Sunday, 2 April 2023

 

கோத்திரம் என்பது பிறப்பால் வருவதா ?

 


நீங்கள் கோவிலுக்கு செய்யும் பூஜைகள் அல்லது சடங்குகளில் பங்கேற்கச் செல்லும்போதெல்லாம், உங்கள் குடும்பம் எந்தக் கோத்திரத்தைச் சேர்ந்தது என்று பூசாரி அடிக்கடி கேட்பார்.  அவர் அதை நீங்கள் வணங்கும் தெய்வத்திற்கு அர்ப்பணித்து  அந்த தெய்வத்தின் ஆசீர்வாதத்தைப் பெறவும் பிராத்தனை செய்கிறார். மேலும், ஒரு நபர் தன்னை பெரியவர்களுக்கும் அறிமுகப்படுத்தும்போது அவரது பெயர் மற்றும் கோத்ராவைக் குறிப்பிடுவதன் மூலம் அவரது மூதாதையர் வழங்கிய அனைத்தையும் ஒப்புக் கொள்கிறார்.

 

இந்த பிரபஞ்சத்தில் முதலாவதாக  ஆன்மீக அறிவு, பிரபஞ்சத்தின் இரண்டாம் படைப்பாளரான பிரம்மாவுக்கு பரமாத்மாவால் வழங்கப்பட்டது. பின்னர் இவரிடமிருந்து ஆன்மீக அறிவை பல ரிஷிக்கள் பெற்று அதைப் பாதுகாத்து, பின்னர் பிரபஞ்சம் முழுவதிலும் மனிதகுலத்தின் தலைமுறைகளிலும் பரப்பினர். பிரம்மாவின் 27 மகன்கள் இருந்தனர், அவர்கள் மனிதகுலத்தின் முன்னோடிகளாக இருந்தனர், அவர்கள் உலகம் முழுவதும் பரவிய மனிதகுலத்தின் விதைகளான பிரஜாபதிகள் என்று அழைக்கப்படுகிறார்கள். இந்த பிரஜாபதிகள் ஒவ்வொருவரிடமிருந்தும் வரும் குடும்ப வரிசை கோத்திரம் என்று அழைக்கப்படுகிறது. எனவே கோத்ராவின் பெயர்கள் இந்த முனிவர்கள் ஒவ்வொருவரின் பெயரையும் கொண்டுள்ளது. இவ்வாறே பிரம்மாவின் 27 குமாரர்களும் 27 கோத்திரங்களுக்கு ஆரம்பம் ஆனார்கள்.

 

பிரம்மாவின் சப்தர்ஷிகள் (ஏழு ரிஷிகள்) என்று அழைக்கப்படும் முக்கிய ஏழு முனிவர்கள் காஷ்யபர், வசிஷ்டர், பரத்வாஜர், கபிலர், அத்ரி, விஸ்வாமித்ரா மற்றும் கௌதமர் இருந்தார்கள். இந்த சப்தர்ஷிகள்தான் ஆன்மீக அறிவைப் பாதுகாத்து, மனிதகுலத்திற்குப் பரப்பி அனைவரின் நலனுக்காகவும் உதவுகிறார்கள். பிரம்மாவின் பிற மகன்களில் ஸ்வயம்புவ மனு, அதர்மா, பிரஹேதி, ஹேதி, அரிஸ்தாநேமி, பிருகு, தக்ஷா, பிரசேதஸ், ஸ்தானு, சம்ஷ்ரயா, சேஷா, விக்ரிதா, கர்தாமா, க்ரது, புலஹா, புலஸ்தியன் மற்றும் அகிரஸ் ஆகியோருடன் மரிச்சி, பிருகு மற்றும் அகஸ்தியரும் அடங்குவர்.

 

வேத பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக உங்கள் அடையாளத்தை நிலைநிறுத்தவும் கோத்திரம் உதவுகிறது, மேலும் உங்கள் குடும்ப வம்சாவளியானது வேத கலாச்சாரம் பற்றிய அறிவு வந்த உண்மையான ரிஷிகள் அல்லது முனிவர்களில் ஒருவரிடமிருந்து கண்டறியப்படலாம். நாம் அனைவரும் தெரிந்தோ தெரியாமலோ இந்த கோத்திரங்களில் ஒன்றைச் சேர்ந்தவர்கள். ஆனால் உங்கள் கோத்ராவை அறிவது ஒரு சிறந்த நுண்ணறிவு. இருப்பினும், இந்த கோத்திரங்கள் காலப்போக்கில் பலவற்றை உள்ளடக்கியதாக அதிகரித்துள்ளன. இப்போது இருநூற்று நாற்பத்தி ஒன்பது கோத்திரங்கள் உள்ளன, அவற்றில் தோராயமாக நாற்பது இன்று பொதுவானவை. ஒரு குறிப்பிட்ட கோத்ராவில் உள்ள ரிஷி வழித்தோன்றல்களின் எண்ணிக்கையைப் பொறுத்து, கோத்ராக்கள் மேலும் ஐந்து குழுக்களாக வகைப்படுத்தப்படுகின்றன. இந்த குழுக்கள்:

 

1. ஏகர்ஷேய-பிரவர-கோத்ரா, ஒரு ரிஷி வழித்தோன்றல் கொண்டவர்.

2. த்வயார்ஷேய-பிரவர-கோத்ரா, இரண்டு ரிஷி வழித்தோன்றல்களைக் கொண்டது.

3. த்ரேயர்ஷேய-பிரவர-கோத்ரா, மூன்று ரிஷி வழித்தோன்றல்களைக் கொண்டது.

4. பஞ்சரிஷேய-பிரவர-கோத்ரா, ஐந்து ரிஷி வழித்தோன்றல்களைக் கொண்டது.

5. சப்தரிஷேய-பிரவர-கோத்ரா, ஏழு ரிஷி வழித்தோன்றல்கள்.

 

பொதுவாக பண்டைய காலங்களில் ஒரு ஆன்மீக குருவின் குருகுலத்தில் தான் அணைத்து குலங்களை சேர்ந்த மாணவர்கள் ஆன்மீக கல்வி பயில்வார்கள். இந்த ஆன்மீக குரு ஏதாவது ரிஷிகளின் சீட பரம்பரையில் வருபவர்களாக இருப்பார்கள். எனவே, இந்த ஆன்மீக பரம்பரையில் இணைபவர்கள் இந்த கோத்திரத்தில் (பரம்பரையில்) இணைவதாக ஆகிறது. உதாரணமாக, பிருகு முனிவரின் வழிவந்த ஒரு ஆன்மீக குருவிடம் தீக்ஷை வாங்கிய அனைவருமே (எந்த குலமாக இருந்தாலும்) இவரது கோத்திரமாக (பிருகு) அறியப்பட்டனர். பண்டைய காலங்களில் எல்லா குலங்களையும் சேர்ந்த மக்களுக்கும் ஆன்மீக கல்வி மற்றும் ப்ராஹ்மண தீக்ஷை அளித்தனர்.

 

இதற்க்கு உதாரணம், சாந்தோக்ய உபநிஷத்தில் (4:4 to 9), ஒரு சிறுவன் வேசிக்கு பிறந்தவனாக இருந்த போதிலும், அவனிடம் பிராமண தகுதிகள் இருந்த காரணத்தினால், அவனை கௌதம முனிவர் சீடனாக ஏற்று வேதம் சொல்லிக்கொடுத்து பிராமணனாக மாற்றுகிறார். இங்கே கௌதம முனிவர் அவனது தந்தை கோத்திரம்/குலம் ஆகிய எதுவுமே தெரியாமல் தான் அவனுக்கு ப்ராஹ்மண தீக்ஷை அளிக்கிறார். இங்கே, இவன் கௌதம முனிவரிடம் தீக்ஷை வாங்கியதால் இவரது கோத்திரத்தில் (பரம்பரையில்) இணைகிறார்.

 

ஆனால், இப்படி சீட பரம்பரையில் மூலமாக வந்த கோத்திரம் ப்ராமண குலத்தில் வந்தவர்களால் தங்களுக்குரியதாக பிற்காலத்தில் மாற்றிவிட்டார்கள். இது தற்போதுள்ள ப்ராஹ்மண குடும்பம் வரை இன்றும் உள்ளது. உதாரணமாக, இன்று ஒரு பரஹ்மண குடும்பத்தில் பிறந்தவரின் குழந்தைக்கு ப்ராஹ்மண தீக்ஷை (உபநயனம்) அவரது தந்தையால் தான் கொடுக்கப்படுகிறது. இவ்வாறு கொடுப்பதால் அவரது தந்தை எந்த கோத்திரத்தில் (பரம்பரையில்) இருந்தாரோ அதே கோத்திரம் (பரம்பரை) அவரது குழந்தைக்கும் வந்துவிடுமல்லவா? அதனால் தான். ஆனால், பண்டைய காலங்களில் ஒரு தந்தை கூட ஆன்மீகத்தில் முன்னேறிய நிலையில் இருந்தனர். அதாவது, ஒருவது தந்தை கூட ஆன்மீக குருவாக இருந்து தனது குழந்தைக்கும் ஆன்மீக குருவாக இருந்து, அவரது குழந்தைக்கும் அவர் முலமே உபநயனம் (ப்ராஹ்மண தீக்ஷை) அளிக்கிறார். இதன் மூலம் அவரது குழந்தை அவரது தந்தை குலத்தில் (உண்மையில் ஆன்மீக குருவின்) கோத்திரத்தில் தன்னை இணைத்துக்கொள்வர். இப்படி ஆன்மீகத்தில் முன்னேறிய ஒரு தகுதியுள்ள ப்ராஹ்மண தந்தை மூலம் தனது குழந்தைக்கு கொடுக்கப்படும் உபநயனம் வேதவழிவந்த உண்மையான ப்ராஹ்மண நிலை.

 

ஆனால், தற்காலத்தில் ஒருசில ப்ராஹ்மண குடும்பத்தில் பிறந்த தந்தையை தவிர பிற அனைவருமே ஆன்மீகத்தில் எந்தவித தகுதியும் இல்லாமல் தான் தனது குழந்தைக்கு பெயரளவு உபநயனம் (ப்ராஹ்மண தீக்ஷை) அளிக்கிறார்கள். இப்படி போடும் ப்ராஹ்மணர்கள் வேத நூல்கள் படி அளிக்கப்படும் ப்ராஹ்மண நிலை அல்ல. எனவே இப்படிப்பட்ட ப்ராஹ்மண தீக்ஷையின் மூலம் வரும் அவர்களது கோத்திரமும் (முனிவர் பரம்பரையில் வந்த) உண்மையானது அல்ல. 

 

ஆனால், தற்கால ப்ராஹ்மண குலத்தில் பிறந்தவர்கள் கூறுவது கோத்திரம் என்பது பிறப்பால் வருவது என்பர். ஆனால் அது உண்மை அல்ல. அப்படியெனில், விசுவாமித்திரர் பிறப்பால் சத்திரியர். இவர்கள் கூறியபடி கோத்திரம் பிறப்பால் வருவதாக எடுத்துக்கொண்டால் விசுவாமித்திரர் கோத்திரத்தில் வருபவர்கள் சத்திரியர்களாக தானே இருக்கமுடியும்? அது போல வேத காலத்தில் நிறைய முனிவர்கள் பிறப்பால் ப்ராஹ்மண குலம் அல்ல. பண்டைய ரிஷிகளான கௌசிகர், ஜாம்பூகர், கௌதமர், வசிஷ்டர், அகஸ்த்தியர் போன்ற வேத கால ரிஷிகள் பிராமணனுக்கு பிறக்கவில்லை. ஆனால், இன்று மேற்கூறிய இந்த ரிஷிகளை தான் தற்கால ப்ராஹ்மண குலத்தில் பிறந்தவர்கள் தங்களது கோத்திரமாக கொண்டுள்ளார்கள். ஆகவே,பிறப்பின்படி கோத்திரம் வருவதாக இருந்தால் மேலே கூறிய ப்ராமண குலத்தில் பிறக்காத ரிஷிக்கள் குலத்தில் பிராமணர்கள் வரமுடியாது. ஏனெனில் இந்த ரிஷிக்கள் பிறப்பால் ப்ராஹ்மணர்கள் இல்லையே!

 

கௌடிய பரம்பரையில் உள்ள ஒரு சன்னியாசியிடம், "உங்கள் அடையாளம் என்ன?" என்று கேட்டால். பூர்வாஸ்ரமம் என்று சொல்லுவார். பூர்வாஷ்ரமம் என்றால் "முன்பு நான் அப்படிப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவன். இப்போது நான் கிருஷ்ணரின் குடும்பத்தைச் சேர்ந்தவன், அதாவது நான் இப்பொது 'அச்யுத-கோத்ரம்."

 

இதுபற்றி ஸ்ரீமத் பாகவதம் 4.21.12 இப்படி சொல்கிறது:

"பௌதிக அடையாளங்களாக சாதி, நிறம், மதம், தேசியம் போன்றவற்றின் அடிப்படையில் வேறுபாட்டை உருவாக்குகின்றன. ஜட உடல்களின் அடிப்படையில் வெவ்வேறு ஜாதி அல்லது குடும்பப் பெயர்கள் என  வேறுபாடுகள் உண்டாகிறது, ஆனால் ஒருவர் கிருஷ்ண உணர்விற்கு வரும்போது அவர் உடனடியாக 'அச்யுத கோத்திரம்' அல்லது பரம புருஷ பகவானின் வழித்தோன்றல்களில் ஒருவராக மாறுகிறார். இதனால் சாதி, மதம், நிறம் மற்றும் தேசியம் ஆகிய அனைத்துக் கருத்துக்களுக்கும் அப்பாற்பட்டதாகிறது."

 

பிருது மஹாராஜாவுக்கு வேத அறிவில் கற்றறிந்த அறிஞர்களைக் குறிக்கும் பிராமண குலத்தின் மீதும், வேத அறிவைக் காட்டிலும் மேலான வைஷ்ணவர்கள் மீதும் எந்தக் கட்டுப்பாடும் இல்லை.

 

arcye viṣṇau śilā-dhīr guruṣu nara-matir vaiṣṇave jāti-buddhir

viṣṇor vā vaiṣṇavānāṁ kali-mala-mathane pāda-tīrthe 'mbu-buddhiḥ

śrī-viṣṇor nāmni mantre sakala-kaluṣa-he śabda-sāmānya-buddhir

viṣṇau sarveśvareśe tad-itara-sama-dhīr yasya vā nārakī saḥ

 

"கோயிலில் உள்ள தெய்வம் மரத்தினாலோ அல்லது கல்லால் ஆனது என்று நினைப்பவர், சீடர்களின் வரிசையில் ஆன்மீக குருவை சாதாரண மனிதராக நினைப்பவர், அச்யுத கோத்திரத்தில் உள்ள வைஷ்ணவர் ஒரு குறிப்பிட்ட சாதி அல்லது சமயத்தைச் சேர்ந்தவர் என்று நினைப்பவர். கரணாமிர்தம் அல்லது கங்கை நீரை சாதாரண நீராக நினைப்பவர் நரகவாசியாக கருதப்படுகிறார்கள்."  -பத்ம புராணம்

 

ஆகவே, கிருஷ்ண பக்தர்கள் அச்யுத-கோத்ரம் அல்லது பரம புருஷ பகவானின் வம்சம் என்று குறிப்பிடப்படுகிறார்கள். இது ஸ்ரீமத் பாகவதம் 7.7.54 இல் கூறுகிறது.

 

பிரஹலாதனின் தாய் கஷ்டத்தில் இருந்தபோதிலும், ஒரு அரக்கனின் மனைவியாக இருந்தபோதிலும், யக்ஷர்கள், ராக்ஷஸர்கள், பெண்கள், சூத்திரர்கள் மற்றும் பறவைகள் மற்றும் பிற தாழ்ந்த உயிரினங்கள் கூட பரம புருஷனின் குடும்பமான அச்யுத-கோத்திரத்திற்கு மாற்றப்பட்டனர். அதுவே மிக உயர்ந்த பரிபூரணம்.

 

எனவே கோத்திரம் என்பது ஒருவர் சீடர் வாரிசாக அல்லது குடும்பத்தில் வருகிறார்கள் எனலாம். அவர்கள் அனைவரும் க்ருஹஸ்தர்கள். அவர்களில் சிலர் குடும்பத்திலிருந்து வந்தவராகவோ, அல்லது சிலர் சிஷ்ய பரம்பரையிலிருந்து வந்தவர்களாகவோ இருக்கலாம். ஆனால் இருவரும் ஒரே கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள். எனவே, கோத்திரம் என்பது சீட பரம்பரை மூலமாக வரக்கூடிய ரிஷிக்களின் பரம்பரையை குறிகின்றது. இது அவனது ஆன்மீக பரம்பரை மூலம் வருவதாகும். ஆனால், குலம் என்பது ஒருவனது தொழில், செயலை வைத்து வருவதாகும். உதாரணமாக, சத்திரியர் குலம், வைசியர் குலம்,.... ஆகியன. இந்த குலம் தான் தற்காலத்தில் பல ஜாதிக்களாக உருமாறி உள்ளன.

No comments:

Post a Comment