பைபிள்
மட்டும் தான் புனித நூலா
? அல்லது
இந்து வேத இலக்கியங்களை சேர்த்தது தானா ?
கிறிஸ்தவர்கள்
கூறுவது, பைபிள் மட்டுமே எங்கள்
புனித நூல். எனவே இதை
தவிர பிற மத நூல்களை
படிக்கவேண்டாம் என்று கூறுவதுண்டு. ஆனால்,
பைபிள் கூறுவது வேறு. அதாவது
பைபிள் புனித நூல்கள் என்று
சொல்வது, இந்துமத வேத நூல்களையும்
சேர்த்து தான். இதை பற்றி
பார்க்கலாம்....
'ஆண்டவனின்
உந்துதலால் எல்லா புனித நூல்களும்
தரப்படுகிறது. அவைகள் நம்பிக்கைக்கு பயனுள்ளவையாக
இருக்கிறது' - தீமோ 3.16,17
பூரண
உண்மையை புரிந்துகொள்ள ஒரு கிறிஸ்தவன் இந்துமத
புனித நூல்களை பயன்படுத்திக்கொள்ளவே இந்த வாக்கியம்
எடுத்துக்கொள்ளலாம். இந்த வசனம் பைபிள்
சம்பந்தமாக இருந்தால் 'எல்லா புனித நூல்கள்'
என்று ஏன் பைபிள் கூறவேண்டும்?
(பைபிள் தொகுத்தவர்கள் இந்திய புனித நூல்களை
அறியாமலா இருந்தார்கள்! அறிந்து தான் இதை
கூறினார்கள்.
கிறிஸ்தவர்களின்
மோர்மோன் புத்தகம் ‘The Book of Mormon' என்கிறதில் கூறுகிறது 'ஒன்றுக்கு மேற்பட்ட நாடுகள் இருப்பதை நீ
அறியவில்லையா? கடவுளாகிய நான் எல்லா உயிரினங்களையும்
படைத்திருக்கிறேன் என்பது உங்களுக்கு தெரியாத?
விண்ணுக்கும்,மண்ணுக்கும் நான் ஆளுகிறேன் என்பது
உங்களுக்கு தெரியாதா? இவுலகிலுள்ள எல்லா மனிதர்களுக்கும் நான்
தெரிவிக்கிறேன். நீ என்னுடைய மேலான
பேச்சுக்களை பெறப்போவதால் ஏன் முனுமுனுக்கிறாய். நான்
கடவுள் என்பதும் எல்லா நாடுகளையும் நினைவில்
கொண்டுள்ளேன் என்பதும் உனக்கு நிதர்சனமாயுள்ளது. எனவே
ஒரு நாட்டிற்கு நான் பேசிய அதே
பேச்சினை பிற நாடுகளுக்கும் கூறுகிறேன்.
நான் ஒரே பேச்சை பேசினேன்
என்பதால் வேறு பேச்சுக்களை நான்
பேச முடியாது என்று நீ நினைக்க
வேண்டிய அவசியம் இல்லை. என்னுடைய
வேலை இன்னும் முற்றுப்பெறவில்லை. மனித
வாழ்வு முடியும் வரை இருக்கும்"
"ஆகையால் உங்களிடத்தில்
பைபிள் என்கிற புனித நூல்
உள்ளதால் அதில் நான் கூறிய
எல்லா சத்திய மொழிகளும் அடங்கியுள்ளன
என்று நீங்கள் நினைக்க வேண்டிய
அவசியம் இல்லை. ஏனெனில், கீழை
நாடுகள், மேலை நாடுகள், வடக்கு
நாடுகள்,தெற்கு நாடுகள், கடலின்
நடுவிலுள்ள தீவுகள் ஆகியவைற்றில் உள்ள
எல்லா மக்களுக்கும் நான் கூறிய சத்தியமான
வசனங்களை எழுத வேண்டுமென்று ஆணையிடுகிறேன்.
எழுதப்படும் அந்த புத்தகங்களின் வாயிலாக
இவ்வுலகை நான் தீர்மானிக்க போகிறேன்"
மேலே,
கூறப்பட்டவை கீழை நாடுகளிலுள்ள இந்துமத
வேத இலக்கிய புனித நூல்களையே
சொல்கிறது. ஆனால் எல்லா மதங்களின்
சாராம்சம் ஒன்றுதான். உதாரணமாக, உங்கள் மேஜைமீது உள்ள
பெரிய அகராதி ஏராளமான விஷயங்களை
விவரமாக தெரிவிக்கிறது. சிறிய அகராதி விஷயங்களை
சுருக்கமாக தெரிவிக்கிறது. ஆனால் அவை இரண்டிலிருந்தும்
பெரும் அறிவு ஒன்றுதான். சிறப்பு
என்னவெனில் தெள்ளத்தெளிவாக கருத்துக்களை கூறும் நூல்களை நாம்
கண்டறிவதேயாகும்.
இதை
இயேசு கூறுகிறார்..
'உங்களுக்கு
சொல்ல ஏராளமான விஷயங்கள் என்னிடத்தில்
உள்ளன. ஆனால் உங்கள் காதுகள்
அவைகளை ஏற்கமாட்டா" - யோவான் 16.12 இல் இதை வலியுறுத்திகிறார்.
இயேசு
தன் சீடர்களுக்கு ஆழ்ந்த ரகசியமான அறிவை
புகட்டினார் என்று சொல்லப்பட்டாலும், கிருஸ்தவ
பாரம்பரியம் முழுவதும் சிறுசிறு கதைகள் மூலம் தான்
அவர் கருத்துக்களை மக்களுக்கு சிறிய அளவில் கூறினார்.
இதை
ஏசுவே பைபிளில் பின்வருமாறு கூறுகிறார் ..
"இவ்வுலக விஷயங்களை
பற்றி நான் சொல்வதையே நீங்கள்
நம்பவில்லையெனில், ஆன்மிக விஷயங்களை பற்றி
நான் சொன்னால் நீங்கள் எப்படி நம்ப
போகிறீர்கள்" - யோவான் 3.12 இல் கூறுகிறார்.
ஆனால்,
பகவான் கிருஷ்ணர் பகவத் கீதை என்கிற
நூலில் கூறுகிறார் ..
"முழு அறிவோடு
கூடிய இந்த அறிவை முழுவதுமாக
நன் உனக்கு சொல்கிறேன். இதை
தெரிந்து கொண்ட பின்பு மேலும்
நீ தெரிந்து கொள்ளவேண்டியது எதுவும் பாக்கியில்லை" - என்று கூறுகிறார்.
'கடவுளை
உணருதல்' என்கிற நிலையை அடைவதற்கான
வழி தெளிவாகவும் முறையாகவும் இந்த வேத நூலில்
உள்ளன. ஆகவே இந்துமத வேத
இலக்கியத்தில் அறிந்துகொள்ள அநேக விஷயங்கள் உள்ளன.
இயேசு
கூறிய முக்கியமான இரண்டு கட்டளைகள். முதல்
கட்டளை 'கடவுளை நேசிப்பது'. இதை
பற்றி சிறந்த முறையில் இந்துமத
வேத இலக்கியங்களில் விரிவாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், பைபிளில்
இந்த கருத்தை பூர்த்தி செய்வது
பற்றி சில குறிப்புகளே உள்ளன.
உண்மையில்,
இந்துமத வேதங்களில் இறைவனை அறிவதற்கு அதிகமான
தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவரை நீ உண்மையில்
அறிந்து கொண்டால் அவரை நேசிக்காமல் உன்னால்
எப்படி இருக்க முடியும்.
அடுத்து,
இயேசுவின் இரண்டாவது கட்டளை ' அயலாரிடத்தில் அன்பு செலுத்து' என்பது.
இது
ஒருவனுக்கு உடுக்க உடை, உணவு,
தங்க இடம் அளிப்பது போல
மனிதாபிமானத்தோடு செய்யும் செயல்கள் இல்லை எண்டு முதிர்ந்த
கிறிஸ்தவர்கள் அறிவார்கள். அதாவது பிறர் துன்பப்படுவதை
கண்டு செய்கிற காரியங்களை 'அயலாரை
நேசிப்பது' என்கிற பைபிளின் கட்டளையை
குறைத்து மதிப்பிடுகிறோம். ஒருவனது உடலுக்கு செய்யும்
நல்ல காரியம், அவனது உடலிலுள்ள ஆத்மாவை
உயர்த்தும் செயல் ஆகாது. இதம்
உண்மை அர்த்தம், கடவுளை பற்றிய அறிவை
எல்லோருக்கும் பகிர்ந்து கொள்வேதே கிறிஸ்தவ மத 'எல்லா ஆன்மீக
அன்பு' என்கிற கோட்பாடு அடங்கியுள்ளது.
அதாவது, இறைவன் நினைவோடு இருத்தல்
என்கிற போதனையை எல்லோருக்கும் பரப்புவதே
'அயலானை நேசித்தால்' என்கிற கட்டளையின் உண்மை
பொருள் ஆகும்.
ஆகவே
இந்துமத வேத இலக்கியத்தில் அறிந்துகொள்ள
அநேக விஷயங்கள் உள்ளன.
மேலும், பைபிளில் 'கடவுள் மிக பெரியவர்', ஆனா எப்படி பெரியவர் அதை தெளிவாகவும்,விரிவாகவும் சொல்லவில்லை. இப்படி சிறிய அளவு தகவல்களே பைபிளில் உள்ளன, அடுத்து, இந்த உலகம் கடவுள் படைத்தார், ஆனா அவர் அதை எப்படி என்பதை பற்றி தகவல்கள் விரிவாக இல்லை, ஆனால் அது பற்றிய தகவல்கள் வேத சாஸ்திரங்களில் தான் மிக விரிவாக உள்ளன. இப்படி தான் எல்லா விஷங்களும் பைபிளுக்கு, வேத சாஸ்திரத்திற்கும் தகவல்கள் வித்தியாசங்கள் உள்ளது. அதாவது பைபிளில் சிறிய அளவு தகவல்களும், சாஸ்திரங்களில் விரிவான தகவல்களும் உள்ளன.
மேலும், பைபிள் என்பது ஒரு சிறிய டிகிட்டினரி போல, சிறிய அளவு தகவல்களே உள்ளது. ஆனால், வேத நூல்கள் ஒரு oxford டிகிட்டினர போல நிறைய தகவல்கள் உள்ளவை. ஆனால் வேதங்கள் பல உள்ளன (4 வேதங்கள், 18 புராணங்கள், 18 உப புராணங்கள், 2 இதிகாசங்கள், அர்த்த சாஸ்திரம், வன சாஸ்திரம், காம சாஸ்திரம்,..... இப்படி சொல்லிகிட்டே போகலாம்.
எனவே, கிறிஸ்தவர்கள் இப்ப தான் LKG, UKG, வந்திருக்கீங்க, ஆனால், சனாதன தர்மத்தை சார்ந்தவர்கள் Phd அளவில் ஆன்மிக தகவல்கள் படித்து இறைவனை பற்றி அறிந்துளோம்.
எனவே, ஒரே பைபிளை மட்டும் வைத்து கொண்டு இது தான் எல்லாம் என்று கூர்வதை பார்த்தால் சிரிப்பு தான் வரும். LKG படிக்கிறவனுக்கு அவன் படிக்கிறதே பெரிதாக தான் தெரியும். அது போல் தான கிறிஸ்தவர்களும் பைபிளை படிச்சிட்டு பேசுறாங்க!
எனவே, இந்துமத சாஸதிரங்களையும் படித்து இறைவனையும்,இந்த உலக படைப்பையும் பற்றி அதிகமாக படித்து உங்கள் ஆன்மீக அறிவை வளர்த்து கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment