின்றி நடமாடுவதற்கும் இந்த உரிமைகள் உதவி செய்கின்றன.

உரிமைகள் ஒவ்வொரு மனிதனுக்கும் அவசியம் என்பதிலும் அந்த உரிமைகளைப் பெற்றுத் தருவது அரசாங்கத்தின் கடமை என்பதிலும் மாற்றுக் கருத்து ஏதுமில்லை. ஆனால் இன்றைய உலகம் வரைமுறையற்ற உரிமைகளுக்காக போராடி வருகிறது. மனித சமுதாயம் தன்னுணர்வை அடிப்படையாகக் கொண்டு வாழ வேண்டும் என்றும் அத்தகு தர்மம் மனித சமுதாயத்தில் இல்லையெனில் அது மிருக சமுதாயத்திற்கு சமம் என்றும் யாம் பலமுறை அறிவுறுத்தியுள்ளோம்.

துரதிர்ஷ்டவசமாக, புலனின்பமே பிரதானம் என்று வாழும் இன்றைய நவீன சமுதாயம், உரிமைகள் என்ற பெயரில் எல்லாத் தரப்பட்ட புலனின்ப விஷயங்களையும் ஊக்குவிக்கின்றது. இதன் விளைவாக, ஒவ்வொரு நாட்டிலும் உரிமைகள் வேறுபடுகின்றன. அதாவது, ஒரு குறிப்பிட்ட நாட்டில் உரிமையாக கருதப்படும் ஒரு செயல், மற்றொரு நாட்டில் குற்றமாக கருதப்படுகின்றது. உதாரணமாக, ஓரினச் சேர்க்கை என்பது சில நாடுகளில் உரிமையாகவும் சில நாடுகளில் குற்றமாகவும் கருதப்படுகிறது. நிலைமை இவ்வாறு இருப்பதால், இந்த உரிமைகளை யார் நிர்ணயிப்பது என்பதை நாம் யோசித்தாக வேண்டும்.

மேலே யாம் விளக்கியபடி, ஒவ்வொரு தனிமனிதனுக்கும் குறிப்பிட்ட கடமைகளும் உரிமைகளும் உள்ளன. ஆனால் இன்றைய சமுதாயத்திலோ, தனிமனித உரிமை என்ற பெயரில் அந்த தனிமனிதன் தனக்குத் தானே தீமை தரக்கூடிய செயல்களைச் செய்கிறான். இன்றைய சமுதாயம் முழுவதும் அசுர சமுதாயமாக மாறியிருப்பதால், செய்யக்கூடியவை யாவை, செய்யக்கூடாதவை யாவை என்பதை அறியாமல் இருக்கின்றனர் (பகவத் கீதை 16.7). பாவ புண்ணியங்கள், நல்லது கெட்டது, மறுபிறவி, கர்ம வினைகள் போன்றவற்றைப் பற்றிய அறிவு இத்தகைய தனிமனித உரிமையின் பேச்சுகளால் மறைக்கப்படுகின்றது, மக்களும் சற்றும் அறிவற்ற மூடர்களாகவே வாழ்கின்றனர்.

முதல் உதாரணம், பசு மாமிசம் உண்ணுதல். மாமிசம் சாப்பிடுபவர்கள் நரகத்திற்குச் செல்வர் என்பதும் அதிலும் குறிப்பாக (தாயைப் போன்று மதிக்கத்தக்க விலங்கான) பசுவின் மாமிசத்தைச் சாப்பிடுபவர்கள் கொடிய நரகத்தில் நீண்ட காலம் வைக்கப்படுவர் என்பதும் சாஸ்திரங்கள் உரைக்கும் உண்மை. ஆனால் இந்த உண்மையை மறைத்து மக்களை நாஸ்திகத்தின் இருண்ட கிணற்றில் தள்ளுவதற்காக தனிமனித உரிமை வலியுறுத்தப்படுகிறது. “எனது தட்டில் எந்த உணவு இருக்க வேண்டும் என்பதை நானே தீர்மானிக்க வேண்டும்” என்று சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். கேட்பதற்கு நன்றாகத் தான் இருக்கிறது, ஆனால் இது நடைமுறைக்கு உதவாது. தனக்கு எது நல்லது எது கெட்டது என்பதை அறியாத ஒரு குழந்தை தனது தட்டில் “இது வேண்டும், அது வேண்டும்” என்று அடம் பிடிக்கலாம், ஆனால் குழந்தையின் நலனை விரும்பும் பெற்றோர்கள் சில உணவுகளைத் தடை செய்ய வேண்டியது அவசியம். அதுபோலவே அறியா குழந்தையைப் போன்ற மக்களின் தட்டுகளில் வைக்கப்படும் உணவினை தீர்மானிக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உண்டு. பிரச்சனை என்னவெனில், சில வளர்ந்த முட்டாள்கள் தங்களுடைய குழந்தைத்தனத்தை “தனிமனித உரிமை” என்று நினைக்கின்றனர்.

இங்கே மற்றொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும்: மனிதனின் உரிமையைப் பற்றி மட்டும் பேசுகின்றனர், அந்த மனிதனால் கொல்லப்படும் விலங்கிற்கு உரிமை ஏதும் இல்லையா? அந்த விலங்கிற்கு வாழ்வுரிமை கிடையாதா? என்னே விந்தை! உரிமை என்ற பெயரில் என்னே கபடத்தனம்! மாடுகளுடன் கூடிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டிற்குத் தடை, ஆனால் அதே மாடுகளைக் கொலை செய்து சாப்பிடுவது தனிமனித உரிமை! என்னவென்று சொல்வது!

இரண்டாவது உதாரணம், குடிப்பழக்கம். “குடி குடியைக் கெடுக்கும்” என்று எழுதி வைக்கின்றனர், குடியின் கேடுகள் என்ன என்பதை திருவள்ளுவரும் கள்ளுண்ணாமை என்னும் அத்தியாயத்தில் கூறுகிறார் (இந்த அத்தியாயமும் ஊன் உண்ணாமை என்னும் அத்தியாயமும் இன்றைய பாடப் புத்தகங்களில் திட்டமிட்டு மறைக்கப்படுகின்றன), சாஸ்திரங்களும் குடியின் விளைவுகளைப் பட்டியலிடுகின்றன. ஆனால் தங்களுடைய கஜானாவை நிரப்ப நினைக்கும் சில தொழிலதிபர்கள் மக்களைக் கெடுத்து சொத்து சேகரிப்பதில் ஆர்வமாக இருப்பதால், குடிப்பழக்கம் தனிமனித உரிமை என்றும் மற்றவர்களுக்கு தீங்கிழைக்காமல் குடியுங்கள் என்றும் விளம்பரம் செய்கின்றனர். மக்களும் மதிமயங்கி குடித்து குடித்து அறிவை இழக்கின்றனர்.

மூன்றாவது உதாரணம், நீலப் படங்களைப் பார்த்தல். பெரும்பாலான இளைஞர்களின் கையில் ஸ்மார்ட் போன் என்று அழைக்கப்படும் அலைபேசி கருவி உள்ளது. அதில் பார்க்கக்கூடாத படங்களைப் பலரும் பார்த்து சீரழிந்து வருகின்றனர். இதனைத் தடுப்பதற்கு ஏதேனும் முயற்சி மேற்கொள்ளப்பட்டால், அங்கே மீண்டும் தனிமனித உரிமை என்று குரல் கொடுக்கின்றனர். தகாத படங்களைப் பார்த்தல் தகாத பாலுறவிற்கு வழிவகுக்கின்றன என்பதும், தகாத உறவினால் சமுதாயம் சீரழியும் என்பதும் மறுக்க முடியாத உண்மைகள் (பார்க்க பகவத் கீதை அத்தியாயம் 1). ஆனால் நீலப் படங்களைத் தயாரிப்பதை தொழிலாகக் கொண்டவர்களும் அதை மற்றவர்கள் பார்ப்பதால் கோடிகளை அள்ளுபவர்களும், தனிமனித உரிமை என்று குரல் கொடுத்து அவற்றை அனைவரும் பார்ப்பதற்கு வழிவகுக்கின்றனர். நீலப் படங்களை அனுமதிக்கலாமா கூடாதா என்று பட்டிமன்றம் வைத்து வாதிடுகின்றனர், அல்லது நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து வாதிடுகின்றனர். ஆனால் இவர்களுடைய வாதங்கள் அனைத்தும் தனிமனித உரிமை என்பதைச் சார்ந்தே அமைகின்றன, யாரும் மனிதனின் உண்மையான நன்மையைக் கருத்தில் கொள்வதில்லை. வாதிடுபவர்களுக்கும் சரி, அந்த வாதங்களைக் கேட்பவர்களுக்கும் சரி–யாருக்குமே எந்தவோர் அடிப்படைக் கொள்கையோ தத்துவமோ கோட்பாடோ இல்லை என்பதுதான் வெட்கக்கேடு.

பசு மாமிசம் உண்ணுதல், மது அருந்துதல், நீலப் படங்களைப் பார்த்தல் ஆகிய மூன்றுமே தனிமனித உரிமை என்ற கோணத்தில் அணுகப்படுகின்றன–இவை மாபெரும் பாவங்கள் என்பதும் பாவத்தின் முக்கிய தூண்கள் என்பதும் மக்களுக்கு உரைக்கப்படுவதே இல்லை. இவ்வாறாக, இன்றைய நாஸ்திகர்களும் இடதுசாரி மனப்பான்மை கொண்டவர்களும், தனிமனித உரிமை என்பதை அதிகமாக வலியுறுத்துவதன் மூலமாக, பாவ புண்ணியம் குறித்த அச்சமற்ற வாழ்வை மனித சமுதாயத்தில் உருவாக்கி நாஸ்திகத்தை திணித்து வருகின்றனர்.

ஜாதி அடையாளத்தை உண்டாகினவர்கள் ஆங்கிலேயர்களே !

அதைப் பிடித்துக் கொண்டு அரசியல் செய்தவர்கள் தமிழ் பேசும் திராவிடவாதிகள்.

ஜாதி என்பது, காஸ்டா [casta] என்ற போர்ச்சுகீசியரது இனசித்தாந்ததினால் உண்டானது. இந்தியாவில் அவர்கள் தங்களது உறவுகளை இந்தியர்களுடன் வைத்துக் கொள்ள விரும்பவில்லை. பிறகு, வீரர்களை இந்திய பெண்களுடன் புனைய வைத்து, பரிசோதனை [miscegenation] செய்தனர்.

பிறந்த குழந்தைகளை தங்களது தூய்மையான இனத்தில் சேர்த்துக் கொள்ளவில்லை. அவ்வாறு ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள் [casta] ஆகி [cast] தனிமைப் படுத்தினர்.  ஆங்கிலத்தில் அது [caste] ஆகியது.  கோட்டைக்கு வெளியே கருப்பர் / இந்தியர் வாழும் இடத்தை கருப்பர் நகரம் [Black town] என்றும், கோட்டைக்குள் வெள்ளையர் வாழுன் இடத்தை வெள்ளையர் நகரம் [White town] என்றே பெயரிட்டு, கடுமையாக பின்பற்றினர்.

வர்ணங்கள் என்பவை ஒரு மனிதனது குணத்தால் அமைவதாகச் சொல்லப்பட்டுள்ளது. குணத்தின் காரணமாக ஒருவனது செயல்பாடு அமையும். அந்தச் செயல்பாட்டையே தனது தொழிலாகக் கொண்டால் அதனால் அவனுக்கும் பயன் கிடைக்கும். அவனது அந்தப் பங்களிப்பால் சமூகத்துக்கும் பயன் கிடைக்கும். இந்த விதமான மனித வள மேம்பாட்டுக் கருத்தாக வர்ணாஸ்ரம தர்மத்தை மனு ஸ்ம்ருதி தருகிறது.

அதாவது ஒருவனது சுபாவத்திலிருந்து, ஸ்வகர்மம் (சுய கர்மம் அல்லது அவனுக்கு இயல்பாகச் செய்ய வரும் செயல்பாடுகள்) உண்டாகிறது. அதுவே ஸ்வதர்மம் (சுயதர்மம்) எனப்படுகிறது. ஸ்வதர்மம் என்றால் இயல்பாக ஒருவனுக்குச் செய்ய வரும் செயலைச் செய்வது. அதை விட்டு விட்டு அவன் இயல்புக்குப் புறம்பான வேறு தொழிலைச் செய்தால் அது திருப்தியாக அமையாது. பகவத் கீதையில் காணப்படும் இந்தக் கருத்தே மனு கொடுத்த வர்ணாஸ்ரம தர்மமாகும்.

சுபாவம் -> சுயகர்மம் -> சுயதர்மம்
மஹாபாரதத்தில் திருடனுக்குக் கூட தர்மம் உள்ளது என்று சொல்லப்பட்டுள்ளது. திருட்டு அவனது தொழில். அவன் ஸ்வபாவத்தால் அதைச் செய்கிறான். ஆனால் அந்தத் திருடனும், தன் குடும்பத்தைப் பேண வேண்டும். தாய், தந்தைக்குப் பித்ரு கடன் செலுத்த வேண்டும். திருடுமிடத்திலும், மிச்சம் வைக்காமல் திருடக் கூடாது. திருடனாக இருந்தாலும், தான தர்மங்கள் செய்ய வேண்டும் அவனிடம் பிராணிகள் அன்பு செலுத்தும் வண்ணம் அவன் நடந்து கொள்ள வேண்டும். என்றெல்லாம் வாழ்க்கை விதிகள் இருக்கின்றன. அந்தத் திருடனே நல்ல சிந்தனையும், யாருக்கும் தன்னைக் கண்டு பயப்படாமல் இருக்கும் படியும், தன்னால் யாருக்கும் கெடுதல் வராமலும், செய்தால் அவன் உயர்ந்தவன் ஆகிறான். திருடனாக வழிப்பறி செய்த வால்மீகி ஆதிகவி எனப்போற்றப்பட்டு காலத்தாலும் அழியாத ராமாயணம் எழுதினார்.

கசாப்புக் கடைக்காரனாக இருந்தாலும், வ்யாதன் என்பவன்,  விருப்பு வெறுப்பில்லாமல் தன் தொழிலைச் செய்தும், தன் பெற்றோரைப் பேணிக் காத்தும், சிறந்த ஞானம் பெற்று விளங்கினான். அவன் சொன்னது ‘வ்யாத கீதை’ என்று புகழப்படுகிறது.
வைசியனாக இருந்த துலாதாரன் என்பவன், ஜாஜலி என்னும் தவசிக்கு, தர்மம் எது என்று சொல்கிறான் (சா-பர் 260) அதற்குக் காரணம், சுபாவத்தால் வைசியனாக வாணிபம் செய்தாலும், சிந்தனையால் உயர்ந்த விஷயங்களைத் தெரிந்து வைத்திருந்தான். அவற்றைக் கடைப் பிடிக்கவும் செய்தான்.
எனவே ஸ்வபாவத்தால் ஏற்படுகின்ற தொழில் ஒன்றானாலும், சிந்தையால் ஒருவன் எப்படி வாழ்கிறான் என்பதன் மூலமே ஒருவன் உயர்ந்தவன் எனப்படுவதும், தாழ்ந்தவன் என்ப்படுவதும் ஆகும்.  ஸ்வபாவத்தால் ஏற்படுகிற தொழிலை மனு ஸ்ருதி  சொல்கிறது.

வர்ணம் என்பதும், ஜாதி என்பதும் ஒன்றல்ல.  சுபாவத்தைக் கொண்டு வர்ணமும், தொழிலைக் கொண்டு ஜாதியும் சொல்லப்பட்டது. ஒருவனே இவற்றில் மாறி மாறி வர முடியும்.
க்ஷத்திரியனான அரிச்சந்திரன், மயான வேலையை மேற்கொண்டபோது சண்டாளன் ஆனான்.  இது போல மாறி வருதல் ஒரு நூற்றாண்டு முன் வரை நடைமுறையில் இருந்திருக்கிறது.  உதாரணமாக பொன் வேலை செய்யும் பொற்கொல்லர்களை சோனார் என்று அழைப்பார்கள். பொன் என்று பொருள் படும் ஸ்வர்ணம் என்னும் சொல்லிலிருந்து இந்தப் பெயர் வந்தது.

தொழிலால் ஏற்பட்டது இந்தப் பெயர். இதை ஜாதி என்றாக்கினது ஆங்கில அரசு. அவர்கள் நாட்டில் தொழில் அடிப்படையில் CASTE என்று ஜாதியை உண்டாக்கினர். அதையே குடிப் பெயராகவும் அவர்கள் கொண்டிருந்தனர்.


உதாரணமாக கோல்ட்ஸ்மித், ஸ்மித், ப்ளாக்ஸ்மித், காப்ளர் என்றெல்லாம் அவர்கள் பெயர்கள் இருக்கும். இவை எல்லாம் அவர்கள் பரம்பரையாகச் செய்து வந்த தொழிலின் அடிப்படையில் வந்தவை.
ஆங்கிலேயர்கள் நம் நாட்டை ஆண்ட போது,  அந்த வழக்கத்தையே நமக்கும் கொண்டு வந்து,  அதுவே நமது ஜாதிகள் என்றனர்.  ஆனால் அதுவரை நம் மக்கள் வர்ணங்களின் பெயரால் மட்டுமே தங்களை இனம் காட்டிக் கொண்டிருந்தனர்.
இதைப் போன நூற்றாண்டில் எடுக்கப்பட்ட சென்சஸ் என்னும் மக்கள் தொகைக் கணப்பெடுப்பில் காணலாம். 1911 – to -1921 ஆம் ஆண்டு சென்சஸில் சோனார்கள் தங்கள் ஜாதி க்ஷத்திரியர்கள் என்றே பதிந்துள்ளனர், ஆனால் 1931 –ஆம் ஆண்டு சென்சஸில் பிராம்மணர்கள் என்றும், வைசியர்கள் என்றும் பதிந்துள்ளனர். அதாவது தொழிலால் பொற்கொல்லர்கள், வர்ணத்தால் ஒரு சாரார் பிரம்மணார்களாகவும், மற்றொரு சாரார் வைசியர்களாகவும் இருந்திருக்கின்றனர்.
அது போல ’சூத்ரதார்” என்னும் தச்சு வேலை செய்பவர்கள் தங்களை வைசியர்கள் என்று 1911, 1921 ஆண்டு சென்சஸில் பதிந்துள்ளானர். 1931 ஆம் ஆண்டு சென்சஸில் தங்களை பிராம்மணர்கள் என்று பதிந்துள்ளனர்.

அது போல கம்மாளர்கள் என்னும் இரும்பு வேலை செய்பவர்கள், 1921 ஆம் ஆண்டு சென்சஸில் க்ஷத்திரியர் என்றும், 1931 ஆம் ஆண்டு சென்சஸில் பிராம்மணர் என்றும் பதிந்துள்ளனர். ஆனால் அவர்களை கம்மாளர் என்னும் ஜாதியாகத்தான் ஆங்கில அரசு பார்த்தது. ஆங்கிலேயர்கள் சென்சஸ் எடுத்த காலத்தில் பாரத மக்களில் பெரும்பாலோர் இந்த ஜாதிக் கருத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. ஜாதி என்று பதிய வேண்டிய கட்டாயத்தைக் கொடுத்த போது,வர்ணத்தையே பதிந்தனர். ஆனால் எதிலிருந்து வருமானம் வருகிறது என்ற கேள்வி எழுந்த போது, தொழில் ரீதியான பெயரைத் தர வேண்டியதாயிற்று. அதுவே அவர்கள் ஜாதி என்று ஆங்கில அரசு முத்திரை குத்தி விட்டது.

நமக்கு ஜாதி அடையாளத்தை உண்டாகினவர்கள் ஆங்கிலேயர்களே. அதைப் பிடித்துக் கொண்டு அரசியல் செய்தவர்கள் தமிழ் பேசும் திராவிடவாதிகள்.

ஜாதி வேறுபாடுகளையும், அவற்றின் அடிப்படையில் உயர்வு, தாழ்வுகளையும் வேத சாஸ்திரங்களில் எங்குமே சொல்லவில்லை.

மாமிசம் மனித உணவா ?


இயற்கை கோட்பாடுகளின் படி மனிதன் சைவமா?அசைவமா?

இயற்கையில் இரண்டு விதமான அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

1. சைவம் சாப்பிடும் ஜீவராசிகள் .
2. அசைவம் சாப்பிடும் ஜீவராசிகள் .

இவ்விரு ஜீவராசிகளையும் சற்றே ஆராய்ந்து பார்த்தால் மனிதன் சைவமா?அல்லது அசைவமா? என சுலபமாக தெரிந்து கொள்ளலாம்.

சைவ ஜீவராசிகளுக்கு உதாரணமாக மாடு, குதிரை, கழுதை, யானை, மான் போன்றவற்றை எடுத்துக் கொள்வோம்.

அசைவ ஜீவராசிகளுக்கு உதாரணமாக சிங்கம், புலி, நாய் போன்றவற்றை எடுத்துக் கொள்வோம்.

இனி ஆராய்ச்சி செய்வோம்.

1. இரு ஜீவராசிகளுக்கும் பற்களின் அமைப்பு
 .

சைவ ஜீவராசிகளுக்கு பற்கள் மனிதனை போல் தட்டையாக அமைந்துள்ளன.

அசைவ இனங்களுக்கு கூர்மையாக பற்கள் உள்ளன.

2. எவ்வாறு தண்ணீர் அருந்துகின்றன.

சைவ ஜீவராசிகள் அனைத்தும் மனிதனைப் போல் தண்ணீரை உறிஞ்சி தான் குடிக்கின்றன.

அசைவ ஜீவராசிகள் தண்ணீரை நக்கிக் குடிக்கின்றன.

3. கால் விரல்கள்:-

சைவ ஜீவராசிகளுக்கு விரல்கள் மனிதனைப் போல் சிறியதாகவும், பாதம் தட்டையாகவும் இருக்கும்.

அசைவ ஜீவராசிகளுக்கு விரல்கள் நீளமாகவும், கூர்மையான நகங்களுடனும் இருக்கும்.

4. குடல் அமைப்பு:

சைவ ஜீவராசிகளுக்கு மனிதனைப் போன்றே 15 அடி வரை நீளமான குடலாக உள்ளது. காரணம், சைவ சாப்பாட்டில் நச்சுத்தன்மை குறைவாகவும், சத்துக்கள் அதிகமாகவும் இருப்பதால் உணவானது குடலில் சற்று அதிக நேரம் இருப்பதற்கான ஏற்பாடு எனவும்,

அசைவ ஜீவராசிகளுக்கு அசைவ உணவில் நச்சுதன்மை அதிகம் உள்ளதால் மிக குறைவான நேரத்தில் குடலை விட்டு வெளியேறுவதற்கு ஏற்றாற்போல் 5 அடிகள் மட்டுமே குடலின் நீளமாக உள்ளது.

5. சமநிலையான உடல் உஷ்ணம்:-

சைவ ஜீவராசிகளுக்கு மனிதனைப் போன்றே உடலில் வெப்பம் அதிகமானால் தாகத்தை உண்டாக்கி அதிக தண்ணீர் பருக வைத்து வியர்வை என்ற செயலின் மூலமாக உடலை குளிர்விக்கிறது. அல்லது சமநிலையில் வைக்கிறது.

ஆனால் , அசைவ ஜீவராசிகளுக்கு இந்த ஏற்பாடு இல்லை. ஆதலால் தனது நாக்கினை தொங்க விட்டுக் கொண்டு அது தன்னை குளிர்விக்கிறது.

6. மலத்தின் தன்மை

சைவ ஜீவராசிகளுக்கு மனிதனைப் (சைவம் சாப்பிடும் மனிதன்) போன்றே மலம் கழிப்பதில் சிரமம் இருக்காது. மலம் துர்நாற்றம் வீசாது.

அசைவ ஜீவராசிகளுக்கு (அசைவம் சாப்பிடும் மனிதன் உட்பட) மலம் கழிப்பதில் சிரமமும், மலம் அதிக துர்நாற்றத்துடனும் இருக்கும்.
           
இதுவரை உடற்கூறு அளவில் ஆராய்ந்தோம்.

இனி மனநிலையில் ஆராயலாம்.

1.  வாழும் முறை :

சைவ ஜீவராசிகள் ஒற்றுமையாக அதாவது கூட்டம் கூட்டமாக வாழும். மனிதனும் அவ்வாறே வாழ ஆசைப்படுகிறான்.

ஆனால் , அசைவ ஜீவராசிகள் தனித்தனியாக வாழும் இயல்புடையது. தன் எல்லைக்குள் தன் இனத்தைச் சார்ந்த இன்னொரு விலங்கினை அனுமதிக்காது.(இன்றைய மனிதனின் நிலையும் இதுதான்.)

2.  இயல்பு :

சைவ ஜீவராசிகளின் இயல்பான குணம் சாந்தமாகவும், அமைதியாகவும் இருக்கும்.

அசைவ ஜீவராசிகள் வேகமாகவும், ஆக்ரோசமாகவும் இருக்கும்.

3. ஆக்கப்பூர்வமான வேலைகள் 

சைவ ஜீவராசிகளை ஆக்கபூர்வமான வேலைகளில் (உழுதல், வண்டி இழுத்தல்) ஈடுபடுத்த முடியும். அசைவ ஜீவராசிகளால் இவ்வாறான செயல்கள் எதுவும் செய்ய இயலாது.

4, மன இறுக்கம்:-

அசைவ உணவு சாப்பிடுபவர்கள் அதிக மன இறுக்கத்திற்கு உள்ளாவது ஏன்?

ஒவ்வாருவரின் உடலிலும் அபாயகரமான சமயங்களில் தப்பித்துக் கொள்வதற்காக (உடலிற்கு அதிக இயக்க சக்தியை தர ) சக்தி வாய்ந்த ஹார்மோன்கள் அட்ரீனல் சுரப்பியிலிருந்து சுரந்து இரத்தத்தில் கலக்கும்.

உதாரணமாக, ஒரு நாய் நம்மை துரத்தினால் சாதாரண வேகத்தை விட பல மடங்கு வேகத்தில் நாம் ஒட உதவுவது இந்த அட்ரீனல் சுரப்பி சுரக்கும் நீராகும்.

இந்த நீரானது ஒவ்வொரு விலங்கும் வெட்டப்படும் போது அதிக அளவில் சுரந்து அதன் இரத்தத்திலும், சதைகளிலும் கலந்து இருக்கும்.

இவற்றை உட்கொள்ளும் மனிதன் தன் சாதாரண வேலைகளிலும் கூட ஏதோ அபாயத்தில் உள்ளது போன்ற உணர்வைப் பெறுகிறான்.

இதுவே மன இறுக்கமாக உருவெடுக்கிறது.

மனிதன் தன் ஆறாவது அறிவை சற்றும் பயன்படுத்தாது தனக்கு அதிக சக்தியும், பலமும் வேண்டியே தான் அசைவம் சாப்பிடுவதாக எண்ணுகிறான்.

ஆனால், ஆச்சரியம் என்னவென்றால், சைவத்தில் தான் அதிக சக்தியும், பலமும் உள்ளது. (சைவம் சாப்பிடும் யானைக்கு பலத்தில் என்ன குறை? )

                உதாரணமாக சோயா பீன்ஸில் 40% சுத்தமான புரோட்டீன் உள்ளது. இது மாமிசத்தில் உள்ளதைவிட இருமடங்கும், முட்டையில் உள்ளதைவிட நான்கு மடங்கும் அதிகமாகும்

மேற்கண்ட இந்த ஆராய்ச்சியின் மூலம் நாம் அறிய வேண்டியது.

இயற்கையின் அமைப்பு படி மனிதன் உட்கொள்ள வேண்டியது சைவமே என அறிகிறோம்.    

எனவே, மனிதன் ஆரோக்கியமாகவும், அமைதியாகவும், நிம்மதியாகவும், பொறுமையாகவும், பலசாலியாகவும், ஒற்றுமையுடனும், கோபம் இல்லாமலும், மன இறுக்கம் இல்லாமலும், மலச்சிக்கல் இல்லாமலும், நோய் இல்லாமலும் வாழ ஆசைப்படுவது எனில் சைவமே உட்கொள்வது காலச் சிறந்தது.
ராமனுக்கு பல மனைவிகள் உண்டா ?


அம்பேத்கார் என்பவரும், பல பெரியார்வாதிகளும், நாத்திகவாதிகளும் கூறும் ராமாயண பொய்களில் இதும் ஒன்று.


 அதாவது, இராமாயணத்தில் 'ராமனின் மனைவிகள்' என்கிற வார்த்தை ராமாயணத்தில் சில இடங்களில் வருவதாக கூறுகிறார்கள். இதனால் ராமனுக்கு பல மனைவிகள் உண்டு என்று தங்களது கற்பனையை கூறுகிறார்கள்.

 "Rama's wives will get delighted. Your daughters-in-law will be unhappy because of Bharata's waning position."- ramayanam book II-8-12

  இராமாயணத்தில் ஒரு சமயம், பரதனின் தாய் கைகேயியின் தோழி மந்தரை என்பவள் ராமன் அரசராவது பிடிக்காமல்,அவரை பற்றி அவதூறுகளை பரதனின் தாய் கைகேயியிடம் கூறுகிறாள். ராமன் ஒரு வேளை மன்னன் ஆனால் அவர் பற்பல மனைவிகள் வைக்க வாய்ப்புள்ளதாக கூறுகிறாள். இதனால் உன்னை அவர்கள் துரத்துவார்கள் என்கிறார். இப்படி ராமர் எதிர்காலத்தில் இப்படி இருக்க வாய்ப்புள்ளதாக கூறும் வசனம் எப்படி அவர் பல மனைவிகள் வைத்ததாக எடுத்துக்கொள்ளமுடியும் ?

 இதை தான் டாக்டர் அம்பேத்கார் தனது நூலில் இப்படி கூறுகிறார்.


 அதாவது, ஒரு ராஜா ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியை வைத்துக்கொள்வது என்கிற ஒரு விதிமுறை உள்ளதால்இவள் இப்படி கைகேகியிடம் கூறுகிறாள். இதில்் 'ராம மனைவிகள்' 'Rama's wives' என்கிற வார்த்தையேஇங்கே ராம பல மனைவிகள் இருந்தனர் என்று சுட்டிக் காட்டவில்லை. மந்தரை, ராமர் ஒரு அரசன் என்றும் பல பெண்களை திருமணம் செய்து கொள்ள  ஒரு சாத்தியமான எதிர்கால வாய்ப்புகளை கூறுகிறார்.


 இதன் உண்மையை கீழே கொடுத்துள்ளேன்..

  
அயோத்யா காண்டம், ஸர்கம்-8,வசனம்-12 கூறுகிறார்கள். இதன் அர்த்தம்..

இது கீதா பிரஸ் கோரக்பூர் தமிழாக்கம் ...
  
'ராமனுடைய மனைவிகள் உள்ளம் மகிழ்ந்து போகிறார்கள். (ஆனால் இங்கே ?) பாரதனுடைய மேலாண்மைக்கு குறைவு வந்துவிட்டதும், உன்னுடைய நாட்டு பெண்கள் அதிர்ப்தியோடு இருக்க போகிறார்கள்"  - 12

  
இது பிரபல இணையதள  தமிழாக்கம் ...

 ஹரிஷ்டாஃ கலு பவிஷ்யந்தி ராமஸ்ய பரமாஸ்ஸ்த்ரியஃ.
 அப்ரஹரிஷ்டா பவிஷ்யந்தி ஸ்நுஷாஸ்தே பரதக்ஷயே৷৷2.8.12৷৷


வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம் :

ராமஸ்ய - ராமனின், பரமா: ஸ்த்ரீ - எல்லா  (ராமரின் அரண்மனை) பெண்களும், ஹரிஷ்டா -: மகிழ்ச்சி, விஷ்யந்தி கலு - உண்மையில், ரதக்ஷே - பாரதத்தின் வீழ்ச்சியுடன், தே - உன், ஸ்நுஷா: - மருமகள்கள், அப்ரஹரிஷ்டா -: மகிழ்ச்சியை இழந்தவர், பவிஷூந்தி - மாறும்.

  
All the women of Rama's (palace) will be delighted indeed. With the decline of Bharata, your daughters-in-law will be deprived of all happiness.


"ராமரின் (அரண்மனை) பெண்களும் உண்மையில் மகிழ்ச்சியடைவார்கள். பரதரின் வீழ்ச்சியினால் , உங்கள் மருமகள் அனைத்து சந்தோஷத்தையும் இழந்துவிடுவார்."  - 2-8-12


https://www.valmiki.iitk.ac.in/content?language=ta&field_kanda_tid=2&field_sarga_value=8&field_sloka_value=12

  
இதன் பின்னர் ...

 'இவ்வாறு மந்தரை பேச,பேச கைகேயி இதை கண்டுகொள்ளாமல், ராமரின் குணங்களை பாராட்டி பேச தொடங்கினாள் ' -13
   
'என் செல்வன் ராமன் தர்மம் அறிந்தவன்,ஆச்சரியர்களிடம் பணிவு உள்ளவன்,நந்தி உள்ளவன்,சத்யவான் பேசுபவன், நெருப்பை  போல  தூயவன், மேலும் அவனே  முத்த மகன் என்பதால்,அவன்தானே பட்டத்திற்கு உரியவன் ? ' - 14


எனவே, இப்படி ராமனை பிடிக்காத இந்த மந்தரை பேசுவதை வைத்து எப்படி ராமர் பல மனைவிகள் வைத்ததாக எடுத்துக்கொள்ள முடியும்?

மேலும், வேறு எந்த இடத்திலும் ராமர் பல பெண்களுடன் இருந்ததாக எங்குமே இல்லை.


 எனவே, ராமர் பல மனைவிகள் உன்டு என்பது ஒரு முழு பொய் ஆகும்.இந்த வசனத்தை அறிந்த எவனும் இப்படி கூற மாட்டான்.



ராமர் மாமிசம் சாப்பிட்டாரா ?


பல பெரியார்வாதிகளும், நாத்திகவாதிகளும் கூறும் ராமாயண பொய்களில் இதும் ஒன்று. அதாவது ராமரும், சீதையும் அந்தப்புரத்தில் போதையில் மது, மாமிசம் சாப்பிட்டதாக கூறுகிறார்கள். அது முழுக்க முழுக்க பொய். அதன் உண்மை இங்கே கொடுத்துளோம் .....

வால்மீகி ராமாயணம் ... உத்தர காண்டம்- சர்கம்-42 வசனம்,  18, 19 இல் உள்ள உண்மை மொழிபெயர்ப்பு ..

'தேவேந்திரன், தன் கையால் இந்திராணிக்கு அமுதத்தை கொடுப்பதை போல் , ராமன் தன கையால் சீதைக்கு இனிய பானங்களை எடுத்து கொடுத்தார்' -18

'அப்போது, ராமன் உண்பதற்காக அரச போகத்திர்குரிய உயர்வகை உணவுகளையும், பல்வகை பழங்களும் (தோல் உரிக்கப்பட்டதும்) வெகு விரைவில் கொண்டு வந்தனர்' -19

வசனம், 19 இல் உள்ள 'மாம்ச' என்கிற வார்த்தை மாமிசத்தை குறிக்கவில்லை. சமசுகிருதத்தில் ஒரே வார்த்தைக்கு பல அர்த்தங்களை உடையது. இதில் கூறுவது 'தோலுரித்த பழங்களை' என்பதை கூறுகிறது. மேலும், ஸ்ரீரங்கம் கோவிலில் பகவானுக்கு மாம்பழங்களை நைவேத்தியம் செய்யும் போது, பின்வரும் இதே 'மாம்ச' வார்த்தையுடைய ஸ்லோகத்தையே நைவேத்தியம் செய்யும் பொது சொல்கிறார்கள். அது

' iti mamsa khanda samarpayami iti mamsa khanda samarpayami'

'பகவானே இந்த தோலுரித்த பழங்களை ஏற்று கொள்ளுங்கள் ' என்பதே இதன் அர்த்தம்

இதன் அர்த்தம் 'தோலுரித்த பழங்கள்' என்பதே. ஆனால் இதற்க்கு விளக்கம் தெரியாத மொழிபெயர்ப்பாளர்கள் இப்படி சில ராமாயண மொழிபெயர்ப்பில் மாமிசம் சாப்பிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது தவறு .

மேலும், ராமர் காட்டில் இருந்த கஷ்டமான சூழ்நிலையிலும், காட்டில் வாழ்த்த 14 வருடங்களிலும் கூட தான் மாமிசம் உண்ணாமல் இருந்த விரதத்தை கடைபிடித்ததாக அயோத்யா கண்டம் சரகம்-20 இல் 29 இல் கூறுகிறார்.

மேலும், இந்த அத்தியாயம் முழுவதுமே, ராமர் அரசன் ஆகையால் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் பல இசை, மற்றும் நடன வல்லுநர்களால் தினமும் நடந்ததாகவும், ராமர் அவர்களை கவுரவித்து பல பரிசுகளை வழங்கியதாகவும் வசனம் 20,21 கூறுகிறது .

இதில் என்ன தவறு உள்ளது. அந்த கால அரசர்கள் இவ்வாறு கலை நிகழ்ச்சிகள் நடத்துவது வழக்கம் தானே. இதில் எங்கே ஆபாசம் உள்ளது ?

மேலும், 'அறம் அறிந்தவராக ராமன் பகலின் முற்பகுதியில் அறக்கடமைகளை செய்துவிட்டு, பின்பாதியில் அந்தப்புரத்தில் கழித்தார்'- வசனம் 25

'சீதையும் பகல்வேளையின் முற்பகுதியில் தெய்வ வழிபாடுகளை செய்துவிட்டு, மாமியார்கள் எல்லோருக்கும் சமமான முறையில் பணிவிடை செய்து போற்றினால்' - வசனம் 26

பின்னர் அவள் கண்கவர் அணிகலன்களை அணிந்து கொண்டு, தேவலோகத்தில் வீற்றிருக்கும் இந்திரன் அருகே உள்ள இந்திராணிதேவி செல்வதை போல, இவள் ராமன் அருகே போய் உட்கார்ந்தாள்' - வசனம் 27

இப்படி இந்த சரகம் 42 முழுவதும் இவர்களது அரசர், அரசியின் மகிச்சிகரமான வாழ்க்கையை தான் கூறுகிறது. இதில் எந்தவித ஆபாசமான நிகழ்ச்சிகளோ, மாமிசம் சாப்பிட்டதாகவோ, மதுபானம் அருந்தியதாகவோ எங்குமே இல்லை .


சில அம்பேத்கார் புத்தகங்களிலும், சில நாத்தீகவாதி புத்தகங்களிலும் கீழ்கண்ட ராமாயண வசணத்தை தவறாக கூறுகிறார்கள். எனவே அதன் உண்மை மொழிபெயர்ப்பை தந்துள்ளேன்.

அயோத்திக்கு திரும்பி வந்தவுடன் மிகவும் ஆர்வத்துடன் தேவர்களுக்கும் கிடைத்தற்கரிய பொருள்க்களையும், பல்வகை உணவுகளையும் சமர்ப்பித்து உன்னை பூஜிப்பேன்.
(அயோத்யாகாண்டம் சர்க்கம் 52 சுலோகம் 89)

அங்கே, அவ்விருவரும் ஆசிரமத்திலுள்ள முனிவர்களுக்கு தொல்லை கொடுக்கும் காட்டு பன்றி,ரிச்சயம், ப்ருஷதம், மகாருரு என்கிற நன்கு வகையான பெருவிலங்குகளை கொண்ணு பயத்தை விலகினார்கள். காட்டில் கிடைக்கும் சில பண்டங்களை எடுத்து கொண்டு பசியோடிருந்த அவ்விருவரும் பொழுது சாயும் வேளையில் தங்குவதற்கு ஒரு பெரிய மரத்தின் அடியில் வந்து சேர்ந்தனர்.

(அயோத்யாகாண்டம் சர்க்கம் 52 சுலோகம் 102)

மிதிலை மன்னரின் புதல்வியான சீதைக்கு மலையை சுற்றி ஓடும் மந்தாகினியின் அழகை கட்டிய பின்னர், மலைச்சாரலில் உங்காந்து உண்பதற்கான பொருள்க்களை கொடுத்து உற்சாகப்படுத்தி கொண்டு அமர்ந்திருந்தனர்.

(அயோத்யாகாண்டம் சர்க்கம் 96 சுலோகம் 101)

சகோதர்களாகிய ராமா-லட்சுமணர்கள் ஒரு கொச தூரம் நடந்து எதிரில் வந்த, முனிவர்களுக்கு இன்னல் விளைவிக்கும் பல விலங்குகளை கொன்னு (தங்குவதற்கு உகந்த இடம் தேடி) யமுனை கரையிலுள்ள காட்டில் சுற்றி அலைந்தார்கள். 

 (அயோத்யாகாண்டம் சர்க்கம் 55 சுலோகம் 32)

இப்படி ராமாயணத்தில் ராமர் மாமிசம் சாப்பிட்டதாகவோ, மது அருந்தியதாகவோ எங்குமே கூறவில்லை. ஆனால், சிலர் தனது சொந்த கற்பனைகளை வைத்து இவ்வாறு ராமர் சாப்பிட்டதாக புழுகுகின்றனர்.

எனவே, மக்கள் உண்மையை இதன் மூலம் அறிந்துகொள்ளலாம். 
பசுவைக் கொல்வது தீவிரவாதமே!



தீவிரவாதம் என்று நாம் எதனைக் கூறுகிறோம்?

வாழ்ந்து கொண்டிருக்கும் அப்பாவி உயிரினத்தை அறிவியல், அரசியல் அல்லது பொருளாதார காரணத்திற்காக முழு சொந்த விருப்பத்துடன் கொலை செய்வது அல்லது தீங்கிழைப்பதே தீவிரவாதம்," என்று தீவிரவாதத்திற்கான அடிப்படை விளக்கத்தை ஸ்டீவ் பெஸ்ட் அவர்கள் வழங்கியுள்ளார். இப்போது கூறுங்கள், பசுக்களைக் கொல்வது தீவிரவாதமா? உணவு உற்பத்தியா?

நிச்சயம் தீவிரவாதமே. இந்த தீவிரவாதத்தினை ஏறக்குறைய எல்லா நாடுகளும் மாநிலங்களும் ஊக்குவித்து வருகின்றன. பாகிஸ்தான் போன்ற நாடுகளில் தீவிரவாதம் ஊக்குவிக்கப்படுகின்றது என்று கூக்குரலிடும் மக்கள், தத்தமது நாட்டிலும் தீவிரவாதம் அதைக் காட்டிலும் பன்மடங்கு அதிக அளவில் ஊக்குவிக்கப்பட்டு வருகின்றது என்பதை காண மறுக்கின்றனர்.

சில தீவிரவாதிகள் சமீப காலங்களில் பல்வேறு நபர்களின் தலைகளை வெட்டி வருகின்றனர். பசுவின் தலையினை வெட்டக்கூடிய தீவிரவாத செயல்களில் ஈடுபட்டிருக்கும் இதர மக்களுக்கும், இத்தகைய தீவிரவாதிகளுக்கும் எந்த வேற்றுமையும் இல்லை என்பதே உண்மை, உண்மையிலும் உண்மை. அவர்களும் அப்பாவி மக்களின் தலையை வெட்டுகின்றனர், இவர்களும் அப்பாவி பசுக்களின் தலையை வெட்டுகின்றனர். இருவரும் தீவிரவாதிகளே. தீவிரவாத குழுவினரின் சமுதாயம் அறியாமையிலும் அகங்காரத்திலும் மயங்கியிருப்பதால், தலையை வெட்டுவது தீய செயல் என்று கருதுவதில்லை, நல்ல செயலாக நினைக்கின்றனர்; அதுபோலவே, பசுவை வெட்டும் தீவிரவாத குழுவினரும் அறியாமையினாலும் அகங்காரத்தினாலும் மதி மயங்கி இருப்பதால், பசுவைக் கொல்வதை தீய செயலாக கருதுவதில்லை, உணவை உற்பத்தி செய்யும் நல்ல செயலாக கருதுகின்றனர்.

எனவே, தாயைக் கொல்வதை ஆதரிக்கும் ஒவ்வொரு மடையனுக்கும், தீவிரவாதத்தை ஆதரிக்கும் இதர மடையர்களுக்கும் இடையில் எந்த வேற்றுமையும் இல்லை. ஒரு விதத்தில் கூறினால், ஒரு சிலரை எதிரிகளாக பாவித்து தலையைத் துண்டிக்கும் தீவிரவாதிகளைக் காட்டிலும், சொந்த தாயின் (பசுவின்) தலையைத் துண்டிக்கும் மனசாட்சியற்ற நபர்கள் மோசமான தீவிரவாதிகளாவர்.

இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, சட்டபூர்வமாக அரசாங்கத்திடம் அனுமதி வாங்கிவிட்டு, மாபெரும் கசாப்புக்கூடங்களை நிறுவி அங்கே நிகழ்த்தப்படும் பசுக் கொலையானது, சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்டுள்ள தீவிரவாதம் என்றே தோன்றுகின்றது.