Friday 7 July 2017

நமது கிருஷ்ணர் - முழுமுதற் கடவுள் (அல்லாஹ்)

இந்த பதவு  அகமதியா முஸ்லீம்கள்  வெளியிட்ட "நமது கிருஷ்ணர்" என்கிற ஒரு நூலின் மறுப்பாக வெளியிட பட்ட்தே இந்த பதிவு.

சில முஸ்லிம்கள் கூறுவது இந்துக்கள் இறைவனாக வழிபடும் பகவான் கிருஷ்ணரும் ஒரு இறை தூதர் என சொல்கிறார்கள். ஆனால், அதில் எள்ளளவும் எந்தவித ஆதாரமும் இல்லை.

ஆனால், முஸ்லிம்கள் கிருஷ்ணரை ஒரு தூதராக கூறுவதற்கு ஆதாரமாக சொல்வது முஸ்லீம் அறிஞர்கள் எளிதிய நூல்களை தான் ஒழிய, நேரடியாக குரான் & ஆதாரமுள்ள ஹதீஸ்  மூலம் அல்ல. அதாவது ஆதாரமில்லாத ஹதீஸ் என்கிற நபிமொழிகள் என்பதை வைத்து தான் இப்படி சொல்கிறார்கள். இவைகளை பற்றி நாம் பார்க்கலாம்.

இஸ்லாமிய சான்றோர் கருத்துக்களின் உண்மைத்தன்மையை எப்படி அறிவது ?
ஹதீஸ் என்கிற நபிமொழிகள், 8ம் 9ம் நூற்றாண்டுகளில் சேர்க்கப்பட்டு தொகுக்கப்பட்டன. இவற்றில் புஹாரி, முஸ்லிம், திர்மிதி, இப்னுமாஜா, நஸயீ, அபூதாவூத் ஆகியவை பிரபலமானவையாகக் கொள்ளப்படுகின்றன. ஹதீஸ் என்ற அரபி சொல்லுக்கு செய்தி என்று பொருள். முகம்மது நபியவர்கள் செய்த பிரச்சாரம், அவர்களின் வாழ்க்கை முறை, இவைகளை பார்த்த மற்றும் அறிந்த நபியவர்களின் தோழர்கள் முகம்மது நபியைப் பற்றி சொன்ன செய்திகள் மற்றும் விளக்கங்களை ஹதீஸ் என்ற பொருளில் முஸ்லிம்கள் பயன்படுத்துவது வழக்கம்.

நான்கு லட்சம் ஹதீஸ்களை திரட்டிய இமாம் புகாரி(ரஹ்) அவர்கள், அதில் நான்காயிரத்துக்கு சற்று அதிகமான ஹதிஸை மட்டும்தான் பதியவைத்தார்கள். தவறான ஹதீஸை எந்த ஒரு பெரிய அறிஞர் தன் புத்தகத்தில் எழுதினாலும் அக்குறிப்பிட்ட விஷயம் பெரும்பான்மையான முஸ்லிம் அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.

எந்த வகையான ஹதீஸ்களை ஏற்கலாம்? எவற்றை ஏற்கக் கூடாது என்ற அடிப்படையில் ஹதீஸ்களை நான்கு முக்கிய தலைப்புகளில் அடக்கலாம்.
1, ஸஹீஹ் (ஆதாரப்பூர்வமானவை)
2. மவ்ளூவு (இட்டுக்கட்டப்பட்டது)
3. மத்ரூக் (விடப்படுவதற்கு ஏற்றது)
4. ளயீப் (பலவீனமானது)

எந்த ஹதீஸாக இருந்தாலும் இந்த நான்கு வகைக்குள் அடங்கிவிடும்.  ஸஹீஹ் (ஆதாரப்பூர்வமானவை) என்கிற வகையை  சார்த்தவைகள் மட்டுமே முஸ்லீம் அறிஞர்கள ஏற்பவைகள். பிற நபிமொழிகள் போலிகள் என்கிறார்கள்.

அதாவது ஒரு ஆதரமுள்ள ஹதீஸ் என்பது, தமக்கு அறிவித்தவர் யார்? என்பதை மட்டும் கூறினால் போதாது. மாறாக தமக்கு அறிவித்தவர் யாரிடம் கேட்டார்? அவர் யாரிடம் இச்செய்தியைக் கேட்டார்? என்று சங்கிலித் தொடராகக் கூறிக் கொண்டே நபிகள் நாயகம் வரை செல்ல வேண்டும். இதுவே ஒரு உண்மையான ஹதீஸ் இருக்கமுடியும்.

எனவே, முஸ்லிம்களின் இந்த நபிமொழிகள் என்பது சந்தேகத்திற்கு உரியவை. இவைகளை ஆதாரமாக ஏற்பது சந்தேகத்திற்குரியதே! ஏனெனில், இதில் உண்மை தன்மையை அறிவது கடினம்.

குர்ஆனில் சில நபிம்மார்கள் பெயர்கள் குறிப்பிடபட்டுள்ளன.. இதில் குறிப்பிட படாத நபிமார்களை ஏற்க கூடாது. இப்படி குர்ஆனில் குறிப்பிடப்படாத நபிமார் தான் இந்த ஹஸ்ரத் தலைமி. இந்த ஹஸ்ரத் தலைமி அவர்களின் நபி மொழி ...

கான பில் ஹிந்தி நபிய்யுன் அச்வதுள் லாவணி இச்முஹூ காஹினா
" இந்தியாவில் ஒரு நபி தோன்றினார்.. அவர் கருமை நிறத்தவர் .. அவர் பெயர் காஹினா ". இவரே 'கண்ணன்' என இவர் கூறுகிறதாக சிலர் வாதிடுகிறார்கள்.

ஆனால், நாம் ஏற்கனவே மேலே சொல்லியபடி இந்த ஹதீஸ் தமக்கு அறிவித்தவர் யார் ? இதை அவர் யாரிடமிருந்து இதை கேட்டார் ? இப்படி சங்கிலி தொடர் போல், நபிகள் நாயகம் வரை செல்லவேண்டும். ஆனால், இந்த ஹதீஸ் இப்படி  இல்லாதததால்,  இது ஒரு ஆதாரமில்லாத ஹதீஸ்  என்பதால் எந்த முஸ்லிம்களும் இதை ஏற்கமாட்டார்கள்.

மேலும், இவர்கள் கூறும் காஹினா என்பது தான் 'கண்ணன்' என்று கூறுவது தவறான விளக்கமே. அதாவது, கருமை நிறத்தவர் என்கிற ஒரே ஒரு அடையாளத்தை மட்டும் வைத்து, இது கிருஷ்ணரை தான் கூறுகிறது என்பது ஏற்புடையதல்ல. கிருஷ்ணருக்கு எண்ணிலடங்கா நாமங்களை கொண்டவர். எனவே, இதை மட்டும் வைத்து, வேறு எந்தவித குணாதிசியங்களை சொல்லாமல் கூறுவது தவறானது ஆகும்.

ஆனால், இந்த பெயர் இஸ்லாம் வரலாற்றில், உமையாக்கள் (ஹிஜ்ரி 41 - 132) என்பதில்  கலீபா அப்துல் மலிக் என்பவரின் வரலாறில் இவரை பற்றி வருகிறது ... அது இதோ...

"6.  கலீபா கி.பி.702ல் ஹஸ்ஸான் இப்னு நுஃமானின் தலைமையில் காஹினாவின் கொட்டத்தை முறியடிப்பதற்காக வட ஆபிரிக்காவை நோக்கி அனுப்பி வைத்தார். முதல் கட்டமாக பறிபோயிருந்த கைருவானைக் கைப்பற்றிய பின் காஹினா வாழ்ந்த அட்லஸ் மலைத்தொடரை நோக்கி தன் படையை வழி நடத்தினார். காஹினாவுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் நடைபெற்ற யுத்ததில் காஹினா, பிர்ருல் காஹினா எனுமிடத்தில் கொல்லப்பட்டதோடு அவளது தலையும் துண்டிக்கப்பட்டு அப்துல் மலிக்கின் பார்வைக்காக டமஸ்கஸ் நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டது."

இதன்படி பார்த்தால் இந்த 'காஹினா' என்பவர் ஆபிரிக்க நாட்டில் வாழ்ந்ததாக தான் சொல்கிறது. அதாவது, ஆபிரிக்க நாட்டை சார்ந்தவர்கள் பொதுவாக கருப்பாக தான் இருப்பார்கள். இதை வைத்து 'காஹினா' என்பது கருமை நிறத்தையுடைய கண்ணன் என்று எடுத்து கொண்டார்கள்.

எனவே, காஹினா என்பது கருமை நிற கண்ணனை சொல்லவில்லை , ஆபிரிக்க நாட்டை சார்த்த ஒருவராக இருந்திருக்கிறார் என அறியலாம்.

எனவே, இந்த முஸ்லீம் அறிஞர் கூறுவது, தனது சொந்த கற்பனை கருத்தை தான் சொல்கிறார் என இதிலிருந்து புரிந்து கொள்ளலாம். இப்படியே பற்பல முஸ்லீம் அறிஞர்களின் கூறியதாகவே உள்ளது. ஆனால், இதன் உண்மை தன்மை அறிவது ரெம்ப கடினம். இப்படி இஸ்லாமிய சான்றோர்களின் கருத்துக்களை மட்டும் வைத்து கொண்டு, கிருஷ்ணர் என்பவர் ஒரு நபி என்று கூறுவது எந்தவித அடிப்படை ஆதாரம் இல்லாதது. இப்படி ஆதாரமில்லாத கருத்துக்களை மட்டும் வைத்து கொண்டு கிருஷ்ணர் என்பவர் நபி என் கூறுவது முட்டாள் தனமானது, இதை முஸ்லீம் அறிஞர்கள் கூட ஏற்கமாட்டார்கள்.

மேலும், முஸ்லிம்கள் கூறும் மற்றுமொரு ஆதாரமாக சொல்வது, அஹமதியா முஸ்லீம் ஜமாத்தை தோற்றுவித்த ஹஸ்ரத் மிர்ஸா  குலாம் அஹ்மத் (அலை) (1835-1908) என்பவர் தனது 'தௌபாயே கைசரியா' என்கிற நூலில், ஸ்ரீ கிருஷ்ணர் ஒரு இறைத்தூதர் என இறைவனே தமக்கு அறிவித்துள்ளதாக பின்வருமாறு சொல்கிறார்…

 'அறிந்து கொள்ளுங்கள்! ராஜா கிருஷ்ணர் இறைவன் எனக்கு அறிவித்தபடி உண்மையில் ஒரு மாபெரும் மனிதராக  விளங்கினார். அவரோடு ஒப்பிடத்தக்க எந்த ஒரு ரிஷியையோ,முனிவரையோ இந்துக்களால் பார்க்க முடியாது. அவருடைய காலத்தில் அவர் அவதாரமாக அதாவது நபியாக விளங்கினார் இறைவனிடமிருந்து அவருக்கு 'ரூஹுல் குத்தூஸ்' (பரிசுத்த ஆவி) இறங்கி கொண்டிருந்தது. அவர் இறைவன் புறமிருந்து பெரும் வெற்றிக்குறியவராக விளக்கினார். அவர் ஆரிய பூமியை பாவங்களிலிருந்து தூய்மைப்படுத்தினார், ஆனால் அக்கால நபியாகிய அவருடைய போதனைகள் பிற்காலத்தில் பல வகையிலும் சீர்குலைக்கப்பட்டன"  என்று கூறுகிறார்.

இப்படிப்பட்ட  ஒரு முஸ்லீம் அறிஞர் கூறுவதை எப்படி நாம் ஆதாரபூர்வமாக ஏற்க முடியும் ? இவர் தனக்கு இறைவன் இப்படி கூறியதாக சொல்கிறார் !  இதற்க்கு எந்தவித குரான் ஆதாரமோ, ஆதாரபூர்வ ஹதீஸ் ஆதாரமோ இப்படி எதுமே இல்லாமல் சொல்வது, தனக்கு தோன்றுகிற கற்பனைகளை கூறுவதாக தான் நினைக்க வைக்கிறது !.எனவே,இதன் உண்மை தன்மையை  எந்தஒரு அறிவாளியும் அறிந்து கொள்ளலாம் .

இப்படி 19 நுட்டாண்டை சேர்த்த ஹஸ்ரத் அஹமத் என்கிற ஒரு முஸ்லீம் அறிஞர் தனது நூல்களில் பல இடங்களில் இப்படிப்பட்ட வசனங்கள் வருவதாக சொல்கிறார். இவர் கூறுவது 'அவதாரம் என்பது நபி என்கிற அர்த்தம் என்றும், கிருஷ்ணர் ஒரு இறை அறிவிப்பு  அடைந்தவர் என்றும் இவரது 'பைகாமே சூலஹ்' என்கிற இந்து,முஸ்லீம் ஒற்றுமையை வலியுறுத்தும் நூலில் இப்படி கூறுகிறார். (பைகாமே ஷூல்ஹ், பக்கம் 11 சொல்கிறார் ).

எனவே, இப்படிப்பட்ட ஒரு முஸ்லீம் அறிஞர் சொல்லும் சொந்த கருத்தை எப்படி ஆதாரபூர்வமான கருத்தாக ஏற்க முடியும் ?

இதை முஸ்லிம்களே ஏற்கமாட்டார்களே ? ஏனெனில், இவர் கூறியது குரானிலோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட ஹதீஸ் புத்தகங்களிலோ எதிலுமே இல்லையே ! இது இவரது தனிப்பட்ட கருத்துக்கள். எனவே, இதை எந்த அறிவுள்ள மனிதனும் ஏற்கமாட்டான் என்பதே உண்மை.

ஸ்ரீ கிருஷ்ணர் பற்றிய கருத்துக்கள்

கிருஷ்ணர் என்பவர் ஒரு இறைத்தூதர்  அல்ல  என நாம் மேலே கண்டோம். ஆனாலும், சில முஸ்லீம் அறிஞர்கள் கிருஷ்ணர் பற்றி 3 வித கருத்துக்களை சொல்கிறார்கள். அதாவது  கிருஷ்ணர்  என்று ஒரு சாதாரண மனிதர் ஒருவர் வாழ்ந்தார் எனவும், ஆனால் அவர் கடவுளின் அவதாரம் அல்ல எனவும், அவரது பகவானின் லீலைகளை தவறாக கருத்துரைப்பது எனவும் சொல்கிறார்கள். இந்த  3 விஷயங்களை பார்க்கலாம்..

1. கிருஷ்ணர் என்பவர் இறைவனா அல்லது ஒரு சாதாரண மனிதரா ?

பல முஸ்லீம் அறிஞர்கள் கிருஷ்ணர் இருந்ததை ஒப்பு கொள்கிறார்கள், ஆனால் அவரை ஒரு சாதாரண மனிதராக பார்க்கிறார்கள்.

கிருஷ்ணர்  தான் தனது சுய உடலிலேயே தோன்றுவதாக கீதையில்  கூறுகிறார். சாதாரண ஜீவாத்மா உடல்களை மாற்றுவதைப் போல், பகவான் தமது உடலை மாற்றுவதில்லை. கிருஷ்ணர் இப்பூவுலகில் தோன்றும் போது தனது சுயமான நித்திய உருவில், இரு கைகளுடன் புல்லாங்குழலை ஏந்தியவாறு தோன்றுகிறார்.

தனது திவ்யமான உருவில் தோன்றினாலும் அகிலத்தின் நாயகனாக இருந்தாலும், சாதாரண ஒரு ஜீவாத்மா பிறப்பதைப் போலவே அவரும் பிறப்பதாகத் தோன்றுகின்றது. பகவான் கிருஷ்ணரின் உடல் பௌதிக உடலைப் போன்று அழிவுறுவது இல்லை என்றபோதிலும், அவர் குழந்தைப் பருவத்திலிருந்து பால்ய பருவத்திற்கும், பால்ய பருவத்திலிருந்து இளமைப் பருவத்திற்கும் வளர்ந்ததைப் போலத் தோன்றுகிறது.

"நான் பிறப்பற்றவனாக இருந்தாலும், எனது திவ்யமான உடல் அழிவற்றதாக இருந்தாலும், உயிர்வாழிகள் அனைவருக்கும் நானே இறைவனாக இருந்தாலும், நான் எனது சுயமான திவ்ய உருவில் ஒவ்வொரு யுகத்திலும் தோன்றுகின்றேன்" - பகவான் கிருஷ்ணர்,  பகவத் கீதை - 4-6

 குருசேஷத்திரப் போரின்போது,உலகக் கணக்குப்படி அவர் மிக முதியவராக இருந்திருக்க வேண்டும். ஆனால் இருபது, இருபத்தைந்து வயது இளைஞனாகவே அவர் அப்போதும் தோன்றினார்.

எனவே, பகவான் கிருஷ்ணர் என்பவர் நம்மை போலுள்ள ஒரு சாதாரண ஜூவாத்ம அல்ல. அதாவது, அவர் சாதாரண மனிதர் அல்ல. அவரே எல்லோரின் இறைவன் (அல்லாஹ்).

'மானிட உருவில் நான் இந்த உலகில் வரும்போது மூடர்கள் ஏளனம் செய்கிறார்கள், எனது உன்னத சக்திகளையும், எனது ஆட்சியையும் அறியார்கள்.”  - பகவான் கிருஷ்ணர் , பகவத் கீதா- 9.11,

'சிறுமதி,அறிவீனர்களுக்கும் நான் தெரிவதில்லை, எனது அந்தரங்க சக்தியால் (உருவம் இல்லாத, மாயையால்) நான் மறைக்கபட்டிருக்கிரீன். எனவே பிறப்பும், இறப்பும் இல்லாத என்னை இந்த உலகு மக்கள் அறிவதில்லை" - பகவான் கிருஷ்ணர்,  பகவத் கீதா - 7.25,

எனவே, பக்தனைப் பொறுத்தவரையில், பகவானை நேரடியாகவும் உடனடியாகவும் அணுகுவதில் சிரமம் ஏதும் இல்லை, ஆனால் ஆன்மீகத் தன்னுணர்விற்காக அருவத் தன்மையை பின்பற்றுபவர்களது வழி மிகவும் சிரமமானதாகும்.

2. அவதாரம் என்பதும் 'நபி' என்பது ஒண்றா ?

ஜடவுலகில் தோன்றுவதற்காக, முழுமுதற் கடவுள் தனது திருநாட்டிலிருந்து கீழிறங்கி வருகிறார். அவ்வாறு அவர் தோன்றும்போது, 'அவதாரம் ' என்று அழைக்கப்படுகிறார். ஆன்மீக உலகில் நிரந்தரமாக உள்ள இந்த ரூபங்கள், பௌதிக்க படைப்பிற்குள் தோன்றும் போது 'அவதாரம் ' என்ற பெயரைப் பெறுகின்றனர்."

அவதாரம் என்பது இறைவன் அவரது உலகிலிருந்து இறங்கி வருவதை தான் அவதாரம்(இறங்கி வருதல்) என்கிறது. ஆனால், நபி / இறைத்தூதர் என்பது இறைவனால் சக்தி அளிக்கப்பட்ட ஒரு சாதாரண மனிதனை தான் சொல்கிறது. அதாவது, அவதாரம் என்பது இறைவனே இறங்கி வருவது, நபி /தூதர் என்பது அந்த இறைவனின் சக்திஅளிக்கப்பட்ட ஒரு ஜீவாத்மா வருவதாகும்.

இரண்டிற்கும் நேர் எதிர் வித்தியாசங்களை உடையது, தூதர் ஒரு நாளும் அவதாரமாகவோ/இறைவனாகவோ முடியாது. இப்படி வேத இலக்கியங்களில் இறைவனின் அவதாரமாக சொல்வது கிருஷ்ணர், ராமர், நரசிம்மர்,வராஹர்,..... இப்படி பல உள்ளன. வேத இலக்கியங்களில் இவர்களை எங்கேயும் தூதராகவோ/பிரதிநிதியாகவோ சொல்லவில்லை. இவர்களை வேதங்களில் இறைவனாக தான் சொல்கிறது.

ஆனால், இறைத்தூதர்கள் / முனிவர்கள் ஆகியோர்கள் இந்தியாவில் ராமானுஜர்,மதவாச்சாரியார்,பிரபுபாதர்,... . இது போல் முகம்மது நபி, இயேசு கிறிஸ்து, குருநானக், .... இப்படி பலர் உள்ளார்கள்.

வேத விதிகளை ஒருவன் முறையாகச் செயலாற்ற மறுக்கும்போது அஃது அதர்மமாகி விடுகிறது.

“எப்போதெல்லாம் எங்கெல்லாம் தர்மம் சீர்குலைந்து அதர்மம் ஆதிக்கம் செலுத்துகின்றதோ, பரத குலத் தோன்றலே, அப்போதெல்லாம் நான் தோன்றுகின்றேன்” - பகவான் கிருஷ்ணர்,  பகவத் கீதா - 4.7

“பக்தர்களைக் காத்து, துஷ்டர்களை அழித்து, தர்மத்தின் கொள்கைகளை மீண்டும் நிலைத்துவதற்காக, நானே யுகந்தோறும் தோன்றுகிறேன்” - பகவான் கிருஷ்ணர்,  பகவத் கீதா - 4.8

எனவே, பகவானின் ஒவ்வொரு குறிப்பிட்ட அவதாரத்திலும் குறிப்பிட்ட நோக்கம் உண்டு, இவையனைத்தும் சாஸ்திரங்களில் விளக்கப்பட்டுள்ளன. சாஸ்திரங்களில் குறிப்பிடப்படாத எவரையும் அவதாரமாக ஏற்றுக்கொள்ளக் கூடாது.

ஒவ்வொரு அவதாரத்திலும் அந்த குறிப்பிட்ட சந்தர்பத்திலுள்ள குறிப்பிட்ட மக்கள் புரிந்துகொள்ளக் கூடிய அளவிற்கு தர்மத்தைப் பற்றி அவர் உபதேசிக்கின்றார். ஆனால் நோக்கம் ஒன்றே—தர்ம நியதிக்குக் கீழ்ப்படிந்து இறையுணர்வுடன் வாழ்வதற்கு மக்களை வழிநடத்துதல் என்பதே அது. சில சமயங்களில் அவர் தாமே வருகிறார் (அவதாரம்), சில சமயங்களில் அவரால் அங்கீகரிக்கபட்ட பிரதிநிதியை (இறைத்தூதர் / நபி  )  அனுப்புகிறார்.

அசுரர்களை அவர் வதம் செய்கிறார் என்ற போதிலும், அவர்களை அழிப்பதற்காகத் தோன்ற வேண்டிய அவசியம் முழுமுதற் கடவுளுக்கு இல்லை. அசுரர்களை அழிக்கும் திறன்வாய்ந்த பிரதிநிதிகள் பலர் அவரிடம் உள்ளனர். லீலைகளைக் காண்பதற்குப் பேராவல் கொண்டிருந்த தூய பக்தர்களின் ஏக்கத்தைத் தீர்ப்பது என்னும் முக்கிய நோக்கத்திற்காக பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தோன்றுகிறார். எனவே, கிருஷ்ண அவதாரத்தின் முக்கியக் காரணம், அவரது களங்கமற்ற பக்தர்களைத் திருப்தி செய்வதேயாகும்.

இவர்களை பற்றிய வித்தியாசங்களை உண்மையில் பிற மதங்களை விட ஒரு இந்து அதிகமாகவே அறிந்து உள்ளான். எனவே, பகவான் கிருஷ்ணா அவதாரத்துக்கு, இறை தூதருக்கும் உள்ள வித்தியாசங்களை ஒரு இந்து வேத இலக்கியங்கள் மூலமாக எளிதாக அறிந்து கொள்கிறான்.

3. பகவானின் லீலைகளை தவறாக கருத்துரைப்பது

சிலர் கிருஷ்ணர் இருந்ததை ஒப்பு கொள்வர். ஆனால் அவரின் லீலைகள் அறிய முடியாதவர்களாக உள்ளார்கள். ஏனெனில், அவர்கள் கிருஷ்ணர் ஒரு உயர்ந்த மனிதராக பார்ப்பதால் தான் இப்படி நினைக்க வைக்கிறது. ஆனால், பகவான் அவரது சக்தியின் அடையாளமாகவே இவ்வாறு சாதாரண மனிதர் செய்யும் செயல்களுக்கு அப்பாற்பட்டு பற்பல லீலைகளை நடத்துகிறார்கள். அதாவது, பகவான் கிருஷ்ணருக்கு 16,108 மனைவிகள் உண்டு என்பதே பலருக்கு ஏற்க முடியாததாக உள்ளன. சிலர், கிருஷ்ணருக்கு 8 மனைவிகள் மட்டுமே உண்டு என்றும், 16,000 சீடர்கள் இருந்ததாகவும் கூட எந்தவித ஆதாரமும் இல்லாமல் சொல்வதை நாம் பார்க்கலாம். அந்த சீடர்களே அவர் மனைவியர்கள் போல் நேசித்து,பாதுகாத்தும்,உதவியும் வந்தவர்கள் என தங்கள் சொந்த கருத்துக்களை சொல்கிறார்கள். ஆனால், இதற்க்கு எந்தவித ஆதாரமும், வேத இலக்கியங்களில் இல்லை என்பதே உண்மை.

கிருஷ்ணர் 16,100 பெண்களை கல்யாணம் செய்தார். அதன் கதை. ...ஒரு சமயம்  பௌமசுரன்  என்கிற  அரசன், 16100 பெண்களை அபகரித்து தனது மாளிகையில் சிறை வைத்தான். கிருஷ்ணர் இவன் வதம் செய்து இந்த பெண்களை விடுவித்தார். ஆனால், இந்த 16100 பெண்கள் பல காலங்கள் சிறையில் இருந்ததால் அவர்கள் திரும்பவும் அவர்களுது வீட்டிற்கு செல்லமுடியாது, ஏனெனில் ஒரு பெண் ஒரு இரவு தனியே வெளியே தங்கினால், இந்த சமுதாயம் அவளை ஏற்காது. மேலும், இந்த பெண்கள் கிருஷ்ணரை கல்யாணம் செய்ய ஆசைப்பட்டார்கள். எனவே, பகவானே 16100 உருவமாக விரிவாகி, ஒரே சமயத்தில் எல்லோரையும் கல்யாணம் செய்தார். இது அவரது சக்திக்கு ஒரு அடையலாம். இதை மஹாபாரதம், அத்யாயம் 130, உத்தியோக பர்வ, அவரது 16,108 மனைவிகளின் கதையை விவரிக்கிறது, ஸ்ரீமத் பாகவதம் ( 9 வது மற்றும் 10 வது காண்டம் ) மற்றும் விஷ்ணு புராணம் ஆகியவற்றிலும் பகவானின் 16,108 மனைவிகளை பற்றி தெளிவாக கூறுகிறது

இது தவிர கிருஷ்ணர் 8 பேர்களை ஏற்கனவே கல்யாணம் செய்து கொண்டிருந்தார். இது பாகவத புராணம்,  காண்டம்-10, அத்தியாயம்-61 இல் கூறுகிறது. ஆக, கிருஷ்ணரும் மொத்தம் 16,108 மனைவிகள் இருகிறார்கள்.


அடுத்து, சிலர் சொல்வது கிருஷ்ணர் கோபியர்களுடன் காம லீலையில் ஈடுபட்டதாக சொல்வது.. இதை பற்றி உண்மையில் வேத இலக்கியம் என்ன சொல்கிறது என்பதை பார்க்கலாம்...
ரஸா நடனம் உண்மை கதை........(ஸ்ரீமத் பாகவதம் 10 காண்டம்- அத்தியாயம் 29 )
கிருஷ்ணர் பெண்களின் சேலையை ஒளித்துவைப்பதும், ரஸா லீலா நடனம் ஆடும் போதும் வ்ரிந்தாவனத்தில் இருக்கிற இந்த சமயத்தில் அவரது வயது வெறும் 8 தான். அதாவது, அவர் 10 வயதில் மதுராவிற்கு போய் விடுகிறார் . கிருஷ்ணரின் புல்லாங்குழல் இசையில் மயங்கியே கோபியர்கள் அவரை தேடி வந்தனர்.இதில் எந்தவித காமமும் இல்லை. அப்படி எந்தவித குறிப்பும் உண்மையில் இல்லை.

மேலும், கிருஷ்ணர் 'ஆப்தாகாம எனப்படுகிறார், அதாவது அவர் தன்னில் திருப்தியடைந்தவர் . அவர் காமவயப்பட்டிருந்தாலும் தம் இச்சையை பூர்த்தி செய்து கொள்ள அவர் பிறரின் உதவியை நாட தேவையில்லை. மேலும், இதில் 'யது - பதி' என்கிற சொல், யது குல அரசர்கள் நற்பண்புகளில் பெயர் வாங்கியவர்கள், எனவே கிருஷ்ணரும் அவ்வாறே இருந்தார் என்கிறார். அதாவது, கோபிகைகளாலும் இவரின் உணர்வுகளை தூண்டமுடியாதவராவார் என்கிறார் பரிட்சித்து மகாராஜ்.

ஸ்ரீமத் பாகவதத்தில் இந்த அத்யாய தலைப்பே 'கிருஷ்ணரின் புல்லாங்குழல் இசையில் கோபியர் மயக்கம்' என்பதே தான். மேலும், கிருஷ்ணருடன் நடனமாடிய கோபிகைகள் எல்லோரும் தம் ஜட உடலில் இருக்கவில்லை. அவர்கள் தங்கள் ஆன்மீக உடலில் கிருஷ்ணருடன் நடனமாடினர். ஆனால், அவர்களது உடல்கள், அவர்களது கணவர்களது பக்கத்திலேயே இருந்தன. அதாவது, கோபியர்கள் உடல்கள் அவர்களது கணவருடன் படுத்திருந்த பொது, கிருஷ்ணரின் அம்சங்களான கோபியர்களின் ஆன்மாக்கள் அவருடன் நடனமாடி கொண்டிருந்தன. உன்னத புருஷரும் முழுமையான ஆத்மாவுமான கிருஷ்ணர் கோபியர்கள் ஆன்மிக உடல்களுடன் நடனமாடி கொண்டிருந்தார்கள்.

எனவே, இந்த உலக நியதிப்படி கிருஷ்ணர் பிறரின் இந்த ஆன்மாவுடன் நடனமாடியதை எப்படி குற்றம் சாட்ட முடியும் ?

உன்னத ஆளுநர் சில வேளைகளில் தம் கட்டளைகளையும் மீறலாம். ஆனால் இது ஆளுநராகிய அவருக்கு மட்டுமே சாத்தியமேயன்றி, ஆளுநரின் சாதாரண உயிர்வாழி அல்லது வழக்கமல்லாத செயல்களை மற்றவர்கள் பின்பட்டக்கூடாது. ஆளுநரின் அதிகாரத்திற்கு உட்பட்டவர்கள் ஆள்பவர்கள் அல்ல. அவர்கள் கட்டுண்ட ஆத்மாக்கள். ஆகையால் அவர்கள் ஆளுநரை போல் செயல்பட முடியாது. ராசா லீலா நடனத்தை யாரும் நகல் செய்யவோ, அதை பற்றி என்னவும் கூடாது என்று சுகதேவர் எச்சரிக்கிறார். ஆனால், ஒருவன்  இப்படி முட்டாள் தனமாக இதை செய்தால், சிவனை போல் விஷத்தை குடிக்க முயந்தவன், மடிந்தது போல மடிவது நிச்சயம் என்கிறார்.

அடுத்து, கிருஷ்ணர் வெண்ணை திருடிய கதையை சிலர் இதை பால் என்பது இறைஅறிவை குறிப்பது என்றும், வெண்ணை என்பது ஆன்மீக பிறப்பின் உயிராகும். இறை அறிவை சிறுவயதிலேயே கிருஷ்ணர் பெற்று கொண்டார் என்று இதற்க்கு பொருள் கொள்ளவேண்டும் என்று புது புது சொந்த கற்பனைகளை சொல்கிறார்கள். ஆனால், இப்படிப்பட்ட எந்த கற்பனை தத்துவங்கள் எதுவுமே வேத இலக்கியங்களில் எங்குமே இல்லையே ! உண்மையில் அப்படி இருந்தால் இவைகள் சொல்லப்பட்டுருக்குமே ! எனவே, இவைகள் உண்மை அல்ல.

பகவான் கிருஷ்ணர் பால்,வெண்ணை திருடுவது என்பது சிறு குழந்தைகள் செய்யும் செயல்களே. ஆனாலும், இதை கிருஷ்ணர் செய்யும் பொது இந்த செயல்களை மக்கள் ரசிக்கவே செய்ததாக தான் பாகவத புராணம் சொல்கிறது. அதாவது, ஒவ்வொரு மக்களும் கிருஷ்ணர் நம் வீட்டில் திருடமாட்டார்களா என் ஏங்குவார்கள் ! என்று தான் சொல்கிறது. இதிலிருந்து மக்களும் இதையே ரசிக்கிறார்கள் என்பது அறியலாம்.

உண்மையில் இதன் அர்த்தம் பகவானுக்கும், பக்தர்களுக்கும் இடையே நடக்கும் அன்பு பரிமாட்டமே இவைகள். எனவே, இது அன்பு பரிமாட்டம். இதை தவிர வேறு எந்த அர்த்தமும் இல்லை. அவர் சிறுவயதில் ஆன்மிக அறிவை எங்கேயும் பெற அவசியம் இல்லை. அதாவது அவரே பரம புருஷ் பகவான் என்பதால் இவைகள் தேவையில்லை. அவரே முழு ஆன்மிக அறிவை எப்போதுமே உடையவராவார்.


அடுத்து, சிலர் சொல்வது பகவான் குளித்துக்கொண்டிருந்த பெண்களின் ஆடையை திருடிய சம்பவத்தினை சொல்வார்கள். அதாவது உலக மக்கள் உலக இன்பத்தில் மூழ்கியவர்களாகவும்,ஆன்மீக முறையில் நிர்வாணமாக இருந்தனர்  என்று புதிய விளக்கத்தினை அளிக்கிறார்கள். ஆனால் இது தவறு. இப்படி உள்ள தத்துவங்கள் வேத இலக்கியங்களில் எங்குமே இல்லை என்பதே உண்மை. இதன் உண்மை கருத்து வேறு..

கோபியர்களுக்கு பற்றற்ற நிலையை உணர்த்தவும், தன்னை சரணடைந்தாரை காக்கும் தன் இயல்பையும், தனது பக்தர்களுக்கு எந்நிலையிலும் இழுக்கு நேராவண்ணம் உதவவும் வாத்சல்ய குணத்தையும் உணர்த்தவே இந்த "கோபிகா வஸ்திராபரணம்" நடத்தினார்.

இந்த லீலையை செய்யும்போது கிருஷ்ணருக்கு வயது ஏழு. அதை பாலபருவம் என்போம். அப்பருவத்தில்  பாலியல் எண்ணமோ தோன்றுவது அசாத்தியம்.  கோபியர்கள் தன் அன்பினால் கண்ணனை  அடைய பாவை நோன்பு நோற்றனர். துர்க்கை உருவத்தை வைத்து காத்யாயனி விரதம் நோற்றனர்.

அந்நேரத்தில் ஒரு குழலோசை. உடனே அது வெளிவர அவர்களின் ஆடைகளை காணவில்லை. உடனே கோபியர் வேணுகாணம் வந்த திசையை நோக்க மரத்தில் அமர்ந்துகொண்டு ஆடைகளை மரக்கிளைகளை தொங்கவிட்டுகொண்டிருந்தான். உடனே கோபியர்கள் தன் உடலை மறைத்துகொண்டு கண்ணா! உன்னை நம்பியவருக்கு இதுவா கதி? உன்னை தவிற வேறொன்றுமஎ தேவையில்லை என்று உன்னை சரணடைந்தவரை இப்படியா நடத்துவாய் என்று கேட்கலானர்.

உடனே கிருஷ்ணர் கூறுகிறார்"காத்யாயினி விரதம் அனுஷ்டிக்க எண்ணிய நீங்கள் ஆடை ஏதுமின்றி நிர்வாணமாக நீராடலாமா? இது வருண பகவானின் கோபத்திற்குள்ளாகும் செயல் என்று தெரியாதா என்று கேட்டான். கோபியர்கள் தவறை உணர்ந்து மெளனித்தனர். மேலும் கூறலானான் கண்ணன் "என்னை தவிற வேறு ஏதும் முக்கியமில்லை என்று கூறிய நீங்கள் ஆடையின்றி வெளியே வருவது எப்படி? " என்கிறீர்களே. எனில் உங்களுக்கு தேகாபிமானம் தானே முக்கியம். உலகப்பற்றையும் உடல்பற்றையும் விட்டவர்கள்தானே என்னை அடையமுடியும். என்னை தவிர்ந்த எந்த பற்றுகொண்டாலும் அது மோக்ஷ தடை என்றான் கண்ணன்.

அவனது உபதேசத்தை கேட்ட கோபியர் தவறை உணர்ந்து தேகாபிமானத்தை விட்டு கிருஷ்ண பிரேமையில் ஆழ்ந்து இரு கரங்களையும் தூக்கி அவனை துதிபாடலாயினர். கலங்கமற்றதும், அற்ப ஆசை அற்றதுமான கோபியர் பக்தியில் குளிர்ந்த கண்ணன் அவர்களுக்கு ஆடையை அளித்து மறைந்தான். இதுவே வஸ்திராபரண கதை.

கீதையில் கூறப்பட்டது 'தம் செயல்களில் விளைவுகளை கிருஷ்ணர் அனுபவிப்பதுமில்லை, அவைகளால் அவர் துன்புறுவதுமில்லை' என்கிறார். எனவே அதர்மமாக நடப்பது அவருக்கு சாத்தியமல்ல, அவர் தர்மங்களையும், செயல்க்ளையும் கடந்தவர். ஜட இயற்கையின் குணங்கள் அவரை தொடுவதில்லை. எல்லா உயிர்களுக்கும் அவரே ஆளுநர். எனவே தர்மம், அதர்மம் என்பனவெல்லாம் அவருக்கு பொருந்தாது. ஒவ்வொருவரின் உடலிலும் கிருஷ்ணர் பரமாத்மாவாக இருக்கிறார். எனவே, அவர் ஒருவரை பார்த்தாலோ,தழிவி கொண்டாலோ அது முறைதவறியதாகாது.

எனவே, இந்த கதை உணர்த்துவது,  கோபியர்களுக்கு பற்றற்ற நிலையை உணர்த்தவும், தன்னை சரணடைந்தாரை காக்கும் தன் இயல்பையும், தனது பக்தர்களுக்கு எந்நிலையிலும் இழுக்கு நேராவண்ணம் உதவவும் வாத்சல்ய குணத்தையும் உணர்த்தவே இந்த "கோபிகா வஸ்திராபரணம்" நடத்தினார்.

இப்படி பகவான் கிருஷ்ணரை பற்றிய எல்லாமே வேத இலக்கியங்களை ஒருவன் சரியாக படித்தாலே அதன் உண்மை கருத்துக்களை அறிந்து கொள்ளலாம். ஆனால், சிலர் இந்த கதைகளை படித்துவிட்டு மனம்போன போக்கில் தங்களது கற்பனை கதைகளை எந்தவித ஆதாரமும் இல்லாமல் சொல்வதை பார்க்கலாம். இது அவர்களின் அறியாமையும், அறிவின்மையையும் தான் காட்டுகிறது.



இறைஉணர்வும், ஓரிறை கொள்கையும் வேத இலக்கியத்தில் சொல்கிறதா ?

சிலர் வேத இலக்கியங்களை சரியாக படிக்காமல் இவைகள் இறைவனுக்கு உருவம் இல்லை என சொல்கிறார்கள். ஆனால், இது தவறு. வேதங்களில் இறைவனின் இரண்டு வித தன்மைகள் (உருவம், உருவமில்லா)  பற்றி தெளிவாக கூறுகிறது.

1. நிர்குணா  பிரம்மம் (உருவமற்ற பிரம்மன்) -
குணங்கள் , சிறப்பு பண்புகள்  இல்லாமல்,  உருவமற்ற, மாற்ற முடியாத, நித்தியமானது  என்று நிர்குணா கடவுளை சொல்கிறது. இதை சதாஷிவ, பரமேஸ்வர, பரமாத்மா  என்கிறார்கள்.

2. சகுண பிரம்மம் (உருவமுள்ள பகவான்)
 இது குணங்கள், முழுமையான தனிப்பட்ட பண்புகளின் அம்சம் வந்தது.. இந்த சகுண பிரம்மனே  உருவாக்குதல், பராமரிப்பு, அழிவு என்று பண்புகளுடன் கூறினார்கள்.

அதனால்  கடவுள்  நிர்குணா பிரம்மம் (உருவமற்ற)  நிலையில் அவர்  குணங்கள்,  உருவம், பண்புகள்  இல்லாமல்  இருக்கிறார். கடவுள் சகுன (உருவமுள்ள) நிலையில் குணம்,வடிவம்,பண்புகள் உடையவராக இருக்கிறார். அதாவது இந்த இரண்டு நிலைகளும் இறைவனின் அம்சம் தான்.

வேத இலக்கியங்களில் இறைவனின் நிலைகளை சொல்வது ....

“இறைவன் (பிரம்மன்) என்பது இரண்டு நிலைகளில் அறியப்படுகிறது, அது உருவமில்லா தன்மை (asambuta) மற்றும்  உருவமுள்ள தன்மை(sakar, sambhuta)”
- யஜுர் வேத  2.3.1 (ப்ரஹதாரண்ய உபநிஷத்)

அதாவது,  ஒரே  இறைவனின் இரண்டு வித  அம்சங்களே  இந்த  நிர்குண,  சகுன பிரமன்  ஆகியவை. தனது பக்தர்ளுக்கும் மட்டுமே அவர் உருவமுள்ள சகுண பிரம்மனாக காட்சியளிக்கிறார். ஆனால் அறிவற்ற அபக்தர்களுக்கு அவர் தனது அந்தரங்க சக்தியால் (ப்ரஹ்ம ஜோதி எனும் (இதுவே நிர்குண நிலை) திரையினால்  மறைக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீமத் பாகவத்தில் (1.8.19), யோகமாயை எனும் திரையினால் பகவான் மறைக்கப்பட்டிருப்பதாகவும், சாதாரண மக்கள் அவரைப் புரிந்து கொள்ள முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது.

இது வேத சாஸ்திரம்- ஈஷோபநிஷத்திலும் (மந்திரம் 15) உறுதி செய்யப்பட்டுள்ளது,

ஹிரண்மயேன பாத்ரேண ஸத்யஸ்யாபிஹிதம் முகம்,
தத் தவம் பூஷன்ன-அபாவ்ருணு ஸத்ய-தர்மாய த்ருஷ்டயே

“எம்பெருமானே, அகிலங்களை எல்லாம் பராமரிப்பவர் நீரே, உமக்கு பக்தித் தொண்டு ஆற்றுவதே அறக் கொள்கைகளில் தலைசிறந்தாகும். எனவே, என்னையும் பராமரிக்குமாறு உம்மிடம் வேண்டுகிறேன். உமது திவ்யமான ரூபம், யோக மாயையினால் மறைக்கப்பட்டுள்ளது. பிரம்மஜோதியே அந்தரங்க சக்தியின் திரையாகும். உமது ஸச்-சித்-ஆனந்த-விக்ரஹத்தை (நித்தியமான அறிவு நிறைந்த ஆனந்த ரூபத்தினை) காணவிடாமல் என்னைத் தடுக்கும் இந்தப் பேரொளியினை தயவு செய்து விலக்குவீராக.”

ஆனந்தமும் அறிவும் நிறைந்த பரம புருஷ பகவானின் திவ்ய ரூபம், அவரது அந்தரங்க சக்தியான பிரம்மஜோதியினால் கவரப்பட்டுள்ளதால், அறிவில் குன்றியவர்களான அருவவாதிகள் பரமனைக் காண முடியாது.

பகவான் கிருஷ்ணர் பகவத் கீதையில் தான் மறைக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்....

“சிற்றறிவுடையோருக்கும் முட்டாளுக்கும் நான் ஒருபோதும் தோன்றுவதில்லை. நான் எனது (ப்ரம்ம ஜோதி எனும்)  அந்தரங்க சக்தியால் மறைக்கப்பட்டுளேன், எனவே நான் பிறப்பற்றவன், அழிவற்றவன் என்பதை இவர்கள் அறிவதில்லை” - பகவான் கிருஷ்ணர்,  பகவத் கீதா  7-25

அதாவது, பகவான் கிருஷ்ணர் உருவமே - சகுன பிரம்மன் நிலைஆகும். அவரை காணவிடாமல் தடுக்கும் ப்ரஹம்ம ஜோதியே - நிர்குண பிரம்மன் நிலை ஆகும்.

பரம புருஷ பகவானை அவரது ரூபத்தின் மூலம் கோவிலில் வழிபடுவது சிலையை வழிபடுவதாகாது. ஆலயத்திற்குள் விக்ரஹத்தை வழிபடுதல் ஸகுண வழிபாடாகும், ஏனெனில், பகவான் பௌதிக குணங்களின் மூலம் அங்கே தோற்றமளிக்கின்றார். கல், மரம் அல்லது ஓவியம் போன்ற பௌதிக குணங்களின் மூலம் தோற்றமளிக்கும் போதிலும், பகவானது ரூபம் உண்மையில் பொளதிகமல்ல. இது பரம புருஷரின் பூரண தன்மையாகும்.

பண்படாத உதாரணம் ஒன்று இங்கு கொடுக்கப்படலாம். தெருவிலே நாம் சில தபால் பெட்டிகளை பார்க்கிறோம். நமது கடிதங்களை அந்தப் பெட்டிகளில் இட்டால், அவை செல்ல வேண்டிய இடத்திற்கு எவ்விதமான சிரமமும் இன்றி இயற்கையாகவே செல்கின்றன. ஆனால் ஏதாவதோரு பழைய பெட்டியிலோ, அஞ்சலகத்தால் வைக்கப்படாத ஒரு போலிப் பெட்டியிலோ நமது கடிதத்தை இட்டால், அது போய் சேராது. அது போலவே அர்சா-விக்ரஹம் இறைவனது அதிகாரப்பூர்வமான தோற்றமாகும். இந்த அர்சா-விக்ரஹம் பரம புருஷருடைய ஓர் அவதாரம். இவ்வுருவத்தின் மூலமாக இறைவன் சேவையை ஏற்றுக்கொள்கிறார். அவர் சர்வ சக்திமான், அனைத்து சக்திகளும் உடையவர்;


கீதையில் ஓர் இறை கொள்கை சொல்கிறதா ?

சிலர் கீதையில் பகவான் கிருஷ்ணர் ஓர் இறை கொள்கையை தான் சொல்வதாக சொல்கிறார்கள். அவர்கள் சொல்லும் வசனங்கள் வைத்து இதை பார்க்கலாம் ...

"நானே இலக்கு, காப்பவன், தலைவன், சாட்சி, வசிப்பிடம், அடைக்கலம், மற்றும் மிக நெருங்கிய நண்பன். நானே படைப்பு, அழிவு, எல்லாவற்றின் ஆதாரம், தங்குமிடம், மற்றும் நித்தியமான விதையும் ஆவேன்." - கீதா 9-18

இதில் பகவான் கிருஷ்ணர் நானே எல்லாம் என்று தான் கூறுகிறார்.

இதையே தான் குரானில் இறைவன் கூறுவதாக சொல்கிறார் ..
'இறைவனே முழு  உலகையும்  படைத்தது...." - 53:43
'வனங்கள்,பூமி ஆகியவற்றின் ஆட்சி அவனுக்கே உரித்தாகும், இறைவன் (அல்லாஹ்) எல்லாவற்றிற்கும் சாட்சியாவான்" 85:10
'இறைவன் (அல்லாஹ்) நம்பிக்கையாளர்களின் நண்பனாவான்" 2:268

இப்படி பல குரான் வசனங்களில் சொல்கிறது. ஆனால், இதையே பகவான் கிருஷ்ணர் கீதையில் நானே இதை செய்தேன் என்கிறார்.

உலகில் வந்த பற்பல இறைத்தூதர்கள் ஓரிறை கொள்கையையே வலியுறுத்தினார்கள். ஒரே இறைவனை வணங்க விடும் என்றும், இணை வைக்க கூடாது எனவும் அவர்களின் போதனைகளாக இருந்தது

கிருஷ்ணர் கீதையில் ஓர் இறை கொள்கை கூறுவதாக சொல்லும் வசனம்- 13-29 ..
"எங்கும் ஒப்ப நிலைத்திருக்கும் ஈசனை காண்பேன், தன்னை தானே அழித்து கொல்கிறானில்லை, அதனால் அவன் பரகத்தியடைகிறான்"

என்று கூறுகிறார்கள். ஆனால் இந்த வசனம் மொழிபெயர்ப்பே தவறு.இதன் உண்மை மொழிபெயர்ப்பு இதோ...

'பரமாத்மா, எல்லா இடங்களிலும், எல்லா உயிர்வாழியிலும் சமமாக வீற்றிருப்பதைக் காண்பவன், தனது மனதால் தன்னை இழிவுபடுத்திக் கொள்வதில்லை. இவ்வாறு அவன் தெய்வீக இலக்கை அணுகுகின்றான்"

இதில் பகவான் எல்லோருடைய இதயத்திலும் உள்ள அந்த பரமாத்மாவை காண்பவன் உயர்வடைவான் என்கிறார்.
இதை போல் குரானிலும் சொல்கிறது, இறைவன் (பரமாத்மா) எல்லா உயிர்களின் இதயத்திலும் இருப்பதாக சொல்கிறது. இதோ ..
"மேலும், நிச்சயமாக நாம் மனிதனை படைத்தோம். அவன் மனம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும் நான் அறிவேன். மேலும், (அவன்) பிடரி(யிலுள்ள உயிர் ) நரம்பைவிட நான் அவனுக்கு மிக சமீபமாக இருக்கிறேன்" என்று கூறுகிறார்” – குரான்   50-16
இப்படி இறைவன் (பரமாத்மா) ரூபத்தில் எல்லா உயிர்வளிகளோடே இருப்பதாக குரானில் பல இடங்களில் சொல்கிறது .. குரான் 34.50, குரான் - 57.4, குரான் - 56.85, குரான் - 57.6
மேலும், இறைவன் (அல்லாஹ் - பரமாத்மா ) எல்லா உயிர்களின் இதயத்துகருகில் இருப்பதாக குரான் வசனம் - 8-24 இல் கூறுகிறார்.

அடுத்த வசனம்... கீதா 13-33 சொல்கிறார்கள் ...
'ஒரு சூரியன் எப்படி உலகனைத்தையும் ஒளியுற செய்கிறதோ, அப்படி அர்ஜுனன் ! ப்ரபஞ்சமனைத்தையும் பரமாத்மா பிரஹாஸிகிறான்" என்று கோருகிறார்கள்.

இந்த வசனமும் தவறான மொழிபெயர்ப்பே. இதில் பரமாத்மா என்கிற வார்த்தை வரவில்லை. ஆத்மாவை தான் சொல்கிறது. இதன் உண்மை மொழிபெயர்ப்பு இதோ..

யதா ஸர்வ-கதம் ஸெளக்ஷ்ம்யாத் ஆகாஷம் நோபலிப்யதே
ஸர்வத்ராவஸ்திதோ தேஹே ததாத்மா நோபலிப்யதே

வார்த்தை அர்த்தம்:
யதா — போல; ஸர்வ-கதம் — எங்கும் பரவியிருப்பதை; ஸெளக்ஷ்ம்யாத் — நுண்ணியமானதால்; ஆகாஷம் — ஆகாயம்; ந — என்றுமில்லை; உபலிப்யதே — கலப்பது; ஸர்வத்ர — எங்கும்; அவஸ்தித: — நிலைபெற்று; தேஹே — உடலில்; ததா — அதுபோல; ஆத்மா — ஆத்மா; ந — என்றும்; உபலிப்யதே — கலப்பது.

மொழிபெயர்ப்பு:
"எங்கும் நிறைந்திருந்தாலும் தனது நுண்ணிய இயற்கையினால், ஆகாயம் எதனுடனும் கலக்காமல் இருக்கின்றது. அதுபோல, பிரம்மனின் பார்வையில் நிலைபெற்றுள்ள ஆத்மா, உடலில் அமைந்திருந்தாலும் உடலுடன் கலப்பதில்லை"

இதில் ஆத்மா (உயிர்)  நமது உடலில் இருந்தாலும் அது நமது உடலுடன் கலந்து விடுவதில்லை, அதற்க்கு ஆகாயத்தை உதாரணமாக சொல்கிறார். எனவே, இந்த வசனமும் பரமாத்மாவை சொல்லவில்லை, ஆத்மாவாகிய (நம்மை தான்) சொல்கிறது.

அடுத்த வசனம்... கீதா 18-46 சொல்கிறார்கள் ...

"யாரிடத்திலிருந்து உயிர்கள் உற்பத்தியாயினவோ, யாரால் இவ்வையகமெல்லாம் வியாபிக்கப்பட்டுள்ளதோ அந்த ஈஸ்வரனை சுயகர்மத்தால் வணங்கி மனிதன் மேன்மை எய்துகிறான்"

இந்த வசனமும் தவறான மொழிபெயர்ப்பே. இதன் உண்மை மொழிபெயர்ப்பு இதோ..

யத: ப்ரவ்ருத்திர் பூதானாம் யேன ஸர்வம் இதம் ததம்
ஸ்வ-கர்மணா தம் அப்யர்ச்ய ஸித்திம் விந்ததி மானவ:
"யாரிடமிருந்து எல்லா உயிர்வாழிகளும் தோன்றினரோ, யார் எல்லா இடங்களிலும் பரவியுள்ளாரோ, அந்த இறைவனை தனது சொந்த கடமையைச் செய்வதால் வழிபட்டு மனிதன் பக்குவத்தை அடைய முடியும்"

ஒரு குறிப்பிட்ட தொழிலில் தான் ஈடுபடுத்தப்பட்டுள்ளேன் என்று ஒவ்வொருவரும் எண்ண வேண்டும். மேலும், அவன் ஈடுபடுத்தப்பட்டுள்ள தொழிலின் பலனைக் கொண்டு முழுமுதற் கடவுள் ஸ்ரீ கிருஷ்ணரை வழிபட வேண்டும். பூரணமான கிருஷ்ண உணர்வில் இவ்வாறு ஒருவன் எப்போதும் எண்ணினால், பகவானின் கருணையால் அவன் எல்லாவற்றையும் அறிந்தவனாகிறான். இதுவே வாழ்வின் பக்கும். தேஷாம் அஹம் ஸமுத்ததர்தா என்ற பகவத் கீதையில் (12.7) பகவான் கூறுகின்றார். அத்தகு பக்தனை விடுவிப்பதற்கான பொறுப்பினை பரம புருஷர் தாமே ஏற்றுக் கொள்கிறார். இதுவே வாழ்வின் மிகவுயர்ந்த பக்குவமாகும். ஒருவன் எந்தத் தொழிலில் ஈடுபட்டிருந்தாலும், அவன் பரம புருஷருக்குத் தொண்டு செய்தால் மிகவுயர்ந்த பக்குவத்தை அடைவான். இதுவே இதன் உண்மையான அர்த்தம்.

அடுத்த வசனம்... கீதா 18-62 சொல்கிறார்கள் ...
"அர்ஜுனா, எல்லா பாங்கிலும் அவனையே தஞ்சமடை, அவனருளால் மேலான சாந்தியும் நிலைத்துள்ள வீடுபேறும் பெறுவாய்"

இந்த வசனத்தின் உண்மை அர்த்தம் இதோ...
தம் ஏவ ஷரணம் கச்ச ஸர்வ-பா வேன பா ரத
தத் ப்ரஸாதாத் பராம் ஷாந்திம் ஸ்தானம் ப்ராப்ஸ்யஸி ஷாஷ்வதம்

வார்த்தை அர்த்தம் :
தம் — அவரிடம்; ஏவ — நிச்சயமாக; ஷரணம் கச்ச — சரணடைவாய்; ஸர்வ-பாவேன — எல்லாவிதத்திலும்; பாரத — பரதனின் மகனே; தத்-ப்ரஸாதாத் — அவரது கருணையால்; பராம் — தெய்வீகமான; ஷாந்திம் — அமைதி; ஸ்தானம் — இருப்பிடம்; ப்ராப்ஸ்யஸி — நீ அடைவாய்; ஷாஷ்வதம் — நித்தியமான.

மொழிபெயர்ப்பு :
"பரத வழித் தோன்றலே, அவரிடம் முழுமையாக சரணடைவாயாக. அவரது கருணையால் தெய்வீக அமைதியையும், உன்னதமான நித்திய இடத்தையும் நீ அடைவாய்"

இதில் ஒவ்வொருவருடைய இதயத்திலும் வீற்றிருக்கும் இறைவனான  பரமாத்மாவிடம்  உயிர்வாழி சரணடைய வேண்டும், அஃது அவனை இந்த ஜட வாழ்வின் எல்லாவித துன்பங்களிலிருந்தும் விடுவிக்கும்.

ஸர்வஸ்ய சாஹம் ஹ்ருதி ஸன்னிவிஷ்ட: —பகவான் எல்லாருடைய இதயத்திலும் வீற்றுள்ளார் என்பது பகவத் கீதையின் பதினைந்தாம் அத்தியாத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே, உள்ளிருக்கும் பரமாத்மாவிடம் சரணடைய வேண்டும் என்று இங்கு பரிந்துரைக்கப்படுவதன் பொருள், புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் ஸ்ரீ கிருஷ்ணரிடம் சரணடைய வேண்டும் என்பதே.

மேலும், இறைவன் (அல்லாஹ் - பரமாத்மா ) எல்லா உயிர்களின் இதயத்துகருகில் இருப்பதாக குரான் வசனம் - 8-24 இல் கூறுகிறார்.

அர்ஜுனன் ஏற்கனவே கிருஷ்ணரை முழுமுதற் கடவுளாக ஏற்றுக் கொண்டுவிட்டான். பத்தாம் அத்தியாத்தில், அர்ஜுனன் அவரை பரபிரம்மனாக (புருஷோத்தமரான முழுமுதற் கடவுளாக), பரந்தாமராக (எல்லா உயிர்வாழிகளின் பரம இருப்பிடமாக) ஏற்றுக் கொண்டான். இதனை அவன் தனது தனிப்பட்ட அனுபவத்தினால் மட்டுமின்றி, நாரதர், அஸிதர், தேவலர், வியாசர் போன்ற அங்கீகரிக்கப்பட்ட சாதுக்களையும் அடிப்படையாகக் கொண்டு ஏற்றுக் கொண்டான்.

இப்படிப்பட்ட வசனங்களை சிலர் தவறாக அர்த்தங்களை படித்துவிட்டு இறைவனுக்கு உருவமில்லை என வாதிடுவது அறியாமையை காட்டுகிறது. மேலும், பகவத் கீதையில் கிருஷ்ணர் நேரடியாகவே பல இடங்களில் நானே எல்லாவற்றின் மூலம்,எல்லாம் எண்ணையே சார்ந்துள்ளது, நானே எல்லோரின் இறைவன் என் பற்பல இடங்களில் சொல்கிறார்.

"ஜட, ஆன்மீக உலகங்கள் அனைத்திற்கும் மூலம் நானே. எல்லாம் என்னிடமிருந்தே தோன்றுகின்றன. இதனை நன்றாக அறிந்த அறிஞர்கள், எனது பக்தித் தொண்டில் ஈடுபட்டு, இதயப்பூர்வமாக என்னை வழிபடுகின்றனர்." - பகவான் கிருஷ்ணர் - கீதா 10-8

"அர்ஜுனன் கூறினான்: நீரே பரபிரம்மன், உன்னத இருப்பிடம், மிகவும் தூய்மையானவர், பரம சத்தியம், நீரே நித்தியமானவர், திவ்யமானவர், ஆதி தேவர், பிறப்பற்றவர், மிகப் பெரியவர். உம்மைப் பற்றிய இந்த உண்மையினை, நாரதர், அஸிதர், தேவலர், வியாசர் போன்ற மிகச்சிறந்த ரிஷிகளும் உறுதி செய்துள்ளனர், இப்பொழுது நீரே இதனை எனக்கு அறிவித்துள்ளீர்.." - பகவான் கிருஷ்ணர் - கீதா 10-12

"எவனொருவன், என்னைப் பிறப்பற்றவனாகவும், ஆரம்பம் அற்றவனாகவும், எல்லா உலகங்களின் இறைவனாகவும் அறிகின்றானோ, மனிதர்களிடையே குழப்பமற்றவனாக அவன் மட்டுமே, எல்லா பாவங்களிலிருந்தும் விடுதலை பெறுகிறான்.." - பகவான் கிருஷ்ணர் - கீதா 10-3

"உத்தம புருஷரே, அனைத்திற்கும் மூலமே, அனைவருக்கும் இறைவனே, தேவர்களின் தேவரே, அகிலத்தின் இறைவனே, உண்மையில், உமது சுய அந்தரங்க சக்தியின் மூலம் நீரே உம்மை அறிவீர்." -  கீதா 10-10

இப்படி பகவான் கிருஷ்ணரே முழுமுதற் கடவுள் என பகவத் கீதை பல்வேறு இடங்களில் நிறைய வசனங்களில் பகவத் கீதை முழுவதுமே சொல்கிறது. அப்படி இருக்க கீதை ஓர் இறை கொள்கையை தான் சொல்கிறது என்பது முட்டாள் தனமானது.

ஆனாலும்,, இந்த ஓர் இறை கொள்கையான பகவானின் ஆன்மிக ஜோதியை வணங்குபவர்களை பற்றிய குறிப்பும் கீதையில் 12 அத்தியாயத்தில் அர்ஜுனன் இதை பகவானிடம் கேட்கிறார். இப்படி உங்களது அருவ தன்மையை வழிபடுபவர்கள் எங்கே செல்வார்கள் என்கிற கேள்விக்கு பகவான் இப்படி கூறுகிறார்..

"ஆனால், தோற்றமளிக்காததும், புலனுணர்விற்கு அப்பாற்பட்டு இருப்பதும், எங்கும் நிறைந்ததும், சிந்தனைக்கு எட்டாததும், மாற்றமில்லாததும், நிலையானதும், அசைவற்றதுமான பூரண உண்மையின் அருவத் தன்மையை முழுமையாக வழிபடுபவர்கள், பல்வேறு புலன்களைக் கட்டுப்படுத்தி, எல்லோரிடமும் சமநோக்குடன் பழகி, அனைவருக்கும் நன்மை தரும் செயல்களில் ஈடுபட்டு, இறுதியில் என்னை அடைகின்றனர்" - பகவான் கிருஷ்ணர் - கீதா 12-4

எனவே, இப்படி பகவான் கிருஷ்ணரை அருவ தன்மையுடன் வழிபடுபவர்களுக்கு, இறுதியில் அவரையே அடைவதாகவும், ஆனால் இந்த பாதை மிகவும் கடினமானது என்பதை அடுத்த வசனத்தில் சொல்கிறார்..

"எவரது மனம், பரமனின் தோன்றாத அருவத்தன்மையிடம் பற்றுதல் கொண்டுள்ளதோ, அவர்களது வளர்ச்சி மிகவும் கடினமானதாகும். அவ்வழியில் முன்னேற்றம் காண்பது உடலை உடையவர்களுக்கு எப்போதும் சிரமமானதாகும்" - பகவான் கிருஷ்ணர் - கீதா 12-5

"மேலும், மரணமற்றதும், அழிவற்றதும், நித்தியமானதும், இறுதி இன்பத்தின் தர்மமுமான அருவ பிரம்மனின் ஆதாரம் நானே" - பகவான் கிருஷ்ணர் - கீதா 14-27

இதில் பகவான் கிருஷ்ணர் தன்னிடமிருந்தே அருவ பிரம்மன் (ஜோதி-உருவமில்லா தன்மை) வருவதாக சொல்கிறார். இதே தான் குரானிலும் (24:35) இறைவன் தன்னிடமிருந்த ஒளி வருவதாக சொல்கிறது.

ஆனால், பகவான் கிருஷ்ணரை முழுமுதற் கடவுளான உருவ வழிபாட்டை செய்யும் பக்தர்களை தானே அவர்களை காப்பாற்றுவதாக சொல்கிறார்..

"ஆனால், தங்களது எல்லா செயல்களையும் எனக்காக துறந்து பிறழாமல் என் மீது பக்தி செலுத்தி, எனது பக்தித் தொண்டில் ஈடுபட்டு, எப்போதும் என்மீது தியானம் செய்து, தங்களது மனங்களை என்னில் நிறுத்தி, எவரெல்லாம் என்னை வழிபடுகிறார்களோ, பிருதாவின் மகனே, அவர்களை பிறப்பு, இறப்பு என்னும் கடலிலிருந்து உடனடியாக காப்பாற்றுபவனாக நான் இருக்கிறேன்." - கீதா 12-6,7

எனவே, பக்தனைப் பொறுத்தவரையில், பகவானை நேரடியாகவும் உடனடியாகவும் அணுகுவதில் சிரமம் ஏதும் இல்லை, ஆனால் ஆன்மீகத் தன்னுணர்விற்காக அருவத் தன்மையை பின்பற்றுபவர்களது வழி மிகவும் சிரமமானதாகும். அத்தகையோர் வேத இலக்கியங்களின் மூலமாக பரமனின் தோன்றாத தன்மையினைப் புரிந்துகொள்ள வேண்டும், வேத மொழியினைக் கற்று எல்லையற்ற உணர்வுகளைப் புரிந்துகொள்ள வேண்டும்—மேலும், இவையனைத்தையும் உணரவும் வேண்டும். இது சாதாரண மனிதனுக்கு அவ்வளவு சுலபமானது அல்ல.

மாறாக, கிருஷ்ண உணர்வில் இருப்பவன், அங்கீகரிக்கப்பட்ட ஆன்மீக குருவின் வழிகாட்டுதலைப் பின்பற்றுதல், விக்ரஹத்தினை நெறிப்படி வழிபடுதல், இறைவனது பெருமைகளைக் கேட்டல், இறைவனுக்குப் படைக்கப்பட்ட உணவுப் பொருள்களை பிரசாதமாக உண்ணுதல் போன்ற எளிமையான வழிமுறைகளின் மூலம் பக்தித் தொண்டில் ஈடுபட்டு பரம புருஷ பகவானை மிகவும் சுலபமாக உணர்ந்து கொள்கிறான்.

அருவவாதிகள், இறுதியில் பூரண உண்மையை உணராமல் போகலாம் என்ற அபாயம் இருக்கும்போதிலும், மிகவும் கடினமான பாதையை அவசியமின்றி பின்பற்றுகின்றனர் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. ஆனால் பக்தனோ, எவ்வித அபயமோ, சிக்கலோ, கடினமோ இன்றி முழுமுதற் கடவுளை நேரடியாக அணுகுகின்றான்


பகவான் கிருஷ்ணரும், இறை தூதர்கள் வருகையும்

பகவான் கிருஷ்ணரை பற்றி சொல்லும்போதெல்லாம் பிரபலமான இந்த சுலோகம் எல்லோருக்கும் நினைவில் வருகிறது. ஆனாலும், சிலர் இந்த சுலோகத்திற்கும்  தனது சொந்த கற்பனை கருத்துக்களை எந்தவித ஆதாரமும் இல்லாமல் கூறுகிறார்கள். இதை நாம் பார்க்கலாம்...

யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர் பவதி பாரத
அப்யுத்தானம் அதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்-யஹம்

"எப்போதெல்லாம் எங்கெல்லாம் தர்மம் சீர்குலைந்து அதர்மம் ஆதிக்கம் செலுத்துகின்றதோ, பரத குலத் தோன்றலே, அப்போதெல்லாம் நான் தோன்றுகின்றேன்" - பகவான் கிருஷ்ணர் - கீதா 4-7

பரித்ராணாய ஸாதூனாம் வினாஷாய ச துஷ்க்ருதாம்
தர்ம-ஸம்ஸதாபனார்தாய ஸம்பவாமி யுகே யுகே

"பக்தர்களைக் காத்து, துஷ்டர்களை அழித்து, தர்மத்தின் கொள்கைகளை மீண்டும் நிலைத்துவதற்காக, நானே யுகந்தோறும் தோன்றுகிறேன்" - 4.8

இதில் தர்மம் மறைந்து அதர்மம் தலைதூக்கும் பொது பகவான் கிருஷ்ணர் தானே நேரடியாக அவதாரம்(இறங்கி வருவது) வருகிறதா சொல்கிறார். ஆனால், சிலர் இப்படிப்பட்ட சில கேள்வியை நம்மிடம் கேட்பதுண்டு "கிருஷ்ணர் வந்து பல ஆயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த காலகட்டங்களில் தர்மம் அழிந்து அதர்மம் மேலோங்கியிருந்த நாட்கள் இருந்தன. எனினும், கிருஷ்ணர் வரவில்லை"  என்று கூறுகிறார்கள்.

எனவே, அவள்கள் இதற்க்கு வேறு ஒரு கற்பனையான தங்களது சொந்த கருத்தை சொல்வது 'தர்மம் மறைந்து தீய நடத்தைகள் தலையெடுக்கும் போதெல்லாம் அவதார புருஷர்கள் (இதுவே தவறானது) இறை தூதர்கள் - நபிமார்கள் வருவார்கள்' என்று மேலே உள்ள ச்லோகத்திற்க்கு அர்த்தம் கொள்ளவேண்டும் என கருத்துரைக்கிறார்கள்.இதற்க்கு இவர்கள் சொல்வது (பகவத் கீதை-சுவாமி சித்பவானந்தர் வியாக்கியானம் - பக்கம் 242) இப்படி கூறுவதாக சொல்கிறார்கள். இவைகள் முற்றிலும் தவறானவை. ஏனெனில் இப்படி சொல்பவர்கள் மயவாதிகள் என்கிற கடவுளை ஏற்க மறுக்கும் கொள்கைகளை உடையவர்கள் அவர்கள்.

ஆனால், இதற்க்கு எந்தவித அடிப்படை ஆதாரம் கீதையிலோ அல்லது பிற வேத இலக்கியங்களிலோ இல்லையே ! இது இவர்களது சொந்த கருத்தாகத்தான் இருக்கமுடியும். ஆனால், பகவத் கீதையில் கிருஷ்ணர் இப்படி எங்குமே சொல்லவில்லையே! அவர் எல்லா இடங்களிலும் ஏக இறைவனாக தானே சொல்கிறது ! ஆனால், பகவான் ஏன் வரவில்லை என்பதை பற்றி நாம் உண்மையான காரணத்தை இங்கே பார்க்கலாம்..

பொதுவாக, இந்த கலியுகத்தில் மக்கள் பெரும்பாலும் பெரும் பாவம் செய்பவர்களாகவே உள்ளார்கள். எனவே, பகவான் இந்த கலியுகத்தில் வந்தால் கூட இங்கே ஒருவரும் மிஞ்சமாட்டார்கள். ஏனெனில், இந்த கலியுகத்தில் பாவம் செய்பவர்களே  99 % உள்ளார்கள். இந்த சமயத்தில் பகவான் வந்தால் எல்லோருமே அழிக்கப்படுவார்கள். மேலும், அவர் முக்கியமாக வருவது தூய பக்தர்களின் திருப்திக்காக மட்டுமே வருவது தான் அவருடைய முதல் காரணம், தீயவர்களை அழிப்பது என்பது அவருக்கு ஒரு பொருட்டல்ல. அவரது உலகிலிருந்தபடியே அவரால் இதை செய்யமுடியும். எனவே, அவர் வருவது தூய பக்தர்குக்காகவே தான் வருகிறார். ஆனால், இந்த கலியுகத்தில் இப்படிப்பட்ட தூய பக்தர்கள் இருக்கிறார்களா ? என்பது சந்தேகமே !

இப்போது பகவான் அவதாரம் பண்ணினானேயானால் அவனுக்கு நிறைய ஹிரண்ய கசிபுகள் கிடைப்பார்கள்; நிறைய ராவணர்கள் கிடைப்பார்கள்; நிறைய சிசுபாலர்கள் கிடைப்பார்கள் .ஆனால் ஒரே ஒரு பிரஹலாதன் கிடைப்பானா? பகவான் அந்த ஒரு ப்ரஹலாதனுக்குத் தான் காத்துக் கொண்டிருக்கிறான்.

பிரஹலாதன் போல ஒரு நிஜ பக்தனுக்குக் கெடுதல் ஏற்பட்டால் இந்த க்ஷணமே பகவான் அவதாரம் பண்ணி விட சித்தமாயிருக்கிறான். அப்படிப் பட்ட நிஜ பக்தி உள்ளவன் ஒருத்தன் இருந்தால் கூட போறும்.

ஆனாலும், அவர் ஒவ்வொரு யுகத்திலும் வருவதாக அவரே கூறியதால், இந்தமுறை மக்களை அழிப்பதற்கு பதிலாக, மக்களுக்கு இறைவனின் நாமங்களை கொடுப்பதற்காக பகவான் இந்த கலியுகத்தில் ஸ்ரீ சைதன்யர் என்கிற நாமத்தில், கல்கத்தாவிலுள்ள, நவதீபம் என்கிற ஒரு ஊரில் 1486 ஆண்டு அவதரித்தார்.  இவரை பற்றிய குறிப்புகள் வேத இலக்கியங்களில் பல இடங்களில் காணப்படுகிறது.

மிகச்சிறந்த யோகிகளின் கற்பனைக்குக்கூட எட்டாத அசாதாரணமான செயல்களாலும் சாஸ்திர குறிப்புகளாலும் ஒரு உண்மையான அவதாரத்தினை அறிந்துகொள்ளலாம்.

ஸ்ரீ சைதன்யர் சாக்ஷாத் கிருஷ்ணரே, தன்னை எவ்வாறு வழிபடுவது என்பதை மற்றவர்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்காகவும், தானே தனது பக்தனின் வடிவில் வந்தார். தான் ஏற்றுக் கொண்டிருந்த பக்தன் என்னும் மனோபாவத்திற்கு பாதிப்பு ஏற்படலாம் என்பதால், அவர் தன்னை முழுமுதற் கடவுளாக விளம்பரப்படுத்திக் கொள்ளவில்லை. இதனால், அவர் மறைக்கப்பட்ட அவதாரம் என்று அறியப்படுகிறார். கலி யுகத்தில் முழுமுதற் கடவுள் மறைக்கப்பட்ட உருவில் தோன்றுகிறார் என்று வேத இலக்கியங்களில் தலைசிறந்த ஸ்ரீமத் பாகவதத்தில் (7.9.38)  கூறுகிறது..
இத்தம் ந்ரு-திர்யக்-ருஷி-தேவ-ஜஷாவதாரைர் லோகான் விபாவயஸி ஹம்ஸி ஜகத் ப்ரதீபான்
தர்மம் மஹா-புருஷ பாஸி யுகானுவ்ருத்தம் சன்ன: கலௌ யத் அபவஸ் த்ரி-யுகோ ஸ த்வம்

“எம்பெருமானே, மனிதன், மிருகம், சாது, தேவர், மீன், ஆமை என பல்வேறு ரூபங்களில் அவதரித்து, அதன் மூலமாக முழு படைப்பையும் பராமரித்து ஒவ்வொரு யுகத்திலும் அசுரக் கொள்கைகளை நீங்கள் வதம் செய்கிறீர்கள். இதனால், எம்பெருமானே, நீங்கள் தர்மத்தின் பாதுகாவலராகத் திகழ்கிறீர்கள். கலி யுகத்திலோ நீங்கள் உங்களை பரம புருஷ பகவானாக வெளிக்காட்டிக்கொள்வதில்லை. எனவே, நீங்கள் த்ரி-யுக, அல்லது மூன்று யுகங்களில் மட்டும் தோன்றக்கூடிய இறைவன் என்று அறியப்படுகிறீர்கள்.” (ஸ்ரீமத் பாகவதம் 7.9.38)

ஸ்ரீமத் பாகவதத்தில் (11.5.32) விவரிக்கப்பட்டுள்ளது:
க்ருஷ்ண-வர்ணம் த்விஷாக்ருஷ்ணம் ஸாங்கோபாங்காஸ்த்ர-பார்ஷதம்
யக்ஞை: ஸங்கீர்தன-ப்ராயைர் யஜந்தி ஹி ஸு-மேதஸ:
“கலி யுகத்தில், கிருஷ்ணரின் நாமங்களை இடைவிடாமல் கீர்த்தனம் செய்யும் முழுமுதற் கடவுளின் அவதாரத்தை புத்திசாலி நபர்கள் ஸங்கீர்த்தனம் செய்து வழிபடுவர். அவரது மேனி கருமையாக இல்லாவிடினும் அவர் கிருஷ்ணரே. அவர் தனது சகாக்கள், சேவகர்கள், ஆயுதங்கள், மற்றும் இரகசிய துணைவர்களால் சூழப்பட்டவர்.”

இங்கே அவர் சன்ன: கலௌ என்று அழைக்கப்படுகிறார். கலி யுகத்தில் அவர் நரசிம்மதேவர், வாமனதேவர், இராமசந்திர பகவான் ஆகியோரைப் போன்று தோன்றுவதில்லை. அவர் ஒரு பக்தராகத் தோன்றுகிறார். ஏன்? இஃது அவருடைய மிகமிகக் கருணை வாய்ந்த அவதாரமாகும்.

ஸ்ருதி வேத வாங்கியங்களிலிருந்து :
அதர்வண வேதம் - ஸ்ரீ சைதன்யா உபநிஷத் ...
ito 'ham krta-sannyaso 'vatarisyami sa-guno nirvedo
niskamo bhu-girbanas
tira-stho 'lakanandayah kalau catuh-sahasrabdhopari
panca-sahasrabhyantare gaura-varno dirghangah
sarva-laksana-yukta
isvara-prarthito nija-rasasvado bhakta-rupo
misrakhyo vidita-yogah syam

கலியுகம் நான்கு ஆயிரம் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு இடையில், இந்த கட்டத்தின் முடிவில், நான் கௌரங்கா , கங்கை 'கரையில் ஒரு இடத்தில் ஒரு தங்க நிறத்தில், அந்தண குடும்பத்தில் பூமியில் இறங்கி வருவேன். பின்னர் சன்னியாசம் எடுத்து, உச்ச துறவும், பொருள் ஆசைகள் இருந்து முழுமையான பற்றின்மை உட்பட அனைத்து என் ஆழ்நிலை குணங்கள் வெளிப்படுத்துவேன். . இறைவன் கௌரங்கா, வடிவத்தில், நான் என் கைகள் என் முழங்கால்கள் விரிவாக்கும் ஒரு பெரிய ஆளுமை அனைத்து முப்பத்தி இரண்டு உடல் அறிகுறிகள் காண்பிக்கும்.
நான் என் சொந்த பக்தர்களையும், எனது புனித பெயர்களையும் பக்தர்கள் ஜெபிப்பார்கள்,  அந்த நேரத்தில் என் மிகவும் ரகசியமான பக்தர்கள் மட்டுமே என்னை புரிந்து கொள்ள முடியும்.
    (அதர்வன வேதத்தில், மூன்றாவது கண்ட பிரம்மா-விபாக)

sa eva bhagavan yuge turiye 'pi brahma-kule
jayamanah sarva upanisadah uddidirsuh
sarvani dharma-astrani vistarayisnuh sarvan
api janan santarayisnuh sarvan api vaisnavan
dharman vijrimbhayan sarvan api pasandan nicakhana

கலியுகத்தில், உன்னத இறைவன் ஒரு அந்தணர் குடும்பத்தில் தோன்றுவார். அவர் உபநிஷத் மற்றும் தர்மம்-சாஸ்திர செய்தியை சொல்லிக்கொடுக்கவும், . அவர் நாத்திகர்கள் மற்றும் வேத துவேசம் செய்பவர்களை  தோற்கடிக்க வேண்டியும்,  அவர் வைஷ்ணவ தர்மத்தின்  உண்மையை நிறுவ வேண்டும் என்பதர்காகவும் வருகிறார்.
 - கிருஷ்ண உபநிஷத்  2.6, உறுதி பதிப்புகள்: வைஷ்ணவ  உபநிடதங்கள் ஆங்கில மொழிபெயர்ப்பு (ராமநாதன்)

kaleh prathama-sandhyayam gaurango 'ham mahi-tale
bhagirathi-tate bhumni bhavisyami sanatanah
முதல் சந்தியா வேளையில் கலியுகத்தில், நான் கங்கை கரையில், என்னுடைய தங்க நிற வடிவத்தில் இந்த பூமியில் வருவேன்  -  பிரம்மா புராணம்

nama-siddhanta-sampati prakasana-parayanah
kvacit sri-krsna-caitanya nama loke bhavisyati
‘உன்னத இறைவன் மீண்டும் இந்த பூமியில் வருவார். அவரது நாமம் 'ஸ்ரீ கிருஷ்ணா சைதன்ய' ஆகும். இவர் பகவானின் புனித நாமங்களை பிரச்சாரம் செய்வார்'  -  தேவி புராணம்

yad gopi-kuca-kumbha-sambhrama-bhara-
rambhena samvardhitah yad va gopa-kumara-
sara-kalaya range subhandi-krtam yad
vrndavana-kanane pravilasac chridama-
damadibhis tat prema-pradatam cakara
bhagavan caitanya-rupah prabhuh
'உன்னத பகவான், தன்னுடைய முந்தைய விருந்தவன  லீலைகளை காண்பதற்க்காகவும், தூய அன்பை வெளிப்படுத்தவும்,  மீண்டும் இந்த உலகிற்கு வருகிறார். அவரது நாமம் 'சைதன்ய' எனப்படும்' - கருட புராணம்

aham purno bhavisyami yuga-sandhau visesatah
mayapure navadvipe bhavisyami saci- sutah
‘என்னுடைய முழுமையான ஆன்மிக வடிவத்தில், நான் நவதீப, மாயாப்பூர் எனும் இடத்தில, சசி தேவிக்கு மகனாக கலியுகத்தில் நான் (சைதன்யர்) அவதரிப்பேன். -   கருட புராணம்

danda-mandita-bhutah sannyasa-vesah sva-
yam nihsandedham upagatah ksiti-tale
caitanya-rupah prabhuh
பகவான் இந்த பூமியில் ஒரு சந்நியாசியாக வருகிறார். அவரது நாமம் 'சைதன்ய பிரபு '  - கருட புராணம்


இப்படி அவரது அவதாரம் பற்றிய வேத ஆதாரங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். எனவே, இந்த கலியுக அவதாரமாக பகவான் சைதன்யர் எல்லா வேத இலக்கியங்களிலும் தெளிவாக  அறிந்து கொள்ளலாம்.


வேத சாஸ்திர - பவிஷ்ய புராணத்தில் முஹமது நபி பற்றி சொல்கிறதா ?

சில முஸ்லிம்கள் வேத இலக்கியமான பவிஷ்ய புராணத்தில் முஹமது நபி பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது என கூறுகிறார்கள்.

பொதுவாக புராணங்கள் 18 உள்ளன. இதில் பவிஷ்ய புராணம் நிறைய இடைச்சொருகல்கள் முந்தய முஸ்லீம் மன்னர்கள் காலத்திலேயும், சமண-புத்தமத காலகட்டத்திலேயும் கருத்துக்களை, பிராமணர்களை கொண்டே திருத்தியதாக வரலாறு  கூறுகிறது. இப்படி வருபவைகளே சில ஆபாச கதைகளும்,கருத்துக்களும். எ.கா.  கோவிலில் உள்ள ஆபாச சிற்பங்கள்.

எனவே, இவைகளில் உள்ள கருத்துக்களை அப்படியே ஏற்க முடியாது. அதாவது,இதில் உள்ள கருத்துக்கள் பிற புராணங்களில் உள்ள கருத்துக்களும் ஓத்து வந்தால் மட்டுமே ஏற்கலாம். ஆனால், இந்த கருத்துக்கள் மாறுபாடுகள் இருந்தால் அதை ஏற்க முடியாதது ஆகும். இப்படிப்பட்ட பல்வேறு இடைச்சொருகல்கள் உள்ள புராணமே தற்போதைய பவிஷ்ய புராணம். ஏன் இந்த புராணத்தில் விட்ட்டோரிய மஹாராணி பற்றி கூட குறிப்புகள் உள்ளதே !

சரி. இந்த புராணத்தில் முஸ்லிம்கள் குறிப்புடுவதாக உள்ள நபி யார என்பதை பார்க்கலாம்..

பவிஷ்யபுராணம். ப்ரதி சாரக் பாகம் 3, காண்டம் 3, அத்யாயம் 3. சுலோகம் 5-7
"ஒரு அந்நிய நாட்டில் ஒரு மிலேச்ச புனிதமான ஆசாரியர் (ஒரு ஆன்மிக சீர்த்திருத்தவாதி ) தனது சீடர்களுடன் தோன்றுவார். அவர் பெயர் மஹாமத் .அவர் பாலைவனத்தை சார்ந்தவர்."

பவிஷ்யபுராணம் 3. 3. 13
" அவர்கள் சுன்னத்து செய்வார்கள், தலையில் குடுமி இருக்காது , தாடி வைத்திருப்பார்கள் , சப்தமாக வழிபாட்டிற்கு அழைப்பார்கள் , முஸ்லீம் என்று! அழைக்கப்படுவார்"

ஏதஸ் மின்னந் தாரா மிலேச்ச ஆச்சார்யண ஸமின் வித மஹாமத்
இதிக்கியாத சிஷ்ய சாகா ஸமன்வித நிருஷ் சேவ ஹமாதே மருஸ் தல நிவாஸினம்
பவிஷ்யபுராணம். ப்ரதி சாரக் பாகம்3 காண்டம் 3 அத்யாயம் 3. சுலோகம் 5

"சாலி வாகனர் குலத்தில் பத்து அரசர்கள் அரசாள்வார்கள் . பத்தாவது அரசனாகிய போஜ ராஜன் வேத தர்மங்கள் சில இடங்களில் மறுக்கப் பட்டத்தை அறிந்து தன் தேசத்தின் எல்லாத் திசைகளிலும் சென்று மாருபட்டவர்களை அடக்குவார்".

இந்த ஸ்லோகத்தில் மஹாமத் என்ற வார்த்தையை முஸ்லிம்கள் முஹம்மதாக மாற்றி அர்த்தம்  கற்பிக்கின்றனர்.

குர்ஆன், ஹதீஸ்களில் எந்த ஒரு இடத்திலும் முஹம்மத்தை மஹாமத் என குறிப்பிடவில்லை.அப்படி இருக்க முஸ்லிம்கள்  உயர்வாக நினைப்பது குர்ஆன் &  ஹதிஸ்ஸயா? அல்லது பவிஷ்ய புராணத்தையா?

மஹாமத் என்பதில் மத் என்ற சொல் அரசனை குறிப்பதாகும். ஆக இது போஜராஜனை தான் குறிக்கிறது என்பது தெளிவாகிறது.

உச்சவ் பூபதி பிரமனே மஹாமத்
விர்ஷாத் த்வா தேவ மஹாராஜா முஹம்மதா சூர மகத்
பவிஷ்யபுராணம் 3. 3. 3. 6

திரிபுர அசுரன் என்பவன் மறுபிறவியல் முஹம்மதாசூரனாக அவதரிக்கிறான். அவன் பாலைவன தேசத்தில் இருந்து பாரதத்திற்கு வந்து போஜராஜனை சந்திக்கிறான். அவர்கள் இருவரிடையே ஏற்படும் விவாதத்தின் முடிவில் பழமையான சிவாலயமான மெக்காவிற்கு செல்கின்றனர்.

பின்னர் போஜராஜன் மருஸ்தல் (பாலைவனம்)இல் உள்ள மகாதேவரின் உருவத்துக்கு பூஜை செய்வார். அவர் மகாதேவருக்கு கங்கை நீராலும் பஞ்ச கவ்வியங்களாலும் அபிஷேகம் பண்ணி பூஜை செய்து மகாதேவரை திருப்திப் படுத்துவார்.போஜராஜன் மகாதேவருக்கு பிரார்த்தனை செய்வார்.

“ஓ கிரிஜனாதரே மருஸ்தல் இல் வசிப்பவரே உங்களை நமஸ்கரிக்கிறேன். நீங்களே மாயத்தில் வல்லவர்கலாகிய திரிபுராசுரர்களை அளித்தீர்கள். மேலாக்கர்களும் உங்களை வணங்குகிறார்கள். நீங்களே தூய சச்சிதானந்த சொரூபம். நான் உங்களை சரணடைகிறேன்.”

சிஷ்ய சாகா ஸமன்வித
நிருஷ் சேவ ஹமாதே மருஸ் தல
நிவாஸினம்
 சூதமுனிவர் மேலும் கூறுகிறார்.
அரசனின் பிரார்த்தனையைக் கேட்ட மகாதேவர் கூறுகிறார்.:
“மன்னனே நீ மறுபடி மகாகாலேஷ்வர் (உஜ்ஜைனி) திரும்புவாயாக. நீ நிற்கும் இந்த இடமானது பாஹிக் (பால்டிக்) என்ற பெயரால் அறியப்படும். இது மேலாக்கர்களால் (மெக்கா மக்கள்) அசுத்தம் அடைந்துள்ளது.இந்தப் பாவ பூமியில் தருமம் ஒருபோதும் நிலைக்காது.

இங்கு மாயைகளில் வல்லவனாகிய என்னால் முன்னர் எரித்து சாம்பலாக்கப் பட்ட திரிபுரா அசுரர்களில் ஒருவன் மறுஜன்மம் எடுத்துள்ளான். அவன் மகாபலியின் கட்டளைப் படி இங்கு தோன்றி உள்ளான். அவனுக்கு குளம் கிடையாது. ஆனால் என்னைப் பூஜித்து வரம் பெற்றுள்ளான். அவன் பெயர் முஹம்மதாசூரன். அவன் செயல்கள் எல்லாம் பிசாசகளின் செயல்களைப் போல் இருக்கும். அதனால் போஜராஜனே இந்த பிசாச பூமியில் இருந்து வெளியேறிச் செல்வாயாக. என் கருணை உனக்கு என்றும் உண்டு.

”இதைக் கேட்ட அரசன் மறுபடி உஜ்ஜைனி திரும்பி வருவார். அவர்கள் யாத்திரையில் மெதினாவைக் கடப்பார்கள். அங்கும் பூதம் ஒன்று இருக்கும். முகம்மது அவருடன் சிந்து நதியின் கரை வரை வருவான் அவன் மாயத் தோற்றங்கள் தோற்றுவிப்பதில் வல்லவன். அவன் அரசனைப் பார்த்து ஓ அரசனே உனது கடவுள் இப்போது என் எச்சிலை ஏற்றுக் கொள்வதைப் பார் என்று கூறி அவ்வாறானதொரு தோற்றத்தைக் காட்டுவான். இதைக் கண்டு அரசன் அதிர்ச்சி அடைவான். காளிதாசன் ஓ சண்டாளனே உன் மாயத்தோற்றத்தால் நீ மகாதேவரை அவமதிக்கிறாய் உன்னை நான் கொள்வேன் என்று ஆத்திரம் கொள்வான்.

முஹம்மதாசூரன் மேலும் கூறுவான்.
தஷ்மன் முஸல்வந்தோ ஹி ஜதியோ தர்மோ துஷிகா இதி பிசாச தர்மோ மியா கிருத்.
பவிஷ்யபுராணம் 3. 3. 3. 9

"ஓ!போஜராஜனே! உன் மார்கமானது உலகில் தலை சிறந்ததாக விளங்குகிறது. அது உலக மக்களின் நன்மைக்கு நித்தியமாய் இருப்பது.
நானும் ஒரு பிசாசு மதத்தை ஸ்தாபிப்பேன்.அந்த பிசாசு மதத்தை பின்பற்றுவோர் பின்வருமாறு இருப்பர்"

முஸ்லிம்கள் கூறுவது போல் மொஹமத் என்பவரே நபி என்று எடுத்துக்கொண்டால், இந்த வசனத்தில் அவரே கூறுகிறார் நானும் ஒரு பிசாசு மதத்தை உருவாக்குவேன் என்கிறார்.

லிங்கச்சேதி சிகா ஹுன
சுமக்சுறு தாரி ஸாதூஷக
உச்சாலாபி ஸாவ பஹீ
பவிஷ்யதி ஜனோமம முஸலை நைஸ் மஸ்கார
பவிஷ்யபுராணம் 3. 3. 13

அந்த பிசாசு மதத்தை பின்பற்றுவோர் பசுவை அறுத்துண்ணுவார்கள். பன்றியை தவிர்ந்த மற்ற மாமிசத்தை உண்பர்.லிங்கசேதனம் (சுன்னத்) செய்பவராக இருப்பர். குடுமி வைத்திராது தாடி வைத்திருப்பர். சத்தமானமுறையில் பிசாசு மத வழிபாட்டில் ஈடுபடுவர், அவர்கள் முஸல்மான் என அறியப்படுவர்.

இதில் அரசனைச் சந்திக்கும் போது அவன் அந்த மார்க்கத்தை ஏற்கெனவே ஸ்தாபித்து விட்டானா அல்லது இனிமேலா என்ற தெளிவு இல்லை எனினும் அவனுடன் சீடரும் வந்தனர் என்று கூறப் படுவதால் அரசனைச் சந்திக்கும் பொது முஹம்மதாசூரன் புதிய மதத்தை ஸ்தாபித்திருப்பான் என்றே கொள்ள வேண்டி உள்ளது.

இதைப் பற்றி சிந்திக்கும் போஜராஜன் பிசாசு மதத்தோரிடம் இருந்து தர்மத்தைப் பாதுகாக்க வேண்டி சமஸ்க்ருத மொழியையும் வேதங்களையும் முதல் மூன்று வர்ணங்களான பிராமண க்ஷத்திரிய வைசிய வர்ணத்தாருக்கு மட்டும் அளிப்பான். நான்காவது வர்ணத்தாருக்கு வேதம் ஓதும் உரிமை இல்லாமல் போகும். வேத உபயோகம் தவிர்ந்த ஏனைய உரையாடல்களுக்கு சாதாரண மொழி ஒன்றை உருவாக்குவான். முஸ்லிம்கள் சிந்து நதிக்கு மறுகரையில் உருவாவார்கள்.”

இவைதான் பவிஷ்யபுராணத்தின் உண்மை வடிவம்., சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தானாம் ஆண்டி என்பது போல நாங்களே பொருட்படுத்தாத புராணத்தில் நபியை பற்றி கூறப்படுகிறது  என எங்களை அதை படிக்க தூண்டி இப்படி நபியைும் இஸ்லாத்தையும் தாமே அவதூறாக்கிக்கொண்டதுதான் மிச்சம்.


பகவான் கிருஷ்ணரே - அல்லாஹ் ( இறைவன்)

அல்லாவுக்கு உருவம் உண்டு !..அது.பகவான் கிருஷ்ணரே!. முஸ்லீம்கள் இறைவன் ஔிமயமானவர் என்கின்றனர். ஆனால் குரானில் இறைவன் வேறு, அவரது ஒளி வேறு என்பதை கூறுகிறது....

குரான் 24:35 வசனம், முதலில் சொல்கிறது ' அல்லாஹ் ஒளி ' எங்கிறது,
பின்பு உடனடியாக சொல்கிறது 'அல்லாஹ்விடம் இருந்து ஒளி வருகிறது' என்கிறது..
Remember I quoted a verse 24.35 where it was written Allah is light but then it was immediately said that Allah possesses light.

இனி இந்த வசனத்தின் வார்த்தைகளை தனி தனியாக பார்க்கலாம்.
முதல் வார்த்தை ' அல்லாஹு நூருஸ் ', இதன் அர்த்தம் 'அல்லாஹ் ஒளி ' ஆகும்.

அடுத்த வார்த்தை 'மசாலு  நியூரோஹினி' இதில் நியூரோஹினி என்பது 'அவரது ஒளி'
Let me reproduce the relevant portion of the verse-
First part says: Allaahu Nuurus…. Allah is light
Then it continues
Masalu Nuurihii……Nuurihii means “His light”.

எனவே, அல்லாஹ் என்பது ஒளி அல்ல, ஆனால் அவரிடமிருந்தே ஒளி வருகிறது என்பதே இதன் அர்த்தம்.
So Allah is not only light but also possesses light.

அப்படியானால், அல்லாஹ் வேறு அவரது ஒளி வேறு என்று தான் அர்த்தம். எடுத்துக்காட்டாக, என்னுடைய' சட்டை' என்பதில் சட்டை வேறு, நான் வேறு. இதில் 'சட்டை தான் நான்' என்று கூறினால் அது தவறு.

வேதங்கள் இறைவனை இரண்டு அம்சங்களை  விவரிக்கிறது,  அது
1. நிர்குணா  பிரம்மம் (உருவமற்ற பிரம்மன்)
2. சகுண பிரம்மம் (உருவமுள்ள பகவான்)

 அதாவது,  ஒரே  இறைவனின் இரண்டு வித  அம்சங்களே  இந்த  நிர்குண பிரமன் மற்றும்  சகுன பிரமன்  ஆகியவை.

தனது பக்தர்ளுக்கும் மட்டுமே அவர் உருவமுள்ள சகுண பிரம்மனாக காட்சியளிக்கிறார். ஆனால் அறிவற்ற அபக்தர்களுக்கு அவர் தனது அந்தரங்க சக்தியால் (ப்ரஹ்ம ஜோதி எனும் (இதுவே நிர்குண நிலை) திரையினால்  மறைக்கப்பட்டுள்ளார். ஸ்ரீமத் பாகவத்தில் (1.8.19), யோகமாயை எனும் திரையினால் பகவான் மறைக்கப்பட்டிருப்பதாகவும், சாதாரண மக்கள் அவரைப் புரிந்து கொள்ள முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது.

இது வேத சாஸ்திரம்- ஈஷோபநிஷத்திலும் (மந்திரம் 15) உறுதி செய்யப்பட்டுள்ளது,

“உமது திவ்யமான ரூபம், யோக மாயையினால் மறைக்கப்பட்டுள்ளது. பிரம்மஜோதியே அந்தரங்க சக்தியின் திரையாகும். உமது ஸச்-சித்-ஆனந்த-விக்ரஹத்தை (நித்தியமான அறிவு நிறைந்த ஆனந்த ரூபத்தினை) காணவிடாமல் என்னைத் தடுக்கும் இந்தப் பேரொளியினை தயவு செய்து விலக்குவீராக.”

"மேலும், மரணமற்றதும், அழிவற்றதும், நித்தியமானதும், இறுதி இன்பத்தின் தர்மமுமான அருவ பிரம்மனின் ஆதாரம் நானே" - பகவான் கிருஷ்ணர் - கீதா 14-27

இதில் பகவான் கிருஷ்ணர் தன்னிடமிருந்தே அருவ பிரம்மன் (ஜோதி-உருவமில்லா தன்மை) வருவதாக சொல்கிறார். இதே தான் குரானிலும் (24:35) இறைவன் தன்னிடமிருந்த ஒளி வருவதாக சொல்கிறது.

மேலும்....
அல்லாவுக்கும் கை,கால்,முகம்,மூக்கு,கண்,காது,முட்டி என்று எல்லாம் இருக்கிறது.. குரான் & ஹதீஸ் ஆதாரத்தைப் பார்ப்போம் :

மேலும், நபி கூறுகிறார் 'அந்த அழகிய உருவத்திலுள்ள இறைவன் எனது பக்கத்தில் வந்தார் ' என்கிறார்...Al-Tirmidhi (3234)

"அல்லாஹ் இருக்கும் பொது வேறு விக்ரகத்தை வழிபடமாட்டார்கள். என்னைத்தவிர வேறு யாரையும் வழிபடாதீர்கள். எனது முகத்தைத்தவிர வேறு எல்லோரும் அழிக்கப்படுவார்கள். என்னுடைய கடைசி தீர்ப்பு நாளில், நீங்கள் மீண்டும் வருவீர்கள்". -- அல்-குர்ஆன் 28:885)

'இறைவன் முதல் மனிதன் ஆதாமை தன்னுடைய உருவத்திலேயே படைத்தான் 'என்கிறார்" - ஸஹீஹ் முஸ்லீம் 6325

ஆதாமுக்கு நிச்சயம் ஒரு குறிப்பிட்ட உருவம் தான் இருந்திருக்கும்...அப்படியெனில்,அல்லாவுக்கும் ஆதாமின் உருவம் தானே இருந்திருக்கும் . ஏனெனில்,அல்லாவின் சுய உருவிலிருந்து ஆதாம் உருவாக்கப்பட்டானாம். ஆதாமின் மூலம்,இந்த மனித இனம் உருவானது என்றால்,அப்போ மனிதன் உருவத்துக்கும் அல்லாவின் உருவத்துக்கும் என்ன வித்தியாசம் இருக்க முடியும் !

இறைவனின் (அல்லாஹ்வின்) தனி பண்புகள் : குரான் வசனங்கள் ..
.1) அல்லாவின் பாதம் : bukhari, Volume 6, Book 60, Number 371: Narrated Anas:
2) அல்லாவின் காதுகளும் கண்களும் :[kuran 42: 11],  (Sahih Muslim, 6528)
3)அல்லாவின் கைகள் : Bukhari,Volume 6, Book 60, Number 336: Narrated Abu Huraira:
(kuran 39:67) (kuran 38:75)
4) அல்லாவின் முகம் : அல்-குர்ஆன் 28:885)

இறைவனின் (அல்லாஹ்வின்) தனி பண்புகள் : குரான் வசனங்கள் ..
அவர் வழிகாட்டுகிறார்-  (24.35)&(7.155)
அவர் தண்டிக்கிறார்.  (7.156) & (8.52) (7.165) (8.16)
அவர் பாதுகாப்பவர் & கவனிப்பவர் : (2.257)(6.102), He teaches- (2.282),
அவர் நினைவு உள்ளவர்  -(2.152)
அல்லாஹ் தனக்குரிய உணர்வுகளை உடையவன்: அல்லாஹ் நேசிக்கின்றான்-(3.159)(9.100)(9.117)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கதையைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:(12.4-101)

நிச்சயமாக இந்த அனைத்தும் - உணர்வுகள், மனம்  மற்றும் புலனாய்வு தேவைப்படுகிறது எனவே நாம் குறைந்தது கடவுள் ஒரு நபர் என்று யோசிக்க தொடங்க வேண்டும்.

அல்லாஹாவின் தனிப்பட்ட விருப்பங்கள்: 10.107,2.40-41.
அல்லாஹாவின் தனிப்பட்ட நினைவுகள் :2.152,58.7,20.52
அல்லாஹ்வின் தனிப்பட்ட அம்சங்கள் :
10.21,10.32,10.60,12.100,12.98,14.47,20.5, 22.40,22.60,4.147,40.12
அல்லாஹ் வேறுபட்ட பாகங்களை வகிக்கிறது:
2.257,3.98,10.109,11.107,12.66, 13.16, 20.114, 22.78, 33.52, 2.233,35.31,59.23,59.24,6.57
அல்லாஹ்வின் விருப்பம்:5.17,19.35,85.16
கடவுள் உயிருள்ளவர்: 2.255,40.65,2.20,22.40
அல்லாஹ்வின் பேராசிரியராக இருக்கின்றார்: 2.30,12.3
அல்லாஹ் வினவப்படும் தனிப்பட்ட ஆசிரியராவார்: 2.224,24.21
அல்லாஹ்வின் பார்வைக்குத் தனி நபர்கள் இருக்கிறார்கள்: 2.233,34.11
அல்லாஹ்வின் தனிப்பட்ட அடையாளம்:51.56-57
அல்லாஹ்வின் தனிப்பட்ட அறிவு: 24.35.6.59
அல்லாஹ் தனிப்பட்ட ஒருவர் [பகவான்] 8.30,22.58
அல்லாஹ்  முகம் கொண்டவர்: 6.52,13.22,18.28,30.38,30.39,2.115,28,88,55.26-27
அல்லாஹ் கைகளை உடையவர்: 39.67,38.75,3.73,67.1,48.10,5.67
அல்லாஹ் உருவம்  உள்ளது: 16.60.

இதன் மூலம் அல்லாவுக்கு கை,கால்,கண்,காது எல்லாம் உண்டு என்று தெரிகிறது....

வேறு விதமாகக் கூறினால், இறைவன் அருவமானவர் அல்ல; அவருக்கு கண்கள், கால்கள், கைகள் என எல்லாம் உண்டு, மேலும், அந்த பரம புருஷரின் அம்சங்களே நாம் என்பதால், நமக்கும் இவையெல்லாம் உண்டு. ஆனால் அவரது கரங்கள், கால்கள், கண்கள் மற்றும் புலன்கள், ஜட இயற்கையினால் களங்கமுற்றவை அல்ல.

'மானிட உருவில் நான் இந்த உலகில் வரும்போது மூடர்கள் ஏளனம் செய்கிறார்கள், எனது உன்னத சக்திகளையும், எனது ஆட்சியையும் அறியார்கள்.” - பகவத் கீதா- 9.11,

'சிறுமதி,அறிவீனர்களுக்கும் நான் தெரிவதில்லை, எனது அந்தரங்க சக்தியால் (உருவம் இல்லாத, மாயையால்) நான் மறைக்கபட்டிருக்கிரீன். எனவே பிறப்பும், இறப்பும் இல்லாத என்னை இந்த உலகு மக்கள் அறிவதில்லை" - பகவத் கீதா - 7.25,

எனவே, பக்தனைப் பொறுத்தவரையில், பகவானை நேரடியாகவும் உடனடியாகவும் அணுகுவதில் சிரமம் ஏதும் இல்லை, ஆனால் ஆன்மீகத் தன்னுணர்விற்காக அருவத் தன்மையை பின்பற்றுபவர்களது வழி மிகவும் சிரமமானதாகும்.

அருவவாதிகள், இறுதியில் பூரண உண்மையை உணராமல் போகலாம் என்ற அபாயம் இருக்கும்போதிலும், மிகவும் கடினமான பாதையை அவசியமின்றி பின்பற்றுகின்றனர் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

ஆனால் பக்தனோ, எவ்வித அபயமோ, சிக்கலோ, கடினமோ இன்றி முழுமுதற் கடவுளை நேரடியாக அணுகுகின்றான்.

எனவே, பகவான் கிருஷ்ணரே முழுமுதற் கடவுள், அவரை காணவிடாமல் தடுக்கும் ஜோதியே (உருவமில்லா தன்மை ) அல்லாஹ் என மேலே மிக தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

முடிவுரை ...

இதுவரை நாம் பார்த்த விஷயங்களிலிருந்து அறிந்து கொள்வது என்னவெனில்...

* முஸ்லிம்கள் கிருஷ்ணரை ஒரு தூதராக கூறுவதற்கு ஆதாரமாக சொல்வது முஸ்லீம் அறிஞர்கள் எளிதிய நூல்களை தான் ஒழிய, நேரடியாக குரான் அல்லது ஒரு ஆதரமுள்ள ஹதீஸ் மூலம் அல்ல.

* முஸ்லீம் அறிஞர் கூறுவது, தனது சொந்த கற்பனை கருத்தை தான் சொல்கிறார் என இதிலிருந்து புரிந்து கொள்ளலாம். இப்படியே பற்பல முஸ்லீம் அறிஞர்களின் கூறியதாகவே உள்ளது. இப்படி இஸ்லாமிய சான்றோர்களின் கருத்துக்களை மட்டும் வைத்து கொண்டு, கிருஷ்ணர் என்பவர் ஒரு நபி என்று கூறுவது எந்தவித அடிப்படை ஆதாரம் இல்லாதது. இப்படி ஆதாரமில்லாத கருத்துக்களை மட்டும் வைத்து கொண்டு கிருஷ்ணர் என்பவர் நபி என் கூறுவது முட்டாள் தனமானது.

* அவதாரம் என்பது இறைவன் அவரது உலகிலிருந்து இறங்கி வருவதை தான் அவதாரம்(இறங்கி வருதல்) என்கிறது. ஆனால், நபி / இறைத்தூதர் என்பது இறைவனால் சக்தி அளிக்கப்பட்ட ஒரு சாதாரண மனிதனை தான் சொல்கிறது. அதாவது, அவதாரம் என்பது இறைவனே இறங்கி வருவது, நபி /தூதர் என்பது அந்த இறைவனின் சக்திஅளிக்கப்பட்ட ஒரு ஜீவாத்மா வருவதாகும். இரண்டிற்கும் நேர் எதிர் வித்தியாசங்களை உடையது, தூதர் ஒரு நாளும் அவதாரமாகவோ/இறைவனாகவோ முடியாது.

* எனவே, பகவான் கிருஷ்ணர் என்பவர் முழுமுதற் கடவுளாக தான் வேத  இலக்கியங்களில் சொல்கிறது என நாம் மேலே அறிந்து கொண்டோம். இவர்களை பற்றிய வித்தியாசங்களை உண்மையில் பிற மதங்களை விட ஒரு இந்து அதிகமாகவே அறிந்து உள்ளான். எனவே, பகவான் கிருஷ்ணா அவதாரத்துக்கு, இறை தூதருக்கும் உள்ள வித்தியாசங்களை ஒரு இந்து வேத இலக்கியங்கள் மூலமாக எளிதாக அறிந்து கொள்கிறான்.

* பகவான் கிருஷ்ணரின் லீலைகளை எல்லாமே அவரது சக்திக்கு அடையாளங்களே, அவருக்கு 16108 மனைவிகள் உள்ளது என்பது புராணங்கள் மூலம் அறியலாம், அவர் வெண்ணை திருடுவதும், கோபியர்களோடு நடனமாடுவது இப்படி எல்லாமே அவரது லீலைகள் என பார்த்தோம்.

* மேலும், வேதங்களில் இறைவனின் இரண்டு வித தன்மைகள் (உருவம், உருவமில்லா)  பற்றி தெளிவாக கூறுகிறது. அதாவது, பகவான் கிருஷ்ணர் உருவமே - சகுன பிரம்மன் நிலைஆகும். அவரை காணவிடாமல் தடுக்கும் ப்ரஹம்ம ஜோதியே - நிர்குண பிரம்மன் நிலை (அல்லாஹ்) ஆகும்.

* பகவான் கிருஷ்ணரே முழுமுதற் கடவுள் என பகவத் கீதை பல்வேறு இடங்களில் நிறைய வசனங்களில் பகவத் கீதை முழுவதுமே சொல்கிறது. அப்படி இருக்க கீதை ஓர் இறை கொள்கையை தான் சொல்கிறது என்பது முட்டாள் தனமானது.

* பகவான் எல்லா யுகத்திலும் அவதரிக்கிறார். அப்படி இந்த கலியுக அவதாரமாக பகவான் சைதன்யர் எல்லா வேத இலக்கியங்களிலும் தெளிவாக  அறிந்து கொள்ளலாம்.

* கடைசியாக, வேத இலக்கியமான, பவிஷ்ய புராணத்தில் மொஹம்மது நபி குறித்து சொல்வதாக கூறுவது தவறானவையே. ஏனெனில், தற்போதைய இந்த புராணங்கள் பல இடைச்சொருகல்கள் உள்ளது. இதில் எது உண்மை,எது பொய் என அறிவது முடியாதது ஆகும்.





























No comments:

Post a Comment