Tuesday, 18 July 2017

இயேசு – கடவுளின்குழந்தை &  கிருஷ்ணா – எல்லோரின் தந்தை


Father of Jesus is Lord Krishna



இயேசு கிறிஸ்து (jesus Christ)  என்பதில் இயேசு(Jesus) என்பது அவர், கிறிஸ்து (Christ) என்பது அவர் பிதாவின் பெயர். இதையே நாம் பிதாவின் குமாரன் என்கிறோம் (son of god) .ஆதலால் இயேசு என்பவர் பிதா (father or god) அல்ல என்பது தெரியவரும்..

இதில் கிறிஸ்து (christ) என்பதன் பொருள் 'annointed one'   இது கிரேக்க வடிவமான 'கிறிஸ்தோஸ்' (Christos) என்பதிலிருந்து வந்தது. ஆனால் இதன் சமஸ்க்ருத வடிவம் 'கிருஷ்டோ' (kristo) என்பதாகும். இந்த 'கிருஷ்டோ' (kristo) என்பதன் அர்த்தம் எல்லோரையும் வசீகரிப்பவர்'. இதன் மற்றொரு வடிவமே 'கிருஷ்ணா' (krishna). அதாவது கிறிஸ்து (christ), கிறிஸ்தோஸ்' (Christos), கிருஷ்டோ' (kristo) ஆகிய இவைகள் எல்லாம் கிருஷ்ணா (krishna) என்பதின் பல வடிவங்களே.

'என்னுடைய மேலான நாமத்தை (கிறிஸ்து/Christ) அவருக்கு (ஏசுவுக்கு) வழங்கினேன்' - பிலிபெர் 2-11 சொல்கிறது

எனவே, நாம் மேலே கூறியபடி இயேசு (jesus) + அவரின் பிதாவின் நாமம் (கிறிஸ்து/Christ) சேர்த்து, இயேசு கிறிஸ்து (Jesus Christ) என்கிறோம் ! இதில் கிறிஸ்து (Christ) என்பது அவரது பிதாவின் நாமம் என தெளிவாகிறது

கிருஷ்ணா என்பதன் பொருள்எல்லோரையும் வசீகரிப்பவர்' ஆகும். அவர் 6 வித குணங்களை முழுமையாக உடையவர் ஆவார். வேதங்களில் - இறைவன் 6 குணங்கள்முழுமையான அழகு, அறிவு, செல்வம், வீரம், புகழ், துறவு என்று கூறுகிறது. அதாவது எல்லாம் முழுமையாக உடையவர் - பகவான்.

இயேசு கூறுகிறார் 'என்னுடைய பிதா பரலோகத்தில் இருக்கிறார் என்றும்.அவருடைய நாமம் 'கிறிஸ்தோஸ்' (Christos) என்றும் கூறுகிறார். ஆகவே நாம் பிதாவின் நாமங்களை புகழ வேண்டும் என்றும் கூறுகிறார்.

இயேசு பைபிளில் தன்னை ஆயிரம் தடவைகள் 'நான்பிதாவின் பிள்ளை'  (son of god) என்று கூறுகிறார், அதே போல் தன் தந்தையை 'பிதா'  என்று 200 தடவைகள் கூறுகிறார்.

இயேசு பொதுவாக தன் தந்தையை 'பிதா' என்றுதான் பைபிளில் கூறுகிறார். ஆனால், பிதாவின் பெயர் 'கிறிஸ்தோஸ்' (Christos) என்றும் கூறுகிறார். இயேசு கூறுகிறார் 'Hallowed by name' என்றும் சொல்கிறார். அதாவது பிதாவிற்கு பெயர் உண்டு என்றும், அந்த பெயரை அவர் எல்லோருக்கும் கூறவில்லை, காரணம் மக்கள் அதை சரியாக புரிந்து கொள்ள முடியாதது தான்.

'உங்களுக்கு சொல்லஏராளமான விஷயங்கள் என்னிடம் உள்ளன, ஆனால் உங்கள் காதுகள் அவற்றை ஏற்க்கமாட்டா" - யோவான் -16-12

"இவ்வுலகவிசயங்களை குறித்து நான் சொல்வதை நீங்கள் நம்பவில்லை எனில், ஆன்மீக விசயங்களை குறித்து நான் சொன்னால் நீங்கள் எப்படி நம்ப போகிறீர்கள்" - யோவான் -3-12

"கடவுளின் ராஜ்யத்தின் ரகசியங்கள் உங்களுக்கு நான் கூறினேன், ஆனால் வெளியில் உள்ள மக்களுக்கு எல்லாம் சிறு சிறுகதைகள் (உவமைகளாக) மட்டுமே கூறினேன்" – மார்க்கு 4-11

இயேசு கூறுகிறார்  'கடவுள்ஒருவரே'  என்றும், நாம் அனைவரும் கடவுளின் குழந்தைகள் என் றும் கூறுகிறார். மேலும் எவர்கள் இறைவனுடைய சக்தியினால் நடத்தபடுகிறார்கள், அவர்கள் இறைவனின் குழந்தைகளாக இருக்கிறார்கள்”.- ரோமர்  8-14

"என்னை அனுப்பிய பிதாதாமே என்னை குறித்து சாட்சி கொடுத்து இருக்கிறார், நீங்கள் ஒரு போதும் அவர் குரலை கேட்டதும் இல்லை, அவர் உருவத்தை கண்டதும் இல்லை" -  யோவான்  -5-37

இறைவனிடத்தில் இருந்து வந்தவரை தவிர, வேறொருவரும் பிதாவை கண்டதில்லை"  - யோவான் -6-48

இறைவன் உங்கள் பிதாவாக இருந்தால் என்னிடம் அன்பாக இருங்கள், ஏனெனில் நான் அவரிடத்தில் இருந்து வந்தேன். நான் சுயமாக வரவில்லை, அவரே(பிதா) என்னை இங்கு அனுப்பினார்" - யோவான் -8-42

" பரலோகத்தில் இருக்கிற என் பிதாவின் சித்தத்தின் படி செய்கிறவனே பரலோகத்தில் போக முடியும், அது அல்லாது என்னை(இயேசுவை) பார்த்து இறைவனே(கர்த்தாவே)! இறைவனே(கர்த்தாவே)! என்று சொல்பவன் ஒரு போதும் அங்கு போக முடியாது' - மத்தேயு 7-21

மேற்கூறிய வசனங்களை பார்த்தால் புரியும், இயேசு இறைவன் அல்ல என்று, மேலும் எவன் என்னை இறைவன்(கர்த்தா) என்று சொல்பவன், கடவுளின் ராஜ்யத்தில் (பரலோகம் அல்லது வைகுண்ட லோகம் ) போக முடியாது என்று நேரிடையாகவே கூறுகிறார். .

"நான் பிதாவின் இடத்திற்கு போவேன் என்றும், பிதா என்னை விட மிக பெரியவராக இருக்கிறார்." - யோவான் -14-28

கிறிஸ்தோஸ் ' (Christos), கிருஷ்டோ' (kristo) ஆகிய பெயரின் ஆதி பெயர் 'கிருஷ்ணா' ஆகும், பகவானுக்கு பல பெயர்கள் உள்ளன, பழைய ஏற்ப்பாடு (bibble) என்பதில் 'ஜெகோவ' (jahovah) என்கிறது, ஹிந்து மதத்தில் கிருஷ்ணா என்கிறது .அதாவது கடவுள் ஒன்று, அதை பல மொழி, கலாச்சாரத்தில் பல பெயர்கள் வைத்து மக்கள் அழைகிறார்கள். , Eg .தந்தையை - மகள்அப்பா என்றும், மனைவிகணவன் என்றும், இன்னும் பல (சித்தப்பா, பெரியப்பா, தாத்தா....) .அது போலவே இறைவனை, ஏசு கிறிஸ்துபிதா என்றும், முகமதுநபிஅல்லா என்றும், இப்படி பல மதங்களில் பல பெயர்களில் அழைக்கிறார்கள்.

சனாதன தர்மத்தின்

"ஒரு உண்மையே உள்ளன, அது பல பெயர்களில் அழைக்கபடுகிறது." 
                                                                                 - ரிக்வேதா -1.164.46.

எங்கிருந்து எல்லாம் வந்தது, அதுவே இறைவன்" - வேதாந்தசூத்திரம் 1.1.2

இதையே கிறிஸ்தவர்கள் - பிதா, ஜகோவாஹ், என்றும், முஸ்லிம்கள் 'அல்லா' என்றும், சனதான தர்மத்தில் 'கிருஷ்ணா' என்றும் கூறுகிறார்கள்.

'எல்லா பொருள்களின் மூலம் நானே, எல்லாம் என்னிடமிருந்தே வந்தது ' – பகவான் கிருஷ்ணர்  , பகவத்கீதா 10.8

குந்தியின் மைந்தனே, எல்லா உயிரினங்களும் இவ்வுலகில் பிறப்பினால் சாத்தியமாக்கப்படுகின்றன. மேலும், நானே விதை அளிக்கும் தந்தை என்பதும் புரிந்து கொள்ளப்படவேண்டும்.-பகவத்கீதா 14-4

இந்த அகிலத்தின் தந்தையும் தாயும் காப்பவனும் பாட்டனாரும் நானே. பகவத்கீதா 9-17.

முழுமுதற் கடவுள் கிருஷ்ணரே எல்லா உயிர்வாழிகளுக்கும் உண்மையான தந்தை என்பது இப்பதத்தில் மிகத்தெளிவாக விளக்கப்பட்டுள்ளது

எல்லா விதமான மத நெறிகளையும் துறந்து, என்னிடம் (கிருஷ்ணரிடம்) மட்டுமே சரணடையவாயாக. உன்னை எல்லா பாவ விளைவுகளிலிருந்தும் நான் விடுவிக்கின்றேன், பயப்படாதே’. - பகவான்கிருஷ்ணர் -பகவத்கீதா 18-66

அனைத்து விதமான மத நெறிகளையும் துறந்து, தன்னிடம் மட்டும் சரணடைந்தால் போதும் என்று கிருஷ்ணர் கூறுகின்றார். அந்த சரணாகதி அவனை எல்லா பாவவிளைவுகளிலிருந்தும் காக்கும்; ஏனெனில், இறைவன் தாமே அவனைப்பாதுகாப்பதாக சத்தியம் செய்கின்றார்.பாவவிளைவுகளிலிருந்து தன்னை விடுதலை செய்து கொள்வதற்கு கடினமான முயற்சிகள் அவசியமில்லை.

எல்லா உயிர்வாழிகளின் உன்னத இரட்சகர் கிருஷ்ணரே என்பதை ஒருவன் தயக்கமின்றி ஏற்றுக்கொள்ளவேண்டும். அன்புடனும் நம்பிக்கையுடனும் அவரிடம் சரணடையவேண்டும்.


2 comments:

  1. இதை ஏற்க்கவேண்டும் என்றால், தந்தை வழிதானே தனயன் இருக்கவேண்டும். அந்த தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை தந்தையை வணங்கினவந்தான் சொர்க்கம் போக முடியும் என்னும் போது கிருத்துவ மத மாற்ற பித்தலாட்டம் எதற்கு?. எல்லோரும் தந்தையின் மார்கமான இந்துவாகவே இருக்கலாமே!

    ReplyDelete
    Replies
    1. இதை கிறிஸ்தவர்கள் தான் உணரவேண்டும். ஆனால் வெளிநாட்டில் உள்ள கிறிஸ்தவர்கள் இதை அறிந்து தான் ஹரே கிருஷ்ணா என்கிற வைணவ இயக்கத்தில் கூட்டம் கூட்டமாக இணைகின்றனர்

      Delete