திருவள்ளுவர் கூறும் வேத கடவுள்கள் !
சங்க தமிழ் நூல்களான புறநானூறு, அகநானூறு, பத்து பாட்டு, சிலப்பதிகாரம்,... இப்படி எல்லா நூல்களிலும் வேத கலாச்சாரமும், வேத இறைவனான விஷ்ணுவை தான் புகழ்கிறது.
இது போலவே தான், திருவள்ளுவரும் தனது நூலான திருக்குறளில் பகவான் விஷ்ணு / கிருஷ்ணரை மையமாக வைத்தே அவரது கடவுள் வாழ்த்து பழல்களை எழுதியுள்ளதை நாம் இங்கே பார்க்கலாம்....
மேலும், இதை போல் வேத கடவுள்களான விஷ்ணு (திருமால்), லட்சுமி (திருமகள்), யமன், இந்திரன், பிரம்மா ஆகிய வேத கடவுள்களை தனது நூலில் குறிப்புடுகிறார் !
கடவுள் வாழ்த்தில் இவர், கடவுளுக்குப் பயன்படுத்திய சொற்கள் எல்லாம் தேவாரம், திவ்வியப்பிரபந்தத்தில் வருகின்றன. சம்ஸ்கிருதத்திலும் உள்ளன.
திருவள்ளுவர் குறிப்பிடும் தெய்வங்கள்:–
அடி அளந்தான் – திருமாலின் (த்ரி விக்ரம) வாமனாவதாரம் (610)
திருமால் (விஷ்ணு ) பற்றி வள்ளுவர்:
அடி அளந்தான் – திருமாலின் (த்ரி விக்ரம) வாமனாவதாரம் (610)
அமிழ்து- பாற்கடலை கடைந்தபோது வந்த அம்ருதம் 64, 1106, 720, 82 (சாவா மருந்து)
1 . குறள் 1103 - இன்பத்துப் பால் - அதிகாரம்: புணர்ச்சி மகிழ்தல்
தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு?
-
பொருள்: 'தாமரை கண்ணணுடைய உலகம் தான் விரும்பும் காதலியின்
தோள்களில் துயிலும் துயிலை விட இனிமையானதோ'
அவர்
வேறு எந்த தேவரையும் தேவ உலகத்தையும் வள்ளுவர் குறிப்பிடவில்லை.
எல்லோரையும்விட
உயர்தவரான தாமரை கண்களையுடைய கிருஷ்ணரே ஆதிபகவான் என்பதை மனதில் வைத்துக் கொண்டே வள்ளுவர்
இந்த குறளை படைத்திருக்கிறார்.
2. குறள் 610 - பொருட்பால் - அதிகாரம்: மடியின்மை
மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தா அய தெல்லாம் ஒருங்கு
மடி
இன்மை அதாவது சோம்பலில்லாமை பற்றி பாடவந்த வள்ளுவர், மஹா விஷ்ணு வாமனனாக வந்து பின்னர்
நெடு நெடுவென வளர்ந்து த்ரிவிக்ரமனாக வின்னையும் மண்ணையும் தன் திருவடிகளால் அளந்தது
போல சோம்பல் இல்லாத மன்னவன் இந்த உலகம் முழுவதையும் அடைவான் என்கிறார்.
3. பகவான் கண்ணனை பற்றி கூறுகிறார்...
அழல்போலும்மாலைக்குத் தூதாகி ஆயன்
குழல்போலும் கொல்லும் படை
பகவான்
கண்ணனை பற்றி கூறுகிறார்...
தவைவனுக்காக
காத்திருக்கும் தலைவி பகற்பொழுதுப்போய் மாலைப்பொழுது வந்ததன் அடையாளமாக சொல்லுவது யசோதை
இளஞ்சிங்கம் கண்ணன் மாடுமேய்க்கும் போது ஊதும்புல்லாங்குழலைத்தான். இங்கே கண்ணனே தலைவன்
ராதை முதலிய கோபிகைகளே தலைவிகள். மாலைப்பொழுது வந்துவிட்டது, தூரத்தில் கண்ணன் குழலோசை
கேட்கிறது, ஆனால் கண்ணன் இன்னும் இங்கே வரவில்லை. கோபிகைகள் காத்திருக்கிறார்கள் கண்ணனுக்காக.
லக்ஷ்மி பற்றி வள்ளுவர்:
(குறள்
- 617, 179, 519,
920 )
1. குறள் 617 - பொருட்பால் - அதிகாரம்: ஆள்வினையுடைமை
மடி உளாள் மாமுகடி என்ப, மடியிலான்
தாளுளாள் தாமரையி னாள்.
பொருள்:: “ஒருவனுடைய சோம்பலிலே கரிய மூதேவி வாழ்கின்றாள்; சோம்பல்
இல்லாதவனுடைய முயற்சியிலே திருமகள் வாழ்கின்றாள்”.
2. குறள் 179 - அறத்துப்பால் - அதிகாரம்: வெஃகாமை
அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேருந்
திறனறிந் தாங்கே திரு.
பொருள்:: அறம் இஃது என்று அறிந்து பிறர் பொருளை விரும்பாத
அறிவுடையாரைத் திருமகள் தான் சேரும் திறன் அறிந்து அதற்கு ஏற்றவாறு சேர்வாள்.
3. குறள் 519 - பொருட்பால் - அதிகாரம்: தெரிந்து வினையாடல்
வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக
நினைப்பானை நீங்குந் திரு.
பொருள்:
தன் பதவியில் செயல்திறம் உடையவன் நிர்வாகத்திற்கு வேண்டியவனாக இருக்க, அவனை ஒழிக்க
எண்ணிக் கோள் மூட்டுவார் சொல்லை நிர்வாகம் கேட்குமானால் அந்த நிர்வாகத்தை விட்டுச்
செல்வத் திருமகள் நீக்குவான்.
4. குறள் 920 - பொருட்பால் - அதிகாரம்: வரைவில் மகளிர்
இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
திருநீக்கப் பட்டார் தொடர்பு.
பொருள்: உள்ளம் ஓரிடமும், உடம்பு ஓரிடமுமாக இருமனம் கொண்ட பாலிய்
தொழிலாளர், கள், சூதாட்டம் இவை எல்லாம் திருமகளால் விலக்கப்பட்டவருக்கு நட்பாகும்.
இந்திரன் பற்றி வள்ளுவர்:
குறள் 25 - அறத்துப்பால்
- அதிகாரம்: நீத்தார் பெருமை
ஐந்தவித்தான்
ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே
சாலுங் கரி
பொருள்: ஐந்து புலன்களாலாகும் ஆசைகளை ஒழித்தவனுடைய வல்லமைக்கு,
வானுலகத்தாரின் தலைவனாகிய இந்திரனே போதுமான சான்று ஆவான்
யமன் பற்றி வள்ளுவர்:
யமன் (கூற்றம்) – 269, 1085, 326, 765, 1083
குறள் 269 - அறத்துப்பால்
- அதிகாரம்: தவம்
கூற்றங் குதித்தலுங் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்கு.
பொருள்: தவம் செய்வதால் பெறத்தக்க ஆற்றலைப் பெற்றவர்க்கு (ஓர் இடையூறும் இல்லையாகையால் ) எமனை வெல்லுதலும் கைகூடும்
பிரம்மா பற்றி வள்ளுவர்:
பிரம்மா – உலகு இயற்றியான் 1062
குறள் 1062 - பொருட்பால்
- அதிகாரம்: இரவச்சம்
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்.
பொருள்: உலகத்தை படைத்தவன் உலகில் சிலர் இரந்தும் உயிர்வாழுமாறு ஏற்படுத்தியிருந்தால், அவன் இரப்பவரைப் போல் எங்கும் அலைந்து கெடுவானாக.
எனவே, திருவள்ளுவர் கூறும் பகவான் விஷ்ணு / கிருஷ்ணரே என்பதை இதன் மூலம் அறியலாம். மேலேம், இவர் தனது திருக்குறளில் வேத கடவுள்களை மட்டுமே தான் சொல்கிறார் !
No comments:
Post a Comment