இயேசு கிறிஸ்து தான் வியாதிகளை போக்குகிறாரா ?
கிறிஸ்தவர்களில் எல்லோருமே கூறும் வார்த்தை இயேசு கிறிஸ்து ஒருவரே இறைவனை அடைய ஒரே வழி. அவர் தான் எல்லோருடைய கஷ்டங்களையும் போக்குபவர், அவரே வியாதி உள்ளவர்களை குணமாக்குபவர் என்று கூறுகிறார்கள். ஆனால், உண்மை அதுவல்ல, இயேசு நேரிடையாகவே இதை பைபிளிலில் பல இடங்களில் சொல்கிறார். தான் இறைவன் அல்ல என்றும், என்னுடைய பிதாவே என்னுடைய வார்த்தைகளை நிறைவேற்றுவதாக கூறுகிறார்.
இயேசு தன்னை நோக்கி கூப்பிடும் மக்களை பார்த்து சொல்கிறார் ...
'என்னை பார்த்து கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்பவன் கடவுளின் ராஜ்யத்தில் போக முடியாது" - மத்தேயு 7-21
மேற்கூறிய வசனங்களை பார்த்தால் புரியும், இயேசு இறைவன் அல்ல என்று, மேலும் எவன் என்னை இறைவன்(கர்த்தா) என்று சொல்பவன், கடவுளின் ராஜ்யத்தில் (பரலோகம் அல்லது வைகுண்ட லோகம் ) போக முடியாது என்று நேரிடையாகவே கூறுகிறார்.
எல்லா பைபிள் வசனங்களையும் தவறுதலாகவே புரிந்து கொள்கிறார்கள். அதாவது, நிறைய மக்கள் இயேசு வாழ்த்த காலத்தில், அவரை கர்த்தாவே! என்று கூப்பிட்டு இருப்பார்கள், அதனால் தான் இயேசு அந்த காலத்தில் இந்த வசனத்தை சொல்லி இருக்கிறார்.
அடுத்து, சொல்கிறார் நான் எந்த அற்புதமும் செய்யவில்லை என்று சொல்கிறார். இதோ அந்த வசனம்....
மேலும், இயேசு கூறுகிறார்..
'அந்நாளில் அநேகர் என்னை நோக்கி கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்க தரிசனம் உரைத்தோம் அல்லவா?, உமது நாமத்தினாலே பிசாசுகளை துரத்தினோம் அல்லவா? உனது நாமத்தினாலே பல அற்புதங்களை செய்தோம் அல்லவா என்பார்கள்"
'நான் கூறியவை எதுவும் நானாக செய்ய வில்லை, என்னுடைய பிதாவே அதை உண்மையக்குகிறார்' - மத்தேயு 7-22 &
23
"சகலமும் என் பிதாவினால் ஒப்பு கொடுக்க படிருக்குது" - மத்தேயு 11-27
மத்தேயு-2-28 இல் சொல்கிறார்..
'நான் தேவனுடைய (இறைவனுடைய) ஆவியினாலே (சக்தியினாலே) பிசாசுகளை துரத்துகிறபடியால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறது'' என்கிறார்.
இதில் தெளிவாக தேவனுடைய (இறைவன்) சக்தியினால் தான் நான் பிசாசுகளை துரத்தினேன் என பன்மையில் தெளிவாக சொல்கிறார் !
"பிதா எதை சொல்லுகிறாரோ அதையே குமாரன் செய்கிறான், குமாரன் தாமாக எதையும் செய்ய மாட்டான்" - யோவான் - 5-19
'நான் சுயமாக வரவில்லை, அவரே என்னை இங்கு அனுப்பினார்" - யோவான் -8-42
மேலும், இயேசு சிலுவயில் அறையும் போது கூட, பிதா தானே வருகிறார் என்றும் கூறுகிறார்.
"என்னை அனுப்பிய பிதா தாமே என்னை குறித்து சாட்சி கொடுத்திருக்கிறார், நீங்கள் ஒருபோதும் அவர் குரலை கேட்டதும் இல்லை, அவர் உருவத்தை கண்டதும் இல்லை' - யோவான் -5.37
ஆனால், பகவான் கிருஷ்ணர் பகவத் கீதையில் சொல்கிறார். நானே எல்லோரின் தந்தை. நானே எல்லா தேவர்களின் வார்த்தைகளை நிறைவேற்றுபவன் என்றும் சொல்கிறார்.
' நானே விதை அளிக்கும் தந்தை என்பதும் புரிந்து கொள்ளப்படவேண்டும்'. - பகவத்கீதா 14-4
"இந்த அகிலத்தின் தந்தையும் தாயும் காப்பவனும் பாட்டனாரும் நானே" -
பகவத்கீதா 9-17
முழுமுதற் கடவுள் கிருஷ்ணரே எல்லா உயிர்வாழிகளுக்கும் உண்மையான தந்தை என்பது இப்பதத்தில் மிகத்தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.
ஆனால், வேதங்களில், பல கடவுள்கள் - அதாவது 33 கோடி தேவர்கள் உள்ளார்கள் என்று குறிப்பிடுகிறது. இவர்கள் பகவான் கிருஷ்ணரின் கட்டளை படி இந்த உலகை பராமரிக்க உதவும் சிறு தெய்வங்கள் ஆவார்கள். eg. பிரதமர் - அவரின் அமைச்சர்கள் போல. இப்படி சிறு தேவர்களின் வரிசையில் வருபவர் 'இயேசு கிறிஸ்து' என்பவர்.
'அறிவில் குறைந்த மக்கள் சிறு தேவர்களை வணங்குகுகிரர்கள், இவர்கள் கொடுக்கும் பலன்கள் தற்காலிகமானது, அழியக்கூடியது ஆகும்',
'தேவர்களை வழிபடுபவர் அவர்கள் உலகை அடைவர், என்னை வழிபடும் பக்தர்கள் எனது நித்ய உலகை அடைவர் ' - பகவத் கீதா - 7.20,21,23
ஜட ஆசைகளால் அறிவை இழந்தவர்கள், தேவர்களிடம் சரணடைந்து, தங்களது இயற்கைக்கு ஏற்ற வழிபாட்டு முறைகளையும் நியமங்களையும் பின்பற்றுகின்றனர்.
“எல்லோரது இதயத்திலும் நான் பரமாத்மாவாக இருக்கிறேன். தேவர்களை வழிபட வேண்டுமென ஒருவன் விரும்பும்போது, அந்த குறிப்பிட்ட தேவனிடம் பக்தி செய்வதற்கான அவனது நம்பிக்கையை நானே பலப்படுத்துகிறேன்” - பகவத் கீதா – 7-21
“ இத்தகைய நம்பிக்கையுடன் இணைந்து, அவன் ஒரு குறிப்பிட்ட தேவரை வழிபட்டு, தனது ஆசைகளைப் பூர்த்தி செய்ய முயற்சி செய்கிறான். ஆனால் உண்மையில் இந்த நன்மைகளெல்லாம் என்னால் மட்டுமே அளிக்கப்படுபவையாகும்” - பகவத் கீதா – 7-22
எனவே, நீங்கள் எந்த தேவரை வழிபட்டாலும் அவர்கள் கொடுக்கும் பலன்கள்் எல்லாமே பரம இறைவனான கிருஷ்ணரே ஆகும்.
‘எல்லா விதமான மத நெறிகளையும் துறந்து, என்னிடம் (கிருஷ்ணரிடம்) மட்டுமே சரணடையவாயாக. உன்னை எல்லா பாவ விளைவுகளிலிருந்தும் நான் விடுவிக்கின்றேன், பயப்படாதே’. - பகவான்கிருஷ்ணர் -பகவத்கீதா 18-66.
எல்லா உயிர்வாழிகளின் உன்னதஇரட்சகர் கிருஷ்ணரே என்பதை ஒருவன் தயக்கமின்றி ஏற்றுக்கொள்ளவேண்டும். அன்புடனும் நம்பிக்கையுடனும் அவரிடம் சரணடையவேண்டும்.
No comments:
Post a Comment